புதியவை :

Grab the widget  Tech Dreams

02 அக்டோபர் 2009

மத்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ரூ.900 கோடி லஞ்சம் ?


இஸ்ரேல் ஒப்பந்தத்தில் மத்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ரூ.900 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை திருவனந்தபுரம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

திருவனந்தபுரம் மலையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் அஜீத். இவர் திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் வாங்கியதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.

இதில் மத்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ரூ.900 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். எனவே இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராமகிருஷ்ணன் இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினார்.

1 கருத்து:

 1. நல்ல முயற்சி
  தொடருங்கள்
  //அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.//

  ஆண்டவனே ஒரு ஏமாற்றுத்தான்.

  ல்ஞ்சம் வாங்குவது பெற்ற தாயை விபச்சாரத்திற்கு அனுப்பி அதில் வாழ்வதற்குச் சமம்.

  லஞ்சம் வாங்குபவன் எவனாயிருந்தாலும் இதை நினைத்துக் கொண்டு லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும்.

  சூடு சுரணை உள்ளவன் திருந்தட்டும்.

  பதிலளிநீக்கு