புதியவை :

Grab the widget  Tech Dreams

19 ஜூலை 2010

லஞ்சம் ; பெண் போலீஸ் எஸ்.ஐ.,ரேகா கைது.
கமிஷனர் அனுப்பிய மனுவையே விசாரிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்


யானைக்கவுனி: விசாரணையை முடிக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய, பெண் போலீஸ் எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். லாரி நிறுவனத்தை மேம்படுத்த தனது வீட்டின் பத்திரங்களை, சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் சில மாதங்களுக்கு முன் அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை கட்டி தீர்த்துள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவனம் காலதாமதம், கூடுதல் தவணை போன்ற காரணங்களுக்காக மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இது குறித்து, லட்சுமி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். கமிஷனரின் உத்தரவின் பேரில், யானைக்கவுனி எஸ்.ஐ.,ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி, தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, அங்கிருந்து வீட்டின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின் லட்சுமியிடம், தனது விசாரணைக்காக எஸ்.ஐ., ரேகா மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதற்கு லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார்.""நான் கேட்ட பணத்தை கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று கட்டாயப்படுத்தினார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., துர்க்கையாண்டி உத்தரவின்படி, எஸ்.பி., நிர்மல் குமார் ஜோஷி மேற்பார்வையில், டி.எஸ்,பி., சம்பந்தம், இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, விஜய் ஆனந்த் ஆகியோர் கொண்ட போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரேகா கேட்டு கொண்டதன் பேரில், கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார் லட்சுமி. அப்போது கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில், டூவீலரில் காத்திருந்த ரேகா ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். அப்போது மற்றொரு ஆட்டோவில் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.ஐ.,ரேகாவை மடக்கிப் பிடித்தனர். லஞ்சமாக வாங்கிய ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக