லஞ்ச வழக்கில் சிக்கிய விருதுநகர் வட்டாட்சியரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறையின் வட்டாட்சியராகப் பணிபுரிந்தவர் சதானந்தம் (58).இவர் 2007 ஆம் ஆண்டு சாத்தூரில் வட்டாட்சியராகப் பணிபுரிந்தார்.
அப்போது நல்லிகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்திருந்தாராம். சான்றிதழ் வழங்க சதானந்தம் லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் புகார் செய்துள்ளார்.லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த நபரிடம் கொடுத்து அனுப்பினராம். அவர், வட்டாட்சியர் சதானந்தத்திடம் பணத்தைக் கொடுக்கும்போது, அவரைக் கைது செய்தனர்.
அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணியில் மீண்டும் சேர்ந்தார்.
அவர் விருதுநகரில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார். ஆனால், ஏப்ரல் 29 ஆம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
04 மே 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக