புதியவை :

Grab the widget  Tech Dreams

14 ஜூலை 2010

லஞ்சம் வாங்கி கைதான பத்திர பதிவு அலுவலக உதவியாளர்.நாகர்கோவில், ஜூலை.14-
மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகரன் தம்பி. இவர் ரியல் எஸ்டேட், திருமண தகவல் மையம் போன்றவை நடத்தி வருகிறார்.

இதற்காக மார்த்தாண்டம் வடக்கு தெருவில் புதிதாக ஒரு அலுவலகம் தொடங்கினார். இதனை முறையாக பதிவு செய்ய குழித்துறையில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி விண்ணப்பித்தார்.

2 வாரங்கள் ஆகியும் அவரது மனு மீது எந்த நடவ டிக்கையும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் செய்ய வில்லை. இதையடுத்து சுதாகரன்தம்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று விபரம் கேட்டார். அப்போது, அங்கிருந்த அலுவலக “பி” பிரிவு உதவியாளர் ராதாகிருஷ்ணன் பதிவு சான்றிதழ் கேட்ட சுதா கரன்தம்பியை அணுகி தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனடியாகவேலையை முடித்து தருவதாக கூறினார்.

இதற்கு ஒப்புக்கொண்டு 2 நாட்களில் பணம் தருவதாக கூறிய சுதாகரன்தம்பி இது பற்றிய தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். அவர்கள் சுதாகரன்தம்பி யிடம் ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணனிடம் கொடுக்கும்படி கூறினர்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த யோசனைப் படி நேற்று மாலை சுதாகரன் தம்பி குழித்துறை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ரசாயண பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை அலுவலக உதவியாளர் ராதா கிருஷ்ணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தர ராஜ், இன்ஸ் பெக்டர்கள் பீட்டர்பால், கண்ணன், அமிர்தராஜ், ஏட்டு குமரேசன் ஆகியோர் ராதா கிருஷ்ணனை கையும், களவு மாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்பு திருவட்டாரில் உள்ள அவரது வீட்டுக்கும் சென்று சோதனை நடத்தினர். இரவு வரை நடந்த சோதனைக்குப் பின்னர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தப்பட்டுநேற்று இரவே நாகர்கோவில் ஜெயி லில் அடைக்கப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக