புதியவை :

Grab the widget  Tech Dreams

31 ஜூலை 2010

ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.எல்.ஏ. சிக்கினார்


இந்தூர், ஆக.1:
பொறியியல் கல்லூரி தொடங்க உதவி செய்வதாக கூறி மத்திய பிரதேச பா.ஜ. எம்.எல்.ஏ.

ரூ 10ஆயிரம் லஞ்சம் வாங்குவது கேமராவில் ரகசியமாக படம் பிடித்து வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், பா.ஜ.வுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ. ஆட்சி செய்கிறது. இங்கு, சிவபுரி மாவட்டத்தில் உள்ள கரிரா சட்டப்பேரவை தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ.வாக ரமேஷ் கத்திக் இருக்கிறார். சொராபுதீன் போலி என்கவுன்டர் பிரச்னையால் குஜராத்தில் பா.ஜ.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கத்திக் மூலமாக புதிய தர்மசங்கடம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜீத். கரிரா தொகுதியில் பொறியியல் கல்லூரி தொடங்குவதற்காக 6 மாதங்களுக்கு மேல் அலைந்து பார்த்தார். எங்கும் காரியம் நடக்காததால், கடைசியாக ரமேஷ் கத்திக்கின் உதவியை நாடினார். கல்லூரி தொடங்க அனுமதி கொடுக்கும்படி அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்குவது, கல்லூரி கட்ட அரசு நிலத்தை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்வதற்காக அஜீத்திடம் கத்திக்
ரூ 5லட்சம் லஞ்சம் கேட்டார். அதற்கு ஒப்புக் கொண்ட அஜீத், முதல் கட்டமாக
ரூ 10ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதை கத்திக் வாங்குவதையும், அந்த நேரத்தில் அவருடன் பேசிய விவரங்களையும் அஜீத் தந்திரமாக வீடியோ கேமராவில் படம் பிடித்துள்ளார். கத்திக் & அஜீத் இடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:

கத்திக்:
எத்தனை பேர் சேர்ந்து கல்லூரி தொடங்க உள்ளீர்கள்?
அஜீத் :
8 பேர் சார்...
கத்திக் :
சரி, கல்லூரிக்கு தேவையான அரசு நிலத்தை வாங்கி கொடுப்பது மற்றும் உங்களுக்கு அவவப்போது தேவைப்படும் உதவிகளை செய்து தருகிறேன்.
அஜீத் :
ஓகே சார்... பரிந்துரை கடிதத்தை எப்போது தருகிறீர்கள்?
கத்திக் :
அதற்கு ஏற்பாடு செய்கிறேன். தேவைப்படும் போது எல்லாம் பணம் கொடுங்கள். மற்ற காரியங்களை நான் செய்து தருகிறேன். உங்களுக்கு எங்கு நிலம் வேண்டும்?
அஜீத் :
நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதைக்கு அருகே அல்லது அரை கி.மீ. சுற்று வட்டாரத்துக்குள் வேண்டும்.
கத்திக் :
நீங்கள் வாங்கும் இடத்துக்கு அருகே அரசு நிலம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நிலத்தை உங்களுக்கு ஒதுக்கித் தர ஏற்பாடு செய்கிறேன்.
இவ்வாறு உரையாடல் நடக்கிறது.

காட்சி வெளியானதில் இருந்து, பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் கத்திக் தப்பி வருகிறார். இது பற்றி மத்திய பிரதேச சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா அளித்த பேட்டியில், “பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட சி.டி.யை கேட்டுள்ளோம். அது உண்மையானது தானா என்று ஆராய்ந்து முடிவு செய்த பிறகு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 13 அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி லோக் ஆயுக்தாவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதுபோன்ற நிலையில் பா.ஜ. எம்.எல்.ஏ. ஒருவர் லஞ்சம் வாங்கி சிக்கி இருப்பது பா.ஜ.வுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ரகசிய வீடியோ வெளியானதுநெல்லையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது


திருநெல்வேலி : லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் ஸ்ரீதர்(53). இவர் ஏர்வாடியை சேர்ந்த முத்துராஜ் என்பவரை சந்தித்து, உங்கள் மீது மும்பையில் ஒரு வழக்கு உள்ளது, அது தொடர்பாக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.2 ஆயிரம் வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துராஜ் அளித்தபுகாரின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி, அசோக் கார்க் உத்தரவின் பேரில் எஸ்.ஐ., ஸ்ரீதரை போலீசார் கைது செய்து விசாரதத்து வருகின்றனர்


தமிழ் நாட்டில் மின் கட்டண உயர்வு, முழு விபரம் .


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எங்களிடம் மனு செய்திருந்தது. அந்த மனு மீது ஆய்வுகள் நடத்தி, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்ட கட்டண உயர்வு பற்றிய கருத்துக் கேட்புக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். தென்னக ரெயில்வே, எரிசக்தித்துறை, நிதி, தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள், மின்வாரியத்தலைவர் ஆகியோரிடமும் கலந்து பேசப்பட்டது.
அதன் பேரில் மின் கட்டணத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்கள், குடிசைவாசிகள், விசைத்தறி, கைத்தறியாளர்கள், பொது வழிபாட்டு தலங்கள், விவசாயம் செய்வோருக்கு தற்போதுள்ள கட்டணமே இருக்கும். அவர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.


இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு தலா ரூ.1 வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


தொழில் மின் நுகர்வோரில் உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும் தாழ்வழத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


இரண்டு மாதத்துக்கு 1,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் குடிசை தொழில் மற்றும் குறுந்தொழில் முன்நுகர்வோருக்கு கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்படுகிறது.


இரண்டு மாதத்துக்கு 1500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் தொழில் மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினருக்கு மின்கட்டண உயர்வு இல்லை.


வணிக மின் நுகர்வோரின் உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக மின்நுகர்வோரில் தாழ்வழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 50 காசுகள் செலுத்த வேண்டும்
.


உயர் அழுத்த வகை சினிமா தியேட்டர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ் வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது.


இரண்டு மாதத்துக்கு 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் (தாழ்வழுத்த வகை) வணிக மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. இரண்டு மாதத்துக்கு 100 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் சிறுகடை வியாபாரிகளுக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது.


தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1.10 உயர்த்தப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த கட்டண மாற்றம் நாளை (ஆகஸ்டு 1) முதல் அமலுக்கு வருகிறது
.

இந்த விலை மாற்றம் காரணமாக மின்வாரியத்துக்கு 1651 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.


நடப்பாண்டில் 6450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 100 சதவீத பற்றாக்குறையில் 20 சதவீத அளவுக்குதான் கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளது.


600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் தமிழ்நாட்டில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 299 பேர் உள்ளனர்.


600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த 1 கோடியே 53 லட்சம் பேருக்கு கட்டண உயர்வு இல்லை.


3 சதவீத மக்கள்தான் கூடுதல் மின்கட்டணம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த கட்டண திருத்தம் 2013-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.


தற்போது வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 75 காசு முதல் ஒரு ரூபாய் 70 காசு வரை அரசு மானியமாக கொடுக்கிறது. இதேபோல கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 10 காசு முதல் ஒரு ரூபாய் 30 காசு வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 40 காசும் விவசாயிகளுக்கு குதிரை சக்தி ஒன்றுக்கு 250 ரூபாயும் அரசு மானியமாக வழங்குகிறது.


நடப்பாண்டுக்கான அரசின் மொத்த மானியத் தொகை ரூ.1652 கோடியாகும்.


கடைசியாக 2003-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.29 ஜூலை 2010

லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்


பதிவு செய்த "வீடியோ'வை காணhttp://www.dinamalar.com/Video_Inner.asp?News_id=573&cat=32
திருப்பூர் : திருப்பூரில் லஞ்சப்புகார் சுமத்தப் பட்ட, பெண் இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி பிறப்பித்துள்ளார்.

உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி. இவர், திருப்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த 23ம் தேதி மதியம், கரட்டாங்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணனிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

அதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட ஆறு பேர் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், அவர்கள் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், லஞ்சம் பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் வெளியானது. அதில், எலக்ட் ரிக்கல் கடைக்கு வந்த இந்திராணி, சுப்ரமணியத்துடன் பேசும் உரையாடல் இடம்பெற்றிருந்தது. மன்னிப்பு கேட்பது, கண்ணீர் சிந்தி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, லஞ்சப்புகார் இன்ஸ்பெக்டர் இந்திராணியை சஸ்பெண்ட் செய்து, கோவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி நேற்றிரவு உத்தரவிட்டார்.

லஞ்சம் வாங்கிய சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது


எழுமலை : இடமாறுதலுக்காக ஆசிரியையிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாவட்டம் சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஓணாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் சங்கீதா. இந்த பள்ளியில் பணிபுரிந்து 2 ஆண்டுகள் முடிந்ததால், பொது மாறுதலில் வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கடந்த ஏப்ரலில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இந்நிலையில் வீராளம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் கபிலன், ஓணாப்பட்டிக்கு மாற்றக் கோரினார். இந்த இரு ஆசிரியர்களும் மனமொத்த மாறுதலுக்காக மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரை அணுகினர். அவர் சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலரை அணுகுமாறு கூறினார்.


சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகானந்தம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து, மாறுதல் செய்யுமாறு சங்கீதா கேட்டார். இதற்கு முத்துகிருஷ்ணன் 2000 ரூபாய் கொடுத்தால் மனமொத்த மாறுதல் செய்கிறோம் என்று சங்கீதாவிடம் கூறினார்.


இதையடுத்து சங்கீதா மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., கலாவதி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கூறியபடி ரசாயனம் தடவிய 2000 ரூபாயை எடுத்துக் கொண்டுசங்கீதா சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் முத்துகிருஷ்ணன் இல்லை. சங்கீதா முத்துகிருஷ்ணனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, ""அங்கு முருகானந்தம் இருப்பார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள்'' எனக் கூறியுள்ளார். முருகானந்தத்திடம் சங்கீதா பணத்தை கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக முருகானந்தத்தை கைது செய்தனர்.பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினாரா? வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

வீடியோவில் இன்ஸ்பெக்டர் இந்திராணி இடம்பெற்ற காட்சி http://www.dinamalar.com/Video_Inner.asp?News_id=573&cat=32


திருப்பூர்:
இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்ட சம்பவத்தில், பேனா காமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இந்திராணி. கடந்த சில மாதங்களாக திருப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பணியையும் கவனித்து வந்தார்.


திருப்பூர் காப்பகத்தில் குழந்தை விற்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக இவர் இருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக நிர்வாகி பிரபாவதியின் தரப்பில் திருப்பூர், கரட்டாங்காட்டை சேர்ந்த சரவணன் (33) என்பவர் ஆஜராகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சரவணனுக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடைக்கு இன்ஸ்பெக்டர் இந்தி ராணி சென்றுள்ளார்.
அங்கு சரவணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் சரவணன் இன்ஸ்பெக்டரிடம் பணம் கொடுத்ததை வீடியோ சுப்பிரமணியம் என்பவர் வீடியோவில் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.


தொடர்ந்து வீடியோவில் பதிவு செய்துள்ளதை காட்டி, இன்ஸ்பெக்டர் இந்திராணியை வீடியோ சுப்பிரமணியம் (50), முருகேசன் (32), சையத் ஆதில் (38), சண்முகம் (32), மணி (40) மற்றும் சரவணன் (33) ஆகியோர் சேர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்ஸ்பெக்டரை அவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இது தொடர்பாக அப்பகுதியினர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் வீடியோ சுப்பிரமணியம் உட்பட 7 பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்தனர். இது தொடர்பாக இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக சுப்பிரமணியம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்பிரமணியம் வீட்டில் போலீசார் ரெய்டும் நடத்தினர்.


இந்நிலையில், அன்று பதிவான வீடியோ காட்சிகளின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது. பேனா காமி ராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோ காட்சிகள் சுமார் 5 நிமிடம் வரை ஓடுகிறது. வீடியோ காட்சிகளில் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.


இருப்பினும் தனியார் காப்பக நிர்வாகி பிரபாவதி கைது செய்யப்பட்ட வழக்கில், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் வகையில் அவர் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் போலீசாரிடமும் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருண் கூறுகையில், “வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தன்னை மிரட்டுவதாக இன்ஸ்பெக்டர் போலீசில் புகார் அளித்தார். அதனை உறுதி செய்யும் வகையில் அந்த வீடியோ காட்சிகள் உள்ளன. அதில் உள்ள ஆடியோ உண்மையானது தானா என்பது தொடர் பாக விசாரணை நடந்து வருகிறது. உண் மையான ஆடியோவா அல்லது எடிட்டிங் செய்யப்பட் டதா என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். லஞ்சம் வாங்குபவரை மிர ட்டி லஞ்சம் வாங்கினால் அது சரியாகி விடாது. மிரட் டிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உண்மை என நிரூபணம் ஆனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,“ என்றார்.தாமதமாய் வெளியானது ஏன்?


கடந்த 23ம் தேதி நடந்த சம்பவ காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ காட்சிகள், 5 நாட்களுக்கு பின்னர் நேற்று வெளியாகியுள்ளது. 5 நாட்கள் தாமதமாக வெளியிடப்பட்டது ஏன் என்பது போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வீடியோ சுப்பிரமணியத்தின் தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டவை என்றும், வீடியோவில் ஆடியோவை அவர்களுக்கு ஆதரவாக எடிட்டிங் செய்து வெளியிட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த வீடியோ காட்சிகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

சத்துணவு அமைப்பாளரிடம் லஞ்சம் தணிக்கை அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை


திருவண்ணாமலை மாவட்டம் நெடும்பிறை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர். 1996&97&ம் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 1999&ம் ஆண்டு பிப்ரவரியில் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்றார்.
அவர் கொண்டு வந்த கணக்குகளை வேலூர் மண்டல துணை இயக்குனர் (தணிக்கை) அலுவலக துணை ஆய்வாளர் ஆறுமுகம் ஆய்வு செய்தார்.
அப்போது, ‘தகவல் சரியாக இல்லை. உன் சம்பளத்தில் பிடித்தம் (ரெக்கவரி) செய்யப்படும்.
ரூ.2ஆயிரம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன்’ என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.

ரூ
500கொடுக்க பன்னீர்செல்வம் சம்மதித்து கணக்கை இறுதி செய்துவிட்டு சென்றார். ஆனால், பணத்தை பன்னீர்செல்வம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக ஆறுமுகம் மூன்று முறை கடிதம் அனுப்பியும் பன்னீர்செல்வம் கண்டுகொள்ளவில்லை.

பின்னர், ‘பணத்தை எப்படி வாங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்’ என்று மிரட்டி கடிதம் அனுப்பியிருந்தார். அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஏற்பாட்டின்படி, பன்னீர்செல்வம் கொடுத்த பணத்தை வாங்கியபோது ஆறுமுகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி முரளிசுந்தரம் நேற்று தீர்ப்பு கூறினார்.

கடிதம் அனுப்பி லஞ்சம் வாங்கிய ஆறுமுகத்துக்கு 37 மாதம் கடுங்காவல் தண்டனையும்,
ரூ 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

10ஆயிரத்தை ஆறுமுகம் உடனே செலுத்தினார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் பறிப்பு .வனச்சரகர் உட்பட 4 பேர் கைது


மண்ணுளி பாம்பை தாங்களாகவே காரில் போட்டு, கேரள ரியல் எஸ்டேட் அதிபர்களை சிறைவைத்து லஞ்சம் கேட்ட வனக்கல்லூரி விரிவுரையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வனக்கல்லூரி விரிவுரையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரளா வயநாடு அருகே பரப்பனங்காடியை சேர்ந்தவர்கள் சுந்தரம்(34), அபுபக்கர்(36), மோகன்தாஸ்(45), சுந்தர். ரியல் எஸ்டேட் அதிபர்கள். நிலம் பார்ப்பதற்காக 2 நாள் முன்பு பொள்ளாச்சி வந்தனர். சிறுமுகையைச் சேர்ந்த நில புரோக்கர் ஜோஸ்(44), சுல்தான்பேட்டையில் நிலம் பார்க்க இவர்களை காரில் அழைத்துச் சென்றார்.

கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியன், வைகைடேமிலுள்ள வனப்பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார்(52) ஆகியோர் சீருடையில் வந்து வழிமறித்து, காரை சோதனையிட்டனர். அதில் மண்ணுளிப்பாம்பு ஒரு பையில் இருந்ததை பறிமுதல் செய்தனர். ‘வன விதிகளின் படி மண்ணுளிப்பாம்பு வைத்திருப்பது குற்றம். கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் தர வேண்டும்’ என்று சிவகுமாரும், நெடுஞ்செழியனும் மிரட்டினர். ரூ.3 லட்சம் தருவதாக அவர்கள் கூறினர். ரூ.50 ஆயிரம் மட்டும் தந்தனர். ஒப்புக்கொண்டபடி மீதியுள்ள ரூ.2.5 லட்சத்தைத் தராததால் பொள்ளாச்சியிலுள்ள ஒரு விடுதியில் ஜோஸ்

தவிர 3 பேரையும் சிவக்குமார் அடைத்து வைத்துள்ளார்.
புரோக்கர் ஜோஸ், சிவக்குமார், நெடுஞ்செழியன் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் காரில் அவர்களாகவே மண்ணுளி பாம்பை போட்டு, பணம் பறிப்பதோடு, அதற்காக தங்களை கடத்தி சிறை வைத்துள்ள விவரத்தை சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள தனது நண்பருக்கு அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி கிழக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விடுதியில் இருந்த 3 பேரையும் மீட்டனர். அவர்களுக்கு காவலாக இருந்த புரோக்கர் ஜோஸ் மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஸ்ரீராம்(24), போடிநாயக்கனூர் யோக ராஜ்(37) ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் சிவகுமார்(52) கைது செய்யப்பட்டார். கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியனை தேடி வருகின்றனர்.

வைகை டேம் வனக்கல்லூரி டீன் மனோஜ்குமார் சர்க்கார் கூறுகை யில், சம்பவ நாளில் விரிவுரையாளர் சிவகுமார் பணிக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்துள்ளோம்’ என்றார்.
போலீசார் கூறுகையில், ‘தலைமறைவான கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியனைத் தேடி வருகிறோம். அவர் மீது உயரதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள சிவகுமார் உடுமலையில் வனச்சரகராக இருந்தபோது சந்தனக்கட்டை கடத்தலுக்கு துணை போனதாக கிடைத்த புகாரின் பேரில், வனக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர்,’ என்றனர்.

வன அதிகாரி மீதும் நடவடிக்கை

பொள்ளாச்சியில் பரபரப்பு

‘ஸ்னேக் சிவக்குமார்’

உடுமலையில் வனச்சரகராக சிவகுமார் இருந்தபோது, மண்ணுளி பாம்பை வைத்து பலரை சிக்க வைத்து நடவடிக்கை எடுக்காதது போல் நாடகமாடி பணம் கறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளது வனத்துறையினர் அறிந்த விஷயமாம். இவருக்கு ‘ஸ்னேக் சிவக்குமார்’ என்கிற அடைமொழியும் உண்டாம். இவரது மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்காததால் தப்பி வந்துள்ளார். இம்முறை சிக்கியுள்ளார்.

கோவை அருகேயுள்ள நெகமத்தைச் சேர்ந்த இவருக்கு அங்கு ஒரு கல்யாண மண்டபம், மஞ்சி மில், நூற்பாலை மற்றும் 100 ஏக்கருக்கு மேல் தென்னை தோட்டம் உள்ளது.

27 ஜூலை 2010

சினிமா பார்க்க லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரி கைது.


சென்னை : சினிமாவைப் பார்த்து தணிக்கைச் சான்று வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தணிக்கைத் துறை அதிகாரி ராஜசேகர் கையும், களவுமாக சிக்கினார்.

புதிய சினிமா படம் ஒன்றின் தணிக்கைக்காக, தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ், சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தணிக்கை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்; அதற்கான 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் செலுத்தினார். ஆனால், தணிக்கை அதிகாரி ராஜசேகர், நீண்ட காலம் ஆகியும், படத்தைப் பார்க்க வராமல் இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது, படம் பார்க்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமெனக் கேட்டார்.

இதுகுறித்து சி.பி.ஐ.,யில் கோவிந்தராஜ் புகார் செய்தார். நேற்று மாலை லஞ்சப் பணத்தை வாங்கிய போது, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ராஜசேகர் கையும், களவுமாக சிக்கினார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

24 ஜூலை 2010

"வீடியோ' சுப்ரமணியம் கைது .திருப்பூர் : திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்; "வீடியோ' சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்து வீடியோவில் பதிவு செய்வது இவரது வழக்கம். வீரபாண்டியை அடுத் துள்ள அய்யம்பாளையத் தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் பிரபாவதி; குழந்தைகளை கடத்தி விற் றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மேற்கொண்டார். விசாரணை நடத்தும்போது, கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக் கல்ஸ் என்ற கடையில் இருந்து, காப்பகத்துக்கு மோட்டார் மற்றும் மின்வசதிகள் செய்து தரப்பட்டது தெரியவந்தது. அதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள், போலீசாரின் விசாரணையின் போது கிடைத்துள்ளது. கடை உரிமையாளர் சரவணன் என்கிற மாதேஸ்வரனை, இவ்வழக்கில் சாட்சியமாக போலீசார் சேர்த்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை "வீடியோ' சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று "வீடியோ' சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.


பரபரப்பு: "வீடியோ' சுப்பிரமணியம் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேஷனில் வைத்து சுப்ரமணியத்தை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும், அவர் காலை உடைத்து விட்டதாகவும் தகவல் பரவியதால், ரூரல் போலீஸ் ஸ்டேஷன் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருப்பூர் துணை மேயர் செந்தில் குமார், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம், கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் மற்றும் இதர கட்சிகள் சார்ந்த சிலர் ஸ்டேஷனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6.00 மணி வரை பரபரப்பு நீடித்த நிலையில், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் "வீடியோ' சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், கடை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.


லஞ்சம் வாங்கியது உண்மையா? இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட"வீடியோ' சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.

சுப்ரமணியம் "சமூக சேவை'யாளரா? கைது செய்யப்பட்ட "வீடியோ' சுப்ரமணியம், அரசு தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் பல்வேறு குற்றவாளிகளை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு வெளிச்சப்படுத்தியவர். தன்னை சமூக சேவையாளராக மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டவர். அதேநேரத்தில், இவரது வீடியோ வெளிச்சத்தில் விழுந்த சிலரை, ஊழல் ஆதாரத்தை வெளியிடாமல் மறைக்க, பல லட்சங்கள் கேட்டு அவர் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. லஞ்சம் வாங்கியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதிவு செய்து சில மாதங்கள் கழிந்த நிலையில், இவர் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதால், குறிப்பிட்ட காலம் வரை இவர் தன்னிடம் சிக்கிய ஊழல் பேர்வழியிடம் பேரம் பேசியதாகவும், பேரம் படியாதவர்களின் ஊழலை மட்டுமே அம்பலப்படுத்தியதாகவும் சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

22 ஜூலை 2010

மின் இணைப்புக்கு லஞ்சம் இன்ஜினியர் கைது.
அவினாசி :ஜூலை ௨௨

மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜூனியர் இன்ஜினியர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கையும்களவுமாக சிக்கினார்.


அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் சந்தைகடை தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(23).இவர் அங்கு மூன்று கடைகள் கட்டி உள்ளார். வயரிங் பணி முடித்து, மின் இணைப்புக்காக பெருமாநல்லூர் மின்பகிர்மான அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இதுதொடர்பாக
இளநிலை பொறியாளர் குஞ்சிதபாதம்(50) என்பவரை அணுகியபோது, அவர் ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார்.

ஈஸ்வரன்
கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். கூடுதல் எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உன்னிகிருஷ்ணன், கருணாகரன், சுந்தர்ராஜன், ஜெரால்டு அலெக்சாண்டர் ஆகியோர் இன்று மதியம் பெருமாநல்லூர் மின்அலுவலகம் வெளியே நின்று கண்காணித்தனர். இவர்கள் திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்துடன் ஈஸ்வரன் உள்ளே சென்றார். குஞ்சிதபாதம் பணத்தை வாங்கியபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவு மாக பிடித்து கைது செய்தனர்.

அவர் தங்கியிருந்த மின்வாரிய குடியிருப்பிலும் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின், குஞ்சிதபாதத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.


21 ஜூலை 2010

பிரசவத்துக்கு லஞ்சம் ஜி.எச் ஊழியர்களிடம் அதிகாரி விசாரணை


கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று திடீர் முற்றுகையிட்டு, பிரசவ வார்டில் லஞ்சம் வசூலிப்பது குறித்து கண்காணிப்பாளர் மதிவாணனிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

ஆண் குழந்தை பிறந்தால் ரூ.500, பெண் குழந்தை பிறந்தால் ரூ.100 முதல் 200 வரை லஞ்சமாக தர வேண்டும் என அங்கு பணியில் இருக்கும் பணியாளர்கள், நர்ஸ்கள் மிரட்டுகின்றனர். லஞ்சம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கண்காணிப்பாளர் மதிவாணன், ஆர்.எம்.ஓ. சிவப்பிரகாசம் ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் சடகோபன் பிரசவ வார்டில் பணியாற்றும் பணியாளர்கள், நர்ஸ்களிடம் விசாரணை நடத்தினார்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்களிடமும் விசாரணை நடந்தது.


19 ஜூலை 2010

லஞ்சம் ; பெண் போலீஸ் எஸ்.ஐ.,ரேகா கைது.
கமிஷனர் அனுப்பிய மனுவையே விசாரிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்


யானைக்கவுனி: விசாரணையை முடிக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய, பெண் போலீஸ் எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். லாரி நிறுவனத்தை மேம்படுத்த தனது வீட்டின் பத்திரங்களை, சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் சில மாதங்களுக்கு முன் அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை கட்டி தீர்த்துள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவனம் காலதாமதம், கூடுதல் தவணை போன்ற காரணங்களுக்காக மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இது குறித்து, லட்சுமி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். கமிஷனரின் உத்தரவின் பேரில், யானைக்கவுனி எஸ்.ஐ.,ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி, தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, அங்கிருந்து வீட்டின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின் லட்சுமியிடம், தனது விசாரணைக்காக எஸ்.ஐ., ரேகா மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதற்கு லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார்.""நான் கேட்ட பணத்தை கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று கட்டாயப்படுத்தினார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., துர்க்கையாண்டி உத்தரவின்படி, எஸ்.பி., நிர்மல் குமார் ஜோஷி மேற்பார்வையில், டி.எஸ்,பி., சம்பந்தம், இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, விஜய் ஆனந்த் ஆகியோர் கொண்ட போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரேகா கேட்டு கொண்டதன் பேரில், கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார் லட்சுமி. அப்போது கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில், டூவீலரில் காத்திருந்த ரேகா ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். அப்போது மற்றொரு ஆட்டோவில் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.ஐ.,ரேகாவை மடக்கிப் பிடித்தனர். லஞ்சமாக வாங்கிய ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
17 ஜூலை 2010

வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., தலைமை இன்ஜினியர் வரை கைது : லஞ்சம் தொடர்வதால் வேதனை.


ஒவ்வொரு துறை ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசு பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்நிலையில், வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., மற்றும் தலைமை இன்ஜினியர் என பலரும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிறப்பு சான்றிதழ் பெற லஞ்சம், மின் இணைப்பு பெற லஞ்சம், குடிநீர் இணைப்பு பெற லஞ்சம், பணத்தை மீட்டுத் தர லஞ்சம் என அனைத்து துறைகளும் தற்போது லஞ்சத்தில் திளைத்து வருகின்றன. சாதாரண வருமான சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்றால், அவருக்கு கீழ் வேலை பார்ப்பவருக்கு கணிசமான தொகை கொடுத்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். இதே போன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி, வருவாய் துறை, போலீஸ் என அனைத்து துறைகளிலும் லஞ்சம் இல்லையேல் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதை நாம் அறிய முடிகிறது. ஆனால் அரசோ, ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கி வருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன.


மின்சார வாரியத்தில் மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, வாரியத்திற்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை கூடுதல் இழப்பு ஏற்படுகிறது.ஊதிய உயர்வுக்கு பின், மின்வாரியம் சார்பில் தலைமை பொறியாளருக்கு மாதம் சாராசரியாக 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் அவர், அந்த சம்பளம் போதாமல் ஊழியர் இடமாற்றம், மின் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டே வருகிறார் என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. சமீபத்தில், சென்னையில் லஞ்சம் பெற்றதாக தலைமை இன்ஜினியர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது எடுத்துக்காட்டு. இவர்கள் தவிர வாரத்திற்கு இரண்டு வி.ஏ.ஓ.,க்கள், ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்படுகின்றனர்.


மற்ற துறைகளில் லஞ்சம் பெற்றால் தடுக்க வேண்டிய போலீஸ் துறையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் லஞ்சம் பெறப்படுகிறது. சமீபத்தில் டி.எஸ்.பி., ஒருவர் மற்றும் எஸ்.ஐ., - தலைமைக்காவலர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று இன்னும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள், குறிப்பிட்ட துறைகளுக்கு லஞ்சப் பணத்துடன் போனால் மட்டுமே காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் அரசு சம்பளத்தை வாரி இறைத்த போதிலும், லஞ்சம் கரை புரள்வதும், மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் மட்டுமே, "குடும்பம் நடத்த முடியும் என்ற அவல நிலை' அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதும் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய அரசு மீது லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிருப்திபுதுடில்லி : "நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு, அவர்கள் பணியாற்றும் துறைகளிடம் இருந்து, முறையான அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது' என, லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


மத்திய லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் கடந்த மே மாத செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில அதிர்ச்சியான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, கடந்த மே மாதத்தில் மட்டும், உளவுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த 110 அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் மற்றும் லஞ்ச வழக்குகளை விசாரிப்பதற்கு, அவர்கள் பணியாற்றும் துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதில் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அனுமதி கிடைக்காததால், 52 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணை, நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது.இதில், அதிகபட்சமாக பணியாளர் துறை மற்றும் மத்திய நிதித் துறை அமைச்சகங்களைச் சேர்ந்த தலா 11 அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தை சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே அமைச்சகத்தை சேர்ந்த நான்கு அதிகாரிகள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நிலுவையில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் ரவிசங்கர் ஸ்ரீவத்சவா, ராஜேஸ்குமார் ஸ்ரீவத்சவா, சஞ்சீவ் குமார், இந்திய வருவாய் துறை அதிகாரி பல்தேவ் சிங் சாந்து மற்றும் மும்பை சி.பி.ஐ.,யின் கூடுதல் எஸ்.பி., ஆர்.எஸ். பன்வார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.டில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், ராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்குகளும், அனுமதி கிடைக்காததால் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிக்கும்படி வலியுறுத்தி, அவர்கள் பணியாற்றும் துறைக்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டுள் ளன. இருந்தாலும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை துவங்கப்படும்,'' என்றார்.15 ஜூலை 2010

காதலனை அடைய,நிச்சயித்த மாப்பிள்ளையை கொலை செய்த பெண் வக்கீல் .


பெங்களூர்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளையை காதலருடன் சேர்ந்து கொலை செய்த பெண்வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூர் பனசங்கரியை சேர்ந்தவர் சங்கர நாராயணா. இவர் ஒரு வக்கீல். இவரது மகள் சுபா (28). இவரும் ஒரு வக்கீல்.

சுபா பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தன்னுடன் படித்த அருண் வர்மாவை காதலித்தார். இவரின் காதலுக்கு பெற்றோர் சிவப்பு கொடி காட்டியுள்ளனர். ஆனால், சுபா காதலை மறப்பதாயில்லை.

இதனால் சுபாவின் பெற்றோர் அவர்கள் பக்கத்து வீட்டில் வசித்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிரீஷ் என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயம் ஆனாலும் சுபாவுக்கு, கிரீஷீடன் வாழ விருப்பம் இல்லை.

இதனால் கிரீஷை கொலை செய்ய முடிவெடுத்தார் சுபா. இந்த கொலையை தன் காதலன் மற்றும் அவரின் உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோருடன் கூட்டாக செய்ய திட்டமிட்டார்.

சம்பவத்தன்று விருந்துக்கு போவது போல நாடகமாடி கிரீசை மோட்டார் சைக்கிளில் சுபா அழைத்து சென்றார். அப்போது தாழ்வாகப் பறக்கும் விமானங்களை பார்க்க வேண்டும் என்று கூறி சுபா மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார். கிரீஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுபாவுடன் சேர்ந்து விமானத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நேரம் அங்கு பதுங்கி இருந்த வெங்கடேஷ் கிரீஷை திடீரென தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் கிரீஷ் உயிரிழந்தார்.

முதலில் கொலைக்கான காரணம் தெரியாமல் குழம்பிய போலீசார், சுபாவின் செல்போனை கைப்பற்றிய பிறகு தான் உண்மை தெரிந்தது. சுபாவிடம் நடத்திய விசாரணையில் அவரும், காதலனும் சேர்ந்து தான் இந்த கொலையை செய்தார்கள் என்று தெரிய வந்தது.

இதையடுத்து சுபா, அவரது காதலர் அருண் வர்மா, அவரது உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த படுகொலையின் வழக்கு விசாரணை, பெங்களூர் 17-வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெண்டிகொடி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.

ரூ.350 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பூபதி (28). இவரது தம்பி ஏழுமலை கடந்த 6ம் தேதி கோகலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ் மோதி காயமடைந்தார். முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 11ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
பூபதி அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

நேற்று காலை பூபதி, விபத்து சான்றிதழ் பெற முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆவண காப்பாளர் சந்திரசேகர், விபத்து சான்றிதழ் வழங்க 350 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். போதுமான பணமில்லை என பூபதி கூறியும் சான்றிதழ் தர சந்திரசேகர் மறுத்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து பூபதி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று மாலை 4.30 மணிக்கு பூபதி, அரசு மருத்துவமனைக்கு சென்று 350 ரூபாய் பணத்தை சந்திரசேகரிடம் லஞ்சமாக வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுதர்சனம், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சந்திரசேகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

14 ஜூலை 2010

லஞ்சம் வாங்கி கைதான பத்திர பதிவு அலுவலக உதவியாளர்.நாகர்கோவில், ஜூலை.14-
மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகரன் தம்பி. இவர் ரியல் எஸ்டேட், திருமண தகவல் மையம் போன்றவை நடத்தி வருகிறார்.

இதற்காக மார்த்தாண்டம் வடக்கு தெருவில் புதிதாக ஒரு அலுவலகம் தொடங்கினார். இதனை முறையாக பதிவு செய்ய குழித்துறையில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி விண்ணப்பித்தார்.

2 வாரங்கள் ஆகியும் அவரது மனு மீது எந்த நடவ டிக்கையும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் செய்ய வில்லை. இதையடுத்து சுதாகரன்தம்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று விபரம் கேட்டார். அப்போது, அங்கிருந்த அலுவலக “பி” பிரிவு உதவியாளர் ராதாகிருஷ்ணன் பதிவு சான்றிதழ் கேட்ட சுதா கரன்தம்பியை அணுகி தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனடியாகவேலையை முடித்து தருவதாக கூறினார்.

இதற்கு ஒப்புக்கொண்டு 2 நாட்களில் பணம் தருவதாக கூறிய சுதாகரன்தம்பி இது பற்றிய தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். அவர்கள் சுதாகரன்தம்பி யிடம் ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணனிடம் கொடுக்கும்படி கூறினர்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த யோசனைப் படி நேற்று மாலை சுதாகரன் தம்பி குழித்துறை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ரசாயண பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை அலுவலக உதவியாளர் ராதா கிருஷ்ணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தர ராஜ், இன்ஸ் பெக்டர்கள் பீட்டர்பால், கண்ணன், அமிர்தராஜ், ஏட்டு குமரேசன் ஆகியோர் ராதா கிருஷ்ணனை கையும், களவு மாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்பு திருவட்டாரில் உள்ள அவரது வீட்டுக்கும் சென்று சோதனை நடத்தினர். இரவு வரை நடந்த சோதனைக்குப் பின்னர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தப்பட்டுநேற்று இரவே நாகர்கோவில் ஜெயி லில் அடைக்கப்பட்டார்.


13 ஜூலை 2010

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மானாம்பதி அடுத்த விசூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (58). இவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் அடுத்த வேலிங்கபட்டரை பகுதியில் வீடு மற்றும் காலி இடம் உள்ளது. அவரது இடத்தில் அருகில் வசிப்பவர் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிவானந்தம் தனது வீட்டை சுற்றியுள்ள நிலத்தை அளப்பதற்காக சர்வேயரை அணுகினார்.

அவர் கம்ப்யூட்டர் பட்டா கொண்டு வரும்படி கூறியுள்ளார். அதை பெறுவதற்காக சிவானந்தம் ஓரிக்கை கிராம நிர்வாக அலுவலர் ராமன் (54) என்பவரை அணுகினார். அவர் வீட்டுப் பத்திர நகல், வில்லங்க நகல் ஆகியவற்றை கேட்டு வாங்கினார். நேற்று காலை சிவானந்தம் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்தார். அவர் "பட்டா வந்து விட்டது. 500 ரூபாய் பணம் கொடுத்து விட்டு பட்டாவை பெற்றுச் செல்லுங்கள்' என கூறியுள்ளார்.

பணம் கொடுக்க விரும்பாத சிவானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கலைச்செல்வன், கங்காதரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவானந்தத்திடம் வழங்கினர். அவர் அந்தப் பணத்துடன் மாலை 4 மணிக்கு ஓரிக்கை சென்றார். கிராம நிர்வாக அலுவலர் ராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பணத்தை கொடுத்தார். அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மின்வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசகன் கைது .


¤.2 XyN• XtN• YÖjfV –ÁYÖ¡V RÛXÛU GÁÈÃVŸ ÙNÁÛ]›¥ ÛL‰ ÙNšV
ப்TyPÖŸ.

RÛXÛU GÁÈÃVŸ

ÙNÁÛ] A
ண்QÖNÖÛX›¥ E·[ R–²SÖ| –ÁNÖW YÖ¡V RÛXÛU A¨YXL†‡¥ RÛXÛU GÁÈÃVWÖL C£ப்TYŸ qÂYÖNL• (YV‰ 55). CYŸ —‰ HWÖ[UÖ] XtN “LÖŸL· i\ப்TyP]. T·¸eLWÛQ›¥ ER« ÙNV¼ÙTÖ½VÖ[WÖL T‚VÖ¼½V ÙN¥YWÖÇ GÁTYŸ J£ “LÖ¡Á ÚT¡¥ NÍÙTண்| ÙNšVப்Tyz£‹RÖŸ.

AYW‰ NÍÙT
ண்| E†RWÛY W†‰ÙNš‰ AY£eh —ண்|• ÚYÛX J‰ehYR¼LÖL ¤.4 XyN• XtN• RWÚYண்|• GÁ¿ RÛXÛU GÁÈÃVŸ qÂYÖNL• ÚLy|·[ÖŸ. CÁÙ]Ö£ GÁÈÃVŸ CR¼h CÛP†RWLWÖL ÙNV¥Ty| C£ef\ÖŸ. NÍÙTண்| E†RWÛY W†‰ÙNšYR¼h ¤.2 XyN˜•, —ண்|• ÚYÛX J‰eg| ÙNšYR¼h ¤.2 XyN˜• R†RÂÚV ‘¡†‰†RW ÚYண்|• GÁ¿• qÂYÖNL• ÚLy|·[ÖŸ.

ÛL‰

˜R¥LyPUÖL NÍÙT
ண்| E†RWÛY W†‰ ÙNšV ¤.2 XyN• RW ÙN¥YWÖÇ N•UR• ÙR¡«†‰·[ÖŸ. ‘Á]Ÿ C‰T¼½ WLpVUÖL XtNJ³ப்“ ÚTÖ§p¥ “LÖŸ ÙLÖ|†‰·[ÖŸ. XtN J³ப்“ ÚTÖ§Í sப்‘Wண்| Xyr– ÚU¼TÖŸÛY›¥, z.GÍ.‘.eL· SPWÖ^Á, ‡£SÖ°eLWr BfÚVÖŸ RÛXÛU›XÖ] p\ப் TÛP ÚTÖ§NÖŸ «NÖWÛQ ÚU¼ÙLÖண்P]Ÿ.

ÚS¼¿ CW° R]‰ A¨YXL†‡¥ ÛY†‰ ¤.2 XyN• XtN• YÖjfVÚTÖ‰ qÂYÖNL• ÛL
யு• L[°UÖL pef]ÖŸ. AYÛW ÛL‰ ÙNšR XtN J³ப்“ ÚTÖ§NÖŸ EP]zVÖL AYÛW ®y|eh AÛZ†‰oÙNÁ\]Ÿ.

¤.20 XyN• pefV‰

ÚU¼h UÖ•TX• AWjLSÖRÁ rWjLTÖÛR A£ÚL
யு·[ ÙWyz ÙR£«¥ C£eh• ÙYÍy f¥ A|ehUÖz hz›£ப்‘¥ RÛXÛU GÁÈÃVŸ qÂYÖNL• Yp†‰ Y‹RÖŸ. AYW‰ ®yz¥ CW° CWYÖL ÚNÖRÛ] SP†Rப்TyP‰. ÚNÖRÛ]›¥ ¤.20 XyN• TQ• pefVRÖL°•, B]Ö¥, XtN TQ• C¥ÛX GÁ¿ qÂYÖNL• U¿ப்TRÖL°• AR¼h¡V LQeÛL LÖண்‘ehUÖ¿ ÚLy|·[RÖL°• XtN J³ப்“ ÚTÖ§NÖŸ ÙR¡«†R]Ÿ.

12 ஜூலை 2010

ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன் கைது.


"உத்தமர் காந்தி விருது' வாங்கிய டி.எஸ்.பி., சீனிவாசன் !
50 லட்சம் சொத்து ஆவணம் பறிமுதல்


ராசிபுரம் :கோழிப் பண்ணை விவகாரம் தொடர்பாக போலீசில் பதியப்பட்ட வழக்கின் மீது மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்.பி., மற்றும் புரோக்கர் ஒருவரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(66). அவருக்கு நாமக்கல் மாவட்டம் கங்கநாயக்கன்பட்டி, என்.புதுப்பட்டி ஆகிய இரு இடங்களில் கோழிப் பண்ணைகள் உள்ளன.

கோழிப் பண்ணை அமைக்க நாமக்கலைச் சேர்ந்த சேக் நவீத் என்பவர் வங்கிக் கடன் பெற்றுத் தருவது போன்ற உதவிகளைச் செய்துள்ளார். அதற்காக 5 சதவீத பங்குதாரராக சேக் நவீத், ஆரோக்கியராஜிடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.அதில் ஏற்பட்ட குளறுபடியால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இச்சூழலில் கடந்த 6ம் தேதி இரவு, சேக் நவீத் சில அடியாட்களுடன் சேர்ந்து, ஆரோக்கியராஜ் கோழிப் பண்ணையில் உள்ள 85 ஆயிரம் கோழிகளை லாரி மூலம் கடத்தி விற்பனை செய்ய முயன்றார்.

இது பற்றி நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. கோழிகளை கடத்திய லாரியை மோகனூர் போலீசார் பிடித்தனர். சேக் நவீத், சண்முகம், ரவி ஆகிய மூவர் மீதும் டி.எஸ்.பி., சீனிவாசன் உத்தரவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். "பதியப்பட்ட வழக்கு சம்பந்தமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது; புகாரின் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது. புகார்தாரரை சமரசம் பேச அழைக்க வேண்டும்' என்று சேக் நவீத் தரப்பினர், டி.எஸ்.பி., சீனிவாசனிடம் பேசினர்.அதற்கு, "ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்' என சீனிவாசன் கேட்டார்.

அந்தத் தொகையை தன் தனி உதவியாளர் (புரோக்கர்) சுப்ரமணி மூலம் கடந்த 7ம் தேதி காலையில் பெற்றார். பின், மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதின் பேரில் சேக் நவீத் தரப்பினர், கடந்த 7ம் தேதி இரவு அத்தொகையை டி.எஸ்.பி., சீனிவாசனிடம் வழங்கினர்.

வழக்கு தொடர்பாக மூவரையும் கைது செய்யாமல் இருக்க வேண்டுமெனில் மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்' என, டி.எஸ்.பி., சீனிவாசன் கேட்டார்.மேலும், லஞ்சம் கொடுக்க விரும்பாத சேக் நவீத் தரப்பைச் சேர்ந்த சண்முகம், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பெரியசாமியை சந்தித்துபுகார் தெரிவித்தார்.

போலீசார் கொடுத்த ஆலோசனைபடி, லஞ்சமாகக் கேட்ட தொகையை நேற்று மதியம் சண்முகம், டி.எஸ்.பி., சீனிவாசனிடம் கொடுக்க நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வந்தார்.அவரை வீட்டுக்கு வரும்படி டி.எஸ்.பி., சீனிவாசன் தெரிவித்தார். அதன் பேரில் ராசிபுரம் சேர்மன் சுப்ரமணி நகரில் உள்ள சீனிவாசன் வீட்டுக்கு பணத்துடன் சண்முகம் சென்றார்.

பின், அங்கிருந்த டி.எஸ்.பி., தனி உதவியாளர் சுப்ரமணி, சண்முகத்திடம்இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி, டி.எஸ்.பி., சீனிவாசன் அறையில் உள்ள மேஜை மீது வைத்தார்.அப்போது, வீட்டைச் சுற்றி மாறுவேடத்தில் இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., பெரியசாமி, இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, நடராஜன், ரங்கராஜன், முருகேசன் ஆகியோர் அதிரடியாக வீட்டினுள் நுழைந்து, டி.எஸ்.பி., சீனிவாசன்(58), அவரது உதவியாளர் சுப்ரமணியத்தை சுற்றி வளைத்தனர். பின்,

லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.மேலும், டி.எஸ்.பி., சீனிவாசன் கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்த சுமோ காரினுள் இருந்து 60 ஆயிரத்து 500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. அவரது வீட்டில் இருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி., சீனிவாசன், உதவியாளர் சுப்ரமணியம் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசன், சேந்தமங்கலத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தபோது, "உத்தமர் காந்தி விருது' பெற்றுள்ளார். அவர் ஓய்வு பெற ஒன்பது மாதமே உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 2006 டிச., 5ல் ப.வேலூர் டி.எஸ்.பி.,யாக இருந்த தினகரன், நிலப்பிரச்னை தொடர்பாக 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது டி.எஸ்.பி., சீனிவாசன் இரண்டாவதாக லஞ்ச வழக்கில் கைதாகியுள்ளார்

உங்களுக்கு சென்னையில் சொத்து உள்ளதா ? இனி சொத்துவரி செலுத்தாவிட்டால் 2% வட்டி அபராதம் !


முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு, அபராதமாக வரி தொகையில் 2% வட்டியினை விதிக்கவும், முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகை அளிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

சென்னையில், சொத்து வரியானது வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டும். வீடுகளுக்கு சதுர அடிக்கு 80 காசு முதல் ரூ.2 வரை வரி விதிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1.05 முதல் ரூ.14 வரை வரி வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போது 5.1/2 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.800 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருப்பதனால், அனைத்து கட்டிடங்களையும் முறைப்படுத்தி வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

வரி வசூலை அதிகப்படுத்தவும், நிலுவையில் உள்ள பாக்கி தொகைகளை வசூலிக்கவும் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகையாக வழங்கவும் 6 மாதங்களுக்குள் வரி செலுத்தாதவர்களுக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டியை அபராதமாக விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான தீர்மானம் வருகிற 29-ந்தேதி மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் மேயர் மா.சுப்பிர மணியன் இன்று(13ந் தேதி) ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அபராத தொகையை 1 சதவீதமாக குறைக்க வேண்டும். 6 மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வரி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
11 ஜூலை 2010

போலீஸ் ஸ்டேஷன் போனால் கக்கூஸ் கழுவ வேண்டும் !


போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு கொடுமை.

ஆத்தூர்: தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த பெண்ணை, கழிவறையை சுத்தம் செய்யுமாறு போலீஸார் உத்தரவிட்டனர்.

ஆத்தூர் அருகே தலைவாசல் தேவியாக்குறிச்சியை சேர்ந்தவர் பெரியம்மாள். கூலித்தொழிலாளி. அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அதில் அவர் தாக்கப்பட்டார்.

இது குறித்து தலைவாசல் போலீஸில் புகார் தெரிவிக்க பெரியம்மாள் சென்றார். பணியில் இருந்த எஸ்.ஐ., சாந்தாவிடம் மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.ஐ., கழிப்பறை, குளியல் அறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டார்.பெரியம்மாள் வேறுவழியில்லாமல், எல்லா இடங்களையும் சுத்தம் செய்தார். இதைப் பார்த்த புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


மனித உரிமை அமைப்புகள் என்ன செய்து கொண்டு உள்ளது என தெரியவில்லை !

------------------------------------------------------------------------------------------------------

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=37939

10 ஜூலை 2010

ரூ.500 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை.


தூத்துக்குடி, : தூத்துக்குடி அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர்மன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

ஓட்டப்பிடாரம் வட்டம் வடக்கு ஆரைக்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் அருணாசலம் (54). இவர், தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக, புதியம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலரான கருப்பசாமியை (56) அணுகியுள்ளார். அப்போது கருப்பசாமி, ரூ. 500 லஞ்சம் கேட்டாராம். இது குறித்து அருணாசலம் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தாராம்.

இதையடுத்து 22.8.2006-ம் தேதி ரூ.500 பணத்தைப் பெற்ற போது கருப்பசாமியை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர்மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை தலைமை குற்றவியல் நடுவர் வெங்கடசலபதி விசாரித்து, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் கைதுசென்னை அருகே1 செங்கல் சூளை மேலாளரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.1 1/2 லட்சம் சிக்கியுள்ளது. கும்மிடிப்பூண்டியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் தொழிற்சாலை ஆய்வாளர் இசைமணி சோதனை நடத்தினார். அப்போது செங்கல் சூளையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, இதனை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்பி னார். இதனை பெறறுக் கொண்ட, செங்கல் சூளை மானேஜர் மார்க்கண்டேயன், இதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இது கையில் கிடைத்தது. ஆய்வாளர் இசைமணி, மார்க் கண்டேயனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். நீங்கள் அனுப்பிய பதில் நோட்டீஸ் திருப்திகர மாக இல்லை. எனவே ரூ.20 ஆயிரம் பணத்துடன் கிண்டி யில் உள்ள அலுவலகத்துக்கு வாருங்கள்.

இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன, மார்க்கண்டேயன் அலுவலகத்துக்கு வந்து இசை மணியை சந்தித்தார்.

அப்போது, மார்க்கண்டே யன் நீங்கள் கேட்கும் பணம் அதிகமாக உள்ளது. இவ்வ ளவு பணத்தை என்னால் தர இயலாது என்று கூறினார்.நான் எனக்காக மட்டும் இந்த பணத்தை கேட்க வில்லை. எனது மேல் அதிகா ரிக்கும் இதில் பங்கு கொடுக்க வேண்டும்.

நீங்கள் வேண்டு மானால், தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் கணேசனிடம் பேசுங்கள் என கூறிய இசைமணி, மார்க்கண் டேயனை அவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது அதிகாரி கணேசன், ரூ.15 ஆயிரம் ரூபாயை இசைமணியிடம் கொடுத்து விடுங்கள், எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்.

மார்க்கண்டேயன் இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இணை இயக்குனர் சுனில்குமார், சூப்பிரண்டு லட்சுமி ஆகியோர் 2 அதிகாரிகளையும், பொறி வைத்து பிடிக்க உத்தர விட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திர வரதன், குமர குருபரன், லட்சுமி காந்தன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தொழிற்சாலை ஆய்வாளர் கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

ஆய்வாளர் இசைமணியின் வீடு அண்ணாநகர் வசந்தம் காலனியில் உள்ளது. செங்கல் சூளை மானேஜர் கார்த்திகே யனிடம் தனது வீட்டு அருகே பணத்தை கொண்டு வருமாறு இசைமணி கூறியிருந்தார். அங்குள்ள காஞ்சி பேக்கரி அருகே இசைமணி காத்திருந்தார்.

அங்கு வந்த கார்த்திகேயன் ரூ.15 ஆயிரம் லஞ்ச பணத்தை இசைமணியிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து இசைமணியை கைது செய்தனர்.

அதே பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த துணை தலைமை ஆய்வாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார். இரு வரது வீடுகளிலும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணேசனின் வீட்டில் கணக்கில் வராத ரூ.1 1/2 லட்சம் பணம் சிக்கியது. கட்டுகட்டாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

இது லஞ்சப்பணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இருவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

09 ஜூலை 2010

"பான் இந்தியா' நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி.


அண்ணா நகர் : சேலம், ஈரோட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், "பான் இந்தியா' நிதி நிறுவனத்தில் பணத்தைச் செலுத்தி ஏமாந்ததாக புகார் கொடுத்தனர். கோவை, ஈரோடு, மதுரை, திருச்சியில், "பான் இந்தியா' பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. கோவை போத்தனூரைச் சேர்ந்த பாஸ்கர சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள் ஜெயக்குமார், சதீஷ், தினேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர்.

நிதி நிறுவனத்தில் ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், இரண்டு ஆண்டுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் கொடுப்பதாக கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தனர். வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையை, வெளிநாட்டு கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதன் மூலம் அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனத்தினர் கூறினர். ஈரோடு, திருச்சி, சேலம் பகுதியைச் சேர்ந்த பலர், ஆயிரக்கணக்கில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மாதம் 2,000 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு வட்டியாக தந்தனர்.

லட்சக்கணக்கில் பணம் சேர்ந்ததால், அதை சுருட்டிக் கொண்டு நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டனர். பணத்தை இழந்த 50க்கும் மேற்பட்டோர், சென்னை அண்ணா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தனர். ஐ.ஜி., விஜயகுமாரிடம், மோசடி நிதி நிறுவனம் தொடர்பான புகாரை, தனித்தனியாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள நிதி நிறுவன நிர்வாகிகளின் போட்டோவை ஐ.ஜி.,யிடம் கொடுத்தனர்.ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ , ஏட்டுக்கு சிறை .
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் சினிமா படம் தயாரிப்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். புதிய படம் தயாரிக்கப்போவதாக கூறி உதவி டைரக்டர்கள் 5 பேர் இவரிடம் ரூ.1 1/2 லட்சம் வாங்கி னார்கள். நீண்ட நாட்கள் ஆகியும் பணம் திரும்ப வர வில்லை. எனவே, ரூ.1 1/2லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது சினிமா பைனான்சியர் சங்கர், விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். ஆனால், அது பற்றி எந்த விசாரணையும் நடைபெற வில்லை.

எனவே சங்கர், விருகம்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி முருகனை சந்தித்து, “நான் கொடுத்த புகாரை விசாரித்து பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு பதில் இல்லை. 4 நாட்கள் அலைந்தும் பதில் இல்லை. அதன் பிறகு “ஏட்டு சிலுவை ராஜை பாருங்கள்” என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறினார்.

இதன்படி சங்கர் விருகம் பாக்கம் போலீஸ் ஏட்டு சிலுவைராஜிடம் சென்றார். அப்போது அவர், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் விசாரிக்க முடியும் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இது பற்றி சங்கர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டை லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு லட்சுமி, டி.எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் சங்கரிடம் கொடுத்து அனுப்பினார்கள். நேற்று இரவு 8 மணி அளவில் சினிமா பைனான்சியர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறு வேடத்தில் காத்து இருந்தனர்.

சிறிது நேரத்தில் ஏட்டு சிலுவைராஜ் வந்தார். அவரிடம் சங்கர் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை வாங்கிய ஏட்டு சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைப்பதற்குள் பணத்தை சட்டை பைக்குள் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை ஜீப்பில் விரட்டிச் சென்றனர். சந்து வழியே சென்ற அவரை ஒரு டீ கடை அருகே மடக்கினார்கள்.

பரிசோதித்த போது அவரிடம் பணம் இல்லை. எனவே பணத்தை வைத்திருந்த சட்டையை கழற்றி அதை தண்ணீரில் நனைத்தனர். அவரது கையையும் தண்ணீர் விட்டு கழுவினார்கள். அப்போது கையிலும், சட்டை பையிலும் இருந்த ரசாயன பவுடர் இளம் சிவப்பு நிறமாக மாறியது.

எனவே, லஞ்சம் வாங்கியதற்காக ஏட்டு சிலுவை ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்ஜோதிமுருகனும் சேர்ந்து இந்த லஞ்ச பணத்தை கொண்டு வரச் சொன்னது உறுதியானது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார். ஏட்டு, எஸ்.ஐ. 2 பேரும் கோட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


08 ஜூலை 2010

ராணுவ தொழிற்சாலை வாரியத்திலும் ஊழல்.


புதுடில்லி: ராணுவ தளவாட தொழிற்சாலை வாரிய ஊழலில் ஆறு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

ராணுவ தளவாட தொழிற்சாலை வாரிய டைரக்டர் ஜெனரலாக இருந்தவர் சுதிப்தா கோஷ். இந்த தொழிற்சாலைக்கு தேவையான பணியாளர்களை நியமிப்பது, பணி மாற்றம் செய்வது, தளவாட தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வாங்குவது, சப்ளை செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் சுதிப்தா கோஷ் ஏராளமான ஊழல் செய்துள்ளார்.

இவருக்கு உடந்தையாக 11 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் சி.பி.ஐ., கடந்த ஆண்டு 2,700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த ஊழல் வழக்கில் டில்லியை சேர்ந்த டி.எஸ்.கிசான் நிறுவனமும், லூதியானாவில் உள்ள ஆர்.கே.மிஷின் டூல்ஸ் நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகத்திடம் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் கைனடிக்ஸ் நிறுவனமும், இஸ்ரேல் மிலிடரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், சூரிஜ் நகரில் உள்ள ரீன்மெட்டல் ஏர் டிபன்ஸ், ரஷ்யாவில் உள்ள கோஆபரேஷன் டிபன்ஸ் ஆகிய நிறுவனமும் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகத்திடம் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

லஞ்சம் வாங்கியவருக்கு தூக்கு.பெய்ஜிங் :சீனாவில் உள்ள சாங்கிங் நகர முனிசிபல் நீதிமன்றத்தின் முன்னால் இயக்குனர் வென் கியாங் (55) ஊழல் புகாரில் சிக்கிய இவர் மீது முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடை பெற்றது.

சட்ட விரோதமாக லாபம் சம்பாதிக்க உதவியதற்காக தனியார் நிறுவனங்களில் இருந்து 8 கோடியை லஞ்சமாக பெற்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது .
மேலும்
இவர் மீதான பாலியல் பலாத்கார புகாரும் நிரூபணம் ஆனதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார் .அதை கடந்த ஏப்ரல் 14 தேதி தள்ளுபடி செய்தது .இதையடுத்து வென் கியாங் நேற்று தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு தூக்கு என்ற சட்டம் எப்போது வரும் ?

06 ஜூலை 2010

விஷ ஊசி போட்டு கொள்ளும் மகன்கள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் .


முதியவர்களை பராமரிப்பதற்கு பதில் விஷ ஊசி போட்டு கொன்றுவிடும் சம்பவம் விருதுநகர் மாவட்ட கிராமங்களில் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

76 வயது முதியவர் அவரது மகன் செல்வராஜை அவரது மகன் விஷ ஊசி போட்டு கொன்றுள்ளார்.

அருப்புக்கோட்டையில் வசித்து வந்த செல்வராஜ், சில தினங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். முதியவருக்கு சிகிச்சை அளித்து பராமரிக்க வேண்டிய மகன் சந்தானம் அவரை தூக்கி சந்து ஒன்றில் போட்டுள்ளார்.

சில தினங்கள் வரை தண்ணீர், உணவு என்று எதுவும் இல்லாமல் தெருவில் கிடந்தவரை பாத்திமா என்ற பெண்ணைக்கொண்டு விஷ ஊசி போட்டு மகன் சந்தானம் கொன்றுள்ளார்.

தந்தையின் சடலத்தையும் அவசர அவசரமாக தகனம் செய்துவிட்டார்.


காவல்துறை விசாரணையில், முதியவர்களை விச ஊசி போட்டு கொன்றுவிடுவது வழக்கமான ஒன்றுதான் என்று தெரியவந்துள்ளது. கடந்த 7 வருடங்களாக இப்படித்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துவருகிறது என்றும் தெரியவந்துள்ளது.


விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முதியவர்களை வேறு விதத்தில் கொன்று வருவது வழக்கம். அதாவது எண்ணெய்
தேய்த்து குளிக்க வைத்து இளநீர் குடிக்க வைத்து ஜன்னி கொள்ளச்செய்து கொன்று விடுவார்கள்.

இப்போது விச ஊசி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. போலீசார் இது பற்றி தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.


விச ஊசி போட்டு கொன்ற பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் விசாரணை நடந்துவருகிறது
லஞ்சம் : கோவை கலால் துணை கமிஷனர் கைது


கோவை : ஓட்டல்களில், "பார்' லைசென்சை புதுப்பிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, கோவை கலால் துணை கமிஷனர் மூர்த்தி கைது செய்யப்பட்டார்.


கோவை மாவட்ட கலால் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. இவர் இதற்கு முன், இதே மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.இந்த பணிகளில் அவர் இருந்தபோதே, அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.இரு மாதங்களுக்கு முன்னர் தான் அவரை மாற்றியது தமிழக அரசு. அப்போதும் கூட, அதிகாரமும், பணப்புழக்கமும் அதிகமுள்ள பதவியான கோவை கலால் துணை கமிஷனர் பணிக்கு அவர் மாற்றப்பட்டார்.

ஓட்டல்களுடன் சேர்ந்து இயங்கி வரும் எப்.எல்.3 எனப்படும் அன்னிய மதுபானக் கூடங்கள் (பார்) வைப்பதற்கான உரிமம் வழங்குவது, புதுப்பிப்பது, ஆய்வு செய்வது என பல்வேறு அதிகாரங்களையும் கொண்டது இந்த பதவி. புதிய பொறுப்புக்கு வந்த பின்னும், மூர்த்தியின் போக்கில் மாற்றமில்லை.


கோவை மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து சாதாரண ஓட்டல்கள் வரை, 120க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் "பார்'கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இதே தொகையைச் செலுத்தி, உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.விடுபட்ட ஒரு சில "பார்'களின் உரிமங்களைப் புதுப்பிக்க, சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம், உரிமம் புதுப்பிக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென்று மூர்த்தி வற்புறுத்தியுள்ளார். அதைத் தவிர்த்து, ஒவ்வொரு "பார்' உரிமையாளரும், மாதந்தோறும் 5,000 ரூபாய் மாமூல் தர வேண்டுமென்று அவர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதேபோல, பொள்ளாச்சியைச் சேர்ந்த "பார்' உரிமையாளர் ஒருவரிடமும் அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது பற்றி, கோவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது.


லஞ்ச ஒழிப்புத் துறையினர், சம்பந்தப்பட்ட "பார்' உரிமையாளரிடம் ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பினர். கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மூர்த்தியின் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்ற அந்த "பார்' உரிமையாளர், லஞ்சப் பணத்தை மூர்த்தியிடம் கொடுத்தார்.அப்போது, அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா, இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர் ஆகியோர், அறைக்குள் நுழைந்து லஞ்சப் பணத்துடன் இருந்த மூர்த்தியைக் கைது செய்தனர்; நேற்றிரவு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.04 ஜூலை 2010

காங்கிரஸ் கட்சிகாரனுக்கே கல்வி கடன் நஹி ஹை.


காங்கிரஸ் கட்சிகாரனுக்கே கல்வி கடன் மறுப்பு.தீக்குளிப்பு முயற்சி .


திண்டிவனம்:தற்கொலைக்கு முயன்ற காங்., பிரமுகருக்கு திண்டிவனம் தாசில் தார் முயற்சியால் வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க முன் வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அடுத்த வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (55). காங்., கட்சியின் ஒலக்கூர் வட்டார எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.

வெள்ளிமேடுபேட்டை இந்தியன் வங்கியில் தனது நிலத்தின் பேரில் கிணறு வெட்ட விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் கடன் தொகை கிடைக்கவில்லை.

இதனால் மனமுடைந்த நாராயணசாமிகடந்த ஜூன் 23ம் தேதி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

போலீசார் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., நர்சிங் படிக்கும் தனது மகளுக்கு வங்கியில் கல்விக் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 முறை தீக்குளிக்க முயன்றபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இந்த நிலையில் நாராயணசாமி கடந்த 1ம் தேதி திண்டிவனம் தாசில்தார் வேலாயுதன்பிள்ளையை சந்தித்து, தனக்கு விவசாய கடன் மற்றும் மகளுக்கு கல்விக் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு மூலம் வழங்கப் பட்ட ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, இலவச கலர் "டிவி' ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்பதாக கூறினார்.அவரது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி தாசில் தார் நாராயணசாமியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அதன்படி தாசில்தார் நடவடிக்கையின்படி வெள்ளிமேடுபேட்டை இந்தியன் வங்கி மேலாளர், பி.எஸ்.சி., நர்சிங் பயிலும் காங்., பிரமுகர் நாராயணசாமியின் மகளுக்கு கல்விக் கடன் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.03 ஜூலை 2010

சான்று வழங்க லஞ்சம் பெறும் வி.ஏ.ஓ.,க்கள் : பொன்குமார்


கிருஷ்ணகிரி: ""தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர சான்று வழங்க வி.ஏ.ஓ.,க்கள் லஞ்சம் வாங்குகின்றனர்,'' என, தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் குற்றம்சாட்டினார்.

தமிழக்தில் உள்ள பல மாவட்டங்களில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிதி வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. இதில், அதிக அளவில் தொழிலாளர் நல அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதில் தொழிற்சங்க நிர்வாகிகளும் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் வசதி படைத்தவர்களை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகளை வற்புறுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் உண்மையான தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாரிய அலுவலர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து செயல்பட்டால் வாரியத்தில் உண்மையான தொழிலாளர்களை அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க முடியும்.

நலவாரியங்களில் உறுப்பினராக சேர வி.ஏ.ஓ.,க்களிடம் சான்று பெறுவது நடைமுறையில் உள்ளது. பல இடங்களில் இந்த சான்று வழங்கிட வி.ஏ.ஓ.,க்கள் தொழிலாளர்களிடம் லஞ்சம் வாங்குகின்றனர். அதனால் இந்த முறையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. என்றார் .

எல்.கே.ஜி., குழந்தைக்கு பிரம்படி : இரு ஆசிரியைகள் "வெறியாட்டம்'


பண்ருட்டி : பண்ருட்டியில் எல்.கே.ஜி., குழந்தையை பிரம்பால் அடித்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாகூர் வீதியைச் சேர்ந்தவர் முஸ்தபா பராக். இவரது மகள் தன்சிராபெல்லா (3). கடந்த 20 நாட்களுக்கு முன், 2,800 ரூபாய் சேர்க்கை கட்டணம் செலுத்தி பண்ருட்டி தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்தனர்.

பள்ளியில் குழந்தை நேற்று முன்தினம் குறும்பு செய்ததால் ஆசிரியை, பிரம்பால் அடித்துள்ளார். அதன் பிறகும் குழந்தை குறும்பு செய்யவே பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியையும் தன்சிராபெல்லாவை பிரம்பால் அடித்தார். மதியம் வீட்டிற்கு சோர்வுடன் வந்த குழந்தையை பெற்றோர் விசாரித்ததில், ஆசிரியை பிரம்பால் அடித்தது தெரியவந்தது. உடலில் கை, கால், முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் பிரம்படி தழும்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து தங்களது உறவினர்களுடன் பள்ளி முன் திரண்டனர். குழந்தையை தாக்கியது குறித்து விளக்கம் கேட்டு முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகம் உரிய பதில் கூறாமல் டி.சி., கொடுத்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் அதை அங்கேயே கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடித்த ஆசிரியைகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் டி.சி., கொடுத்த பள்ளிநிர்வாகத்தை என்ன சொல்லுவது ?

உதயத்திற்கு கிடைத்த முதல் விருது


ஜெய் தந்த விருது. மிக்க நன்றி, ஜெய்.http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html