15 ஜூலை 2010
ரூ.350 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பூபதி (28). இவரது தம்பி ஏழுமலை கடந்த 6ம் தேதி கோகலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ் மோதி காயமடைந்தார். முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 11ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
பூபதி அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.
நேற்று காலை பூபதி, விபத்து சான்றிதழ் பெற முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆவண காப்பாளர் சந்திரசேகர், விபத்து சான்றிதழ் வழங்க 350 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். போதுமான பணமில்லை என பூபதி கூறியும் சான்றிதழ் தர சந்திரசேகர் மறுத்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து பூபதி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று மாலை 4.30 மணிக்கு பூபதி, அரசு மருத்துவமனைக்கு சென்று 350 ரூபாய் பணத்தை சந்திரசேகரிடம் லஞ்சமாக வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுதர்சனம், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சந்திரசேகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக