புதியவை :

Grab the widget  Tech Dreams

01 ஜூலை 2010

ஊழல் மிகுந்த13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


உலகில் ஊழல் அதிகமாக பரவியுள்ள 13 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு நிர்வாகமும் இந்த நாடுகளில் மோசமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"இந்தோ - டச் திட்ட மேலாண்மை சொசைட்டி' என்ற அமைப்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும், ஊழல் குறித்த ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில், வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் என்ற அமைப்பு ஒரு அறிக்கை தயாரித்தது.

இந்த அறிக்கை, சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்டது.இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் ஊழல் அதிகமாக பரவியுள்ளது. கவுதமாலா, பராகுவே, கானா, கென்யா, பெரு, அர்ஜென்டினா, ரஷ்யா, ருமேனியா, அல்பேனியா, மல்டோவா, போலந்து, இந்தோனேசியா ஆகியவை இந்த பட்டியலில் உள்ள மற்ற நாடுகள். இந்த நாடுகளில் அரசின் நிர்வாக செயல்பாடும் மோசமாக உள்ளது.

இந்தியாவில் செயல்படும் அரசு சுகாதார மையங்களில் 24 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பொதுவான நோய்களுக்கு தேவையான மருந்துகள் இங்கு கிடைப்பது இல்லை. டாக்டர்கள் தங்கள் பணி நேரத்தில் இருப்பது இல்லை. போலி டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.இந்த 13 நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர், உள்ளூர் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பவர்களாக உள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கருத்துகள்:

  1. விருதுக்கு , மிக்க நன்றி ஜெய் .
    http://no-bribe.blogspot.com/2010/07/blog-post_03.html

    பதிலளிநீக்கு
  2. kai oottu koduppathm vaangkuvathum kutram. aanaalum intha izhi seyalkal nadanthukondu thaan irukkinrana ! kodiya thanndanai koduththaal thaan ithu ozhiyum!!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு