புதியவை :

Grab the widget  Tech Dreams

31 மே 2010

லஞ்சம் :செய்யூர் சர்வேயர் சேகர் கைது .
செய்யூர்: செய்யூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன்(60). அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விதிமுறைப்படி செய்யூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார்.

மனு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுகுப்பத்தைச் சேர்ந்த சர்வேயர் சேகரிடம்(48) விசாரணைக்கு சென்றது. அவர் நிலத்தை சர்வே செய்து பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.

விருப்பம் இல்லாத குணசேகரன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.,விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், வெங்கடேசன், சரவணன் மற்றும் போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 2,000 ரூபாய் நோட்டுகளை குணசேகரின் சர்வேயர் சேகரிடம் வழங்கினர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

30 மே 2010

தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல்,மீண்டும் கைது


கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த 11-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் 24-ந்தேதி ஜாமீன் கோரி கரூர் கோர்ட்டில் சக்திவேல் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சர்வமங்களா, லஞ்ச வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலுவை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். மேலும் பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதாந்திர லாக்கப் விசிட்டிற்காக நீதிபதி சர்வமங்களா சென்றார். அங்கு ஆய்வு செய்தபோது தினசரி கையெழுத்து போட வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் 29ந்தேதி (நேற்று) ஸ்டேஷனில் கையெழுத்து போடாதது தெரிய வந்தது
இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேலின் ஜாமீனை ரத்து செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி சர்வமங்களா உத்தர விட்டார்.


27 மே 2010

பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôர் சோதனை


நாகர்கோவில்,​​ மே 27:​ ​ பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.​

அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.​ 15,420 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.​ இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து,​​ அரசு உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

நாகர்கோவில் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.​ சுந்தரராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன்,​​ பீட்டர்பால்துரை,​​ தர்மராஜ் உள்பட போலீசார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.​ அப்போது கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ரூ.​ 15,420 கண்டுபிடிக்கப்பட்டது.​ ​ ​ இது தொடர்பாக சார்பதிவாளர் நூர்ஜஹான் ​(48),​ இளநிலை உதவியாளர் ரேணுஜா ​(29),​ அலுவலக உதவியாளர் சந்திரபாபு ​(57),​ ஏஜெண்டுகள் நாகராஜன் ​(35),​ தம்புரான் ​(42),​ கண்ணன் ​(52) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.


பணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில்கணக்கில் இல்லாத பணம் பறிமுதல்


திருநெல்வேலி:நெல்லை, பணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டாத பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பத்திரவு பதிவு அலுவலகத்தில் லஞ்சப்பணம் புரள்வது குறித்து தகலறிந்த மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் போலீசார் நேற்று மாலையில் சோதனை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர்கள் ராஜூ, எஸ்கால் ஆகியோர் சோதனை நடத்தியதில் அலுவலக கம்ப்யூட்டருக்கு அருகில் போட்டு வைத்திருந்த பணம், மற்றும் உள்ளே இருந்த புரோக்கர்கள் வைத்திருந்த பணம், கணக்கில் காட்டமுடியாத பணம் என மொத்தம் 11 ஆயிரத்து 450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சப் ரிஜிஸ்ட்ரார் தாணுலிங்கம், உதவியார் மணி ஆகியோர் மீது கணக்கில் காட்ட முடியாத பணம் வைத்திருந்ததற்காக துறைவாரியான நடவடிக்கைக்கு வழக்கு தொடரப்படுவதாக, டி.எஸ்.பி.,தெரிவித்தார்.

லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீட்டிப்பு


மதுரையில் பைக் திருட்டு குறித்து சான்று வழங்க மனுதாரரிடம் லஞ்சம் வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரனுக்கு சிறைக்காவலை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சண்முகநாதன் (26). இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சகோதரி வீட்டிற்கு பைக்கில் வந்தார்.

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. இன்சூரன்ஸ் பெறுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் "மிஸ்ஸிங் சர்ட்டிபிகேட்' கேட்டு சண்முகநாதன் மனு செய்தார்.சான்று வழங்க 2,500 ரூபாய் லஞ்சம் தரும்படி இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரன் கேட்டனர். 1,500 ரூபாய் தருவதாக சண்முகநாதன் ஒப்புக்கொண்டார். கடந்த மே 12ல் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோர்ட் உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யின் ஜாமீன் மனுக்களை உதவி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது சிறைக்காவலை ஜூன் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி (பொறுப்பு) சேவரின் அருள் பெலிதா உத்தரவிட்டார்.ஊழல் செய்யும் ஊழியர்களுக்கு "டிஸ்மிஸ்' - சுப்ரீம் கோர்ட்


ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை வேலையிலிருந்து "டிஸ்மிஸ்' செய்வது தான் சரியான தண்டனை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.உத்தரகண்ட் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் சுரேஷ் சந்த் சர்மா. ஹரித்துவார் - ரிஷிகேஷ் தடத்தில் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய சுரேஷ், பயணிகளிடம் கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு டிக்கெட் தராமல் முறைகேடு செய்து வந்தார்

இது குறித்து பல முறை போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் சென்றது.கடந்த 87ல், இந்த புகார் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பப்பட்டார். மீண்டும் 88ம் ஆண்டு மே மாதம் திடீர் சோதனையின் போது, அவர் பல பயணிகளுக்கு டிக்கெட் தராமல் கட்டணத்தை வசூலித்து, தன் சொந்த செலவில் வைத்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ், பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் சுரேஷின் டிஸ்மிசை நியாயப்படுத்தியது. இதை எதிர்த்து அவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். "ஒரு சிறு தொகையை கையாடல் செய்ததற்காக பணியிலிருந்து நீக்குவது மிகப்பெரிய தண்டனை' என சுரேஷ் தெரிவித்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "நம்பி ஒப்படைத்த பணத்தை கையாடல் செய்தது தவறு. அந்த தொகை சிறியதாகவும் இருக்கலாம்; பெரியதாகவும் இருக்கலாம். அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலுக்கு, அவர்களை பணியிலிருந்து நீக்குவது ஒன்று தான் சரியான தண்டனை' என கூறி தீர்ப்பளித்தனர். ஐகோர்ட்டின் தீர்ப்பையும் அவர்கள் உறுதிபடுத்தினர்.

.

கோவை - யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி மோசடி:மேனேஜர் மீது வழக்கு


கோவை:தனியார் எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கிளை மேலாளர் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் "யு.ஏ.இ., எக்சேஞ்சு அண்டு பாரின் சர்வீஸ்' எனும் நிறுவனம் செயல்படுகிறது. வெளிநாட்டு பணத்தை, உள்நாட்டு பணமாக மாற்றி தருதல், விமான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டசேவைகளைமேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் இங்கு தணிக்கை நடந்தது. அதில், போலியான கணக்கு துவக்கப்பட்டு, 1.18 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டது.

இம்மோசடி குறித்து, தஞ்சையிலுள்ள யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவன மண்டல மேலாளர் கார்த்திகேயன், கோவை மாநகர் குற்றபிரிவில் புகார் கொடுத்தார்.

சத்திரக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
சத்திரக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில்உள்ள போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத 19 ஆயிரத்து 220 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பத்திர எழுத்தர்கள் சாகுல் ஹமீது 5,680, ஷாஜகான் 5,100, அசோக்குமார் 8,000 ரூபாய் வைத்திருந்தனர். சோதனையில் இவர்கள் முறையாக கணக்கு காட்டாததால், இந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், சார்பதிவாளர் விஜயாவிடம் கணக்கில் வராத 440 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.இரவு 8.30 மணிக்கு பின்பும் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாவட்ட தணிக்கை குழு ஆய்வாளர் ராஜா இன்று கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.

பழநி சப்ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் ரெய்டு, கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்.


பழநி: பழநி சப் ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் போலீசார் இரண்டு மணிநேர சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பழநி தாலுகா அலுவலக வளாகத்தில் சப் ரிஜிஸ்தார் ஆபிஸ் உள்ளது. நேற்று மாலை 3.45 மணிக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், சத்தியசீலன் கொண்ட குழு சோதனையை துவக்கியது. மாலை 5.45 மணிக்கு சோதனையை முடித்தனர்.

டி.எஸ்.பி.,முருகேசன் கூறுகையில்,"கணக்கில் காட்டாமல் அலுவலக நோட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. சப் ரிஜிஸ்தார் விஜயலட்சுமியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை,' என்றார்.

செம்மொழி மாநாட்டுப்பணியில் ஊழல்?


கோவை மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 76 ஆயிரம் ரூபாய் கமிஷன் பணம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் குறித்த விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால், கமிஷன் வழங்கிய கான்ட் ராக்டர்கள், வாங்கிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

உலகத்தமிழ்ச் செம் மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளா கத்தில் நடக்கிறது. இதையொட்டி, மாநகராட்சி எல்லைக்குள் இணைப்புச் சாலைகள், பூங்கா, சாலையோர பூங்கா, நடைபாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள், பல கோடி ரூபாய் மதிப்பில் அசுர வேகத்தில் நடக்கின்றன. இப்பணியில், தனியார் கான்ட் ராக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வேலைகள், மிகக் குறுகிய கால அவகாசத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகளின் தரத் தைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு போதிய நேரமில்லை; மாநாடு ஏற்பாடு பணிகளிலேயே முழு கவனமும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வளர்ச்சிப் பணி கான்ட்ராக்டர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் தொகை வசூலித்து வருவதாக, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை நடந்த சோதனையின் போது, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாய் மற்றும் கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

"அலுவலக ஆவணங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது?' என, மாநகராட்சி முதன்மை கணக்கு அலுவலர் கோமதிநாயகம் மற்றும் அவரது அலுவலக உதவியாளரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

மாநகராட்சி எல்லைக்குள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு சாலை, சாக்கடை, பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகளை கான்ட்ராக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். கான்ட்ராக்டர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்க அனுமதிக்கும் அதிகாரம் மாநகராட்சி துணைக் கமிஷனருக்கும், அதற்கும் மேற்பட்ட தொகையை அனுமதிக்கும் அதிகாரம் கமிஷனருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணி முடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் இருந்தே "செக்' வழங்கப்படுகிறது. இவ்வாறான "செக்' வழங் கும் போது குறிப்பிட்ட கமிஷன் தொகையை, அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கான்ட்ராக்டர்கள் கொடுத்துள்ளனர். அவ்வாறாக, ஒரே ஒரு நாளில் வசூலான தொகை தான், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 76 ஆயிரம் ரூபாய். இதை, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களில், கான்ட் ராக்டர்கள் தொடர் பான விவரங்கள் உள்ளன. எவ்வளவு லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன, அப்பணிகளைச் செய்த கான்ட் ராக்டர்கள் யார், எந்த தேதியில் பணிகள் துவக்கப் பட்டன, அதற்காக மாநகராட்சியால் அனுமதித்து வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவல்கள் ஆவணங்களில் உள்ளன. இந்த ஆவணங்களில் இடம் பெற்றிருக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, "சம்மன்' அனுப்பி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், சம்பந்தப் பட்ட கான்ட் ராக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.ட்சி கணக்குப் பிரிவில் இருந்த கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கணக்குப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு யாரும் உரிமை கோர முன்வராததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.,) 102 பிரிவில் (உரிமை கோரப்படாத சொத்து), லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.சம்பந்தப் பட்ட கான்ட் ராக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்
26 மே 2010

கோவை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு ரெய்டுகோவை : கோவை மாநகராட்சி கணக்கு அலுவலர் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ரெய்டு நடத்தி, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்படும்.

இப்பணிகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை காசோலையாக பெறுவர்.

பணிகள் முடித்து, காசோலை பெற செல்லும் ஒப்பந்ததாரர்களிடம், மாநகராட்சி கணக்கு அலுவலர் கோமதிவிநாயகம்,லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியா, இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ஞானசேகர், உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கணக்கு அலுவலர் அறையை, நேற்று மாலை சோதனை செய்தனர்.

இதில், கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. மேலும், அலுவலக உதவியாளர் நடராஜ் 22 ஆயிரம் ரூபாயும், உதவியாளர் புண்ணியவதி 4,000 ரூபாயும் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 28 ஆயிரத்து 760 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் செட்டித் தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன், வெங்கடேசன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இரவு 7.30 மணி வரை சோதனை நடந்தது.

சோதனையின் போது, அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் 28 ஆயிரத்து 760 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் சார் பதிவாளர் அலுவலகத்தில் 58 பத்திரங்கள் பதிவாகியிருந்தன. சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்காக இரவு, பகலாக பத்திரப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாகவே லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கணக்கில் வராத பணம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

கரூர் வி.ஏ.ஓ.பெரியசாமி கைது


லாலாப்பேட்டை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வாரிசு சான்று அளிக்க லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும், திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா, பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கே.பெரியசாமி(64). இவருடைய மாமனார் வீரபத்திரன், 1996ல் இறந்தார். கே.பெரியசாமி மனைவி செல்லம்மாள் பெயருக்கு, வீரபத்திரன் சொத்துக்கான வாரிசு சான்று கேட்டு, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கான விசாரணை, கிருஷ்ணராயபுரம் வடக்கு பகுதி வி.ஏ.ஓ., பெரியசாமியிடம் (58) சென்றது.

வாரிசு சான்று பரிந்துரைக்க, தனக்கு 1,200 ரூபாய் அளிக்குமாறு, வி.ஏ.ஓ., பெரியசாமி கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கே.பெரியசாமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தியதன் அடிப்படையில், நேற்று காலை 11 மணிக்கு, கே.பெரியசாமி பணத்துடன் சென்றார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உதவியாளர் கிருஷ்ணன், கே.பெரியசாமியிடம் பணத்தை பெற்று, வி.ஏ.ஓ., பெரியசாமியிடம் அளித்தார். பணத்தை தன்னுடைய மேஜையில் வி.ஏ.ஓ., வைத்ததும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் சுற்றிவளைத்தனர். கையும், களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளரை கைது செய்து, விசாரணைக்கு கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ., பெரியசாமி வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலை திட்ட டெண்டரில் மோசடி, ஊழல்: பெரிய அதிகாரிகள் கைது


புதுடில்லி: ஊழல் மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ.,) பொதுமேலாளர் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ., நேற்று முன்தினம் கைது செய்துள்ளது.

என்.எச்...,யின் தலைமை பொது மேலாளர் எஸ்.கே. நிர்மல், பொது மேலாளர் நிதின் ஜெயின், டில்லியை சேர்ந்த, ஓரியன்டல் ஸ்டரக்ச்சுரல் இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் கே.எஸ்.பக்ஷி மற்றும் செயலர் எஸ்.கே.தீட்சித் ஆகிய நான்கு பேரை சி.பி.., கைது செய்துள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்.எஸ்.ஏ.ஐ., நான்கு வழி சாலைகளுக்கான டெண்டர் விட்டிருந்தது.

அதற்கு 13 நிறுவனங்கள், ஒப்பந்த புள்ளிகள் கொடுத்திருந்தன. அவற்றில் அற்ப காரணங்களை காட்டி நான்கு நிறுவனங்களை, இந்த அதிகாரிகள் தள்ளி விட்டனர்.

திறமைமிக்கவர்களை ஒதுக்கிவிட்டு, பணலாபம் அடைய இவ்வழியை மேற் கொண்டனர். அடுத் ததாக, நான்கு கம்பெனிகளை சாக்குபோக்கு சொல்லி, டெண்டர் எடுக்க விடாமல் செய்து விட்டனர்.

ஒப்பந்தம் போடப் பட்ட கம்பெனிகள் அதிக டெண்டர் கேட்க வழி செய்து, அதற்காக சில சாமர்த்தியமான ஆவணங்களை உருவாக்கி, அதில் கிடைக்கும் பணத்தில் ஒருபகுதியை பேரமாக பெறவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இவ்வாறு சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரிகளோடு தொடர் புடைய எட்டு இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.

என்.எச்.ஏ.ஐ., அதிகாரியின் வீட்டிலிருந்து 46 லட்ச ரூபாய் ரொக்கம், குர்கான், டில்லி, ஜெய்ப்பூர் இடங்களிலிருந்த வீடுகளின் ஆவணங்களும், பிற அதிகாரிகளின் வீடுகளிலிருந்து 39 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மற்றும் ஜெய்ப்பூரிலுள்ள இரண்டு பிளாட் வீடுகள், ஒரு பிளாட் நிலம் ஆகியவற்றின் ஆவணங்களும் கைப்பற்றப் பட்டன. இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
25 மே 2010

லஞ்சமோ லஞ்சம் - கோவையில் ஓராண்டில் 12 பேர் கைது


கோவை மற்றும் திருப்பூரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஓராண்டில் நடத்திய வேட்டையில் 12 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள்,செக்போஸ்ட்களில் நடந்த திடீர் சோதனையில் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள் ளது, லஞ்ச ஒழிப்புத்துறை.

முன்பெல்லாம், சட்டவிதிகளை மீறி காரியம் செய்து தர மட்டுமே அரசு துறைகளில் லஞ்சம் பெறப்பட்டது. தற்போது, சட்டப்படியான கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளக்கூட, கைநீட்டும் போக்கு அதிகரித்துள்ளது.

"லஞ்சம் தராவிடில் காரியம் நடக்காது' என்ற, முறைகேடுகளுக்கு துணைபோகும் தவறான எண்ணம், மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இதனால், லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்களை இணைக்க லஞ்ச ஒழிப்புத்துறை கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.கடந்த ஓராண்டில், அதாவது 2009, ஏப்ரல் முதல் 2010 ஏப்ரல் வரை, கோவை மற்றும் திருப்பூரிலுள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள், ஊழியர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டா பெயர் மாற்றத்துக்கு 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி துணைதாசில்தார் நமசிவாயம், வடபுதூர் கிராம நிர்வாக அதிகாரி ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மருந்துக்கடைக்கு லைசென்ஸ் வழங்க 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கோவை மருந்து ஆய்வாளர் சிதம்பரம், புரோக்கராக செயல்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் திருஞானசம்மந்தம் ஆகியோர் பிடிபட்டனர்.

"சால்வன்சி' சான்றிதழ் வழங்க 600 ரூபாய் லஞ்சம் வசூலித்த திருப்பூர் தெற்கு அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் முருகேசன்,

சொத்து மறு மதிப்பீடு செய்ய 5,000 ரூபாய் லஞ்சம் வசூலித்த திருப்பூரைச் சேர்ந்த தாசில்தார் விஸ்வநாதன், ஓய்வு பெற்ற தாசில்தார் மீன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போன்று, அடங்கல் சான்று வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட கருமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பூபதி,

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க 300 ரூபாய் லஞ்சம் பெற்ற சின்னவேடம்பட்டி மின்வாரிய உதவி இன்ஜினியர் துரைராஜ்,

மின் இணைப்பை மாற்றித்தர 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிணத்துக்கடவு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன்,

பள்ளி ஆசிரியருக்கு நிரந்தர பணி உத்தரவு வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்த மாவட்ட தொடக்கல்வி அலுவலக உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிடிபட்டனர்.

பட்டா பெயர் மாற்றத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மசக்கவுண்டன்செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி முத்துசாமி,

"டிரேடு சர்ட்டிபிகேட்' வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட மேட்டுப்பாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தகுமார்,

அடங்கல் ஆவணம் வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் வசூலித்த காட்டம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து,

3000 ரூபாய் லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி வணிகவரித்துறை ஊழியர் சேமகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.13 லட்சம் பறிமுதல்: கைது நடவடிக்கை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் திடீர் சோதனைகளும் நடந்தன. பாலசுந்தரம் ரோட்டிலுள்ள தொழிலாளர் துறை அலுவலகம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம், பொள்ளாச்சி வளந்தாயமரம் வட்டார போக்குவரத்து துறை செக்போஸ்ட், கந்தேகவுண்டன் சாவடி போக்குவரத்து துறை செக்போஸ்ட், பொள்ளாச்சி கூட்டுறவு சார் பதிவாளர் வீடு, கோபாலபுரத்திலுள்ள கூட்டுறவு சொசைட்டி, திருப்பூரிலுள்ள இணைப்பதிவாளர் அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம், கோவை வணிகவரி அலுவலகம், பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி 13 லட்சம் ரூபாயை முதல் செய்தனர். பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் ஒரே ஆண்டில் இரு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், "அரசுத்துறைகளில் லஞ்ச முறைகேடுகளை ஒடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். சட்டப்படியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் செயல்படும் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0422 - 2238 647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். லஞ்சத்துக்கு எதிரான சட்டப்படியான நடவடிக்கைகளில் பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்ற வேண்டும்' என்றனர்.

23 மே 2010

கேதன் தேசாய் உதவியாளருக்கு 1,000 சட்டை, 200 கோட், 100 ஜோடி ஷூ


புதுடில்லி : லஞ்ச வழக்கில் கைதான கேதன் தேசாயின் உதவியாளர் ஜித்தேந்தர் பால் சிங்கின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகளே ஆச்சர்யப்படும் வகையில், விலை உயர்ந்த 1,000 சட்டைகள், 200 கோட், 100 ஜோடி ஷூக்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கேதன் தேசாயின் உதவியாளராகச் செயல்பட்ட ஜித்தேந்தர் பால் சிங் என்பவரும் கைது செய்யபட்டார். தன்னை ரியல் எஸ்டேட் அதிபர் என கூறிக் கொள்ளும் ஜித்தேந்தர், உண்மையில் கேதன் தேசாயின் நம்பத்தகுந்த உதவியாளராகச் செயல்பட்டு வந்தார்.

லஞ்சம் வாங்கும் விவகாரங்களில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசாய்க்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள ஜித்தேந்தர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த பொருட்களை பார்த்து சி.பி.ஐ., அதிகாரிகளே மலைத்துப் போயினர். ஜித்தேந்தர் சிங், ராஜபோக வாழ்க்கை நடத்தி வந்தது தெரிய வந்தது.

அவரது வீட்டு அறையில் மிகவும் விலை உயர்ந்த 1,000க்கும் மேற்பட்ட சட்டைகள் இருந்தன. கோடீஸ்வரர்களும், அதிகாரிகளும் அணியும் விலை உயர்ந்த 200 டிசைனர் கோட்டுகளும் இருந்தன.

விலை மதிப்புள்ள 15 மொபைல் போன்கள் (ஒவ்வொரு போனின் விலையும் தலா 10 லட்சம் ரூபாய்), 100 ஜோடி ஷூக்கள் (ஒவ்வொன்றும் தலா 70 ஆயிரத்தில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் விலை உடையவை), விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் (ஒவ்வொரு பாட்டிலும் தலா 25 ஆயிரம் ரூபாய்) ஆகியவையும் இருந்தன. இவை அனைத்தையும் சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறுகையில், "ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் ஒரு நபர், அந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் மூலம், பழங்கால மன்னர்கள் போல் ராஜபோக வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமற்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக நடந்த முறைகேடுகளில், இடைத்தரகராக செயல்பட்டதன் மூலமே, ஜித்தேந்தர் இந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளோம்' என்றனர்.

20 மே 2010

லஞ்சம் கேட்ட நிலஅளவை துறை உதவியாளர் கைது
சென்னை :

சஸ்பெண்ட் செய்யப்பட்டவரின் சம்பள அரியர்ஸ் பணத்தை தர லஞ்சம் கேட்ட நிலஅளவைத்துறை அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் அம்பிராஜன். இவர், நிலஅளவை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவருக்கு 2006ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு அரியர்ஸ், 47 ஆயிரம் ரூபாய் நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக நில அளவைத் துறை அலுவலக உதவியாளராக இருக்கும் ஏகாம்பரம் (56) என்பவரை அம்பி அணுகியுள்ளார்.

அப்போது ஏகாம்பரம், அம்பிராஜனிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதை தர விரும்பாத அம்பிராஜன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ஆயிரம் ரூபாயை ஏகாம்பரத்திடம், அம்பிராஜன் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏகாம்பரத்தை கையும் களவுமாக பிடித்தனர். பின், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

18 மே 2010

டி.எஸ்.பி.,க்கு தங்கப்பதக்கம்

திருப்பூர் டி.எஸ்.பி., ராஜா, ஏற்கனவே ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இன்ஸ் பெக்டராக ஏழு ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

அப்போது, பல வழக்குகளில் சிறப்பாக செயல் பட்டதற்காக, கவர்னர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 15ம் தேதி, சென்னையில் நடந்த விழாவில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இயக்குனர் போலோநாத், டி.எஸ்.பி., ராஜாவுக்கு தங்கப்பதக்கத்தை வழங்கினார். அவரை, திருப்பூர் எஸ்.பி., அருண் நேற்று பாராட்டினார்.

திரு .ராஜா அவர்களுக்கு உதயத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

லஞ்சத்தை கட்டுப்படுத்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும்; யோகா நிபுணர் ராம்தேவ் யோசனை


பிரபல யோகாசன நிபுணர் பாபாராம்தேவ் மராட்டிய மாநிலம் பீட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

நிபுணர் பாபாராம்தேவ் மராட்டிய மாநிலம் பீட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஊழல் மிகவும் அதிகரித்து விட்டது. உரிய நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
ஊழல் செய்து சம்பாதித்தவர்கள் சொத்துக்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வரவேண்டும்.

இதற்கு சிறந்த வழி ஒன்று இருக்கிறது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகள் அனைத்தையும் ஒழித்துவிட வேண்டும். அப்போது அவர்கள் ஊழல் செய்து சேர்த்த பணம் வெளியே வந்து விடும்.

லஞ்சத்துக்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளே அதிகம் கொடுக்கப்படுகின்றன. இந்த பணத்தை ஒழித்தால் லஞ்ச ஊ
ல்கட்டுப்படுத்தபடும்.

இவ்வாறு ராம்தேவ் கூறினார்.


ஓசூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


வெளிமாநிலங்களில் இருந்து தமிழகஎல்லைக்குள் வரும் வாகனங்களை சோதனை நடத்த ஜூஜூவாடியில் சோதனை சாவடி உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இதன் மூலம் வருமானம் அதிகமாக உள்ளது.

இதில் ஊழியர்கள் பலர் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து லஞ்சஒழிப்பு துறை போலீசார் அடிக்கடி திடீர்சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதியும் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில்வராத பணம் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 113 பணம் கைப்பற்றப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் தனபால், மற்றும் புரோக்கர்கள் சுனில்குமார், ராஜீவ், சரவணன், ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.


16 மே 2010

டாக்டர் கணவனுக்கு மயக்க ஊசி போட்ட மனைவி !


சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(41); லேப்ராஸ்கோபி டாக்டர். அவரது மனைவி சித்ரா(44); மகப்பேறு டாக்டர். இவர்களது மகன் நவீன்(16).

காகாபாளையத்தில் சி.கே., மருத்துவமனையை சித்ரா நடத்தி வந்தார். இடைப்பாடியில் நவீன் மருத்துவமனையை கண்ணன் பார்த்து வந்தார். பிரபல மருத்துவமனைகளில் ஆபரேஷன் பணிக்கும் அவர் சென்று வந்தார்.கடந்த 18 ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்த டாக்டர் தம்பதிகளிடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டது.

இது விவாகரத்து வரை சென்றது. பின் பெற்றோர், உறவினர்கள் தலையீட்டால் பிரித்து வாழ்ந்த தம்பதியர், இரண்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்வில் சொத்துப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. கண்ணன் பெயரில் உள்ள சொத்துக்களை, தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என, சித்ரா பிரச்னை செய்துள்ளார்.

இதற்கு அவர்களது உறவினர்களும் ஆதரவாக இருந்துள்ளனர்.கடந்த 24ம் தேதி வீட்டுக்கு வந்த கண்ணனை, மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தனி அறையில் கட்டி வைத்து மயக்க ஊசி போட்டு சித்ரவதை செய்து வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த கண்ணனை, அவரது மாமா மீட்டு சேலம் தரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதைத் தொடர்ந்து, மகுடஞ்சாவடி போலீசாரிடம் டாக்டர்கண்ணன் அளித்தபுகார் விவரம்: ஐந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்த சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவிக்கும், எனக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று வாழப்பாடி சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்ட பின், மனைவி அறைக்கு சென்றேன்.

அப்போது திடீரென லேப் டெக்னீஷியன் மகாதேவன், சித்ராவின் தம்பி கோபு, என் சகலை பாலசுப்பிரமணியம், சித்ராவின் அக்கா விஜயலட்சுமி, கோபுவின் மனைவி விமலா மற்றும் என்னுடைய மனைவி சித்ரா ஆகியோர் என்னை பிடித்து எலக்ட்ரிக் ஒயரால் கைகளையும், கால்களையும் கட்டி, அடித்து படுக்கையில் முகத்தை அமுக்கி, அதிகப்படியான மயக்க மருந்து மூலம் இடுப்பில் ஊசி போட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐந்து முறை மயக்க ஊசி போட்டனர். சித்ரா என்னிடம் வந்து, 'எங்கப்பா பத்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதில் நான் கையெழுத்து போட்டு சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் ஊசி போட்டு கொலை செய்து விட்டு, நீயே தற்கொலை செய்து கொண்டதாக கூறி விடுவேன்' என, மிரட்டினார்.உயிருக்கு பயந்து நானும் எழுதிய பத்திரம், எழுதாத பத்திரங்களில் கையெழுத்து போட்டேன்.

அதன் பிறகு மயக்க ஊசி போட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் அடைத்து விட்டனர். மயக்கம் தெளிந்து, 'காப்பாற்றுங்கள்' என்று கத்தினேன். என் மாமா வந்து என்னை மீட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என கூறினார். அதன்படி தரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், ''டாக்டர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்; தேடி வருகிறோம். இன்று புகார் அளிப்பவர்கள், பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம் என்று வருவர். சித்ராவிடம் விசாரணை நடத்தினால், உண்மை நிலை தெரியவரும்,'' என்றார்.

இந்த சம்பவத்துக்கு பின், சித்ரா மற்றும் அவருடன் இருந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவர்கள் முயற்சித்ததாகவும், அந்த மனு தள்ளுபடியானதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நன்றி : தினமலர்

13 மே 2010

கேதன் தேசாய் ராஜினாமா செய்தார் !


லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசய், பஞ்சாபில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக லஞ்சம் வாங்கியபோது, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். அவரது வீடுகளில் இருந்து ஏராளமான ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மருத்துவ கவுன்சில் துணைத் தலைவர் கேசவன் குட்டி நாயருக்கு, கேதன் தேசாய் நேற்று அனுப்பி வைத்தார். பின், இந்த கடிதம் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம சேவகர் கைது


மதுராந்தகம்:அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண நிதியுதவி வழங்க 800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

வேடந்தாங்கலைச் சேர்ந்த ஸ்ரீதர் மனைவி தேவி. இவர், திருமண நிதியுதவி பெற அரசிடம் விண்ணப்பித்தார். சமீபத்தில் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வந்தது. அதை பெறுவதற்காக அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கிருந்த கிராம சேவகர் ஜெயபத்மினி(எ)சாயல்ராணி(56) திருமண உதவித் தொகைக்கான காசோலையை வழங்க 800 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

இது குறித்து தேவி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன் ஆகியோர் விசாரித்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தேவியிடம் கொடுத்தனர்.

அவர் நேற்று மாலை 5 மணிக்கு அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றார். ஜெயபத்மினியிடம் போலீசார் வழங்கிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அவர் பெற்றுக் கொண்டதும், மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு : 2 பேர் கைது


சென்னை அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., சரஸ்வதி தலைமையில் நடந்த அதிரடி ரெய்டு நடந்தது.

இதில் அலுவலகத்தில் புரோக்கர்களாக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சார்பதிவாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்தது. மேலும் கணக்கில் வராத ரூ. 3500 கைப்பற்றப்பட்டது.

12 மே 2010

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை


மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகநாதன்(260. இவர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள னது சகோதரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் காணமல் போனது தொடர்பாக கடந்த 02.11.2009ம் ஆண்டு ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோரிடம் மிஸ்சிங் சர்டிபிகேட் பெற அணுகினார். அதற்கு ரூபாய். 1200 லஞ்சமாக கேட்டனர். சண்முகநாதன் அந்த பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பல்லடத்தில் லஞ்சம் பெற்ற வணிகவரி உதவியாளர் கைது
பல்லடம் : கடை நடத்துவதற்கு, லைசென்ஸ் வழங்க 3,750 ரூபாய் லஞ்சம் கேட்ட பல்லடம் வணிகவரித்துறை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒண்டிப்புதூர் சூரியாநகரைச் சேர்ந்தவர் செல்வமணி(32). இவர், கடை நடத்துவதற்கு லைசென்ஸ் பெற, பல்லடம் வணிகவரித்துறை துணை வணிகவரி அலுவலர் அலுவலகத்தில், வணிகவரித் துறை உதவியாளர் சேமக்குமாரிடம் (40) கடந்த 5ம்தேதி விண்ணப்பித்தார்.

அப்போது லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 500 ரூபாயையும் செலுத்தினார். ஆனால், 3,750 ரூபாய் லஞ்சம் தந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும் என, செல்வமணியிடம் சேமக்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து, செல்வமணி கோவை லஞ்சஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, செல்வமணி ரசாயனப்பொடி தடவிய, 3,750 ரூபாயை சேமக்குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த கூடுதல் எஸ்.பி., சண்முகப்பிரியா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், உன்னிகிருஷ்ணன், சுந்தர்ராஜ், கருணாகரன், ஜெரால்டு ஆகியோர் சேமக்குமாரை பிடித்தனர். பின்,வணிகவரித்துறை அறலுவலகத்தில் இருந்த முக்கிய பைல்களை ஆய்வு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிந்து சேமக்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க கோவை அழைத்து சென்றனர்.

லஞ்சம் வாங்கியவருவாய் ஆய்வாளர் கைது
கள்ளக்குறிச்சி : முதியோர் உதவித் தொகை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டம்மாபேட்டையைச் சேர்ந்தவர் எல்லப்பன். முதியோர் உதவித் தொகை கேட்டு, வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனு கடந்த வாரம் கச்சிராயபாளையம் வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் விசாரணைக்காக வந்தது. அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட ராஜசேகர், 500 ரூபாய் லஞ்சமாக எல்லப்பனிடம் கேட்டார்.

இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் எல்லப்பன் புகார் செய்தார். நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுதர்சனம், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி மற்றும் போலீசார் மறைந்திருந்து, எல்லப்பனிடம் பவுடர் தடவிய 500 ரூபாயை கொடுத்து அனுப்பினர். வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் அந்த பணத்தை எல்லப்பன் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜசேகரனை கைது செய்தனர்.

11 மே 2010

ரூ.700 லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது


மதுரை:மதுரையில் மகப்பேறு திட்டத்தில் நிதியுதவி வழங்க, 700 ரூபாய் லஞ்சம் வாங்கிய நர்ஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.மதுரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் கங்காலட்சுமி (44). பைகாராவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றுகிறார். அரசின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ், கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாய் வழங்க, இவர் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொற்செல்வி என்பவருக்கு நிதியுதவி வழங்க, கங்காலட்சுமி 700 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.நேற்று காலை 11.30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொற்செல்வி யிடமிருந்து லஞ்சம் பெற்ற கங்காலட்சுமியை, டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, நான்கு பேரிடம் லஞ்சம் வாங்கி வைத்திருந்த 3,200 ரூபாயையும், அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

விவசாயிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற வணிகவரி உதவி அலுவலர் கைது


திருத்தணி:செங்கல் சூளைக்கான உரிமத்தை புதுப்பிக்க 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை உதவி அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெள்ளாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகரெட்டி மகன் குப்புசாமி (32). விவசாயியான இவர் செங்கல் சூளை வைத்துள்ளார்.

இதற்கான உரிமத்தை புதுப்பிக்க, திருத்தணி வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சென்று, உதவி அலுவலர் கருணாகரனை (55) சந்தித்து உரிமத்தை புதுப்பித்து தருமாறு கேட்டார். அதற்கு அவர் 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கலைச்செல்வன், வெங்கடேசன் ஆகியோர் குப்புசாமியிடம் ரசாயனம் தடவிய எட்டு 500 ரூபாய் நோட்டு களை கொடுத்து அனுப்பிவிட்டு, நேற்று மாலை 4 மணியளவில் திருத்தணி வணிக வரித்துறை அலுவலகத்தில் மறைந்து நின்றனர்.

அலுவலகத்துக்குள் சென்ற அவர், உதவி அலுவலர் கருணாகரனிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கருணாகரனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10 மே 2010

10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது.தூத்துக்குடி : வல்லநாட்டில் ரூபாய். 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

நெல்லையை சேர்ந்த சிவபாரதி என்பவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில்உலர்மின் கலவையகம் கட்டியுள்ளார். இதற்கு மின் இணைப்பு கொடுக்க வல்லநாடு மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளளார்.

மின் இணைப்பு கொடுக்க அந்த அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரியும் திருப்பதி(44) என்பவர் ரூபாய்.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து சிவபாரதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதனைதொடர்ந்து சிவபாரதி திருப்பதியிடம் பேசியபடி முதல்கட்டமாக ரூபாய். 10 ஆயிரம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திருப்பதியை கைது செய்தனர். இதனைபார்த்த திருப்பதி லஞ்ச பணத்தை தனது தொண்டைக்குள் போட்டு விழுங்க முயன்றார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை தொண்டைக்குள் இருந்து எடுத்தனர்.

7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ.கைது .
கரூர் : கரூரில் ரூபாய். 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.., கைதுசெய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகமலை போலீஸ் நிலையத்தில்எஸ்.., யாக பணிபுரிபவர் சக்திவேல். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த துரைஎன்பவர் தனது விவசாயம் நிலம் தொடர்பான பிரச்சனைக்கு சக்திவேலைஅணுகிய போது, சக்திவேல் லஞ்சம் கேட்டார்.

இதனை தொடர்ந்து சக்திவேல் ரூபாய். 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


08 மே 2010

கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிகாரி கைது


தேனி:கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், போடியை சேர்ந்த விவசாயி அமர்நாத் (60). இவர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில், 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனிடம் (56) விண்ணப்பித்தார்.

இந்த கடன் அனுமதி வழங்க, 10 ஆயிரம் ரூபாயை ஜெகதீசன் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து அமர்நாத், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். தேனி என்.ஆர்.டி., நகரில் அவர் தங்கியிருந்த அறைக்கு, நேற்று காலை சென்ற அமர்நாத்,வேதிப்பொருள் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெதீசனிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

அறையை சோதனையிட்ட போலீசார், 4.75 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இதில் கணக்கு காண்பிக்கப்பட்ட, 2.25 லட்சம் ரூபாயை அவரிடம் போலீசார்திருப்பி கொடுத்தனர். கணக்கில் காட்டப்படாத 2.50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். தான், இருதய நோயாளி என அவர் கூறியதால், போலீசார்அவரை தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

05 மே 2010

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் கைது


சென்னை : துப்புரவு பணியாளர்களிடம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அமைந்தகரை, செனாய் நகர், 67 வது வார்டு பகுதியிலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில், துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்கள், ரிஜிஸ்டரில் கையெழுத்திட வேண்டும். ரிஜிஸ்டரை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்ளும் மாநகராட்சி ஊழியர்கள், 'ஆப்சென்ட்' போட்டு விடுவதாக பணியாளர்களை மிரட்டினர். இப்பிரச்னையிலிருந்து தப்பிக்க, மாதம் 200 முதல் 300 ரூபாய் வரை லஞ்சம் கேட்டனர்.

இத்தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொன்னுச்சாமியின் கவனத்திற்கு சென்றது. இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, இமானுவேல் ஞானசேகர், அசோகன், ரஞ்சித்சிங் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. செனாய் நகரிலுள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே, நேற்று காலை 6 மணிக்கு தனிப்படை போலீசார் பதுங்கியிருந்தனர். மாநகராட்சி அலுவலக மேஸ்திரி நாதன் (53), மாநகராட்சி களப்பணியாளர் கரா வெங்கய்யா (56) ஆகிய இருவரும் ஊழியர்களிடமிருந்து, பணத்தை மிரட்டி வசூலித்து கொண்டிருந்தனர். தனிப்படை போலீசார் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் வசூலித்த லஞ்சம் தொகை 12 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

தென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை.


திருநெல்வேலி :தென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் புரள்வது குறித்து புகார்கள் வருகின்றன.

தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் எஸ்கால் உள்ளிட்டபோலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

சார் பதிவாளர் கஸ்தூரி, இளநிலை உதவியாளர் பீர்முகம்மது, அலுவலக உதவியாளர் காதர்மைதீன் ஆகியோர் இருந்தனர். கூடுதல் பணிக்காக அதிகாரிகளே பணியமர்த்திக்கொண்ட மூன்று வெளிநபர்களும் பணியில் இருந்தனர்.

சோதனையில் 22 ஆயிரத்து 565 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதற்கு அதிகாரிகளால் கணக்கு காண்பிக்க முடியவில்லை. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 6 பேர் மீதும் துறைவாரியான நடவடிக்கை பரிந்துரைக்கும் வகையில் வழக்குபதிவு செய்தனர்.

04 மே 2010

லஞ்ச வழக்கில் விருதுநகர் வட்டாட்சியர் சஸ்பெண்ட்

லஞ்ச வழக்கில் சிக்கிய விருதுநகர் வட்டாட்சியரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.​ ​ ​

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறையின் வட்டாட்சியராகப் பணிபுரிந்தவர் சதானந்தம் ​(58).இவர் 2007 ஆம் ஆண்டு சாத்தூரில் வட்டாட்சியராகப் பணிபுரிந்தார்.

அப்போது நல்லிகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்திருந்தாராம்.​ சான்றிதழ் வழங்க சதானந்தம் லஞ்சம் கேட்டாராம்.​ ​ ​

இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் புகார் செய்துள்ளார்.லஞ்ச ஒழிப்புப்
போலீசார் ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த நபரிடம் கொடுத்து அனுப்பினராம்.​ ​ ​ அவர்,​​ வட்டாட்சியர் சதானந்தத்திடம் பணத்தைக் கொடுக்கும்போது,​​ அவரைக் கைது செய்தனர்.​

அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.​ பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.​ ​ இதையடுத்து,​​ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணியில் மீண்டும் சேர்ந்தார்.​ ​


அவர் விருதுநகரில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறை வட்டாட்சியராகப் ​ பணிபுரிந்து வந்துள்ளார்.​ இந்த நிலையில்,​​ அவர் ஏப்ரல் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார்.​ ​ ​ ஆனால்,​​ ஏப்ரல் 29 ஆம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் ​ உத்தரவிட்டுள்ளது.​ ​ ​ லஞ்ச ஒழிப்புப் போலீ
சாரால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால்,​​ அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது