புதியவை :

Grab the widget  Tech Dreams

31 அக்டோபர் 2009

மதுகோடா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை


ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா. 2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2008 ஆகஸ்ட் வரை இவர் முதல்-மந்திரியாக பணி புரிந்தார். மதுகோடா முதல்-மந்திரியாக இருந்த காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், லைபிரியா ஆகிய நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்து இருந்தார். அவரும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்று இருந்த கமலேஷ் சிங், பானு பிரதாப், பாண்டுதிர்கே ஆகியோர் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுகோடா லைபிரியா வில் ரூ.8.5 கோடி மதிப்பில் கனிமவளங்களை வாங்கி இருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து மது கோடா மற்றும் முன்னாள் மந்திரிகள் 3 பேர் மீது அமலாக்கப் பிரிவினர் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மாநில நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. கடந்த
9-ந்தேதி அவர்கள் மீது வழக்கு பதிவானது.

இந்த நிலையில் ராஞ்சியில் உள்ள மதுகோடா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். மேலும் சாய்பாசாவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அவரது உறவினர்கள், முன்னாள் மந்திரிகள் கமலேஷ் சிங், பானு பிரதாப், பாண்டு திர்கே ஆகியோரது வீடுகள், உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் 65 இடங்களில் இந்த அதிரடி வேட்டை நடந்தது. சோதனை விவரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று வருமான வரி அதிகாரி தெரிவித்தார்.

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார்

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. தலைமைச் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன், ஸ்ரீபதி விழிப்புப் பணி ஆணையராக (Vigilance Commissioner) பதவி வகித்தார். அப்பதவியில் இருக்கையில், ஊழல் புகாரில் சிக்கிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிரான விசாரணையை தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர், ஊழல் வழக்கில் சிக்கிய செல்வி.ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளை, விசாரணை ஏதுமின்றி முடித்து விட்டு அதற்குப் பலனாக அண்ணா பல்கலைகழகத்தில், மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற தங்களது மகன் மற்றும் மகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றனர், இவர்கள் இருவர் மீதும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பேராசிரியர்.பிரபா.கல்விமணி என்பவர், தலைமைச் செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தப் புகார் மனு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப் பட்டது.



இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில் அப்போது விழிப்புப் பணி ஆணையராக இருந்த ஸ்ரீபதி உபாத்யாயிடம் தொலைபேசியில் “சிங் மற்றும் ராதாகிருஷ்ணன் மீது ஏதோ விசாரணை செய்கிறீர்களா ? உங்கள் துறையிலிருந்து முத்து என்ற ஆய்வாளர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏதோ கடிதம் வேறு கொடுத்திருக்கிறாராம். அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை செய்வது சரியில்லை. என்ன ? அது என்ன என்று விசாரியுங்கள். நாம் முதலில் இதைப் பற்றி விவாதிப்போம். பிறகு என்ன செய்வது என்று முடிவு செய்வோம். என்ன ? “ என்று பேசியதாக, “இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு“ செய்தி வெளியிட்டுள்ளது.



இவ்வாறு பேசியதற்காக, இவர் மீது துறை நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஏராளமானோர் இருக்க, இப்படிப்பட்ட ஒரு ஆளை தலைமைச் செயலாளராக நியமித்து வைத்திருக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்ல !

http://savukku.blogspot.com/2009/10/blog-post_31.html

நன்றி :ஒப்பாரி

30 அக்டோபர் 2009

பாஜக ஆட்சியில் ரூ. 1.6 லட்சம் கோடி டெலிகாம் ஊழல்,மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசா குற்றச்சாட்டு




புது தில்லி, அக்.30: பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ. 1,60,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டன. டெலிகாம் வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடு இதுவேயாகும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட முடிவுகள் உருவானதற்கும் பாஜக அரசுதான் காரணம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான முடிவு முதலில் கிடப்பில் போட்டதும் பாஜகதான். பின்னர் மிகவும் வசதியான சமயத்தில் 500 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை பாஜக அமைச்சரவை ஒதுக்கியது.

2004-ம் ஆண்டு இத்துறை அமைச்சராயிருந்த அருண் சோரி, லைசென்ஸ் கட்டணத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். அருண் சோரி எடுத்த முடிவினால் மட்டும் ரூ. 900 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராசா குற்றம் சாட்டினார்.

கோபி பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்துள்ள வலை.கலக்கத்தில் கையூட்டு வாங்குபவர்கள் !



கோபி, அக். 30- கோபி கச்சேரி மேட்டில் தாலுகா அலுவலகம், கருவூலம், மின்வாரிய அலுவலகம், நகரசபை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகியவை உள்ளது. இதேபோல் கோபி பார்க் வீதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், மார்க்கெட் வீதியில் சார்பதிவாளர் அலுவலகம், மொடச்சூர் ரோட்டில் பொதுப்பணித்துறை அலுவலகமும் உள்ளது. மேலும் கல்வி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகமும் உள்ளது.

மேற்கண்ட அரசு அலுவலகங்களில் யார்-யார் தினமும் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள்? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பட்டியல் போட்டு அனுப்பி உள்ளனர். இதில் ஒரு அதிகாரி 2 நாட்களுக்கு ஒரு முறையும், வாரத்துக்கு ஒரு தடவையும் வாங்கும் லஞ்சப்பணத்தை ஆள் மூலம் வெளியே கொடுத்து விடுகிறாராம். இன்னொரு அதிகாரியோ தனது கார் டிரைவர் மூலம் லஞ்சப் பணத்தை கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிடுகிறாராம்.
இந்த தகவல் எல்லாம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியமாக சென்று உள்ளது. அடுத்தடுத்து வந்த இந்த புகார்களால் உஷாரான லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது கோபியில் முகாமிட்டு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், அலுவலர்கள் குறித்து ரகசிய சர்வே எடுத்து வருகிறார்கள்.போலீசார் மாறுவேடத்தில் நகரில் உள்ள ஒவ்வொரு டீக்கடை, ஓட்டல்களுக்கும் சென்று எந்தெந்த துறை அதிகாரிகள் எப்படியெல்லாம் கையூட்டு பெற்று வருகிறார்கள்? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

இதனால் கோபியில் விரைவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்துள்ள வலையில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாரி டிரைவரிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது







அக். 30
மணப்பாறை பகுதியில் கடந்த 16-10-09 அன்று சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் புத்தாநத்தம் மின்வாரிய போர்மேன் கிருஷ்ணன்- சுக்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டன. இதில் கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். ஆறுமுகம் கோவையில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் ஆறுமுகம் (வயது36) மீது வழக்கு போடப்பட்டது. அவரை ஜாமீனில் விட மணப்பாறை சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தி ரூ.1500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த லாரி டிரைவர் ஆறுமுகம் இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதியிடம் புகார் செய்தார். அவரது திட்டப்படி இன்று காலை ரூ.1500ஐ ஆறுமுகம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாத்தியிடம் கொடுத்தார்.
அதை அவர் வாங்கிய போது போலீஸ் நிலையம் அருகே மறைந்திருந்த டி.எஸ்.பி. அம்பிகாபதி, இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், சூரகுமரன். கோவிந்தசாமி, பிரசன்ன வெங்டேஷ் ஆகியோர் கையும் களவுமாக ராஜாத்தியை கைது செய்தனர்.



28 அக்டோபர் 2009

விதவையிடமும் லஞ்சமா ? என்ன கொடுமை இது ! - மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடக்கும் அநியாயம் !



மதுரை : மதுரை வடக்கு தாலுகா அலுவலக நலிந்தோர் திட்டப் பிரிவில், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான "செக்' வழங்க, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். புதூரைச் சேர்ந்தவர் சரவணம்மாள்(50). இவரது கணவர் நடராஜன் கடந்த ஜூனில் இறந்தார். விதவைக்கான அரசு வழங்கும் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு நலிந்தோர் திட்டப்பிரிவில் விண்ணப்பித்தார்.

"செக்' தயாரான நிலையில், தல்லாகுளம் தலையாரி முருகேசனை சந்திக்குமாறு சரவணம்மாள் நிர்பந்திக்கப்பட்டார். "செக் வேண்டுமானால் லஞ்சமாக 2,500 ரூபாய் தரவேண்டும்' என்று முருகேசன் வற்புறுத்தினார். தர மறுத்த சரவணம்மாள், தாலுகா அலுவலக இள நிலை உதவியாளர் ரவீந்திரனை நாடினார். அவர் 3 ஆயிரம் ரூபாய் கேட்டார். இதை நலிந்ததோர் திட்ட தாசில்தார் கல்யாணசுந்தரம் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் கண்டுகொள்ளவில்லை.மாறாக, " புரோக்கர் காளியம்மாளுடன் வங்கிக்கு சென்று, "செக்கை' பணமாக மாற்றி 3 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். சரவணம்மாள் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு போனில் புகார் தெரிவித்தார். இதைதொடர்ந்து வடக்கு தாலுகாவில் நேற்று மாலை முதல் இரவு வரை டி.எஸ்.பி. குலோத் துங்க பாண்டியன் தலைமையில் விசாரணை நடந்தது. அவர் கூறுகையில், ""விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்புவோம். இதன்பின் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்யும்' என்றார்.

27 அக்டோபர் 2009

லஞ்ச வழக்கில், போலீஸ் டி.எஸ்.பி சுப்பு சிங் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை : லஞ்ச வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டில்லி தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி திகார் சிறையில் உள்ள தமிழ்நாடு 8வது சிறப்பு காவல் படையில் உதவி கமாண்டராக (டி.எஸ்.பி.,) இருப்பவர் சுப்பு சிங். இவர் கடந்த 1991ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தார். அப்போது, இருதரப்பிற்கிடையேயான சிவில் பிரச்னை போலீசாருக்கு புகாராக வந்தது. இந்த புகாரை விசாரித்த சுப்பு சிங், ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட ரூ. 400 லஞ்சமாக பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு சி.ஜே.எம்., கோர்ட், வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், சுப்புசிங்கிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஐகோர்ட் முடிவை எதிர்த்து, சுப்புசிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட், சுப்புசிங்கை கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் தங்கியிருந்த சுப்புசிங் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் ‌‌லைசென்ஸ் : சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை


ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, டில்லியில் உள்ள தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த 21ம் தேதி, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது.இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர்.இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கொடுக்காதீர் காலில் விழுந்து இளைஞர்கள் வலியுறுத்தல்


வேலூர், அக். 26: வன்முறை, லஞ்சம், சாதி ஆகியவற்ற ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி, சத்தியாகிரக இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலூரில் பொதுமக்களின் காலில் விழுந்து வலியுறுத்தினர். இயக்கத் தலைவர் எம்.ராமகிருஷ்ணசாஸ்திரி, தலைமை நிர்வாகிகள் எம்.குரானா ஞானமூர்த்தி, அனில்சந்திரசேகர், பிரபு ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், கோட்டை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பொதுமக்களின் காலில் விழுந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். துண்டு பிரசுரங்களையும் வழங்கின

10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்!



நெல்லை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் வந்ததில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தி 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் டிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் மேற்பார்வையில், 41 பிரிவுகள் மூலம் 24 டிஎஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் லஞ்ச ஓழிப்பு பிரிவு இயங்கி வருகிறது.

மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஓழி்ப்பு துறை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்துறை, பத்திர பதிவு துறை, வட்டார கழக போக்குவரத்து அலுவலகங்கள், உள்ளாட்சிதுறை, கல்விதுறை, காவல்துறை, குடிநீர் வழங்கல்துறை, சுகாதாரதுறை, வனத்துறை ஆகிய பல்வேறு துறைகளில் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 491 புகார்கள் வந்துள்ளது.

இதில் இரண்டாயிரத்து 494 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு . விசாரணை நடத்தியதில் மாநிலம் முழுவதும் 456 பேர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் மூலம் குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

26 அக்டோபர் 2009

ரூ 200 லஞ்சம் வாங்கிய எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய எழுத்தர் கோதண்டம் கைது .





சென்னை: எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பஞ்சசீலன். இவரை மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.அங்கு, குற்றப்பிரிவு எழுத்தராக பணிபுரியும் கோதண்டம் ரூ.200 லஞ்சம் கேட்டார். இரண்டு முறை பணம் கொடுத்த பஞ்சசீலன், நேற்று வந்தபோது ‘என்னிடம் பணம் இல்லை; யாரிடமாவது வாங்கி வருகிறேன்’ என்றார்.இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். பஞ்சசீலனிடம் மை தடவிய 200 ரூபாயை போலீசார் கொடுத்து அனுப்பினர். அதை பெற்றுக்கொண்ட கோதண்டத்தை, போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


லஞ்சத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் , பீகார் கலெக்டர் களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் கட்டளை .


பாட்னா : "மக்களை பாதிக்கும் மிகவும் மோசமான தொற்றுநோய் லஞ்சம்; இதை வாங்குவோர் யாராக இருந்தாலும், இரவு கண் விழித்தாவது பிடிக்க வேண்டும்; லஞ்சத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும்' என்று பீகார் கலெக்டர் களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் கட்டளை போட்டுள்ளார்.

பீகாரில், பதினைந்தாண்டாக கோலோச்சிய லாலு - ரப்ரி ஆட்சியை விரட்டி பிடித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி, அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க இன்னும் 13 மாதங்கள் உள்ளன.நிதிஷ் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் என்றாலும், லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. மக்களை மிகவும் பாதிக்கும் இதை ஒழித்துக்கட்ட சபதம் எடுத்துள்ள அவர், கடந்த வாரம், கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விரிவாக ஆலோசித்தார்.மக்களின் குறைகளை கேட்க விகாஸ் யாத்ரா என்ற பெயரில் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார் நிதிஷ். அப்போது, லஞ்சம் தொடர்பாக
அவரிடம் புகார் மனுக்கள் குவிந்தன.பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், முதல்வரின் முதன்மைச் செயலர் உட்பட மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிதிஷ் பேசியதாவது:கிராம மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களில் அதிகாரிகள் ஊழல் செய்வதால், மக்களை குறைந்தபட்ச பலன் கூட போய்ச்சேருவதில்லை. இதை ஒழித்துக்கட்ட இரவு - பகல் பாராமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.மாவட்ட கலெக்டர்கள், கிராமங்களுக்கு சென்று ஊழல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். மக்களிடம் இருந்து பெறப்படும் லஞ்ச புகார்கள் குறித்து உடன் விசாரணை மேற்கொண்டு தீர்வு காணவேண்டும்.மாவட்டங்களில் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கபப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று தணிக்கை செய்யவேண்டும்.இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

தலைமைச் செயலர் கூறுகையில், "யாரேனும் லஞ்சம் வாங்கி கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.ஊழலை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர பீகார் அரசு முடிவு செய்தது. இதன்படி, மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்து சொத்துகள் சேர்த்த அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது போல் நமது தமிழ் நாட்டிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு செயல் படுத்தப் பட வேண்டும்.

25 அக்டோபர் 2009

லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியும் : சொல்லுகிறார் கடலூர் மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வள்ளுவன்



திருப்பூர்: ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட இயக்கம் நேற்று துவக்கப்பட்டது. திருப் பூர், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூட்டமும், புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.கடலூர் மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வள்ளுவன் பேசியதாவது:எதிர்காலத்தில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் கடமை, இன்றைய மாணவர்களுக்குத்தான் உண்டு. முடியாது என்ற எண்ணத்தை தவிர்த்து, முடியும் என்ற முடிவோடு செயல்பட்டால், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே, பொருளாதார நெருக் கடி காலத்தில் சிக்கித்தவித்தன. ஆனால் இந்தியா மட்டும் பொருளாதார நெருக்கடிக்கு அதிகம் பாதிக்கவில்லை. பொருளாதார நெருக்கடி விஷயத்தில், உலக நாடுகளை நம் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நம்மால், லஞ்சம், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். இளைஞர்களும், மாணவர்களும் லஞ்சம், ஊழலை எதிர்த்து செயல்பட்டால், வறுமையற்ற நாடாக இந்தியா உருவாகும், என்றார்.ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில செயலாளர் அரசு பேசுகையில், ""லஞ்சம், ஊழலை ஒழிக்க கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள், இளைஞர்களை கொண்டு குழுக்கள் ஏற்படுத்தி, அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்,'' என்றார்.விழாவில், கோவை மாவட்ட ஊழல் இயக்க தலைவர் குமாரவேலு உட்பட பலர் பேசினர். பின், திருப்பூர் மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சிதம்பரம், துணை தலைவராக கண்ணப்பன், செயலாளராக நாகராஜன், துணை செயலாளராக சாமிநாதன், பொருளாளராக வெங்கடராஜ் தேர்வு செய் யப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினர்களாக சிவராஜ், விஸ்வநாதன், மக்கள் மாமன்ற தலைவர் சுப்ரமணியம், கோவிந்தராஜ், சுப்ரமணியம், ருத்ரமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர்.

24 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய ஆம்பூர் ஈ.எஸ்.ஐ.மருத்துவ உதவியாளர் அன்பு சஸ்பெண்ட்.


வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக, தொழிலாளர்கள் காப்பீடு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன், மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அங்கிருந்த நோயாளிகள் அமைச்சரை முற்றுகையிட்டு, "மருந்து, மாத்திரைகள் வாங்க மருத்துவ உதவியாளர் அன்பு லஞ்சம் கேட்பதாகவும், இங்கு டாக்டர்கள் சரியாக வருவதில்லை' என்றும் புகார் செய்தனர். அன்புவிடம், அமைச்சர் அன்பரசன் நடத்திய விசாரணையில், அவர் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியது உறுதிசெய்யப்பட்டது. மேலும், இவருக்கு ஆதரவாக, மருத்துவமனை மெடிக்கல் ஆபீசர் விஜயா சந்திரிகா இருப்பதும் தெரிய வந்தது.மருத்துவ உதவியாளர் அன்புவை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த விஜயா சந்திரிகா மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.

23 அக்டோபர் 2009

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் ராமமூர்த்தி கைது


ஸ்ரீபெரும்புதூர் : ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் நில கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் மாலதிவேதா (58) . இவரது நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தொகையை வழங்குவதற்கு தனி தாசில்தார் ராமமூர்த்தி ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்த மாலதிவேதா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் ராமமூர்த்தியை ‌லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

நான் பதவி விலக மாட்டேன் : மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா


டெல்லி: எனது அமைச்சரவை அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதற்காக நான் பதவி விலக மாட்டேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறையாகத்தான் நடந்தது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒரு கேள்வியும் எழவில்லை. ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் தொடர்பாக டிராய் விதித்த நடைமுறைப்படியே அனைத்தும் நடந்துள்ளன. முறையாக நடந்துள்ளன. பிரதமரின் ஆலோசனைப்படிதான் அனைத்தும் நடந்தது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் எனக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ எங்குமே குறிப்பிடவில்லை.

நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பாக அளித்த பதிலையே இப்போதும் வலியுறுத்துகிறேன். ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் சரியானதே என்றார் ராசா.

22 அக்டோபர் 2009

300 ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை


ஸ்ரீவில்லிபுத்தூர்: பட்டா வழங்க 300 ரூபாய் லஞ்சம் வாங்கிய ராஜபாளையம் தாசில்தார் அலுவலக எழுத்தருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நீதிபதி முருகாம்பாள் தீர்ப்பளித்தார்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சேதுராஜ். இவருக்கு சொந்தமான திருவேங்கடபுரத்திலுள்ள காலி இடத்திற்கு பட்டா வேண்டி ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை தாசில்தார் பார்வைக்கு அனுப்புவதற்கு அலுவலக எழுத்தர் வெங்கடேசன் 300 ரூபாய் லஞ்சமாக கேட்டார். லஞ்சப்பணத்தை 2003 செப்.15ம் தேதி சேதுராஜ் கொடுக்கும் போது பிடிபட்டார். இது தொடர்பான வழக்கு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகாம்பாள் லஞ்சம் வாங்கிய வெங்கசேடனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


குவாத்ரோச்சி மீதான வழக்கு?


C†RÖ¦ ÙRÖ³¥ A‡TŸ JyPÖ«ÚVÖ hYÖ†ÚWÖop —RÖ] ÚTÖTŸÍ FZ¥ YZeÛL ˜z†‰e ÙLÖ·ºUÖ¿ ÙP¥¦›¥ E·[ RÛXÛU ÙUyÚWÖTÖ¦PÁ UÖÈ͇ÚWy| ÚLÖŸyz¥ p.‘.I. UÄRÖeL¥ ÙNš‰·[‰. C‹ŒÛX›¥, C‹R YZeÛL ˜zeLeiPÖ‰ GÁ¿ ÚLÖ¡, A^š ALŸYÖ¥ GÁ\ Yeg¥, AÚR ÚLÖŸyz¥ UÄRÖeL¥ ÙNš‰·[ÖŸ. CYŸ rப்¢• ÚLÖŸy| Yeg¥ BYÖŸ. B]Ö¥ RÂST£eh C‹R YZef¥ RÛX›P E¡ÛU C¥ÛX GÁ¿ p.‘.I. NÖŸ‘¥ ÙR¡«eLப்TyP‰. C‰h½†‰, UÖÈ͇ÚWy| LÖÚY¡ TÚY^Ö SÖÛ[ U¿SÖ· ˆŸப்“ A¸ef\ÖŸ.



2


ரூ.5 ஆயிரம் லஞ்சம் :கலால் உதவி ஆணையர் நடராஜன் கைது





திருவள்ளூர், அக். 22: திருவள்ளூர் அருகே மதுபானக் கடை "பார்'-ஐ இடமாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கலால் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மணிபாஸ்கர் (41). இவரது சகோதரர் குமார் மதுரவாயல் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் "பார்' வைத்திருந்தார். அந்த பாரை அப்பகுதியில் உள்ள கன்னியம்மன் நகருக்கு இடமாற்றம் செய்யக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கலால் உதவி ஆணையர் நடராஜனிடம் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து இடமாற்றத்துக்கு அனுமதியளிக்க ரூ.25 ஆயிரம் வரை நடராஜன் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்டது. மணிபாஸ்கர் கடந்த 1-ம் தேதி ரூ.10 ஆயிரமும், 2-ம் தேதி ரூ.10 ஆயிரமும் லஞ்சமாக பெற்றாராம். மேலும் 5 ஆயிரம் கொடுத்தால்தான் அனுமதி தருவேன் என நடராஜன் கண்டிப்பாக கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள சிறப்பு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முரளியிடம், மணிபாஸ்கர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், சங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப் படி, மணிபாஸ்கர் கலால் உதவி ஆணையர் நடராஜனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுக்கும்போது, போலீசார் நடராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.




சுனாமி நிதியில் மோசடி பெண் டாக்டருக்கு ஜாமீன் மறுப்பு!


கடந்த 2004ல் சுனாமியால் பாதித்த மக்களுக்காக, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ரூ.17 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 855 வழங்கியது. இந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் பொறுப்பு தென்னிந்திய திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. நிவாரண பணி பொறுப்பு திருச்சபையின் பொது செயலாளராக இருந்த பாலின் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர், தனது கணவர் சத்தியமூர்த்தி, மகள் பெனடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோருடன் சேர்ந்து ரூ.7.50 கோடி மோசடி செய்ததாக திருச்சபையின் இப்போதைய பொது செயலாளர் மோசஸ் ஜெயக்குமார், மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தார். அதனடிப்படையில் டாக்டர் பெனடிக்டா, ராபர்ட் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் பெனடிக்டா மனு தாக்கல் செய்தார். முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஷாஜகான் ஆஜராகி விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, பெனடிக்டாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பழநி மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன் கைது



திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளரை போலீசார் கைது செய்தனர். இங்கு லஞ்சம் கொடிகட்டிப்பறப்பதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலையில் அதிரடியாக வந்தனர். இங்கு அதிகாரிகள் , ஊழியர்களிடம் விசாரணை நடத்தி ஆவணங்கள் சோதிக்கப்பட்டது. பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த நாகராஜன் த்ரீ பேஸ் கரன்ட் வாங்கிட அணுகியபோது ரூ. 5 ஆயிரம் தருமாறு உதவி பொறியாளர் ராஜேந்திரன் கேட்டுள்ளார். இவருக்கு பணம் கொடுக்கும் போது லஞ்ச போலீசார் கையும்களவுமாக பிடித்தனர்.

60 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை


பெரம்பலூர் : இறப்பு சான்றிதழ் பெற்றுத்தர ரூ. 60 லஞ்சம் வாங்கிய பதிவு எழுத்தருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியைச் சேர்ந்த சின்னையன் என்பவர், தனது மனைவி பார்வதியின் இறப்பு சான்றிதழைப் பெற குன்னம் தாலுகா அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அங்கு பணியாற்றும் பதிவு எழுத்தர் சந்திரசேகர் என்பவர், அந்த சான்றிதழை பெற்றுத்தர ரூ. 60 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத சின்னையன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் படி, சின்னையன் பணம் தர அதைப்பெற்றுக்கொண்ட சந்திரசேகர் மற்றும் அவரது உதவியாளர் வெங்கடாசலம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி சரோஜினி இன்று தீர்ப்பு வழங்கினார். இதன்படி சந்திரசேகருக்கு ஒன்றரை ஆண்டுகளும், வெங்கடாசலதிற்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தொலைத்தொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை


புதுதில்லி, அக்.22: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக தில்லியிலுள்ள தொலைத்தொடர்பு அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐ) இன்று சோதனை நடத்தியது.அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ நேற்று மாலை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று தில்லியிலுள்ள சஞ்சார் பவன் அலுவலங்களில் இன்று சோதனை நடத்தியது. முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதைக் கண்டறிய புதிய நிறுவனங்களுக்கு ஸ்பெட்க்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான கோப்புகள் அனைத்தையும் சிபிஐ தீவிர பரிசீலனை செய்யும் எனத் தகவல்கள் தெரிவித்தன.சோதனை தொடர்பாக தொலைத்தொடர்பு அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.ரூ 1,651 கோடிக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டதில் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டதாக தொலைத்தொடர்பு துறைக்கு எதிராக மத்திய கண்காணிப்பு ஆணையம் புகார் தெரிவித்தது. இந்நிலையில் தொலைத்தொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

20 அக்டோபர் 2009

ரூ.1000 லஞ்சம் வாங்க முயன்ற கூட்டுறவு வங்கிச் செயலாளர் துரைசாமி கைது.




திருத்தணி, அக்.20:விவசாய கடன் வழங்குவதற்காக விவசாயியிடமிருந்து ரூ.1000 லஞ்சம் வாங்க முயன்ற கூட்டுறவு வங்கிச் செயலாளர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
.
திருத்தணியை அடுத்த கீழ்பாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருக்கிறது.

சமீபத்தில் பயிர் கடன் பெறு வதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இவர் விண்ணப்பம் செய்திருந்தார். மேலும் வங்கியின் செயலாளர் துரைசாமியை சந்தித்து தனக்கு விரைவாக பயிர் கடன் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது துரைசாமி ரூ.1000 கொடுத்தால்தான் கடன் தொகை கிடைக்கும் என்றும், இல்லை யென்றால் விண்ணப்பத்தை நிராகரித்து விடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து ராஜேந்திரன் ரூ.1000 கொடுக்க ஒப்புக் கொண்டார். துரைசாமி அதனை அலுவலகத்தில் தர வேண்டாம். அதிகாலையில் வீட்டிற்கு வந்து தருமாறு கூறியதாகவும் தெரிகிறது.இதனிடையே ராஜேந்திரன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார்.

அவர்கள் ஆலோசனையின் பேரில் இன்று காலை துரைசாமி வீட்டுக்கு சென்று ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை லஞ்சப் பணத்தோடு கையும், களவுமாக பிடித்தனர்.


மகளிர் சங்க தலைவி சிவகாமி கைது : சுனாமி நிவாரண நிதி ரூ. 1 1/2 கோடி மோசடி



சென்னை எண்ணூரில் உள்ள நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த காஞ்சனா என்ற பெண் சுமார் 500 பெண்களுடன் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகளிர் மீனவர் சங்க தலைவி சிவகாமி என்பவர் ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனம் வழங்கிய ரூ. 1 கோடி பணத்தையும் அதற்கு வட்டி என்று சுமார் ரூ. 35 லட்சம் அளவிற்கு மக்கள் பணத்தை வசூலித்து மோசடி செய்து தலைமறைவாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கமிஷனர் ஜாங்கிட் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீசார் தீவிரவிசாரணை நடத்தினர். இதில் வெளியூரில் பதுங்கி இருந்த சிவகாமியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ரூ. 1 கோடியே 35 லட்சம் சுனாமி நிவாரண நிதியை அவர் வாரிச்சுருட்டி உள்ளது தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்சார்ம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1 கோடி நிதி உதவியை கலைச்செல்வி கருணாலயா சமூக சேவை நிறுவனத்திடம் வழங்கியது.
இதை தெரிந்து கொண்ட நெட்டுக்குப்பம் மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவி சிவகாமி தங்கள் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்காக 10 பேர் கொண்ட 10 குழுக்களை அமைத்தார். குழுவில் உள்ளவர்களுக்கு தனி தனி வங்கிகணக்குகள் தொடங்கினார். நிவாரண பணத்தை நேரடியாக வங்கிகளின் மூலம்தான் பெற முடியும் என்று கூறினார்.
ஆனால் தொண்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு குழுவுக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் பெற்று வங்கிகணக்கில் செலுத்தினார். ஒருவருக்கு தலா ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். ஒவ்வொரு குழுவும் மாதம் ரூ. 2000 வீதம் 33 மாதங்கள் செலுத்தினால் நிவாரண பணம் இரட்டிப்பாகும் என்று ஆசைவார்த்தை கூறினார்.
குழுவில் இடம் பெற்ற பெண்களின் வங்கிகணக்கு புத்தகம், காசோலை போன்ற வற்றை சிவகாமியே வைத்துக் கொண்டார். குழுவில் உள்ளவர்களும் பணம் இரட்டிப்பாகும் என்று கடந்தசில ஆண்டுகளாக வங்கிகளில் பணம் கட்டிக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையே சிவகாமி, தனது தம்பி ராம்குமாரை ஒருங்கிணைப்பாளராகவும், தோழி வள்ளி என்பவரை செயலாளராகவும் கொண்டு கலங்கரை விளக்கம் என்ற சமூகசேவை அமைப்பை தொடங்கினார். மீனவ பெண்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் கலங்கரை விளக்கம் அமைப்பின் வங்கி கணக்கிற்கு மாற்றினார்.

இதற்காக அவரே மற்ற பெண்கள் போல போலி கையெழுத்து போட்டு காசோலைகளை பயன்படுத்தி உள்ளார். லட்சக்கணக்கான மதிப்புள்ள பணத்தை சொந்த உபயோகத்திற்குபயன் படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் காஞ்சனா உள்ளிட்ட பெண்கள் வங்கி கணக்கை சரிபார்த்த போது கணக்கில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில மாதத்தில் பணம் வந்து விடும் என்று கூறி சமாதானப்படுத்திய சிவகாமி தலைமறை வானதை தொடர்ந்து போலீசில் சிக்கி உள்ளார்.
சிவகாமியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த வள்ளி, ராம்குமார், புனிதா ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர். சுமார் ரூ. 1 1/2 கோடி அளவுக்கு சுனாமி நிவாரண நிதி மோசடி செய்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
சிவகாமியை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.


லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் இயக்குநராக ஏடிஜிபி ராமானுஜம் நியமிக்கப்பட்டார்

டிஜிபி போலாநாத் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து இத் துறையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக ஐஜி மற்றும் ஏடிஜிபி நிலையிலான அதிகாரிகளே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புதிதாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி போலாநாத் கடந்த 6-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை பதவி, இயக்குநர் பதவியாகும். ஏடிஜிபி ராமானுஜம் இயக்குநராக உள்ள நிலையில், டிஜிபி போலாநாத் நிர்வாக ரீதியாக எந்த பதவி வகிப்பார் என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவியது.
இந்தத் துறையில் இப்போது ஒரு இயக்குநர், 2 இணை இயக்குநர்கள் பதவிகள் உள்ளன.
இதையடுத்து டிஜிபி போலாநாத் இயக்குநர் பதவியையும், ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநர் பதவியையும் வகிப்பார்கள் என அரசு துறைரீதியான விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் உள்துறையிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் டிஜிபி வி.கே. ராஜகோபாலன் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அப்போது இயக்குநராக இருந்த ஏடிஜிபி மாத்தூர், கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் டிஜிபி போலாநாத் வருகையை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


18 அக்டோபர் 2009

மத்திய சிறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!


சேலம்: கைதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மதுரை, கோவை மத்திய சிறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை புழல் சிறையில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் பணமும், ஆபாச டிவிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கோவை, மதுரை மத்திய சிறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

17 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய புகாரில் அரசு ஊழியர்கள் 100 பேர் கைது ,லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரம்



மிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய வேட்டையில் இதுவரை 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயர் பொறுப்பில் இருந்து ஊழல், முறைகேடு செய்த பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

"லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற வாசகம், அரசுத்துறைகள் இயங்கிய காலம் முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், "காசு இல்லையென்றால் காரியம் நடக்காது' என்ற நிலைதான் அரசுத்துறைகளில் தொடரும் அவலம். போலீஸ் துறை, மின் வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, செய்தி மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளன. அரசை சார்ந்தே மக்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தங்களது தேவைகளுக்கு அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.



சாதாரண ரேஷன் கார்டு முதல், பெரிய அளவிலான தொழிற்சாலை அனுமதி வரை அனைத்து பைல்களும் தடையின்றி செல்ல லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசில அதிகாரிகளால், அத்துறை சார்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. லஞ்சத்தைத் தடுப்பதற்கு என்றே லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. இந்த துறை நடத்திய வேட்டையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 100 பேர் வரை லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவை தவிர, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல், முறைகேடு செய்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.



மத்திய, மாநில அரசுகள் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி உள்ளன. அவை தவிர ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப் படுகிறது. "அரசு ஊழியர்கள் காட்டில் மழை' என்று பொதுமக்கள் மூக்கு மீது விரல் வைத்தாலும், இது போதாது எனக் கூறி அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சிலர் மறைமுக லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, லஞ்சம் கேட்கும் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிவிடும் பக்குவத்தை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம், பதவி உயர்வுக்காக மேல் அதிகாரிக்கு கொடுத்த லஞ்சத்தை, மக்களிடம் இருந்து வசூல் செய்து விடலாம் என்ற நோக்கில் கையை நீட்டி மாட்டிக் கொள்வதும், அரசுக்கு வரும் வருவாயை தன் வங்கிக் கணக்கில் சேர்ப்பதாலும் போலீசாரால் கைவிலங்கு பூட்டும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.




பொதுத் துறை நிறுவனங்களுக்கு யு.எஸ். நிறுவனங்கள் லஞ்சம்: விசாரணைக்கு உத்தரவு



மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து வாணிப வாய்ப்புகளைப் பெறுவதற்காக, அந்நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட புகாரின் மீது மத்திய புலனாய்வுக் கழகம் விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது அதிகரித்து வருவதாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தின் விவரங்களை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஊடகங்களுக்குத் தெரிவித்தது மட்டுமின்றி, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.மீரா சங்கர் எழுதிய கடிதத்தின் நகலை ஊடகங்களுக்கு பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்டது. அந்தக் கடிதத்தில் மராட்டிய மாநில மின்சார வாரியம், இந்தியன் இரயில்வே, மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் ஆகியவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விவரம் கோரியுள்ளது.இந்திய பொதுத் துறை நிறுவனமான மத்திய பூச்சிக் கொல்லி வாரியத்திற்கு அமெரிக்க நிறுவனமான டோவ் ஆக்ரோ சயின்சஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


16 அக்டோபர் 2009

விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


விருதுநகர் : விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.57,500 கைப்பற்றப்பட்டுள்ளது. 27 நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் 54 கான்ட்ராக்டர்களில் 26 பேரிடம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சிவகாசி துணை பொறியாளரிடம் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் .



திருட்டு வழக்கு பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் சஸ்பெண்ட் .

எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ரூ3அயிரம் லஞ்சம் பெற்றதாக கோயம்பேடு குற்றபிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கோயம்பேடு காவல்நிலைய குற்றப்பிரிவுக்கு புகார் அளிக்க வந்தவர்களிடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தேன்தமிழ் வளவன், எஸ்.ஐ. மூர்த்தி, தலைமைக்காவலர் கிருஷ்ணன் ஆகியோர் ரூ3 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் இராஜேந்திரனுக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனே லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், தலைமைக்காவலர் ஆகிய 3பேரையும் இடைநீக்கம் செய்து இராஜேந்திரன் உத்தரவிட்டார்.


15 அக்டோபர் 2009

மாமுல் வசூலித்த திருச்சி மாநகராட்சி ஊழியர் கைது


திருச்சியில் கறிக்கடைக்காரரிடம், தீபாவளி மாமூல் வசூலித்த மாநகராட்சி ஊழியரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் அதிகளவில் இனாம் வசூலிக்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், மாநகர் முழுவதும் மாறுவேடத்தில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள, கறிக்கடைக்காரர் மணியிடம், 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பாலக்கரையை சேர்ந்த மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கமருதீனை கைது செய்து, அவரிடமிருந்த 5,000 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

லஞ்சம் வாங்கிய நாமக்கல் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சஸ்பெண்டு .

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பால்ராஜ் (வயது53), இவரது ஜீப் டிரைவர் செல்வம். இவர்கள் ஜவுளி விற்பனை கண்காட்சி அமைக்க அனுமதி பெற்றுத்தர ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு லஞ்ச வழக்கில் கைதான செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பால்ராஜ், ஜீப்டிரைவர் செல்வம் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


லஞ்சம் வாங்கிய பெரும்பாலை மின் வாரிய பொறியாளர் கணேசன் .கமர்சியல் இன்ஸ்பெக்டர் இருதயசாமி கைது


தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பக்கமுள்ளது சின்னகடமடை. இந்த ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது47). விவசாயி. இவருக்கு 8 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது.இவர் தனது நிலத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்தார். அதற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 29-8-2008-ல் மனு தாக்கல் செய்தார்.
அதன் பிறகு புதிய வீடு கட்டினார். அந்த வீட்டிற்கும் மின் இணைப்பு கேட்டார். இந்நிலையில் பெரும்பாலை மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொறியாளர் கணேசன் (25).கமர்சியல் இன்ஸ்பெக்டர் இருதயசாமி (45) ஆகியோர் மின் இணைப்புக்கு ரூ. 30 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாச்சியப்பன். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் மற்றும் போலீசாரிடம் புகார் செய்தார். அதன்அடிப்படையில் ராஜேந்திரன் இன்று காலை 10 மணியளவில் பெரும்பாலை மின் அலுவலகத்தில் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறியாளர் கணேசன் .கமர்சியல் இன்ஸ்பெக்டர் இருதயசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


லஞ்சம் கொடுக்காமல் செய்த வேலைகளுக்கு பணம் வாங்குவது எப்படி? அரசு அலுவலக வாசலில் படுத்து புரண்ட காண்டிராக்டர்.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளது. இதில், 10 ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஒன்றியத்தில் சுமார் 15 ஒப்பந்தக்காரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றார்கள். அக்கரப் பாக்கம் மற்றும் ஆலப் பாக்கம் கிராமத்தில் வெங் கல் சீனிவாசன் என்ற ஒப்பந்தக்காரர் சுமார் ரூ.23 லட்சத்துக்கு பணிகள் எடுத்து செய்து வருகிறார்.
ஆமிதா நல்லூர், பெரிய பாளையம், பனப்பாக்கம், மாகரல், கொமக்கம்பேடு, பூச்சி அத்திப்பேடு ஆகிய ஊராட்சிகளிலும் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை உதவி செயற் பொறியாளர் கௌசல்யா, உதவி பொறி யாளர்டார்வின் குமார், விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்ட பின்னர் தான் பணிகள் செய்ய வேண்டும். அதே போல் 3 அதிகாரிகளும் கையெழுத்து போட்டால் தான் செய்த பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்கள் பணம் பெற முடியும்.
காண்டிராக்டர் வெங்கல் சீனிவாசன் 6 பணிகள் செய்து முடித்துள்ளார். அதற்கான பணம் பெறுவ தற்கு அதிகாரிகளிடம் கையெ ழுத்து வாங்குவதற்காக கடந்த ஒரு வாரமாக எல்லா புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலைந்துள்ளார்.
நேற்றும் காலை முதல் மாலைவரை அலுவலகத்தில் காத்திருந்தார். சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளும் வர வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த காண்டிராக்டர் வெங்கல் சீனிவாசன் அலுவ லக வாசலின் குறுக்கே படுத்து உருண்டார். சுமார் ஒரு மணி நேரம் வாசலின் குறுக்கே அவர் படுத்தி கிடந்ததால் அலு வலகத் தில் இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே வரமுடிய வில்லை.
இது பற்றி சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளுக்கும் செல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று அல்லது நாளை காலை அலுவலகத்துக்கு வந்து கையெழுத்து போட்டு விடுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதன் பிறகு வெங்கல் சீனிவாசன் எழுந்து சென்றார்.


14 அக்டோபர் 2009

கடலூர் நகராட்சி கமிஷனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கடலூர் நகராட்சியில் நிறைவேற்றப்படும் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் காசோலைக்கு, 2 சதவீத தொகையை லஞ்சமாக, கமிஷனர் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., வேதரத்தினம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சேகர், திருமால் மற்றும் போலீசார் நேற்று இரவு 7.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, கமிஷனர் மேஜை மீதிருந்த காசோலைகள், அதற்குரிய கணக்குகளை ஆய்வு செய்தனர். பின்னர் கமிஷனர் குமாரிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., விசாரணை செய்தார்.
தொடர்ந்து பொறியாளர் மற்றும் கணக்கு பிரிவுகளில் சோதனை நடத்தினர்.டி.எஸ்.பி., வேதரத்தினம் கூறுகையில்,"நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமிஷனரிடம் விசாரணை செய்தோம். அதில், ஒப்பந்ததாரர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்க காசோலை வைத்திருந்தனர். இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவில்லை'என்றார்.இது குறித்து நகராட்சி கமிஷனர் குமார் கூறுகையில்,"இது ஒரு வழக்கமான "இன்ஸ்பெக்ஷன் தான்' வேறு எதுவும் இல்லை' என்றார்.

3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டிராபிக் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் கைது


சென்னை : ஜூஸ் கடைக்காரரிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, டிராபிக் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சென்னை பாரிமுனையைச் சேர்ந்தவர் திருமலை.நடமாடும் ஜூஸ் கடைகள் வைத்து நடத்தி வருகிறார். நடைபாதையில் ஜூஸ் கடையை நடத்துவதற்காக இவரிடம், எழும்பூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மாதம்தோறும் 3,000 ரூபாய் லஞ்சமாக பெற்று வந்துள்ளார். ஆரோக்கியதாஸ் லஞ்சம் பெறுவது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திருமலை புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி., பவானீஸ்வரி உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., பொன்னுசாமி தலைமையில் போலீசார், ஆரோக்கியதாஸ் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடித்தனர். ஆரோக்கியதாசை கைது செய்து விசாரிக்கின்றனர்.

ரூ.600 லஞ்சம் வாங்கிய திருப்பரங்குன்றம் நகராட்சி பில் கலெக்டர் ராஜா கைது



திருப்பரங்குன்றம், அக். 14-

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 26). வக்கீல் படிப்பு படித்து முடித்துள்ள இவர் தற்போது மின் வாரிய காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது அக்காள் லட்சுமி. அவரது கணவர் சிவானந்தம். இவர்கள் அதே பகுதியில் தற்போது வீடுகட்டி வருகிறார்கள்.

புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவது தொடர்பாக மின் வாரிய அலுவலகத்தை சிவானந்தம் தொடர்பு கொண்டார். அங்கு புதிய வீட்டிற்கான வரி செலுத்தும் ரசீதை கொண்டு வருமாறு கேட்டுள்ளனர். உடனே சிவானந்தம் திருப் பரங்குன்றம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வீட்டு வரி ரசீது வழங்குமாறு கடந்த மாதம் 15-ந்தேதி அவர் மனு செய்தார்.

முதலில் நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக வேலை பார்த்து வரும் ராஜா என்பவர் வீட்டு வரி ரூ.335-ம், ரசீது வழங் குவதற்காக தனக்கு ரூ.600-ம் தரவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார். இது பற்றி யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு சிவானந்தம் அங்கிருந்து வந்துவிட்டார்.

2 நாட்கள் கழித்து மீண்டும் ராஜாவை சந்தித்து வீட்டு வரிக்கான ரசீதை வழங்குமாறு கேட்டார். ஆனால் பில் கலெக்டர் ராஜா ரூ.600 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீட்டு வரி ரசீது வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 3-வது முறையாகவும் சிவானந்தம் சென்று கேட்டார். லஞ்சம் தராமல் ரசீது தரப்பட மாட்டாது என்று ராஜா திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதையடுத்து சிவானந்தம் நடந்த சம்பவம் குறித்து தனது மைத்துனர் பிரபுவிடம் கூறியுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் இருவரும் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று புகார் தெரிவித் தனர். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை சிவானந் தத்திடம் கொடுத்து அதனை ராஜாவிடம் தருமாறு நேற்று முன்தினம் கூறினர்.

ஆனால் நேற்று பில்கலெக்டர் ராஜா விடுமுறை எடுத்து சென்றுவிட்டார். இன்று காலை திட்டமிட்டபடி சிவானந்தம் வீட்டு வரி ரசீதை வழங்குவதற்காக ரூ.600 லஞ்சப்பணத்தை பில் கலெக்டர் ராஜாவிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட ராஜா தற்போது அலுவலக கம்ப்யூட்டர் பழுதாகி இருப் பதாகவும், எனவே ரசீது எண்ணை (13276) மட் டும் கூறுகிறேன். அதனைக் கொண்டு நீங்கள் புதிய மின் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி அனுப்பினார்.

அப்போது வெளியே தயாராக நின்ற லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு குலோத்துங்கன், இன்ஸ்பெக்டர்கள் பெரு மாள்பாண்டி, மணிமாறன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கிய நகராட்சி பில்கலெக்டர் ராஜாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் திருப்பரங்குன்றம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சி பெண் அதிகாரி ரோசலின் கைது


திருச்சி, அக்.14-
திருச்சி மாநகராட்சி 57-வது வார்டு கவுன்சிலராக உள்ளவர். வனிதா மாநகராட்சி அ.தி.மு.க. கொறடாவாகவும் முன்பு இருந்தார்.
இவரது வார்டுக்கு உட்பட்ட அண்ணாமலை நகரில் மாநகராட்சி சார்பில் தார்சாலை அமைக்க ரூ.8 1/2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரோடு போடும் பணி தொடங்கப்பட்டது. ரூ.5லட்சம் மதிப்புக்கு சாலை போடப்பட்ட நிலையில் ரோடு குறுக்கே தனியார் ஒருவர் காம்பவுண்டு சுவர் எழுப்பி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தாராம்.
எனவே திருச்சி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, உதவி இயக்குனரிடம் அந்த இடத்தை அளந்த அரசு நிலத்தை மீட்டு ரோடு போட உதவுமாறு கவுன்சிலர் வனிதா கடந்த 13.11.2008ல் மனு கொடுத்தார்.
உடனே இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி உதவி கலெக்டருக்கு உதவி இயக்குனர் பரிந்துரை செய்தார். ஆனால் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ரோடு போடும் பணி தாமதம் ஆகியது. எனவே நேற்று முன்தினம் வனிதா உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார்.
அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை எழுத்தரான ரோஷலின் மாலினியை (வயது54) சந்தித்து தனது புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரம் கேட்டார். அப்போது பெண் அதிகாரி ரோசலின் மாலினியை தன்னை திருவானைக்கோவிலில் உள்ள வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறினார்.
அங்கு சென்று அவரை சந்தித்த போது ரோசலின் வனிதாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தந்தால் வேலையை முடித்து தருவதாக கூறினாராம். உடனே கவுன்சிலர் வனிதா மக்களுக்காக ரோடு போட நடவடிக்கை எடுக்கும் நாங்கள் உங்களுக்கு எதுக்கு பணம் தர வேண்டும் என கேட்டார்.
ஆனால் ரோசலின் மாலினி ரூ.10 ஆயிரம் பணம் தராவிட்டால் காரியம் நடக்காது என கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா லஞ்சம் கேட்ட ரோசலின் மாலினிக்கு பாடம் புகட்ட நினைத்தார்.
உடனே இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதியிடம் புகார் செய்தார்.
போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டு ரூ.10 ஆயிரத்தை நேற்று கவுன்சிலர் வனிதா ரோசலின்யிடம் கொடுத்தார். அதை தனது கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்குமாறு ரோசலின் மாலினிகூறினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் லபக்கென்று 2 பேரையும் கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கி பிடிபட்ட ரோசலின் மாலினி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மக்களுக்காக ரோடு போட முயன்ற அ.தி.மு.க. பெண் கவுன்சிலரை 11 மாதம் அலையவிட்ட பெண் ஊழியர் பண ஆசையால் கடைசியில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.


13 அக்டோபர் 2009

கோவை மத்திய சிறையில் அதிரடி சோதனை



கோவை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை புழல் மத்திய சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான சிகரெட், பீடி பண்டல்கள், டி.வி.க்கள், ஆபாச சி.டி.க்கள் மற்றும் கணக்கில் வராத ஏராளமான பணம சிக்கியது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் அதிரடி சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று (13.10.09) கோவை மத்திய சிறையில் அதிரடி சோதனை தொடங்கியது. ஜெயிலில் உள்ள ஒவ்வொரு அறையும் முழுமையாக சோதனையிடப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வûகையில் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையில் ஏதும் சிக்கியதா என்பது தெரியவில்லை. 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கைதிகளிடையேயும், ஜெயில் வளாகத்திலும் பரபரப்பு நிலவியது.



லஞ்சம் வாங்கிய மறைமலைநகர் நகராட்சி இளநிலை பொறியாளர் நந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டார் .


மறைமலைநகர்: சிமென்ட் சாலை அமைத்ததற்கு செக் பாஸ் செய்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி இளநிலை பொறியாளர் மற்றும் தலைமை எழுத்தரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

மறைமலைநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். நகராட்சி கான்ட்ராக்டர். இவர் நகராட்சியில், 31 லட்சத்து 50 ஆயிரத்திற்கான சாலை பணிகளை செய்து முடித்தார். பணி முடித்தபிறகு 4 செக்குகள் மூலம் 21 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. மீதி தொகையினை 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான செக் வழங்க, நகராட்சி இளநிலை பொறியாளர் நந்தகுமார்(38) 20 ஆயிரம் ரூபாயும், நகராட்சி தலைமை எழுத்தர் ஜானகிராமன்(48) 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டன

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசுப்பிரமணியம் இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு எஸ்.பி., புவனேஸ்வரியிடம் புகார் செய்தார். இதையடுத்து, அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை 4 மணிக்கு பாலசுப்பிரமணியம் நகராட்சி அலுவலகத்தில் இருந்த இருவரிடமும் லஞ்ச பணத்தை கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சம்பந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய் ஆனந்தன், கந்தசாமி மற்றும் போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கம்பம் வன ஊழியர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் !


கம்பம்: மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள வன ஊழியர்கள், ஐந்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என, தேனி மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

வனப்பகுதிகம்பம்களான வெண்ணியார் மேற்கு, கிழக்கு பீட்டுகளில் வன ஊழியர்கள் சிலர் தோதகத்தி மரங்களை வெட்டி கடத்தினர் என, குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சேகர் புகார் அனுப்பியிருந்தார். மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டார். போடி உதவி வனப்பாதுகாவலர் வடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வனப்பகுதிகளில் நடத்திய ஆய்வில், 21 தோதகத்தி மரங்கள் மற்றும் இதர ஜாதி மரங்கள் வனத்துறையால் வெட்டிக் கடத்தப்பட்டதை உறுதி செய்தனர்.
தனிப்படையினர் கொடுத்த அறிக்கையில், ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட வனப்பகுதியில் பணியில் இருந்த, வன ஊழியர்கள் ஐந்து பேர் சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள், "ரெக்கவரி'யாக ஐந்து லட்ச ரூபாய் வரை செலுத்த மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி உத்தரவிட்டார்.


லஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - சிபிஎம் வலியுறுத்தல்


மெரிக்க நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்குவதற்காக லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பட்டியலையும், எந்தெந்த நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தன என்பது பற்றியும் கண்டறிந்து உரியவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பிரோ) கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக வெளிவரும் தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

நாட்டின் தேசிய நலனுக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற இந்திய நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர், பிரதமரின் முதன்மை செயலர் டி.கே.ஏ. நாயருக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 அக்டோபர் 2009

ரூ1,000 லஞ்சம் - மின் உதவி பொறியாளர் பொறியாளர் சவரிராஜன் கைது


காளையார்கோவில்: சிவகங்கை அருகே, காளையார்கோவில் கல்லுவழியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இருதயராஜ் (45). புளியடிதம்மம் சந்தியாகு தோட்டத்தை விலைக்கு வாங்கினார்.

மின் இணைப்பை மனைவி பெயருக்கு மாற்ற, உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். உதவி பொறியாளர் சவரிராஜன் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவரிடம் 1,000 ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட இருதயராஜ், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்த சவரிராஜனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தார். கண்காணித்த கூடுதல் எஸ்.பி., அவரைப் பிடித்தார். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர்.




லஞ்சம் - நாமக்கல் மாவட்ட பி.ஆர்.ஓ., பால்ராஜ் கைது


நாமக்கல் : நாமக்கல் மாவட்ட பி.ஆர்.ஓ., பால்ராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தீபாவளிக்காக சாலை ஓர கடைகளை வைக்க, சாலை வியாபாரிகள் குழு பால்ராஜை சந்தித்து பேசியது. அப்போது, கடைகள் வைப்பதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் தர பால்ராஜ் கோரியுள்ளார். பின்னர் 8 ஆயிரத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வியாபாரிகள் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தனர். நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பெரிய சாமி ஆலோசனையின் படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாயை, வியாபாரிகள் பால்ராஜிடம் அளித்த போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பால்ராஜூடன் அவரது டிரைவர் செல்வம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் ஏ.பி.ஆர்.ஓ., வாக இருந்த பால்ராஜ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பி.ஆர்.ஓ.,வாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.