
சென்னை :
சஸ்பெண்ட் செய்யப்பட்டவரின் சம்பள அரியர்ஸ் பணத்தை தர லஞ்சம் கேட்ட நிலஅளவைத்துறை அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் அம்பிராஜன். இவர், நிலஅளவை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவருக்கு 2006ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு அரியர்ஸ், 47 ஆயிரம் ரூபாய் நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக நில அளவைத் துறை அலுவலக உதவியாளராக இருக்கும் ஏகாம்பரம் (56) என்பவரை அம்பி அணுகியுள்ளார்.
அப்போது ஏகாம்பரம், அம்பிராஜனிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதை தர விரும்பாத அம்பிராஜன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ஆயிரம் ரூபாயை ஏகாம்பரத்திடம், அம்பிராஜன் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏகாம்பரத்தை கையும் களவுமாக பிடித்தனர். பின், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக