புதியவை :

Grab the widget  Tech Dreams

26 மே 2010

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 28 ஆயிரத்து 760 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் செட்டித் தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன், வெங்கடேசன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இரவு 7.30 மணி வரை சோதனை நடந்தது.

சோதனையின் போது, அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் 28 ஆயிரத்து 760 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் சார் பதிவாளர் அலுவலகத்தில் 58 பத்திரங்கள் பதிவாகியிருந்தன. சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்காக இரவு, பகலாக பத்திரப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாகவே லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கணக்கில் வராத பணம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக