புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூலை 2010

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ , ஏட்டுக்கு சிறை .




சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் சினிமா படம் தயாரிப்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். புதிய படம் தயாரிக்கப்போவதாக கூறி உதவி டைரக்டர்கள் 5 பேர் இவரிடம் ரூ.1 1/2 லட்சம் வாங்கி னார்கள். நீண்ட நாட்கள் ஆகியும் பணம் திரும்ப வர வில்லை. எனவே, ரூ.1 1/2லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது சினிமா பைனான்சியர் சங்கர், விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். ஆனால், அது பற்றி எந்த விசாரணையும் நடைபெற வில்லை.

எனவே சங்கர், விருகம்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி முருகனை சந்தித்து, “நான் கொடுத்த புகாரை விசாரித்து பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு பதில் இல்லை. 4 நாட்கள் அலைந்தும் பதில் இல்லை. அதன் பிறகு “ஏட்டு சிலுவை ராஜை பாருங்கள்” என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறினார்.

இதன்படி சங்கர் விருகம் பாக்கம் போலீஸ் ஏட்டு சிலுவைராஜிடம் சென்றார். அப்போது அவர், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் விசாரிக்க முடியும் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இது பற்றி சங்கர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டை லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு லட்சுமி, டி.எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் சங்கரிடம் கொடுத்து அனுப்பினார்கள். நேற்று இரவு 8 மணி அளவில் சினிமா பைனான்சியர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறு வேடத்தில் காத்து இருந்தனர்.

சிறிது நேரத்தில் ஏட்டு சிலுவைராஜ் வந்தார். அவரிடம் சங்கர் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை வாங்கிய ஏட்டு சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைப்பதற்குள் பணத்தை சட்டை பைக்குள் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை ஜீப்பில் விரட்டிச் சென்றனர். சந்து வழியே சென்ற அவரை ஒரு டீ கடை அருகே மடக்கினார்கள்.

பரிசோதித்த போது அவரிடம் பணம் இல்லை. எனவே பணத்தை வைத்திருந்த சட்டையை கழற்றி அதை தண்ணீரில் நனைத்தனர். அவரது கையையும் தண்ணீர் விட்டு கழுவினார்கள். அப்போது கையிலும், சட்டை பையிலும் இருந்த ரசாயன பவுடர் இளம் சிவப்பு நிறமாக மாறியது.

எனவே, லஞ்சம் வாங்கியதற்காக ஏட்டு சிலுவை ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்ஜோதிமுருகனும் சேர்ந்து இந்த லஞ்ச பணத்தை கொண்டு வரச் சொன்னது உறுதியானது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார். ஏட்டு, எஸ்.ஐ. 2 பேரும் கோட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக