புதியவை :

Grab the widget  Tech Dreams

05 பிப்ரவரி 2010

ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் ரூ.3 கோடி ரொக்கப் பணம்: வருமான வரித்துறையினர் விசாரணை


மத்திய பிரதேசம் மற்றும் சதீஸ்கார் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் மாநில உயர் அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. மொத்தம் 13 அதிகாரிகள் வீடுகளில் சோதனைகள் நடந்தன.

மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் ஜோஷி வீட்டில் சோதனை நடந்தது. இவரது மனைவி டினுவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்.

இவர்கள் வீட்டில் சூட்கேஸ்களில் கத்தை கத்தையாக அடைத்து வைத்திருந்த பணத்தை கைப்பற்றினர். மொத்தம் ரூ. 3 கோடி ரொக்கப் பணம் சிக்கியது. மேலும் அவர்கள் ரூ. 2 கோடியே 25 லட்சம் வங்கி கணக்கில் வைத்து இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

போபால் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் எம்.ஏ. கான் வீட்டிலும் இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அகர்வால் வீட்டிலும் நடத்திய சோதனையில் அவர்கள் ரூ. 30 கோடி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து இருந்ததை கண்டுபிடித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக