புதியவை :

Grab the widget  Tech Dreams

10 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய மணவாளக்குறிச்சி போலீஸ் ஏட்டு கைதுநாகர்கோவில்: சொத்துத் தகராறு வழக்கில் சமரசம் செய்ய, ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே, திருநயினார்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவருக்கும், கடியப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் சொத்துத்தகராறு இருந்தது.


இதுபற்றி, மணவாளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டு, இரு தரப்பையும் அழைத்துப் பேசி சமரசம் செய்யப்பட்டது. இதன் பேரில், சுயும்புலிங்கத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்த ஏட்டு சுப்பிரமணியம், இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆயிரம் ரூபாய் தருவதாக கூறிய சுயம்புலிங்கம், இதுபற்றி நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., சுந்தரராஜனின் ஆலோசனையின் பேரில், சுயம்புலிங்கம் கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிய சுப்பிரமணியத்தை, லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக