08 பிப்ரவரி 2010
15 பேரிடம் லஞ்சம் வாங்கிய கடலூர் பெண் அலுவலர் கைது
சிதம்பரம் கனகசபை நகர் நடராஜன் தனது மகள் சுபத்திரா திருமணத்திற்காக தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைக்காக கீரப்பாளையம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பூங்கோதையிடம் மனு கொடுத்தார்.
இவரைப் போன்று பலர் மனு கொடுத்திருந்தனர். நடராஜன் உள்ளிட்ட மனுதாரர்களை நேற்று நேரில் அழைத்து 1,000 ரூபாய் பணத்துடன் மாலை கடலூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வருமாறு பூங்கோதை கூறினார். கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் நடராஜன் புகார் செய்தார்.
அவர்கள் கூறியபடி நடராஜன் நேற்று மாலை 6.30 மணிக்கு கடலூர் செம்மண்டலம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அலுவலர் பூங்கோதையிடம், 1,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பூங்கோதையை(55) கைது செய்தனர். விசாரணையில் நடராஜனுக்கு முன்பாக மேலும் 14 பேரிடம் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, பூங்கோதையின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் போலீசார் சோதனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக