புதியவை :

Grab the widget  Tech Dreams

07 பிப்ரவரி 2010

ரூ 40 கோடி லஞ்சம் , வேலைக்காரி பெயரிலும் பணம் வைப்பு !


சட்டீஸ்கர் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், அவருக்கு 220 வங்கி கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் பெயரில் மொத்தம் 40 கோடி ரூபாய் இருந்தது. அந்த கணக்குகளில் வேலைக்காரி, பியூன்கள் பெயரிலும் பணம் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக வந்த தகவலையடுத்து, 21 ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.


மத்திய பிரதேச சிறைத் துறை முதன்மை செயலர் அர்விந்த் ஜோஷி, அவரது மனைவியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை முதன்மை செயலர் டினு வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தி, 3.5 கோடி ரூபாய் ரொக்கமும், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.சட்டீஸ்கர் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாபுலால் அகர்வால் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த அதிகாரி, 220 வங்கி கணக்குகளை தனது அலுவலக உதவியாளர்கள், பியூன் மற்றும் வேலைக்காரி பெயரில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கி கணக்குகளில், 40 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.மத்திய பிரதேசத்தில் 13 இடங்களிலும், சட்டீஸ்கர் மாநிலத்தில் எட்டு இடங்களிலும் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப் பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த அதிரடி சோதனையில், 50 கோடி ரூபாய் ரொக்கமும், ஏராளமான நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

இதனிடையே, வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தருவதற்கு லஞ்சம் வாங்கிய ராகேஷ் மற்றும் அனிதா காந்தி தம்பதியை ம.பி., அரசு பதவியில் இருந்து நீக்கியது.

1 கருத்து:

  1. இதில் எதாவது ஒரு நபரின் கேசை எடுத்துக்கொண்டு தொடர்ந்து அந்த இந்திய மேலாண்மை அலுவலருக்கு தண்டனை எதாவது கிடைக்கிறதா, அவர் பதவி காப்பாற்றப்பட்டதா, கண்டு எடுக்கப் பட்ட பணம் அரசால் பறிமுதல் செய்யப் பட்டதா என உங்கள் வலை வாசகர்களுக்கு தெரியப் படுத்தவேண்டும். அது பிற அரசு அலுவலர்களுக்கும் ஒரு பாடமாக அமையும். இல்லையெனில், ஒரு அதிகாரி தம் இனத்தவரைக் காப்பாற்றி விடுவார். கடைசியில் ஒன்றும் தேறாது.

    பதிலளிநீக்கு