புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஏப்ரல் 2010

ரூ.340 கோடி மோசடியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது .புதுடில்லி : ரூ.340 கோடி கலால் வரி மோசடி வழக்கில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலருமான ரவியும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். ரவியை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

கலால் வரி செலுத்தாமல் 340 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக, ராயல் மதுபான நிறுவன உரிமையாளர் அசோக் கீமானி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் மூன்று பேரை, நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் கீமானி டில்லியிலும், மற்ற மூன்று பேர் டாமனிலும் கைது செய்யப்பட்டனர். டாமனில் உள்ள கலால் வரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, பல கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரி மற்றும் 'வாட்' வரி மோசடி செய்துள்ளார் கீமானி. இது மட்டுமின்றி, கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் சட்ட விரோதமான வகையில், மதுபானங்களை விற்றுள்ளனர். இதன் மூலம் 340 கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில், டாமனின் தற்போதைய நிர்வாக அதிகாரியை மாற்றுவதற்காக, மதுபான நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவின் இணைச் செயலராக இருப்பவருமான ரவியும் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


ரவியை சஸ்பெண்ட் செய்யும்படி, மத்திய பணியாளர் நலத்துறையையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ரவியின் கைதைத் தொடர்ந்து, அவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். பின்னர் ரவியும், அவரது கூட்டாளியும் டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்.


செங்கல்பட்டு:

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (51). காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.


திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர் ஹரியழகன். தொடர்பு கொண்ட செல்வராஜ் 'சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு செல்லப்போகிறேன். காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன். அங்கு வந்து பணத்தை கொடு' எனக் கூறினார்.

ஹரியழகன், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்செல்வராஜ் ரயில் நிலைய வளாகத்தில் மாருதி காரில் காத்திருந்தார். அங்கு சென்ற ஹரியழகன் அவரிடம் பணத்தை கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், சரவணன், கங்காதரன், வெங்கடேசன் ஆகியோர் டாஸ்மாக் மேலாளர் செல்வராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். து அனுப்பினர்.

இவர் கடந்த வாரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு சென்றார். அவரிடம் மேலாளர் செல்வராஜ், 'உன் கடையில் மதுபானங்கள் அதிகம் விற்பனையாகிறது. வரும் வியாழக்கிழமைக்குள் எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடு. இல்லாவிட்டால் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்து விடுவேன்' எனக் கூறினார். பணம் கொடுக்க விரும்பாத ஹரியழகன், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார்.

பின் அவரிடம் சோதனை நடத்தியதில் திருப்போரூரில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளின் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்த கவரில் 15 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. அதைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பின் செல்வராஜை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.