புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூலை 2010

"பான் இந்தியா' நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி.


அண்ணா நகர் : சேலம், ஈரோட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், "பான் இந்தியா' நிதி நிறுவனத்தில் பணத்தைச் செலுத்தி ஏமாந்ததாக புகார் கொடுத்தனர். கோவை, ஈரோடு, மதுரை, திருச்சியில், "பான் இந்தியா' பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. கோவை போத்தனூரைச் சேர்ந்த பாஸ்கர சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள் ஜெயக்குமார், சதீஷ், தினேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர்.

நிதி நிறுவனத்தில் ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், இரண்டு ஆண்டுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் கொடுப்பதாக கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தனர். வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையை, வெளிநாட்டு கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதன் மூலம் அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனத்தினர் கூறினர். ஈரோடு, திருச்சி, சேலம் பகுதியைச் சேர்ந்த பலர், ஆயிரக்கணக்கில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மாதம் 2,000 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு வட்டியாக தந்தனர்.

லட்சக்கணக்கில் பணம் சேர்ந்ததால், அதை சுருட்டிக் கொண்டு நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டனர். பணத்தை இழந்த 50க்கும் மேற்பட்டோர், சென்னை அண்ணா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தனர். ஐ.ஜி., விஜயகுமாரிடம், மோசடி நிதி நிறுவனம் தொடர்பான புகாரை, தனித்தனியாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள நிதி நிறுவன நிர்வாகிகளின் போட்டோவை ஐ.ஜி.,யிடம் கொடுத்தனர்.



1 கருத்து: