புதியவை :

Grab the widget  Tech Dreams

27 பிப்ரவரி 2010

ஆயிரம் ரூபாய்க்கு போலி சான்றிதழ் : வி.ஏ.ஓ.,தலையாரி உட்பட 3 பேர் கைது


ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலியான வாரிசு சான்றிதழ் கொடுத்த வி.ஏ.ஓ.,தலையாரி கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அச்சம்பட்டியை சேர்ந்த ஆசீர்வாதம் மகள் அன்னமணி(39) என்பவர் வாரிசு சான்றிதழ் கோரி திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

வாரிசு சான்றிதழ் தர தலையாரி சுப்பையா ரூ. ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும் தலையாரி, கிராம நிர்வாக அதிகாரி செந்தில்முருகன்(28) ஆகியோர் சேர்ந்து நெல்லை தாசில்தார் கையெழுத்து போட்டது போல போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்தனர்.

அன்னமணி, அந்த சான்றிதழுடன் பூர்வீக சொத்துக்கு பட்டா மாற்றத்துக்கு நெல்லை தாலுகா அலுவலகத்தின் விண்ணப்பித்தார். அந்த சான்றிதழை பார்த்த தாசில்தார் அந்தோணிமுத்து அதிர்ச்சியடைந்தார்.

அச்சு அசலாய் தமது கையெழுத்து போட்டு போலி சான்றிதழ் கொடுத்தது குறித்து நெல்லை எஸ்.பி.,ஆஸ்ரா கார்க்கிடம் புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து போலி சான்றிதழ் கொடுத்த வி.ஏ.ஓ.,செந்தில்முருகன், தலையாரி சுப்பையா, மனுதாரர் அன்னமணி ஆகியோரை கைது செய்தனர்.

சுயஉதவிக்குழு நடத்திரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் கைது


திண்டுக்கல்:கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.கொடைக்கானலில் கீழ் பூமி பிரமபுத்திர பெண்கள் இணைப்பு குழுவின் கீழ், 237 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செம்பகனூர் மரிய ஜெயா இருந்துள்ளார். இவர், உறுப்பினர்களுக்கு தேவையான வங்கிக் கடன்களை பெற்றுத் தருவதும், இந்த பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டுவதாக கூறி கிராம பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கையாடல் செய்து தலைமறைவானார்.

இவருக்கு உதவியாக விமலாராணி, தனபாக்கியம், ஆரோக்கிய செல்வி, லாரன்ஸ் செல்வி, மெர்சி, ஜாகீர்லூர்துராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், கடந்த வாரம் கொடைக்கானல் செம்பகனூர் சுயஉதவிக்குழு அலுவலகம் அருகே நடந்து சென்ற இந்த குழுவை சேர்ந்த மெர்சி என்ற பெண்ணை கேட்டில் கட்டி வைத்து, மறியல் செய்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குழுவில் பணியாற்றிய கொடைக்கானல் லேக் ரோட்டை சேர்ந்த லாரன்ஸ் செல்வி(43)யை கைது செய்து, திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமாராணி உத்தரவிட்டார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:சுயஉதவிக்குழு நடத்தி கிராம மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வங்கியில் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் இன்னும் ஏழு பேர் தலைமறைவாகினர். இவர்களை தேடி வருகிறோம், என்றனர்.


26 பிப்ரவரி 2010

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கைது


மராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித்சிங்பாலி. இருமாநில தபால்நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.

இவர் தபால்நிலையங்களுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது. இதற்காக இவர் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.யின் லஞ்சஒழிப்பு போலீசார் மஞ்சித்சிங் பாலியின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கிருபானந்தன் கைது




என்.எல்.சி. நிறுவனங்களில் காண்டிராக்டர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்தன. இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட என்.எல்.சி. நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நெய்வேலி இல்லத்திலும் அதிரடி சோதனை நடந்தது.

இந்த அலுவலகத்தில் பொது மேலாளராக இருப்பவர் கிருபானந்தன் (50). இவருக்கு கீழ் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொது மேலாளர் கிருபானந்தன் மீது சி.பி.ஐ.க்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பெறுவதில் காண்டிராக்டர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

இந்த போட்டியை கிருபானந்தன், தனக்கு சாதகமாக பயன்படுத்தி காண்டிராக்டர்களிடம் பேரம் பேசி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ. சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள என்.எல்.சி. இல்லம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது காண்டிராக்டர் ஒருவர் பொதுமேலாளர் கிருபானந்தனை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்றார். ஏற்கனவே பேசியபடி தனக்கு ஒதுக்கப்பட்ட உள்ள ஒப்பந்த பணிக்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்தார். அதை பொது மேலாளர் கிருபானந்தன் பெற்றுக் கொண்டார்.

அப்போது அங்கு மறைந் திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கிருபானந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று கிருபானந்தன் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கிருபானந்தனின் வீடு தி.நகரில் உள்ளது. அவரது வீட்டில் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அங்கு லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சொத்து ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

சி.பி.ஐ. நடத்திய அதிரடி வேட்டையில் என்.எல்.சி. அதிகாரி ஒருவர் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



வங்கி மோசடிகளால் ரூ.5,500 கோடி இழப்பு


"கடந்த நான்கு நிதியாண்டுகளில், நடந்த மோசடிகளால், வங்கித் துறைக்கு 5,517 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.

டில்லியில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மத்திய கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளின் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் கூறுகையில்,"கடந்த நான்கு நிதியாண்டுகளில், நடந்த மோசடிகளால், வங்கித் துறைக்கு 5,517 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில், இத்தகைய மோசடிகளால், வங்கித்துறைகளுக்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடு, திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

இதுகுறித்து சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ் பால் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2005-06, 2006-07, 2007-08 மற்றும் 2008-09ம் நிதியாண்டுகளில், நிகழ்ந்துள்ள 733 மோசடி சம்பவங்களால், வங்கித் துறைகளுக்கு முறையே, 1,381 கோடி ரூபாய், 1,194 கோடி ரூபாய், 1,059 கோடி ரூபாய் மற்றும் 1,883 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். இதை தவிர, கடன்கள், எலக்ட்ரானிக் முறையில் பணம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-11 பொது பட்ஜெட் முக்கிய அம்சங்கள்.


* ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி இல்லை

*
1.60 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10 சதவீதம் வரி

*
5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதம் வரி

*
8 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரி

*
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி குறைப்பு

*
விவசாயிகள் கடனைத் திருப்ச் செலுத்த அவகாசம்

*
குறித்த காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்தினால் வட்டிக்குறைப்பு

*
மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிதி

*
திருப்பூர் ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு 200 கோடி ரூபாய்

*
பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரத்து 36 கோடி

*
25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு நீடிப்பு

*
கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள், கைத்தறி மற்றும் சிறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகை மேலும் ஓராண்டிற்கு தொடரும்.

*
சிறப்பு பொருளாதார மண்டலஙக்ளின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

*
வற்ட்சி காரணமாக விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் தரப்படும்

*
பயிர்க்கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் அதற்கான வட்டி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்

*
ரயில்வேக்கு வரும் நிதி ஆண்டில் 16 ஆயிரத்து 752 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

*
மின்சாரத் துறைக்கு 5 ஆயிரத்து 130 கோடி ஒதுக்கப்படும்.

*
சுகாதார மற்றும் குடும்ப நலத்திற்கான திட்ட ஒதுக்கீடு 22 ஆயிரத்து 300 கோடியாக இருக்கும்

*
கிராமப்புற மேம்பாட்டிற்கு 66 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*
சாலை போக்குவரத்திற்கான ஒதுக்கீடு 19 ஆயிரத்து 894 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

*
நகர்ப்புற மேம்பாட்டிற்கு 5 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்படும்

* 25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு


*
சேரி மேம்பாட்டிற்கு ஆயிரத்து 270 கோடி ஒதுக்கப்படும்



*
பாதுகாப்புத்துறைக்கு ஒரு ‌லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ஒதுக்கீடு

* எதிர்பார்க்கப்படும் வரி வருவாய்- ரூ.7,46,656 கோடி; இதர வருவாய்- 1,48,118 கோடி

* எதிர்பார்க்கப்படும் செலவு: 11.8 லட்சம் ‌கோடி

* அரசின் மொத்தக் கடன் 3 லட்சத்து 45 ஆயிரத்து 10 கோடி

* சிகரெட் மற்றும் புகையிலை மீதான வரி அதிகரிப்பு


* கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதமாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 7.5 சதவீதமாகவும் அதிகரிப்பு



* பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு



* டி.வி., குளிர்சாதான பெட்டிக்கு வரி உயர்வு


பிரணாப் முகர்ஜி தமது உரையில் கூறியதாவது: ஒட்டு மொத்த உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் லட்சியம். விலைவாசி உயர்வு குறித்து அரசு கவலை கொண்டுள்ளது.


அதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.


பெரும்
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலிருந்து இந்தியா மீண்டுள்ளது.


பொது விநியாக முறை நவீனப்படுத்தப்படும் ஏற்றுமதி நிலைமை ஊக்கம் அளிப்பதாக உள்ளது.


பருவ மழை தவறியதால் வறட்சி ஏற்பட்டு, உணவுப் பொருள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரித்தது.


நேரடி வரிவிதிப்பு முறையையும் பொதுவான விற்பனை வரி முறையையும் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.


நிதி நிலையை ஸ்திரமாக்கவும் மேம்படுத்தவும் ஒரு உயர்மட்டக் குழு ஏற்படுத்தப்படும். கைவினைப் பொருட்கள்,


தரை விரிப்புகள், கைத்தறி மற்றும் சிறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகை மேலும் ஓராண்டிற்கு தொடரும்.



குறைந்த செலவில் மின்சாரம் உற்ப்த்தி செய்யும் வகையில் கொள்கை மாற்றி அமைக்கப்படும்.


உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதில் தனியார் பங்களி்ப்பும் ஏற்கப்படும்.

25 பிப்ரவரி 2010

டெண்டருக்கு ஒப்புதல் தர லஞ்சம் வாங்கிய கொம்யூன் ஊராட்சி ஆணையர் கைது


புதுச்சேரி: டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் வாங்கிய கொம்யூன் ஊராட்சி ஆணையரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் குப்தன். மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கான டெண்டர் கோரி, ஊராட்சி ஆணையர் அனிச்சனிடம் குப்தன் விண்ணப்பித்திருந்தார்.

டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க குப்தனிடம், ஆணையர் அனிச்சன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக அவரிடம் குப்தன் 3,000 ரூபாய் வழங்கினார். மீதி பணத்தை வழங்காததால் டெண்டர் வழங்காமல் அனிச்சன் காலம் கடத்தினார்.

இதுகுறித்து குப்தன், சென்னையில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் புதுச்சேரி வந்தனர். சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கோர்க்காட்டில் உள்ள அனிச்சன் வீட்டிற்கு குப்தன் நேற்று காலை சென்று, அவரிடம் ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாய் வழங்கினார். அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த சி.பி.ஐ., போலீசார், அனிச்சனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அனிச்சனை, புதுச்சேரி 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சித்தார்த்தர் உத்தரவிட்டார். அதன்பேரில் அனிச்சன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது


ஆந்திராவில், நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். கர்னூலை சேர்ந்தவர் ராதாராணி. இவர், நான்காவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்தக் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் சண்முகம்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கோர்ட்டுக்கு ராதாராணி வந்தார். அப்போது, தனது செருப்பை கழற்றாமல் கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார். இதை கவனித்த நீதிபதி சண்முகம், செருப்புக் காலுடன் கோர்ட்டுக்கு வருவதற்கு பதிலாக, செருப்பை தலையில் சுமந்தபடியே வரலாமே என, கமென்ட் அடித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராதாராணி, தனது செருப்பைக் கழற்றி நீதிபதி சண்முகத்தை நோக்கி வீசினார். அதிஷ்டவசமாக, செருப்பு அவர் மீது படாமல் சென்றது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நீதிபதி சண்முகம், விசாரணையை ஒத்திவைத்தார். அத்துடன், ராதாராணியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில், ராதாராணியை போலீசார் கைது செய்தனர்.ராதா ராணியை கடந்த ஏழு மாதங்களாக நீதிபதி சண்முகம் பல்வேறு வகைகளிலும் அவமானப்படுத்தி வந்ததுடன், மன அளவிலும் தனக்கு தொந்தரவுகளை செய்து வந்ததாக நிருபர்களிடம் பேசிய ராதாராணி கூறினார்.

23 பிப்ரவரி 2010

லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது


சென்னை புழல் அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ., முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பானுரேகா(45). இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டில் முதல் தளம் கட்டுவதற்காக புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்காக அவரிடம் அங்குள்ள அலுவலர் 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், கொடுக்க மறுத்த பானுரேகா, முறையான ஆவணங்கள் மூலம் உரிய அதிகாரிகளிடம் கட்டட அனுமதிக்கு முயற்சித்தார். இந்நிலையில், இறுதிக்கட்ட ஒப்புதல் பணிக்காக அவரது மனு, அந்த அலுவலகத்தின் பிளான் அப்ரூவல் பிரிவுக்கு சென்றது. அங்குள்ள எழுத்தரின் உதவியாளர் கார்த்திகேயன்(52) என்பவர், பிளான் அப்ரூவல் கிடைக்க 4,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் முடியும் என்று கறாராக நிபந்தனை விதித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த பானுரேகா, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., வலசராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கிருஷ்ணன் மற்றும் போலீசார், நேற்று காலை புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருந்தனர்.

லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., சஸ்பெண்ட்


லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புதுக்கோட்டை குற்றப்பிரிவு எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டையில் தனிப்படை போலீஸ் (குற்றப் பிரிவு) எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்துக்குட்பட்ட புதுக்கோட்டை டவுன், அறந்தாங்கி, விராலிமலை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.ஐ., யாக பணியாற்றியவர்.சில மாதங்களுக்கு முன் பணிமாறுதல் பெற்றுச் சென்ற இவர், திருநெல்வேலியில் வீடியோ பைரசி போலீஸ் பிரிவில் எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். அங்கு திருட்டு "சிடி'க்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், 2009 செப்., 22ம் தேதி அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.ஐ., மனோகரகுமார் தலைமையில் போலீசார் திருநெல்வேலி டவுன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வீடியோ பைரசி போலீஸ் பிரிவுக்கு சொந்தமான வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 919 புதுபட "விசிடி'க்கள் மற்றும் 2,000 ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வாகனத்தில் எஸ்.ஐ., அன்பழகன் உட்பட ஐந்து போலீசார் இருந்தனர். "விசிடி' மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., அன்பழகன் உட்பட ஐந்து போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கைக்காக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே புதுக்கோட்டைக்கு மீண்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ., அன்பழகன் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தார். அவர் திருநெல்வேலியில் லஞ்சம் வாங்கியதற்காக நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

லாரியை மடக்கி மாமூல் : நெல்லை ஏட்டு சஸ்பெண்ட்


லாரியை மடக்கி, 200 ரூபாய் மாமூல் வசூலித்த, ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


மாமூல் பணியில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., தெரிவித்திருந்தார்.

நேற்று குருவிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு சங்கர்(52), சேர்ந்தமரம் நோக்கிச்சென்ற நெல் லாரியை மடக்கி 200 ரூபாய் வாங்கியதும், பணியில் குடிபோதையில் இருந்ததும் தெரிந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

20 பிப்ரவரி 2010

கர்ப்பிணி பெண்களிடம் பணம் பிடுங்கும் லஞ்சப் பேய்கள் !


கர்ப்பிணி உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக நர்சு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து 8260 ரூபாய் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 6000 ரூபாய்க்கு 100 முதல் 600 ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டது தெரியவந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சோதனை நடத்தியதில் நர்சு லட்சுமியிடம் கணக்கில் வராத 1260 ரூபாயை கைப்பற்றினர். உதவித்தொகை பெற வந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில், நர்சு லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதை தொடர்ந்து, நர்ஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் டாக்டர் ரவிக்குமாரிடம் 7000 ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

19 பிப்ரவரி 2010

அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா?: தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு !




தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்விடுத்துள்ள அறிக்கையில்,

’’தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.


அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?

அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்’’என்று கூறியுள்ளார்.

சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை மாலையில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ,18,085 கைப்பற்றப்பட்டது.

இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக இப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையொட்டி, துணை ஆய்வுக் குழு அதிகாரி விஜயராஜன் தலைமையிலான குழுவினர் சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு மாலை 6 மணியளவில் சென்றனர். இக் குழுவில் டி.எஸ்.பி. வி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இக் குழுவினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ,18,085 கைப்பற்றப்பட்டது. சார்-பதிவாளர் அலுவலகத் துணைப் பதிவாளர் அல்லி அரசி கைப்பையிலிருந்த கைப்பற்றப்பட்ட தொகையும் இதில் அடங்கும். இதுகுறித்து சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றுவோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

18 பிப்ரவரி 2010

நடிகர் அஜித் கைது செய்யப்படுவாரா?





திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில், நடிகர் அஜீத்தை தவிர 14 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதப்படி 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜீத் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 18.02.2010 அதிகாலை சுமார் 2 மணி அளவில் என் வீட்டுக் கதவை யாரோ சத்தமாக தட்ட எனது மகனும், கதாநாயகனுமான சிரஞ்சீவி, யார் என்று கேட்டுக்கொண்டு கதவு இடைவெளி வரியாக பார்த்துள்ளார். அப்பொழுது சுமார்பதினைந்து நபர்களுக்கு மேற்பட்டு கையில் பட்டாகத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள், பெட்ரோல் குண்டு, கடப்பாறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு நடிகர் அஜீத்தின் மேலாளர் தலைமையில், மாவட்டச் செயலாளர், அஜீதின் உதவியாளர் மற்றும் சுமார் 15க்கு மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் கெட்ட வாத்தையில் திட்டிக்கொண்டு இருந்தார்கள்.

என் மகன் என்ன வேண்டும் என்று கேட்பதற்குள் ''ஜாக்குவார் வெளியே வாடா. உன் தலையை எடுக்கச் சொல்லி எங்க தல சொல்லியிருக்காரு'' என்று கூறி கட்டையால் ஜன்னல்கள் அடித்தார்கள். உடனே ஒருவன் ''அட நாட்டான், அண்ணாச்சி பலசரக்கு கடைக்கே இவ்வளவுவா'' என்று ஏலனமாக கேட்டுள்ளான்.

உடனே எனது மகன் வீட்டிற்குள் ஓடி போன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் சம்பவத்தை எனக்கு தெரிவித்தான். அப்பொழுது நான் மதுரையில் சூட்டிங்கில் இருந்தேன். உடனே எனது மகனிடம் கதவை திறக்காதே. எதுவாயிருந்தாலும் நாளை நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டேன். என் மகன் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கம்பி, கட்டையை வைத்து எனது ஸ்கார்பியோ காரை அஜீத்தின் மேனேஜர், தென் சென்னை அஜீத் மன்ற தலைவர், அஜீத்தின் உதவியாளர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் சேர்ந்து கார் கண்ணாடி மற்றும் அனைத்து விளக்குகளையும் அடித்து உடைத்து, காரையும் சேதப்படுத்தி விட்டார்கள். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும்.

மேலும் என்னையும், என் குடும்பத்தையும் கேவலமாக பேசியும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் என் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மீண்டும் என் மகனிடம் வெளியே செல்லாதே, கதவை திறக்காதே என்று கூறினேன்.

உடனே நான் மதுரையில் இருந்து சென்னைக்கு காலை விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் மதியம் 2.20 விமானத்தில் சென்னை வந்தேன். விமான நிலையத்தில் இருந்து உடனே என் வீட்டிக்குச் சென்று நடந்தவைகளை நேரில் பார்த்தேன். உடனே எனது மகனுக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி விட்டு சேதாரங்களை பார்த்து விட்டு இந்த புகார் மனுவை தங்களிடம் அளிக்கிறேன்.

சினிமாவில் இருக்கும் அனைத்து கதாநாயன், கதாநாயகி, தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், சக நடிகர்கள் உடன் அன்பாகவும், கண்ணியமாகவும் பழக கூடியவன் நான். கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நான் சேர்த்து வைத்த புகழையெல்லாம் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்úôடு, நண்பர் அஜீத் அவர்களின் நேரடியான தூண்டுதலின் பேரில் அவருடைய மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் சேர்ந்து நள்ளிரவில் 2 மணிக்கு என்னையும், என் குடும்பத்தாரையும் தாக்கி, கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்து கேவலமாக பேசி கெட்ட வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களுடன் என் வீட்டையும், என் காரையும் தாக்கி சேதாராம் ஏற்படுத்திய அஜீத் உள்பட அனைவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை வாங்கிக் கொண்ட போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தியாகராய நகர் துணை கமிஷனர் பெரியய்யாவை உடனடியாக தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் மனுவையும் அவரது வீட்டையும், காரையும் சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்களையும் துணை கமிஷனர் பெரியய்யாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் படியும் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இந்த புகாரை விசாரித்த உயர் அதிகாரிகள், ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகாரில், அஜீத் பிரச்சனை நடந்த இடத்தில் இல்லை என்று கூறப்பட்டுள்ளால், அவரைத் தவிர 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தனர்.

நடிகர் அஜீத் மீது சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 4 சட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அஜீத்தின் மானேஜர், உதவியாளர், ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துளது. புலன் விசாரணைக்கு பிறகுதான் அஜீத்திற்கு தொடர்பு உள்ளதா என்பதை முடிவு செய்து அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிகிறது.

பொதுசொத்துக்கு பங்கம் விளைவித்தது, கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அந்த 14 பேரும் ஜாமீனில் கூட வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அஜீத் தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்ஜாமீன் கோரி மனு செய்வது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

_________________________________________________________________


சாதியை இழுக்கும் ஜாக்குவார் தங்கம் , தமிழ் படஉலகில் இதுவரை சாதியோ , மதமோ நுழைந்தது இல்லை முதன் முறையாக இப்போது நுழைக்க பார்க்கிறார் ஜாக்குவார் தங்கம்! இந்த மோசமான முன் உதாரணத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழ் பட உலகம் முன் வர வேண்டும் .இல்லாவிட்டால் வரும் காலங்களில் ஒவ்வொரு திரைப்பட கலைங்கருக்கு பின்னும் ஒரு சாதி சங்கம் போராட்டம் தொடங்கிவிடும்.

ஜாக்குவார் தங்கம் , அஜித்திற்கு எதிரான சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு அஜித் தன்னை மாற்றி கொள்ள முயற்சியை மேற்கொள்ள வேண்டும் ''அஜீத் தமிழ்நாட்டில் நடித்துக்கொண்டிருக்கிறாய். தமிழ் மக்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். தமிழ் சாப்பாட்டை சாப்பிடுகிறாய். இப்படி இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், போராட வரமாட்டாயா?''

---------------------------------------------------------------------------------------





சார்பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் 'ரெய்டு' கணக்கில் வராத பணம் பறிமுதல் !


சென்னை:சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நடத்திய திடீர் ரெய்டில், பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சார் பதிவாளர் அலுவலகத்தில் பலர் ஊழலில் ஈடுபடுவதாகவும், பத்திரப் பதிவிற்காக புரோக்கர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி., போலோநாத் உத்தரவின் பேரில், ஐ.ஜி.,க்கள் சுனில்குமார், துக்கையாண்டி தலைமையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். இப்பணியில், மாவட்ட தலைநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் களம் இறக்கப்பட்டனர்.

குறிப்பாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கோயம்புத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தென் மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரமாக சோதனை செய்தனர்.அப்போது, அந்த அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, கோயம்புத்தூர் பல்லடம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 48 ஆயிரம் ரூபாயும், திருச்சியை அடுத்த கரூரில் உள்ள அலுவலகத்தில் 82 ஆயிரம் ரூபாயும், மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியில் உள்ள அலுவலகத்தில் 24 ஆயிரம் ரூபாயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது போல, சென்னை செம்பியத்தில் உள்ள அலுவலகத்தில் 58 ஆயிரம் ரூபாயும், காஞ்சிபுரம் செய்யூரில் உள்ள அலுவலகத்தில் 17 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது யாரும் கைது செய்யப்படவில்லை.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், சார் பதிவாளரை கவனிப்பதற்காக புரோக்கர்கள் கொண்டு வந்த பணமும் இருப்பதால், இதில் தொடர்புடையவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கவுள்ளனர்.



பல்லடம்:
பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். சார்பதிவாளர் உட்பட மூன்று பேரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத 47 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்டம், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்வதாகவும், புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. நேற்று மதியம் 12 மணிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சண்முகபிரியா தலைமையிலான குழு, பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின், அலுவலக கதவுகள் பூட்டப்பட்டன. தீவிர சோதனை துவங்கியது.சார்பதிவாளர் பிரகாஷ் அமர்ந்திருந்த டேபிள் இடதுபக்க டிராயரில், கணக்கில் காட்டப்படாத 24 ஆயிரம் ரூபாய், பல்லடத்தைச் சேர்ந்த இடைத்தரகர்களான மயில்சாமியிடம் 10 ஆயிரம் ரூபாய், ராஜேந்திரனிடம் 13 ஆயிரம் ரூபாய் என, கணக்கில் காட்டப்படாத 47 ஆயிரம் ரூபாய் இருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தனர். "சார்பதிவாளர் உட்பட மூன்று பேர் மீது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.எஸ்.பி., சண்முகபிரியா தெரிவித்தார். மாலை 4 மணிக்கு பின், வழக்கம்போல் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கத் துவங்கியது.
ஆரணி;திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத லஞ்ச பணம் 17,500 சிக்கியது. இதையடுத்து இந்த சோதனை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. இறுதியில் ரூ.3 லட்ச ரூபாய் பணம் சிக்கியுள்ளனது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

17 பிப்ரவரி 2010

நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டு சிறை ! வருகிறது சட்டம் !


மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் அல்லது அரசுக்கு அளித்த உறுதி மொழிகளை காப்பாற்ற தவறும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இந்த மசோதாவுக்கு, விவசாய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நிறைவேறினால், கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் வேறு எந்த வகையான முறைகேடுகளில் ஈடுபட்டாலும், கடும் தண்டனை கிடைக்கும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சமர்ப்பித்த இந்த மசோதாவை, சிறு மாற்றங்களுடன் அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டது. இதன்பின் மத்திய அமைச்சரவை மற்றும் பார்லிமென்டின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அமைச்சர்கள் குழுவில் பவார், கபில்சிபல் தவிர, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், பிருதிவிராஜ் சவான், வீரப்ப மொய்லி, திட்ட கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மோசடி நிதி நிறுவனத்தில் லஞ்சம் வாங்கிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்


திருப்பூரில் செயல்பட்ட "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' நிதி நிறுவனத்திடம், பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஆறு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் அவினாசி ரோட்டில் "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதன் இயக்குனர்களாக கதிரவன், அவரது மகன் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் செயல்பட்டனர்.

இந்நிறுவனம்
, வெளிநாட்டு கரன்சிகள் மீது முதலீடு செய்து, அதிக லாபம் பெற்றுத்தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்தது. திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு, வட்டியுடன் கூடிய தவணை தொகையை முன்தேதியிட்டு, அந்நிறுவனம் காசோலைகளாக வழங்கியது.

இந்நிலையில், வங்கியில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பின. மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்நிறுவனம் மீது திடீரென வழக்கு தொடர்ந்து, "சீல்' வைத்தனர். நிறுவனத்தினர், ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். இதுதொடர்பான வழக்கில், "பணம் முதலீடு செய்தவர்கள், தாமாக முன்வந்து திருப்பிக் கேட்டால், அப்பணத்தை பெற்றுத்தர கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும்' என, திருப்பூர் எஸ்.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூர் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.

திருப்பூர் எஸ்.பி.,யாக இருந்த சாந்தி கண்காணிப்பில், டி.எஸ்.பி.,யாக இருந்த ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. முதலீடு செய்த பொதுமக்களில், சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டும், அந்நிதி நிறுவனத்திடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர இக்கமிட்டி உதவியதாக தெரிகிறது. அதன் மூலம், பல லட்ச ரூபாயை போலீஸ் அதிகாரிகள் சிலர் லஞ்சமாக பெற்றனர். இந்நிலையில், எஸ்.பி., சாந்தி, திருட்டு "விசிடி' தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, எஸ்.பி.,அருண் பொறுப்பேற்ற பின், இந்நிதி நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் பற்றி ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. ராஜேந்திரனுக்கு பதிலாக, டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்ட ராஜா தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. போலீஸ் உயரதிகாரிகள் விசாரணையில், "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' நிறுவனத்துக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடந்தையாக செயல்பட்டு, லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆதாரப்பூர்வமான தகவல் அடங்கிய விவரங்களை எஸ்.பி., அருண், டி.ஐ.ஜி., பாலநாகதேவியிடம் சமர்ப்பித்தார். இது தொடர்பாக டி.ஐ.ஜி.,யும் விசாரணை நடத்தினார்.

அதையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சண்முகய்யா, வால்பாறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின், திருச்சி மண்டலத்துக்கு உட்பட பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்போது, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், இந்நிதி நிறுவனத்தாரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பொள்ளாச்சி தாலுகா ஆனைமலையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மோகன்ராஜ், தானாகவே விரும்பி இடமாற்றம் கேட்டு, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டராக வந்தார். அவருக்கு, இந்நிதி நிறுவன செயல்பாடுகளில் மறைமுக தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோகன்ராஜூம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்விரு இன்ஸ்பெக்டர்களுக்கும் "சஸ்பெண்ட் ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் மற்றும் ஆறு போலீசாரையும் எஸ்.பி., கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளார். அருள்தாஸ், தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஏட்டு ரங்கசாமி மங்கலம் ஸ்டேஷனுக்கும், ஏட்டு வேலுச்சாமி பெருமாநல்லூருக்கும், விஜயக்குமார், வெள்ளியங்கிரி ஆகிய ஏட்டுகள் அவினாசிக்கும், ஏட்டு சுந்தரபாண்டியன் குமரலிங்கத்துக்கும், ஏட்டு தாகூர் பல்லடம் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.

பாசி பாரெக்ஸ் டிரேடிங்' நிறுவனத்துக்கு உடந்தையாக செயல்பட்டு, லஞ்சம் பெற்ற விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்நிறுவனத்தில் லஞ்சம் பெற்ற விவகாரத்திலும், மற்றொரு விவகாரத்திலும் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள், சில நபர்கள் விரைவில் சிக்குவர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை கூட வரலாம், என்றார்.

16 பிப்ரவரி 2010

லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அதிகாரி கைது


தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உமையாள் புரத்தைச் சேர்ந்த பாரதி. இவர் வெளிநாட்டில் வசிப்பவர். இவர் தனது ரேஷன் கார்டில் பெயரை மாற்றுவதற்காக வட்ட வழங்கல் அதிகாரி தட்சிணாமூர்த்தியிடம் மனு கொடுத்தார்.

உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர ரூ. ஆயிரம் தரகோரி, பாரதியிடம் தட்சிணாமூர்த்தி கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., ரங்கராஜனிடம் பாரதி புகார் கொடுத்தார்.

போலீசாரின் அறிவுரையின் பேரில், தட்சிணாமூர்த்தியிடம் பாரதி ஆயிரம் ரூபாய் கொடுத்த போது, தட்சிணாமூர்த்தியை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

மோசடி வழக்கில் சினிமா டைரக்டர் கைது


விளம்பரம் நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக பிறகு பட டைரக்டர் ஜீவா கைது செய்யப்பட்டுள்ளார்.

வேளச்சேரியைச் சேர்ந்தவர் மரிய சார்லஸ் என்ற ஜீவா (46). பிறகு என்ற படத்தை இயக்கியுள்ளார். இவரது தம்பி ஜான்சன் (43) திருவொற்றியூரில் வசித்து வருகிறார்.

இருவரும் சேர்ந்து வணக்கம் சென்னை என்ற பெயரில் விளம்பர நிறுவனம் நடத்தினர். இதில் பணிபுரிவதற்கு விளம்பர மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது, ரு. 20 ஆயிரம் வரை உங்களுக்கு சம்பளம் தருவேன் என்று ஜீவாவும், ஜான்சனும் உறுதி அளித்தனர்.

இதை நம்பி 65 பேர் இவர்களது நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். ஆனால் 2 மாதங்களாகியும் யாருக்கும் சம்பளம் தரப்படவில்லை. இதனால் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் மணிகண்டன் என்பவர் புகார் செய்தார். துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஸ்வேஸ்வரய்யா விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பட்டதாரி வாலிபர்கள் அனைவரும் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மோசடியில் ஈடுபட்ட இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து மரிய சார்லஸ், ஜான்சன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை இருவரும் விளம்பரத்துக்காக வசூல் செய்திருப்பது தெரிய வந்தது. கைதான 2 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.



15 பிப்ரவரி 2010

வேலை தருவதாகக் கூறி மோசடி : மாஜி அமைச்சர் வீடு முற்றுகை



.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி



அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், தனது பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு பணியமர்த்த, இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண், அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் பெரியசாமி நடுநிலைப்பள்ளி உள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, இப்பள்ளி தாளாளராக உள்ளார்.பள்ளியின் நிர்வாக மேலாளர் கலைச்செல்வி.

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த ஆசிரியர் பணியிடம் ஒன்று காலியாக இருந்தது. அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் அவர்களே ஆசிரியர் நியமனம் செய்து கொள்ளும் அதிகாரம் உள்ளது.

பவானி அருகே காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் மனைவி கற்பகம், ஆசிரியர் பணி பெற முயற்சித்தார்.

ஆசிரியர் பணியை தனக்கு வழங்கக் கோரி கற்பகம், கலைச்செல்வியிடம் விண்ணப்பித்தார். கலைச்செல்வி, கற்பகத்தை ஈஸ்வரமூர்த்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ஈஸ்வரமூர்த்தி, ""நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை நிச்சயம். முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்; வேலை கிடைத்த பிறகு மீதித் தொகையை கொடுத்தால் போதும்,'' என்று பேரம் பேசியுள்ளார்.
அதற்கு சம்மதித்த கற்பகம், வட்டிக்கு கடன் வாங்கி பணத்தைக் கொடுத்தார். ஆனால், நீண்ட நாட்களாக வேலை தராமல் இழுத்தடித்தனர். ஒரு கட்டத்தில் ஈஸ்வரமூர்த்திக்கும், கலைச்செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதனால், "பணம் கிடைத்தால் போதும்' என்ற நிலைக்கு வந்த கற்பகம், பணத்தை தரும்படி கலைச்செல்வியிடம் கேட்டார். அதற்கு அவர், ""ஈஸ்வரமூர்த்தியிடம் தானே பணத்தைக் கொடுத்தீங்க, அவரிடமே போய் வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்றார். பணத்தைக் கேட்டு ஆறு மாதமாக ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு நடையாய் நடந்து கற்பகம் ஓய்ந்து போனார்.

வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் ஒருபுறம் நெருக்கியதால், கணவன், மனைவியான யுவராஜ் - கற்பகம் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கற்பகம், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் கற்பகத்தை காப்பாற்றினர். "இப்படியே விட்டால் பணம் வராது' என்று அஞ்சிய கற்பகம், தனது கணவர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பணத்தை தரக்கோரி, ஈரோடு தீயணைப்புத் துறை அலுவலகம் பின்புறம் உள்ள ஈஸ்வரமூர்த்தி வீட்டை நேற்று காலை முற்றுகையிட்டார்.

இது குறித்து கற்பகம் கூறுகையில், ""ஆசிரியர் வேலை தருவதாகக் கூறி என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார். வேலை கிடைத்த பிறகு இரண்டு லட்சம் கொடுத்தால் போதும் என்றார். இதேபோல், 10க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, "எனக்கு வேலை வேண்டாம்; பணம் கொடுங்கள்' என்றேன். ஆனால், தராமல் இழுத்தடிக்கிறார். மூன்று மாதத்துக்கு முன், தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு "செக்' கொடுத்தார். "செக்'கை வங்கியில் செலுத்திய போது, பணமில்லை என்று திரும்பியது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாகக் கூறியபோது, "வேண்டாம், பணத்தை தருகிறேன்' என்றார். ஆனால், ஆறு மாதமாகியும் பணம் வரவில்லை. எங்கள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னை வருகிறது. பணம் தரவில்லை என்றால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார்.

அ.தி.மு.க., முன்னாள் நகர செயலர் பெரியார் நகர் மனோகரன், காங்கிரசை சேர்ந்த பிரகாஷ் ஜெயின் மற்றும் பலர் வந்திருந்தனர். சூரம்பட்டி எஸ்.ஐ., முருகேசன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்தார். சில நாட்களில் பணம் வாங்கித் தருவதாக எஸ்.ஐ., முருகேசன் கொடுத்த வாக்குறுதியின் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.

14 பிப்ரவரி 2010

செபி அதிகாரியின் வங்கி லாக்கரில் ரூ. 1 கோடி: சி.பி.ஐ.-யிடம் சிக்கியது


லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய பங்கு பரிவர்த்தனை வாரிய (செபி) அதிகாரியின் வங்கி லாக்கர்களில் இருந்த ரூ. 1.29 கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்த விவரம்: கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆர்.பி. சிங். இவர் செபி சந்தை கட்டுப்பாட்டுப் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். சில நிறுவனங்களின் ஆவணங்களை மாற்றித் தர ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கியதாக. ஜனவரி 27-ல் ஆர்.பி. சிங்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அவரது வங்கி லாக்கர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை சோதித்தனர். அப்போது 3 வங்கி லாக்கர்களில் இருந்த ரூ. 1.29 கோடி பணம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆர்.பி. சிங் கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத ரூ. 28 லட்சம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.


ஊழலை ஒழிக்கும் பணியில், அரசு சார்பற்ற அமைப்பு !


ஊழலை ஒழிக்கும் பணியில், அரசு சார்பற்ற அமைப்புகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ள மத்திய கண்காணிப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை கண்காணிப்பு ஆணையர் பிரத்யூஷ் சின்கா கூறியதாவது:

ஊழலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதை முழுமையாக செயல்படுத்தவும், சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையை கொண்டுவரவும் அரசு சார்பற்ற அமைப்புகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள அரசு சார்பற்ற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.அரசு சார்பற்ற அமைப்புகள் பல மக்களுக்கு தேவையான நல்ல பணிகளைச் செய்து வருகின்றன. அவர்கள் எங்களுடன் சேர்ந்தால், ஊழலை ஒழிக்கும் பணி அதி தீவிரம் அடையும். ஊழலில் ஈடுபடுவோரை தண்டிப்பதில் அக்கறை காட்டுவதை விட, இந்த முறைகேடுகள் இனி வரும் காலங்களிலும் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு கடந்த அக்டோபர் மாதத்தில் 807 புகார்களும், நவம்பர் மாதத்தில் 728 புகார்களும் வந்துள்ளன. அவற்றை தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு சின்கா கூறினார்.

13 பிப்ரவரி 2010

நீதித் துறையில் லஞ்சம் கொஞ்சம் கம்மி ! மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி

"நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை'


நேற்று முன்தினம்
மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:


நீதித்
துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது.

நீதித்
துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும்.இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

---------------------------------------------------------------------------------

போகிற போக்கைப் பார்த்தால் இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டால் அது லஞ்சமாக கருத படமாட்டாது என்று வாங்கும் லிமிட்டை அரசாங்கமே அறிவித்துவிடும் போலிருக்கிறது.

------------------------------------------------------------------------------------




12 பிப்ரவரி 2010

5 பேரை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய பெண் டாக்டர் கைது






பெங்களூர் எம்.வி.நகர் 8-வது மெயின்ரோடு, 8-வது தெருவை சேர்ந்தவர் விசார் மகன் வின்சென்ட் (வயது 33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக வேலை பார்த்தார்.

அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் கண் டாக்டர் சாந்தி (44). இவர் அடிக்கடி வின்சென்டை தனது அறைக்கு அழைத்து பேசுவாராம். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் 2 பேரையும் வேலையில் இருந்து நீக்கியது.

இந்த சூழ்நிலையில் வின்சென்ட் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், டாக்டர் சாந்தி தன்னை மோசடியாக செக்ஸ் வலையில் சிக்க வைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தையும் மற்றும் 26 பவுன் தங்க நகையும் பறித்து கொண்டார் என்றும், அத்துடன் தன்னை அடியாட்களை வைத்து சித்ரவதை செய்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் சாந்தியை நேற்று கைது செய்தனர்.

போலீசார் நேற்று டாக்டர் சாந்தியிடம் விசாரித்த போது அவரை பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் பிரபல டாக்டர். அவரது மகள் தான் சாந்தி. இவர் தஞ்சாவூரில் மருத்துவ கல்லூரியில் படித்தபோது மலேசியாவை சேர்ந்தவரும், அதே கல்லூரியில் படித்தவருமான குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளான். டாக்டர் சாந்தி திருச்சி கே.கே.நகரில் கண் மருத்துவமனை நடத்தி வந்தார். இந்நிலையில் டாக்டர் குணசேகரனுக்கும், சாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக குணசேகரன் மலேசியாவிற்கு சென்று விட்டார்.

பின்னர் திருச்சியை சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திரபோசுடன் சாந்திக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதல் 2001 முதல் 2005 வரை நீடித்தது. பின்னர் அவரையும் கழற்றிவிட்டு, தன்னுடன் மருத்துவ கல்லூரியில் படித்த கும்பகோணத்தை சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்து கணவன்- மனைவியாக வாழ்ந்தார்.

அப்போது கும்பகோணம் ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு எடுத்து டாக்டர் சாந்தி தங்கினார். சில நாட்களில் பாலமுருகனுக்கும், சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்த பிரச்சினைக்கு பிறகு பெங்களூரை சேர்ந்த ஆனி என்ற டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில் வின்சென்ட்டை 5-வது காதலராக வலையில் சிக்கவைத்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன.

கும்பகோணத்திற்கு நேற்று வந்த டாக்டர் சாந்தியின் 2-வது கணவர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், என்னுடன் டாக்டர் சாந்தி, சுமார் 5 ஆண்டுகள் பழகி என்னிடம் பணத்தை ஏமாற்றியதோடு என்னையும் போலீசில் சிக்க வைத்துவிட்டார்.

இவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினையை உண்டாக்குவது தான் டாக்டர் சாந்தியின் வேலை. இவரால் வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே கும்பகோணத்திற்கு வந்துள்ளேன். அவரின் செக்ஸ் டார்ச்சர் வெளி உலகிற்கு தெரிந்தால் தான் அப்பாவிகளுக்கு நல்லது.

பதிவு பிடித்திருந்தால் வாக்கு அளியுங்கள் , நன்றி


பட்டா மாறுதலுக்கு ரூ.75 ஆயிரம் லஞ்சம் வி.ஏ.ஓ., கைது






கோவை:பட்டா மாறுதலுக்கு 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த இரண்டு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (28); "ஷேர் மார்க்கெட்' தொழில் செய்து வருகிறார். சமீபத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினார். பட்டாவில் பெயர் மாற்றுவதற்காக, கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இம்மனுவை விசாரித்து பரிந்துரை செய்ய, மசக்கவுண்டன் செட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்சாமிக்கு அனுப்பப்பட்டது. சரவணக்குமாரை அலுவலகத்துக்கு வரவழைத்த முத்துச்சாமி, சம்பந்தப்பட்ட நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றித்தர, ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றார்

தன்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லை என கூறியதற்கு, "கண்டிப்பாக பணம் தர வேண்டும். அதுவும் அலுவலகத்தில் தரக்கூடாது; மாலை 6 மணிக்கு மேல், வீட்டில் தர வேண்டும்' என, வற்புறுத்தினார். இறுதியில், 75 ஆயிரம் ரூபாய் தர ஒப்புக் கொள்ளப்பட்டது.கிராம நிர்வாக அலுவலரின் செயலில் அதிருப்தி அடைந்த சரவணக்குமார், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், பணத்துடன் சென்ற சரவணக்குமாரை பின்தொடர்ந்து சென்று, முத்துச்சாமியை கைது செய்தனர்.வீட்டில் நடத்திய சோதனையில், சிறு, சிறு தொகைகளாக கவர்களில் மறைத்து வைத்திருந்த இரண்டு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.

தவிர, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பத்திரங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், பல இடங்களில் வீட்டு மனை வாங்கியதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.கைதான கிராம நிர்வாக அதிகாரியை நேற்று, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கணேசன், வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில், அவரை வைக்க உத்தரவிட்டார்.கோர்ட்டில் முத்துச்சாமியை ஆஜர்படுத்தியபோது, ஜாமீனில் விடக்கோரி அவர், மனு தாக்கல் செய்தார். இம்மனு, வரும் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பதிவு பிடித்திருந்தால் வாக்கு அளியுங்கள் , நன்றி .





லஞ்சம் வாங்கிய சப்இன்ஸ்பெக்டர் கைது


ஸ்ரீபெரும்புதூர் சாலை ரோந்து வாகனத்தில் சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர்முனுசாமி.இவர் இன்று பெங்களூர் சாலையில் சுங்குவார் சத்திரம் அருகேரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடன் ஏட்டு சுப்பிரமணி, போலீஸ்காரர்கள் ரமேஷ், குமார் ஆகியோரும் இருந்தனர்.

இவர்கள் வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்குவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மறித்து லஞ்சம் வாங்கினார்கள். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓடிச்சென்று சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி உள்ளிட்ட 4 பேரையும் கையும், களவுமாக மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் சுங்குவார் சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.


போலி ஐ.பி.எஸ். பெண் அதிகாரி சாருலதா





5 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரிகளை ஏமாற்றி சம்பாதித்தேன்; போலி ஐ.பி.எஸ். பெண் அதிகாரி வாக்குமூலம்

சென்னை விருகம்பாகம் ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சாருலதா (25). இவர் நேற்று போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் வண்ணாரப்பேட்டையில் வலம் வந்த போது போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரிடம் விசாரித்த போது தான் ஒரு .பி.எஸ். அதிகாரி என்று கூறி அடையாள அட்டையை காண்பித்தார். இவரிடம் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் .பி.எஸ். படிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் போலி ஆவணங்கள் அவரிடம் இருந்ததால் போலீசார் அவரை கைது செய்து கார் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். கார் டிரைவர் திலீப்குமார் கூட்டாளி பாஸ்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் சாருலதா வீட்டில் இருந்து லேப்-டாப், பாங்கி கணக்கு புத்தகம், போலி கிரிடிட் கார்டுகள், நேர்காணல் அழைப்புக்கான கடிதங்கள், ரூ.30 ஆயிரம் பணம், தங்க நெக்லஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் சாருலதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம். எனது தந்தை குமார் ஏற்கனவே இறந்து விட்டார். அம்மா பெயர் ராணி. பூ வியாபாரம் செய்து வருகிறார். எனது அக்கா ஜமுனா, தம்பி ஏழுமலை ஆகியோரும் என் னுடன் உள்ளனர். நாங்கள் கஷ்டபடப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

விளையாட்டுத்துறையில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. கபடி பயிற்சியாளராகவும், சிறிது காலம் இருந்தேன். போலீஸ் வேலைக்கு சேர விரும்பினேன். வேலை கிடைக்கவில்லை. இதனால் நானே போலீஸ் அதிகாரி ஆனால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மிதந்தேன். இதனால் நானே போலியாக .பி.எஸ். அதிகாரி போல வலம் வந்தேன். இதற்காக வாடகைக்கு ஒரு காரை எடுத்து சென்னையை சுற்றி வந்தேன்.

போலீஸ் வேலை கிடைக்காமல் ஏங்குபவர்களைப் பார்த்து வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கினேன்.

அவர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கடிதங்களை போலியாக அச்சிட்டு அனுப்பினேன். இதை வைத்து போலீஸ் அதிகாரிகளிடம் சிபாரிசுக்கும் அழைத்து சென்றுள்ளேன். 2005-ம் ஆண்டில் இருந்து பல பேரிடம் போலீஸ் அதிகாரி என்று சொல்லி ஏமாற்றி வந்தேன். லட்சக் கணக்கில் பணம் சேர்ந்தது. சில போலீசாரும் எனக்கு பழக்கமானார்கள். இது வரை போலீசில் சிக்காமல் இருந்த நான் வசமாக மாட்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கைதான சாருலதாவை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சாருலதா கைது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் கைது செய்யப்பட்ட சாருலதா நிறைய பேரிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி நடித்து பண மோசடி செய்துள்ளார். இதற்காக மாதவரத்தில் வாடகைக்கு கார் எடுத்து அதில் போலீஸ் என்று எழுதி உலா வந்துள்ளார். ஒவ்வொருவரிடம் ரூ.1லட்சம், ரூ.1 1/2 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். 20-க்கும் மேற்பட்டோரை அவர் ஏமாற்றி இருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த பட்டியலை எடுத்து வருகிறோம். இவர்களது கூட்டாளிகள் சிலர் தலை மறைவாக உள்ளனர். அவர்களையும் தேடி வருகிறோம். இந்த பெண் மீது இதுவரை வழக்குகள் இல்லை. இப்போது தான் பிடிபட்டுள்ளார். இவருக்கு உதவியாக எந்த போலீஸ் அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


ரூ.100 கோடி சொத்து சேர்த்த சட்டசபை செயலாளர் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கினார்


ஆந்திர மாநிலம் சட்டசபை சிறப்பு செயலாளராக இருப்பவர் கே.கோபாலகிருஷ்ணய்யா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோபாலகிருஷ்ணய்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு அகுந்த் சபர்வால் தலைமையில் 3 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர் மற்றும் 40 போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவர் ரூ.100 கோடிக்கு (மார்க்கெட் மதிப்பு) சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. அவரது வீடு முழுவதிலும் ஆங்காங்கே வீட்டுமனை பத்திரங்களும், ஆயிரம் ரூபாய் பணக்கட்டுகளுமாக இருந்தன. இதைப் பார்த்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அகுந்த்சபர்வால் கூறியதாவது:-
கோபாலகிருஷ்ணய்யா வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின. அவருக்கு ஐதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், 5 வீட்டுமனைகள், நெல்லூரில் 17 வீட்டுமனைகள், சித்தூரில் 9 வீட்டுமனைகள், கிருஷ்ணா மாவட்டம் நாகயலங்காவில் 16 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை உள்ளன.

மேலும் அவரது வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், 1.2 கிலோ தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 14 பேனாக்கள் ஆகியவை சிக்கின. இவற்றின் மார்க்கெட் மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும். அவர் மேலும் வேறு எங்காவது சொத்து சேர்த்துள்ளாரா? அவரது “பினாமி” யார்? என்பது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை செயலாளர் கோபாலகிருஷ்ணய்யாவுக்கு ஆந்திர மந்திரிகள் பலருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. காண்டிராக்டர்களுக்கு இவர் மந்திரிகள் மூலம் நிறைய “காண்டிராக்ட்” எடுத்து கொடுத்துள்ளார்.

இதன்மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் கமிஷன் கிடைத்துள்ளது. இதனால் அவர் எப்போதும் தனது கையில் விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேனாக்களுடன் வலம் வந்தார். இவரது ஆடம்பரத்தை பார்த்தே ஊழியர்கள் தான் இவரைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் கூறி சிக்க வைத்தனர்.