புதியவை :

Grab the widget  Tech Dreams

26 மே 2010

தேசிய நெடுஞ்சாலை திட்ட டெண்டரில் மோசடி, ஊழல்: பெரிய அதிகாரிகள் கைது


புதுடில்லி: ஊழல் மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ.,) பொதுமேலாளர் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ., நேற்று முன்தினம் கைது செய்துள்ளது.

என்.எச்...,யின் தலைமை பொது மேலாளர் எஸ்.கே. நிர்மல், பொது மேலாளர் நிதின் ஜெயின், டில்லியை சேர்ந்த, ஓரியன்டல் ஸ்டரக்ச்சுரல் இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் கே.எஸ்.பக்ஷி மற்றும் செயலர் எஸ்.கே.தீட்சித் ஆகிய நான்கு பேரை சி.பி.., கைது செய்துள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்.எஸ்.ஏ.ஐ., நான்கு வழி சாலைகளுக்கான டெண்டர் விட்டிருந்தது.

அதற்கு 13 நிறுவனங்கள், ஒப்பந்த புள்ளிகள் கொடுத்திருந்தன. அவற்றில் அற்ப காரணங்களை காட்டி நான்கு நிறுவனங்களை, இந்த அதிகாரிகள் தள்ளி விட்டனர்.

திறமைமிக்கவர்களை ஒதுக்கிவிட்டு, பணலாபம் அடைய இவ்வழியை மேற் கொண்டனர். அடுத் ததாக, நான்கு கம்பெனிகளை சாக்குபோக்கு சொல்லி, டெண்டர் எடுக்க விடாமல் செய்து விட்டனர்.

ஒப்பந்தம் போடப் பட்ட கம்பெனிகள் அதிக டெண்டர் கேட்க வழி செய்து, அதற்காக சில சாமர்த்தியமான ஆவணங்களை உருவாக்கி, அதில் கிடைக்கும் பணத்தில் ஒருபகுதியை பேரமாக பெறவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இவ்வாறு சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரிகளோடு தொடர் புடைய எட்டு இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.

என்.எச்.ஏ.ஐ., அதிகாரியின் வீட்டிலிருந்து 46 லட்ச ரூபாய் ரொக்கம், குர்கான், டில்லி, ஜெய்ப்பூர் இடங்களிலிருந்த வீடுகளின் ஆவணங்களும், பிற அதிகாரிகளின் வீடுகளிலிருந்து 39 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மற்றும் ஜெய்ப்பூரிலுள்ள இரண்டு பிளாட் வீடுகள், ஒரு பிளாட் நிலம் ஆகியவற்றின் ஆவணங்களும் கைப்பற்றப் பட்டன. இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக