திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள ஆரியகோன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன்(42). இவர் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் ஒரு கும்பல் 1கோடி மதிப்புள்ள வலம்புரி சங்கை கொடுத்து விற்று தருமாறு கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24-ந்தேதி வலம்புரி சங்கை வாங்க தனித்தனியாக 3 கார்களில் மதுரை, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 7 பேர் வந்தனர்.
பூசாரியை அடித்து போட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றனர் ஏழு பேரும். காரில் வந்து வலம்புரி சங்கை கொள்ளையடித்தது மாறு வேடத்தில் வந்த போலீசார் என நினைத்து பூசாரி பழனியப்பன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ருத்தரசேகரன் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் வலம்புரி சங்கை பார்வையிட்டு வாங்க 3 கார்களில் வந்த மதுரை புதுவிளாங்குடியை சேர்ந்த முன்னாள் போலீஸ் ஏட்டு ஜோதிவேலு(62), மதுரை பாலரெங்கபுரம் குமாரவேல்(45), சிவசுப்பிரமணியன்(53), அவரது தம்பி கண்ணன்(38), மற்றும் திண்டுக்கலை சேர்ந்த ஆர்ம்ஸ்டிராங், தர்மராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 காரை பறிமுதல் செய்தனர்.
பூசாரியை தாக்கி வலம்புரி சங்கை கொள்ளையடித்தது. போலீஸ் வேடத்தில் வந்த கும்பல்தான் என்று போலீசாருக்கு முதலில் சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையில் வலம்புரி சங்கு கொள்ளையில் ஈடுபட்டது 6 போலீசார் என தெரிய வந்துள்ளது. இதில் 5 பேர் ஆயுதப்படை போலீசிலும் ஒருவர் வளநாடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
கைதான ஆறு பேரும் 1. குமரேசன்(45), வளநாடு போலீஸ் நிலைய ஏட்டு, 2. சிவக்குமார்(34), 3. இன்னொரு சிவக்குமார்(35), 4. ஞானக்குமார்(35), 5. மர்மவீரன்(32), 6.எட்வின்(33), இதில் எட்வின் திண்டுக்கல் ஆயுதப்படை போலீசிலும் மற்ற 4 பேர் திருச்சி ஆயுதப்படை போலீசிலும் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக