புதியவை :

Grab the widget  Tech Dreams

08 அக்டோபர் 2009

ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட துணை வட்டாட்சியர் ராமலிங்கம் கைது
திருவண்ணாமலை : பட்டா மாறுதலுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தரடாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது தந்தை முனுசாமி, கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்ததால், அவர் பெயரில் இருக்கும் நிலத்தை தன் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்காக, தரடாபட்டு வி.ஏ,ஓ.,வை அணுகினார். அந்த பணியை அவர் செய்து தராததால், மண்டல துணை வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் புகார் செய்தார். அந்த வேலையை செய்து தர மணிவண்ணனிடம், ராமலிங்கம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மணிவண்ணன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைப்படி, லஞ்சம் அளிக்க முற்பட்டபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக