புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஆகஸ்ட் 2009

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள, பத்திரப்பதிவு மற்றும் மோட்டார் வாகன அலுவலகங்களில் நேற்று ஒரே நாளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் அரக்கோணத்தில் மட்டும் கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது.


வேளச்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள், வில்லங்க சான்றிதழ் உட்பட எல்லா வேலைக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. கூடுதல் எஸ்.பி., ஜெயபாலன், டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் சென்ற தனிப்படை போலீசார், நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலகத்தில் புரோக்கர்களாக 13 பேர் செயல்பட்டனர். போலீசாரை கண்டதும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப் பணத்தை அலுவலக வளாகத்தில் தூக்கி எறிந்தனர்.அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் முறைகேடான வகையில் இருந்த முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். புரோக்கர்களுடன் தொடர்பு வைத்திருந்த அலுவலர்கள் பற்றி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பவுள்ளனர்.

அயனாவரம்:அயனாவரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையிலான தனிப் படையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்திற்குள் இருந்த புரோக்கர்களிடம் இருந்து ஆர்.சி., புத்தகங்கள் சிக்கின. வாகன வரி, பெயர் மாற்றம், டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களின் போட்டோக்களுடன், 200 பேரது விண்ணப்பங்களும் சிக்கியுள்ளன
அரக்கோணம்:அரக்கோணத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராமேஸ்வரி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் தட்சிணாமூர்த்தி, நந்தகோபால், வேலு ஆகியோர் தலைமையில், 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அரக்கோணம் இணை சார் பதிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர்.அரக்கோணத்தில், சார் பதிவாளராக முத்து சரஸ்வதி பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மேலும் 10 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இதில், இரவு 7 மணி வரை கணக்கில் வராத பணமாக, இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சார் பதிவாளர் முத்து சரஸ்வதியிடம் கைப்பற்றினர். மேலும், நள்ளிரவை தாண்டியும் இந்த சோதனை நடைபெற்றதால், ஐந்து லட்ச ரூபாய்க்கும் மேல் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றக் கூடும் என தெரிகிறது.
குன்னூர்: குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று (24ம் தேதி) மாலை 4.00 மணிக்கு, ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அலுவலக கதவை அடைத்த போலீசார் அலுவலக ஊழியர்களிடம் இருந்த பணத்தை கைப்பற்றி, அந்த பணம் எந்த வகையில் வந்தது என்பது குறித்து விசாரித்தனர்.அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். பத்திரப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்களையும் விசாரித்தனர். இரவு 8.00 மணியைத் தாண்டியும் ஆய்வு நடந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவது தெரியவந்தது.


நாகூர்: நாகூர் பத்திர பதிவு அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், புரோக்கர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., மாணிக்கவாசகம், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரைவேல் தலைமையிலான போலீசார், நேற்று மாலை 4 மணிக்கு துணை பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலக கதவுகளை பூட்டி அங்கிருந்த அனைவரையும் சோதனை செய்தனர். பத்திர பதிவிற்கு புரோக்கர்களாக செயல்பட்ட சரவணப்பெருமாள் (48), சிவராஜ்(45), ராஜ்குமார்(42) ஆகியோரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து நான்காயிரத்து 490 ரூபாய் வைத்திருந்ததை கைப்பற்றினர். அவர்களிடம் விசாரணை செய்ததில் வருமானத்திற்கான காரணத்தை கூறாததால் மூவரையும் கைது செய்தனர். தொடர் சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றினர்.இதுதொடர்பாக, துணைப் பதிவாளர் காந்திமதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சார் பதிவாளர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 53 ஆயிரத்து 575 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக சார் பதிவாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்களாகச் செயல்பட்ட பத்திர எழுத்தர்கள் வெங்கடேசன், சரவணன், பிரபு, பாரதிதாசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியம், லட்சுமணன், சங்கர், நாகராஜன், செல்வி, செல்வராணி, ராதா, முத்துலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


புதுகையிலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 4 மணிக்கு துவக்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பத்திர எழுத்தாளர்கள் சிவகுமார், குருசாமி, நாகலட்சுமி, கருப்பையா இவர்களிடமிருந்து எட்டாயிரத்து 550 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.தஞ்சை சிவகங்கை பூங்கா அருகிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை 4 மணியளவில் அதிரடியாய் நுழைந்தனர். இரவு வரை சோதனை நீடித்தது.


பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனை சார்பதிவாளர் உட்பட நால்வர் கைது : திண்டுக்கல் : திண்டுக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில்விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தியதில் பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் வெங்கடசாமி உட்பட 4 பேர்கைதுசெய்யப்பட்டனர். திண்டுக்கல் நாகல்நகர் பத்திரப்பதிவு அலுவலகத் தில் நேற்று மாலை 6 மணிக்கு விஜிலென்ஸ் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.சார்பதிவாளர் வெங்கடசாமி,உதவியாளர் ரத்தினசாமி, பத்திர எழுத் தர்கள் சேகர், சரவணவேல் உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணக்கில் காட்டப்படாத பல ஆயிரம் ரூபாய் அலுவலகத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் மேல் விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் கூறியதாவது: நாங்கள் நேற்று பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கணக்கில் காட்டப்படாத பல ஆயிரம் ரூபாய்மற்றும் ஆவணத்தை கைப்பற்றியுள்ளோம். இதில் தொடர்புடையவர் கள் யாராக இருந்தாலும் நாங்கள் கைது செய்வோம் என்றார்.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு : ராமநாதபுரத்தில் ரூ.20,000 பறிமுதல் :

ராமநாதபுரம் :தேனி, ராமநாதபுரம், சிவகங்கை பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ராமநாதபுரத்தில் 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டு, இரவு முழுவதும் விசாரணை நடந்தது.சென்னை உட்பட தமிழகத்தில் நேற்று மாலை 4மணிக்கு பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலுவலர் களின் கையிலிருந்த மற்றும் அலுவலகத்திலிருந்த பணத்தை கைப்பற்றி ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்தனர். அப்பகுதியில் உள்ள பத்திர எழுத்தர்களிடமும், சார் பதிவாளர் குணசேகரன் உட்பட அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினர். இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டதில் 20ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. டி.எஸ்.பி.,கலாவதி கூறுகையில்,"" அலுவலகத்தில் முறைகேடுகள் நடந்து உள்ளதா என்பது குறித்த விபரங்கள், சோதனை முழுமையாக முடிந்தபின் தெரிய வரும்'' என்றார்.


தேனி: தேனி என்.ஆர்.டி., மெயின் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இரவு ஏழு மணி வரை சோதனை நடந்தது.


திருப்புவனம்: திருப்புவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் கந்தராஜன், பத்திர எழுத்தர், பத்திர விற்பனையாளர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். தேவைக்கு அதிகமான பணம் வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது. இரவு 8 மணி வரை சோதனை நடந்தது.


திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணத்துடன் நின்றுகொண்டிருந்த புரோக்கர் கள் சங்கரன், சோமசுந்தரம் ஆகிய இருவர் சிக்கினர். பத்திரப்பதிவு அலுவலர் அருணாசலம், போலீசாரை கண்டதும் 3 ஆயிரத்து 515 ரூபாயை பக்கத் தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஊழியரின் கையில் திணிக்க முயன்று பிடிபட்டார். போலீசை கண்டதும் ஊழியர்கள் அலுவலகம் முழுவதும் ஆங்காங் கே மூலை முடுக்குகளில் போட்டு வைத்திருந்த 6 ஆயிரத்து 85 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை : திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கணக்கில் வராத பணம் 27 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.திருக்கழுக்குன்றம் கம்மாளர் வீதியில், சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வுக்குழு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன், கலைச்செல்வன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில், சார்பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஆறு ஊழியர்கள் இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் புரோக்கர்கள் அலுவலகத்தில் இருந்து தப்பியோடினர். போலீசார் அலுவலகத்தை மூடிவிட்டு சோதனை நடத்தினர். அப்போது பதிவேடுகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத பணம் 27 ஆயிரம் ரூபாய் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பணத்திற்கு ஊழியர்கள் கணக்கு காண்பிக்கவில்லை. அதைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அலுவலகம் அருகில் உள்ள கிணறு, திறந்தவெளி பகுதியிலும் போலீசார் சோதனை செய்தனர். இரவு 7 மணிக்கு சோதனை முடிந்தது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சிவகாசி ஊர்நல விரிவாக்க அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார் : சிவகாசி : சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய ஊர்நல விரிவாக்க அலுவலர் சிக்கினார். திருத்தங்கல்லைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும், படிக்காசுவைத்தான்பட்டியை சேர்ந்த முத்துக்குமாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. முத்துக்குமார் ஸ்ரீவி., யில் உள்ள சலூனில் பணியாற்றி வருகிறார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலகத்தில் திருமண உதவித்தொகை கேட்டு விஜயலட்சுமி ஜூன் 18ல் விண்ணப்பித்தார். அரசு அனுமதித்த உதவித்தொகையை வெம்பக்கோட்டை, இ.மீனாட்சிபுரம் ஊர்நல அலுவலர் சுப்புலட்சுமியிடம்(50)யிடம் கேட்டார். 1000 ரூபாய் லஞ்சம் கேட்ட சுப்புலட்சுமியின் நெருக்கடி பற்றி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 900 ரூபாயை நேற்று மாலை 4 மணிக்கு சுப்புலட்சுமியிடம் கொடுத்தார். பின்னர் வெளியில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சிக்னல் கொடுத்தார். போலீசார் அலுவலகத்திற்குள் வந்து சுப்புலட்சுமியை சோதனை செய்த போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களையும், விஜயலட்சுமியின் திருமண உதவித் தொகை விண்ணப்பத்தையும் காணவில்லை. அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தும் கிடைக்கவில்லை. பெண் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண் போலீசார் சுப்புலட்சுமியின் ஆடைகள் முழுவதையும் சோதனை போட்டும் ரூபாயும், விண்ணப்பமும் கிடைக்கவில்லை.அதன் பின்னர் சுப்புலட்சுமியை தண்ணீரில் கைகழுவ சொன்ன போது கைகழுவியதில் ரசாயனம் கையில் இருந்தது தெரியவந்தது. இருந்தும் சுப்புலட்சுமி லஞ்சம் பெறவில்லை என மறுத்ததால் அந்த அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைத்தனர். சுப்புலட்சுமியை கைது செய்து செய்தனர். இதனால் சுப்புலட்சுமி வாந்தி எடுத்து மயக்கம் வருவது போல் நடித்தார். இதனால் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடந்தும் லஞ்சமாக கொடுத்த பணத்தையும், விண்ணப்பத்தையும் போலீசார் கோட்டை விட்டனர்

மதுரை பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்சம்இணை சார்பதிவாளர், புரோக்கர் கைது : ரூ.ஒரு லட்சம் பறிமுதல் :
மதுரை : மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் ரோடு ரவுண்டானா அருகே பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்த இணை சார்பதிவாளர், புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.இங்கு நேற்று மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் இசக்கி ஆனந்தன், மணிமாறன், ரமேஷ், ஜெயக்குமார், மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலர் குமார், துணை தாசில்தார் (தெற்கு) மோகனாள் தலைமையில் சோதனை செய்தனர். எழுத்தர் கண்ணனிடம் புரோக்கராக வேலை செய்த ஜெய்ஹிந்த்புரம் முத்துக்குமாரிடம் (40) 95 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது. அவர் சமயநல்லூரை சேர்ந்த ஆசிரியர் ராஜாராம் பத்திரம் வாங்குவதற்காக 70 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக தெரிவித்தார். அரசு பதிவுக் கட்டணம்படி வசூலான
பில் தொகை, பணப்பெட்டியில் இருப்பு தொகையை சரிபார்த்தபோது கணக்கில் வராத 3599 ரூபாய் கூடுதலாக இருந்தது. பத்திரப்பதிவு செய்வோரின் சொத்தின் மதிப்பிற்கேற்ப லஞ்சம் வாங்குவதாக புரோக்கர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படியும், கணக்கில் வராத 3599 ரூபாய் வைத்திருந்த தெற்குவாசலை சேர்ந்த இணை சார்பதிவாளர் (பொறுப்பு) திருஞானம்(40) மற்றும் முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமி (57) மேஜையின் அருகே தரையில் கிடந்த 1300 ரூபாய் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 399 ரூபாயை பறிமுதல் செய்தனர். சுப்புலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ஆறு பேர் பணிபுரிகின்றனர். பணிப்பளுவின் காரணமாக திருஞானம் ஏற்பாட்டின் படி கூடுதலாக ஆறு பெண்கள், இரு ஆண்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். தினமும் வசூலாகும் லஞ்ச பணத்திலிருந்து பெண்களுக்கு தலா 120, ஆண்களுக்கு தலா 200 ரூபாய் அவர் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர்இசக்கி ஆனந்தன்,""முத்துக்குமார் சொல்வது போல், தான் லஞ்சமாக பணம் எதுவும் கொடுக்கவில்லை என ஆசிரியர் ராஜாராம் மறுத்துவிட்டார்,'' என்றார். இதேபோல் திருமங்கலம் அருகே கப்பலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் நேற்று காலை திடீர் சோதனை செய்தனர். அங்கு சில ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டசமூக நலத்துறையில் லஞ்சம்-3 பேர் சிக்கினர்

தூத்துக்குடி, ஆக. 27: தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் வந்ததையடுத்து, இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அந்த அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பாண்டி முத்து - பொள்ளாச்சி கூட்டுறவு தனி அலுவலர் கைது.

பொள்ளாச்சி, ஆக. 28: பொள்ளாச்சியில் ரேஷன் கடை பணியாளர்களிடம் நிலுவைத் தொகை தருவதற்கு லஞ்சம் பெற்றதாக கூட்டுறவு சங்க தனி அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பொள்ளாச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் தனி அலுவலராக பணியாற்றுபவர் பாண்டி முத்து. பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சரகங்களில் 39 ரேஷன் கடைகள் இவருக்கு கீழ் வருகின்றன. இவற்றில் பணியாற்றும் ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு ஏப். 28-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டது. நிலுவைத் தொகை முழுவதையும் லஞ்சமாக வழங்கினால் ஊதிய உயர்வுக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிப்பதாக பாண்டிமுத்து ரேஷன் கடை ஊழியர்களிடம் தெரிவித்திருந்தார். அடுத்த மாதம் முதல் புதிய ஊதியம் அமலாகும் என்று பாண்டிமுத்து கூறியிருந்தார். இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôரிடம் ரேஷன்கடை பணியாளர்கள் 4 பேர் தெரிவித்திருந்தனர். அதன்படி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள பாண்டிமுத்து வீட்டுக்கு 4 பேரும் சென்று ரூ.64 ஆயிரம் லஞ்சப் பணத்தை வெள்ளிக்கிழமை மாலையில் கொடுத்தனர். அங்கு காத்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் பாண்டிமுத்துவை கைது செய்தனர்.

26 ஆகஸ்ட் 2009

ஈரோடு - மாவட்ட மின்சார ஆய்வாளர் மனோகரன் கைது .


ஈரோடு, ஆக. 26-

ஈரோடு மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் மாவட்ட மின்சார ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் மனோகரன் (வயது48). தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், மின் இணைப்பு தொடரவும் மற்றும் தடையில்லா சான்று வழங்கவும் இவர் லஞ்சம் வாங்குவதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையொட்டி மனோகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது மனோகரன் சத்தியமங்கலம் சென்று இருப்பதாகவும், அங்கு பெறப்பட்ட லஞ்சப்பணத்துடன் அவர் காரில் ஈரோடு வந்து கொண்டு இருப்பதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மனோகரன் வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது ஆய்வாளர் மனோகரனிடம் ரூ.25ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் இக்கரை தத்தப்பள்ளியில் இயங்கி வரும் காகித ஆலைக்கு மின்சாரம் இணைப்பு வழங்குவதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க அவர் ரூ.25ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.
இதையொட்டி மின் வாரிய ஆய்வாளர் மனோகரனை போலீசார் கைது செய்தனர். இவரது வீடு ஈரோடு பெரியார் நகரில் உள்ளது. இந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள மனோகரனின் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதிகாரி மனோகரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சத்திய மங்கலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் சில அதிகாரிகள் வெளியேறிவிட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தது.ஒரு கையெழுத்துக்கு ரூ.1,000 வாங்கிய திருச்சி பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 15 பேர் சிறையில் அடைப்பு

திருச்சி, ஆக.25-
தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை போட்டனர்.
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சோதனை நடந்தது. அப்போது சார்-பதிவாளர் மேஜை ஊழியர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கணக்கில் வராத லஞ்சப் பணம் ரூ.53 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணத்தை பத்திர பதிவுக்காக வருபவர்களிடம் லஞ்சமாக சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பெற்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக சார் பதிவாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், எழுத்தர்கள், வெங்கடேசன், சரவணன், பிரபு, பாரதிதாசன், செந்தில்குமார், பால சுப்பிரமணியன், லட்சுமணன், நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் செல்வி, செல்வராணி, ராதா, முத்துலட்சுமி ஆகிய 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர். கைதான 15 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போன்று தஞ்சாவூரில், சிவசங்கிரி பூங்கா, அலுவலகம் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
அப்போது பத்திரபதிவுக்கு லஞ்சம் கொடுக்க வந்த தஞ்சை யாசப்பா நகரை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 300 ரூபாயை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் கைப்பற்றினர்.
புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. அப்போது ரூ.8ஆயிரத்து 750 ரூபாய் லஞ்சப்பணம் சிக்கியது. இது தொடர்பாக பத்திர எழுத்தர்கள் சிவக்குமார், நாகலட்சுமி, குருசாமி, கருப்பையா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
திருச்சி- தஞ்சை, புதுக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலங் களில் ஒரே நாளில் நடந்த சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது போலீசாரரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பத்திரபதிவுக்கு செல்பவர்களின் பத்திரங்கள் ஒரு மேஜையில் இருந்து மற்றொரு மேஜைக்கு நகர குறைந்தது ரூ.1000 வரை லஞ்சம் பெற்று உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு சென்ற போது பைல்களில் இருக்கும் பேப்பர்களுக்கு இடையில் என பணத்தை மறைத்து வைத்திருந்தனர். சிலர் போலீசார் பிடித்து விடாமல் இருக்க லஞ்சப்பணத்தை குப்பை கூடையில் போட்டு தப்ப முயன்றனர். மொத்தத்தில் பணத்தை ஏதோ சாதாரண பேப்பர் போல ஊழியர்கள் கையாண்டு உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஒரே நாள் சோதனையில் 1 லட்சம் வரை லஞ்சப்பணம் சிக்கியது என்றால் ஒரு அலுவலகத்தில் மாதத்துக்கு 30 லட்சம் வரை லஞ்சம் புழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் ஊழியர்களும் எழுத்தர்களும் சொத்து குவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெயில் வார்டன் பழனி கைது

கடலூர், ஆக.25-
தஞ்சாவூர் என்.கே. சாலையை சேர்ந்தவர் அமீர் சையத். மனித உரிமை கழக கண்காணிப்புகுழு பொது செயலாளராக உள்ளார். நேற்று இவர் 25 வகையான சட்ட புத்தகங்களை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வந்தார். அங்கு ஜெயிலில் வார்டனாக பணிபுரிந்த பழனியிடம் இந்த புத்தகங்களை நூலகத்தில் வைக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார்.
அதற்கு பழனி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து அமீர்சையத் கடலூர் லஞ்சஒழிப்பு போலீ சாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினத் தின் ஆலோசனைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை அமீர் சையத்திடம் கொடுத்து அனுப்பினர். அதனை அமீர் சையத், ஜெயில் வார்டன் பழனியிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர், திருமால் ஆகியோர் பழனியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; ரூ.27 ஆயிரம் சிக்கியது

காஞ்சீபுரம், ஆக.25-
திருக்கழுக்குன்றத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில் பத்திரப் பதிவுகளுக்கு லஞ்சம் வாங்கப் படுவதாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு வந்தன.
இதையொட்டி மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பாலசுப்பிரமணியம், டி.எஸ்.பி. விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன் ஆகியோர் அங்கு நேற்று மாலை சென்று சோதனை மேற்கொண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7 மணி வரை நடைபெற்றது.
சோதனையின்போது யாரும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. சார்பதிவாளர் பன்னீர் செல்வம் மற்றும் அலுவலர் களின் மேஜை டிராயர், ஆவணங்கள், குப்பை கூடைகள் போன்ற பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.27,600 பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் பன்னீர் செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.


லஞ்சம் வாங்கிய கீழக்கரை ஏட்டு சண்முகவேல் கைது.


ராமநாதபுரம்: கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பாஸ்போர்ட் விசாரணைக்காக லஞ்சம் வாங்கிய ஏட்டுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து பெண் எஸ்.ஐ.,மீது வழக்குபதிவு செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் செய்யது முகம்மதுபாக்கர்(56). இவர் தனது மனைவி ஆயிசத் மெர்லியா(50)வுக்கு பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து போலீஸ் விசாரணைக்கு வந்தது. விசாரணை அறிக்கை கொடுக்க, கீழக்கரை எஸ்.ஐ.,ஜெயதேவி மற்றும் ஏட்டு சண்முகவேல் ஆகியோர் 300 ரூபாய் லஞ்சம் கேட்டனர். இதை தொடர்ந்து, முகம்மதுபாக்கர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.கலாவதி டி.எஸ்.பி., ஆலோசனைப்படி, முகம்மதுபாக்கர் நேற்று மாலை ஸ்டேஷன் சென்றார். அங்கு எஸ்.ஐ., ஜெயதேவி இல்லாததால் , ஏட்டு சண்முகவேலுவிடம் 300 ரூபாய் கொடுத்தார். இதை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் , சண்முகவேலுவை கைது செய்தனர். மேலும், எஸ்.ஐ., ஜெயதேவி மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்25 ஆகஸ்ட் 2009

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை: தமிழகம முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புரோக்கர்கள், அரசு ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, திருச்சி, திருநெல்வேலி என பல இடங்களில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் லட்சக்கணக்கில் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் 16 பேர் கைது...

சென்னை வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் போலீசார் 13 புரோக்கர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 36 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அயனாவரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 36 ஆயிரத்து 495 பறிமுதல் செய்யப்ப்டடது. மேலும் போலீசார் சேத்துப்பட்டு ரகு, அயனாவரம் யோகேந்திர பாபு, துரைசாமி என மூன்று புரோக்கர்களை கைது செய்தனர்.

இங்கு சில புரோக்கர்கள் கையில் வைத்திருந்த லஞ்ச பணத்தை தெருவில் தூக்கி எறிந்துவிட்டு ஒட்டம் எடுத்தனர். இதையடுத்து போலீசார் தெருவில் கிடந்த ரூ. 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மதுரையில் ரூ. 1 லட்சம்...

மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோக்கர் முத்துக்குமார் என்பவரிடம் இருந்து ரூ. 95 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர்.

அதே போல் சமயநல்லூர் ஆசிரியர் ஒருவரிடம் வாங்கிய ரூ. 3 ஆயிரத்து 599 லஞ்ச பணத்தையும், அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமி என்பவரின் மேஜைக்கு அருகே கிடந்த ரூ. 1,330 பணத்தையும் கைப்பற்றினர்.

இதையடுத்து போலீசார் சார்பதிவாளர் திருஞானம், புரோக்கர் முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

திருநெல்வேலியில் 2 சார்பதிவாளர் மீது வழக்கு...

திருநெல்வேலி கலெக்டர் வளாகத்தில் இருக்கும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி மனோகரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் எஸ்கால், ராஜூ மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

மாலை 4 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத, அங்காங்கே சிதறி கிடந்த ரூ. 6 ஆயிரத்து 85 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரசு கணக்கில் சேர வேண்டிய 19 ஆயிரத்து 418 ரூபாய் மாயமாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய ஆவணம் ஒன்றும் காணாமல் போய்விட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர்கள் முருகேசன், அருணாசலம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசியில் அலுவலகத்துக்கு சீல்...

சிவகாசியில் ஏழை பெண்களின் திருமணத்துக்கு அரசு அறிவித்துள்ள உதவித்தொகையை கேட்டு விஜயலட்சுமி என்பவர் விண்ணப்பித்தார். கடந்த ஜூன் 18ம் தேதி அவர் வி்ண்ணப்பித்த போதிலும் அவருக்கு இதுவரை அது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அவர் விரிவாக்க அதிகாரி ஜெயலட்சுமியை சந்தித்தார். அப்போது அவர் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி விஜயலட்சுமி ரசாயனம் தடவிய ரூ. ஆயிரத்தை விரிவாக்க அதிகாரி ஜெயலட்சுமியிடம் கொடுத்தார். பின்னர் விஜயலட்சுமி அதிகாரிகளிடம் பணத்தை கொடுத்த விவரத்தை தெரிவித்தார்.

அதிகாரிகள் ஜெயலட்சுமியிடம் சோதனை நடத்தினர். ஆனால், பணம் சிக்கவில்லை. இதையடுத்து பெண் போலீஸ் வந்து அவரை முழுமையாக சோதனையிட்டது. ஆனாலும், பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயலட்சுமியை கை கழுவ சொன்னார்கள். அப்போது அவர் கையில் ரூபாய் நோட்டில் இருந்த ரசாயனம் ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கையும், களவுமாக மாட்டிய போதும் அவர் உண்மையை ஒப்புகொள்ளவில்லை. இதையடு்தது போலீசார் அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

திருச்சியில் 15 பேர் கைது...

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடத்தியது. இவர்களை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் குப்பை கூடைகள், பீரோக்கள் மற்றும் கணக்கு பதிவேடுகளுக்குள் பணத்தை மறைக்க முயன்றனர்.

இந்த முயற்சிகளை கண்டிபிடித்த போலீஸார் ரூ. 53 ஆயிரத்து 575 பணத்தை பறிமுதல் செய்தனர். சார்பதிவாளர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணத்தில் ரூ. 2 லட்சம்...

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளில் அதிகபட்சமாக அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 2 லட்சம் கைப்பற்றப்பட்டது. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய மூன்று மணி நேர சோதனையில் போலீசார் ரூ. 27 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

திண்டுக்கல்லில் சார்பதிவாளர் கைது...

திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் ஆயிரக்கணக்கில் பணத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக சார்பதிவாளர் வெங்கடசாமி, உதவியாளர் ரத்தினசாமி, பத்திர எழுத்தாளர் சேகர், சரவணவேல் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் போதிய விளக்கம் கொடுக்காததை அடுத்து அவர்கள் கைது செய்யப்ப்டடனர்.

நாகூரில் நடத்தப்பட்ட சோதனையில் சரவணப்பெருமாள் (48), சிவராஜ்(45), ராஜ்குமார்(42) என மூன்று புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் நடந்த சோதனையில் சிவகுமார், குருசாமி, நாகலட்சுமி, கருப்பையா என நான்கு பத்திர எழுத்தாளர்களிடம் இருந்து ரூ. 8 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதே போல் தேனி, திருப்புவனம், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளிடம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

21 ஆகஸ்ட் 2009

திருத்தணி ஆர்.டி.ஓ சந்திரசேகரன் கைது


லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், திருத்தணி ஆர்.டி.ஓ., சந்திரசேகரன் எப்படி சிக்கினார் என்பது குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. திருத்தணி ஆர்.டி.ஓ., வாக, சந்திரசேகரன் பணியாற்றி வந்தார்.

அரசு அனுமதியின்றி கல்குவாரி நடத்தி வரும் பாபுவிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, இவரை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., விஜயராகவன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர், கல்குவாரி அதிபர் பாபுவிடம் ஏற்கனவே லஞ்சமாக பெற்ற வாஷிங் மிஷின், பிரிட்ஜ் ஆகிய பொருட்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், ஆர்.டி.ஓ.,வின் சொந்த ஊரான செங்கல்பட்டு பெரிய மணியக்கார தெருவில் உள்ள அவரது வீட்டில், நேற்று அதிகாலை 2 மணிக்கு சோதனை தொடங்கியது. காலை 8 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பணமோ, நகைகளோ சிக்கவில்லை. பின்னர், ஆர்.டி.ஓ., சந்திரசேகரனை திருவள்ளூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள் காவல் வைக்க உத்தரவிட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான ஆர்.டி.ஓ., ஏற்கனவே, சென்னை தலைமை அலுவலக நுகர்பொருள் வாணிப கழகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அங்கு வேலை செய்யும் சக ஊழியர்களை மதிக்காமலும், மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கும் ஆளானார். இதை அடுத்து அவர் திருத்தணிக்கு மாற்றப்பட்டார். கடந்த வருடம் டிசம்பர் 1ம் தேதி, திருத்தணி ஆர்.டி.ஓ.,வாக நியமனம் செய்யப்பட்டார். திருத்தணியிலும், ஊழியர்களை அடிக்கடி ஒருமையில் திட்டுவதும், அதிகாரிகளை மதிக்காமலும் இருந்து வந்தார்.

பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வேலை முடித்துக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வார். திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இதில் ஒரு சில கல்குவாரிகள் மட்டும் அரசு அனுமதியுடன் இயங்குகிறது. மற்றவை அரசு அனுமதி பெறாமல் செயல்படுகிறது. இதையறிந்த ஆர்.டி.ஓ., கல்குவாரி அதிபர்களை அழைத்து பெறவேண்டியதை பெற்றுக்கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக அவைகள் செயல்பட அனுமதி அளித்து வந்துள்ளார்.

அரக்கோணம் ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த பாபு(32) என்பவரிடம்," நீ கல்குவாரி தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் எனக்கு பிரிட்ஜ், வாஷிங் மிஷன் வாங்கித் தர வேண்டும்' என்றும், "10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும்' என்றும் கூறினார். அதற்கு அவரோ, நாளை தருவதாக கூறி சென்றார். அவர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், நேற்று முன்தினம் காலை புகார் கொடுத்தார்.

புகாரின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டப்படி அதே தினம் இரவு, ஆர்.டி.ஓ.,விடம் பாபு பணம் கொடுக்கும் போது கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில், ஆர்.டி.ஓ., பலரிடம் லஞ்சத்தை பணமாக வாங்காமல், பொருட்களாக வாங்கி குவித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. திருத்தணி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.உதவி மின் பொறியாளர் துரைராஜ் கைது - மின்இணைப்புக்கு லஞ்சம்


சரவணம்பட்டி: சரவணம்பட்டியை அடுத்த சின்னவேடம்பட்டியில், லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர், ஊழல் ஒழிப்பு போலீசாரின் பொறியில் சிக்கி கைதானார். கோவை, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி தனபாக்கியம் . இவருக்கு உடையாம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் வீடு உள்ளது. வீட்டின் ஒரு பகுதியை வர்த்தக உபயோகத்திற்கான பகுதியாக மாற்றிக் கட்டிய இவர், வீட்டு உபயோக பிரிவிலிருந்த மின் இணைப்பை வர்த்தக இணைப்புக்கு மாற்றுவதற்காக, சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்த நடைமுறைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.125 தான். ஆனால் இணைப்பு (டாரிப்) மாற்றம் செய்ய 1,600 ரூபாய் லஞ்சம் தருமாறு உதவி மின் பொறியாளர் துரைராஜ் கேட்டார். பத்து நாட்களுக்கு முன் 1300 ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு விண்ணப்பம் தந்த துரைராஜ் நேற்று வரை மின் இணைப்பு மாற்றிக் கொடுக்கவில்லை. இது பற்றி கேட்ட போது, மீதி 300 ரூபாயும் தந்தால் தான் மின் இணைப்பை மாற்ற முடியும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் வேதனையடைந்த தனபாக்கியம், ஊழல் ஒழிப்பு துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச அதிகாரியை பொறி வைத்து பிடிக்கத் திட்டமிட்டனர்.நேற்று மீதி 300 ரூபாய் லஞ்சத் தொகையை பெற்றபோது, துரைராஜ் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவரது வீட்டில் சோதனையிட்ட போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.


உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன் - மின்இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம்கிணத்துக்கடவு: விவசாய நிலத்திற்கு மின்இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிணத்துக்கடவு துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனை, கோவை லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகிலுள்ள கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் சந்திரசேகரன்(41); இவர் 2007ம் ஆண்டு முதல் பணிபுரிகிறார்.அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாராயணசாமி(52); விவசாயத்திற்கு மின்னிணைப்பு கேட்டு 2007ம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார்.தற்போது மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு பெற, நாராயணசாமிக்கு கடிதம் வந்ததையடுத்து, மின் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது, "உங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க மூவாயிரம் ரூபாய் வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.இது குறித்து, நாராயணசாமி கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கிணத்துக்கடவு வந்தனர்.நாராயணசாமி நேற்று மதியம் 12.30 மணிக்கு கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனிடம் மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.அப்போது, திடீரென அங்கு நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனை கையும் களவுமாகப் பிடித்தனர். போலீசாரைப் பார்த்ததும் மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் வாயில் போட்டு விழுங்க உதவி பொறியாளர் முயற்சித்துள் ளார். போலீசார் பாய்ந்து சென்று, வாயில் திணித்த மூன்று ஆயிரம் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரனை லஞ்ச ஒழிப் புத்துறை போலீசார் கைது செய்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர்.20 ஆகஸ்ட் 2009

ரூ. 300 லஞ்சம் வாங்கிய கபிஸ்தலம் ஏட்டு மதியழகன் கைது

தஞ்சை, ஆக. 20-
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் பாஸ்போர்ட் விண்ணப்ப விசாரணைக்காக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு மதியழகன் (வயது 40) பாஸ்போர்ட் விசாரணைக்காக தனக்கு ரூ. 300 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று இளவரசனிடம் கூறினார். இதை கேட்டு இளவரசன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் இளவரசன் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. ரெங்கராஜன், இன்ஸ்பெக்டர் மனோகர் ஆகியோர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று இரவு கபிஸ்தலம் போலீஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது திட்டமிட்டபடி இளவரசன், ரூ. 300 லஞ்ச பணத்தை ஏட்டு மதியழகனிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய ஏட்டு மதியழகனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சூழ்ந்து கொண்டு கையும் களவுமாக பிடித்தனர்.
லஞ்ச வழக்கில் பிடிபட்ட ஏட்டு மதியழகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து ஏட்டு மதியழகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ரூ.1000 லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் தியாகராஜன் கைது

ஆண்டிப்பட்டி, ஆக. 20-
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள ராஜகுமாரி என்ற ஊரை சேர்ந்தவர் ரகுபதி (வயது47). இவர் தனது கடையில் பணியாற்றி வரும் பிள்ளையார் (39) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்று கடைக்கு தேவையான ஜவுளிகளை கொள்முதல் செய்தார்.
பின்பு ஜவுளிகளை பஸ்சில் ஏற்றி விட்டார். தனது பணியாளருடன் மோட்டார் சைக்கிளில் மதுரையிலிருந்து ராஜகுமாரி சென்றார். ஆண்டிப்பட்டி போலீஸ் சோதனை சாவடியில் இரவு நேர காவலராக கண்டமனூரில் பணியாற்றி வரும் தியாகராஜன் என்ற போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆவ ணங்களை சோதனை செய்தபோது எல்லாம் சரியாக இருந்தது.
உடனே அதிகவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக கூறிய தியாகராஜன், இதற்கு ரூ.2 ஆயிரம் அபராதமாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டியதிருக்கும் என்று மிரட்டி ரூ. 1000 லஞ்சமாக கொடுத்தால் விட்டு விடுவதாக தெரிவித்தார்.
தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிள்ளையாரிடம் இருந்த செல்போன், ஆர்.சி. புக் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை போலீஸ்காரர் தியாகராஜன் பறிமுதல் செய்து கொண்டார். ரூ.1000 லஞ்சம் கொடுத்து ஆவணங்களை பெற்று கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தார்.
இதில் அதிர்ச்சி அடைந்த ஜவுளி வியாபாரி ரகுபதி, தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரசாமியிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் அடங்கிய குழுவை அனுப்பி இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை ரசாயனம் தடவி ரகுதிபதியிடம் கொடுத்து அனுப்பினார். லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட போலீஸ் தியாகராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சம்பத்குமார் கைது

பூந்தமல்லி, ஆக. 20-
பூந்தமல்லி சென்னீர்குப்பத்தில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வணிக ஆய்வாளராக சம்பத்குமார் (வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார். பூந்தமல்லி எழில்நகரை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது வீட்டுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக வணிக ஆய்வாளர் சம்பத்குமாரை நாடினார்.
அவர் மின்சார இணைப்பு கொடுக்க ரூ. 11,500 லஞ்சம் வேண்டும். முதல் கட்டமாக ரூ. 3 ஆயிரம் தாருங்கள் என்று கேட்டார். இதுபற்றி சசிகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
சம்பவத்தன்று சசிகுமார் ரசாயன பவுடர் தடவிய ரூ. 3 ஆயிரம் பணத்தை வணிக ஆய்வாளர் சம்பத்குமாரிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார், அதிகாரி சம்பத்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


19 ஆகஸ்ட் 2009

லஞ்ச வழக்கு; மதுரை வீட்டு வசதிவாரிய புரோக்கர் இருவர் ரிமாண்ட்

மதுரை எல்லீஸ்நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் இசக்கி ஆனந்தன், மணிமாறன், ரமேஷ், ஜெயக்குமார் ஆகியோர் சோதனை நடத்தினர். இதில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த புரோக்கர்கள் பத்மநாபன் (38), மதுரை தெற்குவாசலை சேர்ந்த சுப்பிரமணியன் (40) ஆகியோர் பிடிபட்டனர்.அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்மநாபன், சுப்பிரமணியனை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வில்லியம், ""நீங்கள் இருவரும் எங்கு வேலை பார்க்கிறீர்கள்,'' என கேட்டார். அதற்கு புரோக்கர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து, ""நாங்கள் எல்லீஸ்நகர் ஹவுசிங் போர்டில் புரோக் கர்களாக உள்ளோம். விதிமுறைகளை மீறி சலுகையை பயன்படுத்தி பத்திரங்களை வாங்கி கொடுக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவோம்.மாலை 7 மணியளவில் வீட்டிற்கு புறப்பட தயாராக இருக்கும் ஊழியர்களிடம் பங்கு தொகையை பிரித்து கொடுப்போம்,'' என்றனர். இருவரையும் வரும் 1ம் தேதி வரை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வீட்டு வசதி வாரியத்தில் பத்மநாபன் தற்காலிக ஊழியராக சில ஆண்டுகள் வேலை பார்த்தவர். புரோக்கர் தொழிலை பத்தாண்டுகளாக செய்து வருகிறார். சுப்பிரமணியன் மூன்று ஆண்டுகளாக புரோக்கர் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் சிக்கிய சப்-கலெக்டர் மோகன்

சேலம் அஸ்தம்பட்டி பழனியப்பா நகரை சேர்ந்தவர் மோகன்(47). கடந்த 2006ம் ஆண்டு, சேலத்தில் முத்திரைத்தாள் தாசில்தாராக பணியாற்றினார். தற்போது, தஞ்சாவூரில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார், மோகன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 540 ரூபாய், 80 சவரன் தங்க நகை, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் முக்கிய ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மோகனின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் மசநாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும், சோதனை நடத்தி, அங்கிருந்தும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
நாமக்கல்லில் உள்ள கூட்டுறவு வங்கியில் மோகனின் லாக்கரை, போலீசார் நேற்று சோதனை செய்தனர். அதில், குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் சிக்கவில்லை. சேலத்தில் உள்ள கனரா வங்கியில் மோகனின் லாக்கரை, போலீசார் இன்று சோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். மார்க்கெட் மதிப்பைக் காட்டிலும், நில மதிப்பை குறைத்துக் காட்டி, அதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணத்தை குறைக்க மோகன் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
மோகன் மூலம் பதிவு செய்யப்பட்ட பல நிலங்களின் மதிப்பீடு, மார்க்கெட் மதிப்பை காட்டிலும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், அரசுக்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மோகனுக்கு நாமக்கல் மாவட்டம் மசநாயக்கன்பட்டியில் வீடு, பழனியப்பா நகரில் 3,000 சதுரஅடி நிலம், வீடு மற்றும் பூர்வீக வீடு, தங்க நகை என, தற்போதைய மார்க்கெட் மதிப்புப்படி இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

13 ஆகஸ்ட் 2009

இன்ஸ்பெக்டர் டைசி கைது .

போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்


திருச்சி:வழக்கு பதியாமல் இருக்க, அரிசி ஆலை அதிபரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.திருச்சி விமான நிலைய பகுதியில் வசிப்பவர் செல்லையா(57); அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்த மில்லில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனி, அவரது மனைவி ரம்யா வேலை செய்வதாகக் கூறி, முன்பணமாக 17 ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்தனர்.ஆனால், வேலைக்கு வராததோடு, பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த 6ம் தேதி வீட்டை காலி செய்து விட்டு ரம்யா திண்டுக்கல்லுக்கு புறப்பட தயாரானார். தகவலறிந்து அங்கு சென்ற செல்லையா, ரம்யாவைத் தாக்கினார். இதுகுறித்து விமானநிலைய போலீசில் ரம்யா புகார் அளித்தார்.இந்த புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க, 5,000 ரூபாய் லஞ்சம் தரவேண்டுமென, செல்லையாவிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் கேட்டார்.இதுகுறித்து செல்லையா, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அவர்கள் அறிவுரைப்படி, நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் 5,000 ரூபாய் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், இன்ஸ்பெக்டர் முருகேசனை கையும் களவுமாக பிடித்தனர்.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.12 ஆகஸ்ட் 2009

3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி செல்வதுரை .


TyPÖ ÙTVŸ UÖ¼\• ÙNšV
¤.3 B›W• XtN• YÖjfV fWÖU ŒŸYÖL A‡LÖ¡ ÛL‰


LÖtq“W•, BL.12-

TyPÖ ÙTVŸ UÖ¼\• ÙNšV ¤.3 B›W• XtN• YÖjfVRÖL fWÖU ŒŸYÖL A‡LÖ¡ ÛL‰ ÙNšVTyPÖŸ.

¤.3 B›W• XtN•

LÖtq“W• ÚNehÚTyÛP NÖ¦VŸ ÙR£«¥ YpTYŸ ‘.WÚUÐ. ÙWzÚUy ÚX‘· «¼TÛ]VÖ[Ÿ. CYŸ B¼TÖeL• fWÖU†ÛR ÚNŸ‹R ˜ÂVցz GÁTY¡P• 2004-• Bz¥ 1/2 HeLŸ ŒX• YÖjf]ÖŸ. A‹R ŒX†ÛR R]‰ ÙTV£eh UÖ¼\• ÙNš‰ RW ÚLÖ¡ WÚUÐ LÖtq“W• RÖ¨LÖ A¨YXL†‡¥ UÄ ÙNšRÖŸ.

C‹R UÄ B¼TÖeL• fWÖU ŒŸYÖL A‡LÖ¡ H.ÚL.ÙN¥Y‰ÛW (YV‰ 57) GÁTY£eh AĐ‘ ÛYeLTyP‰. EPÚ] WÚUÐ C‰ ÙRÖPŸTÖL fWÖU ŒŸYÖL A‡LÖ¡ÛV A„f]ÖŸ. AR¼h AYŸ TyPÖ ÙTVŸ UÖ¼\• ÙNšV T¡‹‰ÛWeL ÚY|UÖ]Ö¥ ¤.10 B›W• RW ÚY|• G] i½VRÖL ÙR¡f\‰.

‘\h ÚTW• ÚTp ¤.4 B›W• ÙLÖ|eh•Tz•, ˜R¥ RYÛQVÖL ¤.3 B›W†ÛR R£•Tz• ÙN¥Y‰ÛW i½ C£ef\ÖŸ. TQ†ÛR EjL· ®yz¼ÚL Y‹‰ YÖjf ÙLÖ·fÚ\Á GÁ¿• i½]ÖŸ.

ÛL‰

C‰ T¼½ WÚUÐ LÖtq“W• UÖYyP XtN J³“ ÚTÖ§p¥ “LÖŸ ÙNšRÖŸ. CRÛ] A|†‰ ‰ÛQ s‘W| «^VWÖLYÁ RÛXÛU›¥ CÁÍÙTePŸL· ÙYjLÚPNÁ, NWYQÁ, LÛXoÙN¥YÁ, LjLÖRWÁ U¼¿• ÚTÖ§NÖŸ ÚS¼¿ UÖÛX 4 U‚ A[«¥ WÚUÐ ®yP£ÚL LÖ†‡£‹R]Ÿ.

AÚTÖ‰ fWÖU ŒŸYÖL A‡LÖ¡ ÙN¥Y‰ÛW XtN TQ†ÛR YÖjf WÚUÐ ®yz¼h Y‹‰ ¤.3 B›W†ÛR YÖjfVRÖL i\T|f\‰. EPÚ] XtN J³“ ÚTÖ§NÖŸ TÖš‹‰ ÙNÁ¿ ÙN¥Y‰ÛWÛV ÛL•, L[°UÖL ‘z†R]Ÿ. XtN• ÙLÖ|†R TQ˜• —yLTyP‰. ‘\h AYÛW ÛL‰ ÙNš‰ ÙNjL¥Ty| ÚLÖŸyz¥ B^ŸT|†‡]Ÿ. AYÛW 15 SÖ· LÖY¦¥ ÛYeL ‡T‡ E†RW«yPÖŸ. ARÁTz AYŸ ÙNÁÛ] “Z¥ pÛ\›¥ AÛPeLTyPÖŸ.

®yz¥ ÚNÖRÛ]

ÚU¨• LÖtq“W• SWpjLWÖVŸ ÙR£«¥ E·[ ÙN¥Y‰ÛW›Á ®yz¥ ÚTÖ§NÖŸ ÚNÖRÛ] SP†‡]Ÿ. Ajh pX ˜efV BYQjL· pef].லஞ்ச வழக்கில் இரு நகராட்சி அலுவலர்களுக்கு மூன்றாண்டு: ஐகோர்ட் உறுதி செய்தது

மதுரை: நாகர்கோவிலில் லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி அலுவர்களுக்கு சப்- கோர்ட் வழங்கிய மூன்று ஆண்டு சிறையை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. நாகர்கோவில் நேசமணிநகரை சேர்ந்தவர் ராஜாசிங். இவர் புதியவீடு கட்டினார். இதற்கு நகராட்சி சார்பில், வீட்டு வரி நிர்ணயிக்கப்பட்டது.

வரியை குறைத்து நிர்ணயம் செய்ய வருவாய் அதிகாரி கருணாகரன், பில் கலெக்டர் கோலப்பன் லஞ்சம் கேட்டனர். ராஜாசிங் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பிறகு ராஜா சிங் லஞ்ச பணத்தை அவர்களிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். இவ்வழக்கில், இரண்டு பேருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, சப் -கோர்ட் 2000 செப்.,29ல் தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து, இருவரும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தனர். இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு வக்கீல் சிவ.ஐயப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று, மேல்முறையீடு மனுக்களை நீதிபதி ஏ.செல்வம் தள்ளுபடி செய்தார். ""கீழ்கோர்ட் உத்தரவில் தலையிடும் அளவுக்கு போதிய காரணங்கள் இல்லை. சாட்சியங்கள், சான்றாவணங்கள் குற்றத்தை நிரூப்பிப்பதாக உள்ளன,'' எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.மின்வாரிய வணிக ஆய்வாளர் ராஜேந்திரன் அதிரடி கைது

சென்னை: "மூன்று பேஸ்' மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, மின்வாரிய கமர்சியல் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகர், நெசப்பாக்கம் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், அப்பகுதியில், "யாதவா நியூஸ் மார்ட்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் "சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு உள்ளது. "மூன்று பேஸ்' மின் இணைப்பு வேண்டி, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு கட்டணமாக 12 ஆயிரத்து 75 ரூபாய் செலுத்தினார். மின்வாரிய வணிக ஆய்வாளர் (கமர்சியல் இன்ஸ்பெக்டர்) ராஜேந்திரன்(45), மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்டு, இணைப்பு வழங்காமல் தாமதம் செய்தார். மின் இணைப்பு வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவர் கேட்ட தொகையை தருவதாக சுப்பிரமணி கூறினார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொன்னுச்சாமியிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன், இமானுவேல் ஞானசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று மாலை சுப்பிரமணியின் கடைக்குச் சென்ற கமர்சியல் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், லஞ்சப் பணத்தை வாங்கினார்.
அருகேயிருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்தார். பின்தொடர்ந்து சென்ற தனிப்படையினர், கமர்சியல் இன்ஸ்பெக்டரை கைது செய்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.11 ஆகஸ்ட் 2009

லஞ்சம் வாங்கியவருக்கு சிறை தண்டனை .06 ஆகஸ்ட் 2009

ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் நடராஜன் கைது

திருவண்ணாமலை: செங்கம் அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வனச்சரகரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், வனச்சரகராக நடராஜன் பணிபுரிந்து வருகிறார்.

ஆனந்தவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் காட்டுப்பகுதியில், சிமென்ட் தொட்டி கட்டும் பணியை 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், டெண்டர் எடுத்து சின்னக்கண்ணு என்பவர் பணி செய்து முடித்தார்.
கடந்த ஜூன் மாதம் அவர் இறந்துவிட்டார். அந்த பணத்தை பெற சின்னக்கண்ணு மகன் சண்முகம் வனச்சரகர் நடராஜனை அணுகினார். "15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், உடனடியாக டெண்டர் பணிக்கான பணத்தை கொடுப்பதாக' அவர் தெரிவித்தார். 10 ஆயிரம் ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து, சண்முகம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, 10 ஆயிரம் ரூபாயை சண்முகம் கொடுத்த போது, அதை வாங்கிய நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

"சபாஷ்' விஜிலென்ஸ்

சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள டி.எஸ்.பி.,கள் நடராஜன் - திருநாவுக்கரசு கூட்டணி, சவாலான வழக்குகளைக் கையாண்டு வருகிறது. புழல் சிறையில் லஞ்சம் வாங்கிய காவலர் சாலமனை இந்தக் கூட்டணி தான் கைது செய்தது. அரசு அதிகாரி மீது லஞ்சப் புகார் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலையடுத்து, லஞ்சப் பணம் கை மாறும் இடத்தில் மறைந்திருந்து, லஞ்சம் வாங்குபவரையும், கொடுப்பவரையும் கைது செய்து வருகின்றனர். அதே பாணியில் தான் டாக்டர் எழிலரசியையும் "பொறி' வைத்து பிடித்தனர். வீட்டிற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரை, ஆங்கிலத்தில் எழிலரசி இஷ்டத்திற்கு திட்டியுள்ளார். ஆத்திரப்படாமல் பொறுமையாக இருந்து, விஜிலென்ஸ் போலீசார் காரியத்தை முடித்தனர். அரசு அதிகாரி மீது லஞ்சப் புகார் வராவிட்டாலும், தைரியமாக களத்தில் இறங்கி, தமிழக அளவில் மிகப் பெரிய பொறுப்பில் உள்ள எழிலரசியை கைது செய்துள்ளனர். இது போன்ற விஜிலென்ஸ் அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் கடமை பொதுமக்களுக்கும் உண்டு. லஞ்ச அதிகாரிகளைப் பற்றிய தகவல்கள் இருந்தால், விஜிலென்ஸ் அதிகாரிகளை 94450 48862, 94440 77666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர், முகவரிகள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

லஞ்சம் வாங்கிய அதிகாரி ராஜசேகரன் கைது


சென்னை: வீட்டை இடித்து கட்டுபவரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.,) திட்ட உதவியாளர் கைது செய்யப்பட்டார்

சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் சேகரன். பர்னிச்சர் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார். தனக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்துவிட்டு, அருகில் காலியாக உள்ள இடத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டத் திட்டமிட்டார். இதற்கு அனுமதி கேட்டு சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பித்தார்.

புதிய கட்டடம் கட்டும் திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ.,வுக்கு 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தினார். அதை பரிசீலித்து, மாநகராட்சிக்கு அந்த பைலை அனுப்பாமல், சி.எம்.டி.ஏ., திட்ட உதவியாளர் ராஜசேகரன் (56) கிடப்பில் போட்டார். அதற்கு 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு த்துறை எஸ்.பி., பவானி ஈஸ்வரியிடம் சேகரன் புகார் அளித்தார். டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் இமானுவேல் ஞானசேகர், உச்சப்பட்டி பரமசாமி, அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை காத்திருந்தனர். ரசாயன கலவை தடவப்பட்ட லஞ்சப் பணத்தை எடுத்துச் சென்ற சேகரனிடம், பணத்தை வாங்காத ராஜசேகரன், தரைத்தளத்தில் உள்ள கேன்டீனுக்கு அழைத்து சென்று டீ வாங்கிக்கொடுத்தார்.

அப்போது லஞ்ச பணத்தை வாங்கியபோது, விஜிலென்ஸ் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். போலீசாரிடம் ராஜசேகரன், "சார்! நான் மிரட்டி லஞ்சம் வாங்கவில்லை. அவரே விருப்பப்பட்டு அன்பளிப்பாகத் தான் கொடுத்தார். என்னை கைது செய்யாதீர்கள்' என கெஞ்சினார்.

டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, "அன்பளிப்பாக பணம் கொடுத்தாலும், அதற்கு பெயர் லஞ்சம் தான்' என ராஜசேகரனிடம் கூறினார். விசாரணைக்கு பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லஞ்சம் வாங்கிய இ.எஸ்.ஐ - டைரக்டர் எழிலரசி‌ கைதுசென்னை : சென்னையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்குவதற்காக சம்பந்தபட்ட மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய, இ.எஸ்.ஐ., டைரக்டர் எழிலரசி‌ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு, சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்காக, மருந்து கம்பெனிகளிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட இ.எஸ்.ஐ., டைரக்டர் எழிலரசியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரை காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து எழிலரசி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் லஞ்சம் கொடுத்த மருந்து கம்பெனி பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனர் எழிலரசி, ஆடம்பர வாழ்க்கை காரணமாக 40 லட்சம் ரூபாய் வரை கடன் வைத்துள்ளதும், அந்த கடனை வேலையில் இருக்கும் போதே அடைத்து விட வேண்டும் என்ற நோக்கில், லஞ்சம் வாங்கத் துவங்கியதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் எழிலரசி, நேற்று முன்தினம் இரவு இ.எஸ்.ஐ.,க்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் 8.53 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக பிடிபட்டார்.
இவரது சொந்த ஊர், திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி. இவரது கணவர் பக்ருதீன் வக்கீல். எழிலரசியின் இரண்டு மகள்களும் டாக்டருக்கு படித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
பக்ருதீனும், டாக்டர் எழிலரசியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எழிலரசி ஆரம்பம் முதலே ஆடம்பரத்தை கடைபிடித்தவர். இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். பல இடங்களில் அவர் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
இந்நிலையில், எழிலரசியின் கணவர் பக்ருதீனின் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்தன. அவரது மூத்த மகள் தானமாகக் கொடுத்த கிட்னி மூலம் தற்போது பக்ருதீன் வாழ்ந்து வருகிறார். பக்ருதீனின் கிட்னி ஆபரேஷனுக்கு மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வரை எழிலரசி செலவு செய்துள்ளார்.
தற்போது 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. அரசு டாக்டராக இருந்து வந்த எழிலரசி படிப்படியாக முன்னேறி, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் திருச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வில் அவர் சென்னையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்ய சலுகை காட்டுவதற்காக, மருந்து நிறுவனங்களிடம் நேற்று முன்தினம் இரவு டாக்டர் எழிலரசி லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டாக்டர் எழிலரசி கைது செய்யப்பட்ட அதே நேரம், துவரங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடந்த சோதனையில், பெரிய அளவில் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றிய போது, எழிலரசி நேர்மையானவர் என்றே கூறப்படுகிறது. இதை, அவருடன் பணியாற்றிய அலுவலர்களும் உறுதி செய்கின்றனர்.
ஆனால், பணிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், தனக்குள்ள 40 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்ற நிர்பந்தத்தின் பேரில் தான், டாக்டர் எழிலரசி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

05 ஆகஸ்ட் 2009

சென்னைத் துறைமுக "மாஜி' தலைவர் சுரேஷ் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு


சென்னை: சென்னைத் துறைமுக "மாஜி' தலைவர் சுரேஷ் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.வங்கி லாக்கர், வீடுகளில் நடந்த சோதனையில், இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின. அதில் 3.5 கிலோ தங்க நகைகள், 6,400 அமெரிக்க டாலர்கள். கர்நாடகாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், மத்திய பிரதேச "கேடர்' ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மத்திய அரசு மாற்றுப் பணியில் 2004ம் ஆண்டு, சென்னைத் துறைமுக கழகத் தலைவராக பொறுப்பேற்றார்.


கடந்த ஜூன் 30ம் தேதி வரை அப்பணியில் இருந்தார். தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சேது சமுத்திரத் திட்டத் தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். மத்திய அமைச்சர் பாலுவிடம் நெருக்கமாக இருந்துள்ளார். இரண்டாவது கன்டெய்னர் டெர்மினல், நிலக்கரி மாசால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கையாளும் திட்டம் போன்றவை, இவரது காலத்தில் செய்யப்பட்ட முக்கிய பணிகள்.இதில், கன்வேயர் மூலம் நிலக்கரி கையாளும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து சென்னைத் துறைமுக கழகத் தலைவராக இருந்த சுரேஷ் மீண்டும் மத்திய பிரதேசத்திற்கு அழைக்கப் பட்டார். தற்போது மருத்துவ விடுப்பில், சென்னைத் துறைமுகத்தில் உள்ள துறைமுகத் தலைவருக்கான பங்களாவில் சுரேஷ், தொடர்ந்து வசித்து வருகிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், தென்னாப்ரிக்காவில் இருந்து புறப்பட்டது.அக்கப்பலில் போதிய பாதுகாப்பு காரணிகள் இல்லாததால், தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து சென்னை வந்த அக்கப்பலை, முறைகேடாக 2007ம் ஆண்டு முதல் இதுவரை துறைமுகத்தில் நிறுத்த சுரேஷ் அனுமதித்தார். சென்னைத் துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்கள், துறைமுகத்தில் நிறுத்த (பெர்த்) இடமில்லாமல் பல மாதங்களாக துறைமுகத்திற்கு வெளியே, சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப் பட்டுள்ளன.துறைமுகத்தில் நிற்கும், "சாஜ் சார்ஜா' என்ற அக்கப்பலில் எந்த ஊழியர்களும் தற்போது இல்லை. துருப்பிடித்து, இயக்க முடியாத நிலையில் உள்ள அக்கப்பல், ஏலம் விட்டு உடைக்கும் நிலையில் உள்ளது. சிங்கப்பூர் நிறுவன கப்பலை துறைமுகத்தில் முறைகேடாக நிறுத்திய வகையில், சென்னைத் துறைமுகத்திற்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன், சுரேஷ் மீது பல்வேறு முறைகேடுகள் எழுந்தன.ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அவரது வீட்டில் நுழைந்தனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடந்தது. துறைமுக மாஜி தலைவர் சுரேஷ், துறைமுக பாதுகாப்பாளர் ஜின்னா, போக்குவரத்து மேலாளர் வெங்கடேஸ்வரலு உள்ளிட்டோரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.சுரேசுக்குச் சொந்தமாக சென்னை நகர், கிழக்கு கடற்கரைச் சாலை, கொடைக்கானல், பெங்களூருவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. வீடுகளில் நடந்த சோதனையில் 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தங்க நகைகள், சொத்து ஆவணங்களின் மொத்த மதிப்பு இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் என சி.பி.ஐ., போலீசார் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க டாலர் வைத்திருந்த சுரேஷ் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு, கூட்டு சதி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் சி.பி.ஐ., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.வனத்துறை லஞ்ச அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை: லஞ்சம் பெற்ற குற்றச் சாட் டில் கைது செய்யப்பட்ட வனத்துறை அதிகாரி ராஜலிங்க ராஜா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். சென்னையில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் இருந்தவர் ராஜலிங்க ராஜா

கேரளாவில் இருந்து கொண்டு வரப் பட்ட செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்ல, வியாபாரி ஒருவர் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி வழங்க, கடந்த மாதம் 15ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ராஜலிங்க ராஜா கைது செய்யப்பட்டார். அவர் ரிமாண்ட் செய்யப் பட்டு, போலீஸ் காவலில் உள்ளார்.
அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில், "உதவி வனப் பாதுகாவலர் ராஜலிங்க ராஜா ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் 15ம் தேதி முதல் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மறு உத்தரவு வெளியிடும் வரை அவருக்கு விதிகளின்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். அவர் முன் அனுமதி இன்றி சென்னையை விட்டு செல்லக்கூடாது' என கூறப்பட்டுள்ளது.03 ஆகஸ்ட் 2009

தொழிலாளர் துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் உமா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

நாகர்கோவில் : ரேஷன் கடை ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்தனர். அவரிடம் இந்து 6650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாத கடைசி நாளில் அடுத்த மாதத்திற்கான ஒதுக்கீடுகள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்கப்படும். இவ்வாறு ஒதுக்கீடுகள் வழங்க வரும் ரேஷன் கடை ஊழியர்களிடம் தொழிலாளர் துறை அதிகாரிகள் மிரட்ட பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது.
இதன்படி அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கடைகளுக்கான ஒதுக்கீடுகளை பெற வந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் நாகர்கோவில் 1வது சரகம் தொழிலாளர் துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் உமா மிரட்டி பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான இட ஒதுக்கீடுகளை பெறுவதற்கு நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் நாகர்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். தாலுகா அலுவலக வளாகத்தின் அருகில் ஒரு ஆட்டோவில் இருந்த தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டர் உமா, அங்கு வரும் ஊழியர்களிடம் 50, 100 ரூபாய் என வசூலித்துக்கொண்டிருந்தார்.
இதுகுறித்த தகவலின்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான துணை ஆய்வு குழு அலுவலர் நாராயணன், கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் உமா லஞ்சம் வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பெண் போலீசாரின் உதவியுடன் அவரது உடமைகளை சோதனையிட்ட போது கணக்கில் வராத 6650 ரூபாய் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர் சரியான விவரம் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவிலில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன்னால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரியை கைது செய்த தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப்போல் கடந்த மாதம் கடைசி நாளான 20ம் தேதி விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இந்த மாதம் தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டர் சிக்கியுள்ளார். இதைப்போல் தொடர்ந்து திடீர் சோதனை நடத்தி லஞ்சம் பெறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


02 ஆகஸ்ட் 2009

லஞ்சம் வாங்கியதாக திருச்சியில் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்


திருச்சி: புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக திருச்சியில் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரைச் சேர்ந்தவர் மணிமாறன்(45); திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை முதல் வாரத்தில் கடையை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து, ஜூலை 19ம் தேதி கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடு போனது தெரிந்தது. சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் மணிமாறன் புகார் அளித்தார். புகாரை பெற்ற எஸ்.ஐ., முத்துக்குமார் ஒருவாரம் கழித்து வருமாறு கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து கடந்த 30ம் தேதி சென்ற மணிமாறனிடம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 2,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என எஸ்.ஐ., முத்துக்குமார் கேட்டுள்ளார். "உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்வளவு பணம் தர இயலாது' என கூறிய மணிமாறனிடம், 1,500 ரூபாய் கொடுத்தால் தான் வழக்கு பதிய முடியும் என எஸ்.ஐ., கறாராக கூறியுள்ளார்.


பணம் கொடுக்க விருப்பமில்லாத மணிமாறன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் அளித்தார். நேற்று மதியம் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணிமாறன் அங்கிருந்த எஸ்.ஐ., முத்துக்குமாரிடம் அவர் கேட்ட 1,500 ரூபாய் லஞ்ச பணத்தைக் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏ.சி., அம்பிகாபதி தலைமையிலான குழுவினர், லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., முத்துக்குமாரை கைது செய்தனர்.லஞ்சப்பணத்தில் ரூ.27 லட்சத்திற்கு சொத்து: மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் தங்கராஜ், லஞ்சப்பணத்தில் 27 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரியவந்ததையடுத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த அலுவலகத்தில் நேற்று முன் தினம் மாலை லஞ்சஒழிப்புத் துறை டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். புரோக்கர்கள் முத்துபாண்டி, விக்னேஷ்வர், செந்தில்குமாரிடம் கணக்கில் வராத 18,650 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அந்த பணம் அலுவலக கண்காணிப்பாளர் மனோகர், வாகன ஆய்வாளர் தங்கராஜூக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நேற்றிரவு கே.கே.நகரில் உள்ள தங்கராஜ் வீட்டில் சோதனை நடந்தது. ஐந்து வங்கிகளில் 27 லட்சம் ரூபாய்க்கு நிரந்தர வைப்புத் தொகை செய்திருந்ததற்கான 58 ரசீதுகள் கைப்பற்றப்பட்டன.
இரவு முழுவதும் லஞ்சஒழிப்பு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. நேற்று மாலை கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். லஞ்சஒழிப்பு போலீசார் கூறுகையில், ""தங்கராஜ் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பதிவு எண், ஆர்.சி., புக் இல்லாமல் காரை உபயோகித்த கண்காணிப்பாளர் மனோகருக்கும், இதில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க உள்ளோம். புரோக்கர்களை கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவோம்,'' என்றனர்.

உறவினர் வீட்டில் ரசீதுகள்: "என்றைக்காவது ஒரு நாள் லஞ்சஒழிப்பு போலீசில் சிக்குவோம்' என்று கருதிய தங்கராஜ், மதுரை டோக்நகரில் வசிக்கும் தனது உறவுக்கார பெண்மணி செல்வம் வீட்டில், வங்கிகளில் டெபாசிட் செய்ததற்கான பல ஆவணங்களை பதுக்கியிருக்கிறார். இதையும் லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.