புதியவை :

Grab the widget  Tech Dreams

12 ஜூலை 2010

உங்களுக்கு சென்னையில் சொத்து உள்ளதா ? இனி சொத்துவரி செலுத்தாவிட்டால் 2% வட்டி அபராதம் !


முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு, அபராதமாக வரி தொகையில் 2% வட்டியினை விதிக்கவும், முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகை அளிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

சென்னையில், சொத்து வரியானது வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டும். வீடுகளுக்கு சதுர அடிக்கு 80 காசு முதல் ரூ.2 வரை வரி விதிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1.05 முதல் ரூ.14 வரை வரி வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போது 5.1/2 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.800 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருப்பதனால், அனைத்து கட்டிடங்களையும் முறைப்படுத்தி வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

வரி வசூலை அதிகப்படுத்தவும், நிலுவையில் உள்ள பாக்கி தொகைகளை வசூலிக்கவும் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகையாக வழங்கவும் 6 மாதங்களுக்குள் வரி செலுத்தாதவர்களுக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டியை அபராதமாக விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான தீர்மானம் வருகிற 29-ந்தேதி மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் மேயர் மா.சுப்பிர மணியன் இன்று(13ந் தேதி) ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அபராத தொகையை 1 சதவீதமாக குறைக்க வேண்டும். 6 மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வரி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.




2 கருத்துகள்: