புதியவை :

Grab the widget  Tech Dreams

26 ஆகஸ்ட் 2009

லஞ்சம் வாங்கிய கீழக்கரை ஏட்டு சண்முகவேல் கைது.


ராமநாதபுரம்: கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பாஸ்போர்ட் விசாரணைக்காக லஞ்சம் வாங்கிய ஏட்டுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து பெண் எஸ்.ஐ.,மீது வழக்குபதிவு செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் செய்யது முகம்மதுபாக்கர்(56). இவர் தனது மனைவி ஆயிசத் மெர்லியா(50)வுக்கு பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து போலீஸ் விசாரணைக்கு வந்தது. விசாரணை அறிக்கை கொடுக்க, கீழக்கரை எஸ்.ஐ.,ஜெயதேவி மற்றும் ஏட்டு சண்முகவேல் ஆகியோர் 300 ரூபாய் லஞ்சம் கேட்டனர். இதை தொடர்ந்து, முகம்மதுபாக்கர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.கலாவதி டி.எஸ்.பி., ஆலோசனைப்படி, முகம்மதுபாக்கர் நேற்று மாலை ஸ்டேஷன் சென்றார். அங்கு எஸ்.ஐ., ஜெயதேவி இல்லாததால் , ஏட்டு சண்முகவேலுவிடம் 300 ரூபாய் கொடுத்தார். இதை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் , சண்முகவேலுவை கைது செய்தனர். மேலும், எஸ்.ஐ., ஜெயதேவி மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக