புதியவை :

Grab the widget  Tech Dreams

06 ஆகஸ்ட் 2009

லஞ்சம் வாங்கிய இ.எஸ்.ஐ - டைரக்டர் எழிலரசி‌ கைதுசென்னை : சென்னையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்குவதற்காக சம்பந்தபட்ட மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய, இ.எஸ்.ஐ., டைரக்டர் எழிலரசி‌ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு, சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்காக, மருந்து கம்பெனிகளிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட இ.எஸ்.ஐ., டைரக்டர் எழிலரசியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரை காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து எழிலரசி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் லஞ்சம் கொடுத்த மருந்து கம்பெனி பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனர் எழிலரசி, ஆடம்பர வாழ்க்கை காரணமாக 40 லட்சம் ரூபாய் வரை கடன் வைத்துள்ளதும், அந்த கடனை வேலையில் இருக்கும் போதே அடைத்து விட வேண்டும் என்ற நோக்கில், லஞ்சம் வாங்கத் துவங்கியதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் எழிலரசி, நேற்று முன்தினம் இரவு இ.எஸ்.ஐ.,க்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் 8.53 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக பிடிபட்டார்.
இவரது சொந்த ஊர், திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி. இவரது கணவர் பக்ருதீன் வக்கீல். எழிலரசியின் இரண்டு மகள்களும் டாக்டருக்கு படித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
பக்ருதீனும், டாக்டர் எழிலரசியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எழிலரசி ஆரம்பம் முதலே ஆடம்பரத்தை கடைபிடித்தவர். இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். பல இடங்களில் அவர் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
இந்நிலையில், எழிலரசியின் கணவர் பக்ருதீனின் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்தன. அவரது மூத்த மகள் தானமாகக் கொடுத்த கிட்னி மூலம் தற்போது பக்ருதீன் வாழ்ந்து வருகிறார். பக்ருதீனின் கிட்னி ஆபரேஷனுக்கு மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வரை எழிலரசி செலவு செய்துள்ளார்.
தற்போது 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. அரசு டாக்டராக இருந்து வந்த எழிலரசி படிப்படியாக முன்னேறி, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் திருச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வில் அவர் சென்னையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்ய சலுகை காட்டுவதற்காக, மருந்து நிறுவனங்களிடம் நேற்று முன்தினம் இரவு டாக்டர் எழிலரசி லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டாக்டர் எழிலரசி கைது செய்யப்பட்ட அதே நேரம், துவரங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடந்த சோதனையில், பெரிய அளவில் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றிய போது, எழிலரசி நேர்மையானவர் என்றே கூறப்படுகிறது. இதை, அவருடன் பணியாற்றிய அலுவலர்களும் உறுதி செய்கின்றனர்.
ஆனால், பணிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், தனக்குள்ள 40 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்ற நிர்பந்தத்தின் பேரில் தான், டாக்டர் எழிலரசி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக