புதியவை :

Grab the widget  Tech Dreams

04 ஜூலை 2010

காங்கிரஸ் கட்சிகாரனுக்கே கல்வி கடன் நஹி ஹை.


காங்கிரஸ் கட்சிகாரனுக்கே கல்வி கடன் மறுப்பு.தீக்குளிப்பு முயற்சி .


திண்டிவனம்:தற்கொலைக்கு முயன்ற காங்., பிரமுகருக்கு திண்டிவனம் தாசில் தார் முயற்சியால் வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க முன் வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அடுத்த வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (55). காங்., கட்சியின் ஒலக்கூர் வட்டார எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.

வெள்ளிமேடுபேட்டை இந்தியன் வங்கியில் தனது நிலத்தின் பேரில் கிணறு வெட்ட விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் கடன் தொகை கிடைக்கவில்லை.

இதனால் மனமுடைந்த நாராயணசாமிகடந்த ஜூன் 23ம் தேதி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

போலீசார் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., நர்சிங் படிக்கும் தனது மகளுக்கு வங்கியில் கல்விக் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 முறை தீக்குளிக்க முயன்றபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இந்த நிலையில் நாராயணசாமி கடந்த 1ம் தேதி திண்டிவனம் தாசில்தார் வேலாயுதன்பிள்ளையை சந்தித்து, தனக்கு விவசாய கடன் மற்றும் மகளுக்கு கல்விக் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு மூலம் வழங்கப் பட்ட ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, இலவச கலர் "டிவி' ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்பதாக கூறினார்.அவரது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி தாசில் தார் நாராயணசாமியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அதன்படி தாசில்தார் நடவடிக்கையின்படி வெள்ளிமேடுபேட்டை இந்தியன் வங்கி மேலாளர், பி.எஸ்.சி., நர்சிங் பயிலும் காங்., பிரமுகர் நாராயணசாமியின் மகளுக்கு கல்விக் கடன் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக