புதியவை :

Grab the widget  Tech Dreams

03 பிப்ரவரி 2010

லஞ்சம் வாங்கிய வன அதிகாரிகள் 2 பேர் கைது


குமரி மாவட்டம் பேச்சிப்பாறை கீழமாறாமலை கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை(62). இவருக்கு பேச்சிப்பாறை அணை அருகே நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு செல்லும் வழித்தடம் வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது.

எனவே, இந்த பாதை வழியாக தனது நிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குலசேகரம் வனச்சரக அலுவலகத்தில் தங்கதுரை மனு கொடுத்தார். இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமானால், வனச்சரகருக்கு ரூ.5 ஆயிரமும், வனவருக்கு ரூ.2 ஆயிரமும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதுபற்றி
குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் தங்கதுரை புகார் செய்தார். டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பீட்டர்பால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குலசேகரம் சென்றனர். அப்போது, வன அலுவலகத்துக்குள் சென்ற தங்கதுரை, ரூ.5 ஆயிரத்தை வனச்சரகர் மனோகரனிடமும், ரூ.2 ஆயிரத்தை வனவர் மோகனிடமும் கொடுத்துள்ளார்.

அப்போது
, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களது வீடுகளிலும் சோதனை நடந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் கிளை சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக