புதியவை :

Grab the widget  Tech Dreams

02 பிப்ரவரி 2010

நெல்லை:வருவாய் ஆய்வாளருக்கு சிறைநெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த நரசிம்மன்(37). இவர் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி தங்கப்பழம் என்பவர், தமது தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்துச்செல்ல பைப்லைனை பொதுப்பாதை வழியாக அமைக்க அனுமதி கோரினார். அதற்கு வருவாய் ஆய்வாளர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பணம் தர விரும்பாத தங்கப்பழம், நெல்லை லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கடந்த 2004 அக்டோபர் 18ம் தேதி போலீசார் சிவகிரி தாலுகா அலுவலகம் வந்தனர். தங்கப்பழத்திடம் இருநுஅத லஞ்சப்பணம் 5 ஆயிரத்தை வாங்கிய வருவாய் ஆய்வாளர் நரசிம்மனை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு நெல்லை சி.ஜெ.எம்.,கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன் பிரகாஷ், நரசிம்மனுக்கு ஒரு ஆண்டு சிறையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக