புதியவை :

Grab the widget  Tech Dreams

30 நவம்பர் 2009

ரூ.4 ஆயிரம் கோடி ஊழல்: மதுகோடா “திடீர்” கைது

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா ஊழல் செய்து ரூ.4 ஆயிரம் கோடி சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் லஞ்சம் வாங்கியும், ஹவாலா மூலம் பணம் பரிமாற்றம் செய்தும் இவ்வளவு சொத்துக்களை சேர்த்து இருந்தார்.
இது தொடர்பாக அமலாக்க பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மதுகோடா வீடு மற்றும் அவருடைய நிறுவனங்களில் அதிரடி சோதனையும் நடத்தினார்கள்.
மதுகோடாவிடமும் நேரடியாக விசாரணை நடந்தது. இதில் அவர் ஊழல் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜார்கண்ட்டில் சட்டசபை தேர்தல் நடந்ததால் அவர் கைதாவது தள்ளி போனது.
மதுகோடா என்னை தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் வருமானவரி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று புகார் கூறினார். எனவே அவரை கைது செய்யாமல் இருந்தனர்.
இப்போது முதல் கட்ட தேர்தல் முடிந்து விட்டதுடன் 2-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிந்து விட்டதால் மதுகோடாவை அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று திடீரென கைது செய்தனர்.
கைபேசா என்ற இடத்தில் தங்கியிருந்த அவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இது பற்றி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூறும் போது, “மது கோடாவை விசாரணைக்கு வரும்படி 2-வது முறையாக வாரண்டு அனுப்பியும் வரவில்லை. எனவே அவரை கைது செய்தோம்” என்றனர்.


28 நவம்பர் 2009

போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் டி.எஸ்.பி. கைது

அறந்தாங்கி, நவ.28-
பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டாக சேது பணியாற்றி வருகிறார். இவரை தஞ்சாவூர் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அமைப்பாளர் மாதவன் மற்றும் பொது செயலாளர் ஏ.எச்.அமீர்ஜான் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி அன்று சந்தித்து பேசினார்கள்.
அப்போது பொன்ன மராவதியை சேர்ந்த ராமசாமி, நமணசமுத்திரத்தை சேர்ந்த லெனின், நற்சாந்துபட்டியை சேர்ந்த அஜீஸ், காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை அருள் சகோதரி ஜோஸ் ஆகிய 4 பேரும் போலி டாக்டர்கள் என்றும், இவர்கள் கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அத்துடன் அவர்கள் போலி டாக்டர்கள் என்பதற்கான ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கொடுத்தார்கள்.
இதை கேட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சேது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
உடனே 2 பேரும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது அலுவலகத்துக்கு சென்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததும் மாதவன் மற்றும் அமீர்ஜான் ஆகிய 2 பேரும் மாடியில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று போலீஸ் துணை சூப்பிரண்டு சேதுவிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்தனர். உடனே லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் மாடியில் உள்ள அலுவலகத்துக்கு விரைந்து சென்று ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு சேதுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அதிகாரி “சஸ்பெண்டு” விருதுநகர் கலெக்டர் அதிரடி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டியபட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் வேலு. இவரிடம் அதே ஊரை சேர்ந்த காளியம்மாள் என்ற பெண் பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பம் அளித்திருந்தார். அதற்கான சான்றிதழ் வழங்குவதற்கு காளியம்மாளிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலு லஞ்சம் பெற்று உள்ளார்.
இது குறித்து காளியம் மாள் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் வைத்யனிடம் நேரடியாக சென்று புகார் மனு அளித்தார். அதன் பேரில் கலெக்டர் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெற்றது உண்மையா என்பதை அறிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காளியம்மாளிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலு லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து வேலுவை சஸ்பெண்டு செய்து கலெக்டர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை கிராம நிர்வாக அதிகாரிகளை பீதி அடைய செய்துள்ளது.


27 நவம்பர் 2009

காஞ்சீபுரத்தில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கைது

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (27) இவர் காஞ்சீபுரம் நகர போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். நேற்று இரவு இவர் மூங்கில் மண்டபம் சந்திப்பில் பணியில் இருந்த போது அவ்வழியாக வந்த காஞ்சீபுரம் தேவி நகர் பகுதியை சேர்ந்த சவுரிராஜன் என்பவ ரின் மோட்டார் சைக்கிளை மடக்கி அவரிடம் விசா ரணை செய்தார்.
அப்போது அவர் வேலை பார்க்கும் அடையாள அட்டையை பறித்து வைத்து கொண்டு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடு இல்லை என்றால் உன்மீது பல வழக்குகளை போட்டு விடுவேன் என்று மிரட்டினார். அவர் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி சென்ற சவுரிராஜன் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. விஜயராகவனிடம் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நின்று கொண்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவர் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.


26 நவம்பர் 2009

லஞ்சம் வாங்கிய கல்குளம் சர்வேயர் கைது .


நாகர்கோவிலை அடுத்த அம்மாண்டிவிளையை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது தம்பி ரகுபதி. இவர்களுக்கு சொந்தமான 6 சென்ட், கல்குளம் தாலுகா கடியப்பட்டணம் பகுதியில் உள்ளது. இச்சொத்தினை பிரித்து உட்பிரிவு செய்ய பார்த்தசாரதியும், ரகுபதியும் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் சொத்தை பிரித்து உட்பிரிவு செய்யக்கோரி கல்குளம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இது பற்றி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி கல்குளம் தாலுகா சர்வேயர் மனோகரனுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சர்வேயர் மனோகரன் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பு அவர் நில உரிமையாளர்கள் பார்த்தசாரதி, ரகுபதி இருவரிடமும் இது தொடர்பான அறிக்கை கொடுக்க தனக்கு ரூ.1000 பணம் தரும்படி கேட்டார்.
சர்வேயர் மனோகரன் லஞ்சம் கேட்டது பற்றி பார்த்தசாரதி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் மனோகரனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி பார்த்தசாரதி பணத்தை தன்வீட்டில் வந்து வாங்கி கொள்ளும்படி மனோகரனிடம் கூறினார். ஆனால் அவர் இன்று காலை பார்த்தசாரதிக்கு டெலிபோன் செய்து பணத்தை தனது வீட்டிற்கு வந்து தரும்படி தெரிவித்தார். இதனை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்து விட்டு பார்த்தசாரதி லஞ்சப்பணத்துடன் இன்று காலை 9 மணிக்கு சர்வேயர் மனோகரன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஹெக்டர் தர்மராஜ், கண்ணன், பீட்டர்பால், ஏட்டு குமரேசன் ஆகியோர் மறைந்து இருந்தனர். அவர்கள் மனோகரன் லஞ்சப்பணத்தை வாங்கும் போது அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டிலும் சோதனை நடத்தினர். காலை 9மணி முதல் பகல் 11 மணிவரை இச்சோதனை நீடித்தது. இதில் சர்வேயர் மனோகரன் இதுபோல பலரிடம் லஞ்சம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை நாகர்கோவில் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது.
லஞ்சம் வாங்கிய சர்வேயரை அவரது வீட்டுக்கு சென்றே போலீசார் கைது செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


25 நவம்பர் 2009

விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய 50ஏஜெண்டுகள்; வீடு, நிலம் வாங்கி குவித்தனர்

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்ச பணத்தை வாங்கி கொடுக்கும் 50 ஏஜெண்டுகள், சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரும் சரக்குகளை லஞ்சம் வாங்கிக் கொண்டு சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதித்து வருவதாக சி.பி.ஐ.க்கு ஏராளமான புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் 50 சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்த சுங்க இலாகா அதிகாரிகள், பாஸ்கர், அறிவு டைநம்பி, நாகேஸ்வரி, பழனியப்பன், ஜக்மோகன், ஆசைத்தம்பி, மஞ்சுளா, பெஞ்சமின், கண்ணன் ஆகிய 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கும் ஏஜெண்ட் குமார் சிக்கியிருந்தார்.
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.17 லட்சம் ரொக்கப் பணம், ரூ.25 லட்சம் நகைகளும் பறிமுதல் செய்தனர். பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் லாக்கரில் பணம், நகைகளை வைத்திருக்கவில்லை. 2 லாக்கர் மட்டும் திறந்து சோத னையிடப்பட்டது. அதில் சில சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது.
இது குறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சீனாவில் இருந்து குழந்தைகளின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மட்டமான பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பொம்மைகள், சிங்கப்பூர், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் அவற்றிற்குள் போதை பொருட்கள் கூட இருக்கலாம். கூரியர் பார்சல்கள், என பெரும்பாலான பார்சல்களை சோதனை செய்யாமல் இறக்குமதி செய்வது என்பது கடத்தல் குற்றத்திற்கு சமமானது.
அத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை தாராளமாக லஞ்ச, பணத்தை பெற்றுக்கொண்டு மேற்கண்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை பகிர்ந்து கொடுப்ப தற்கென்றே சென்னையில் மட்டும் குமார் போல 50 ரகசிய ஏஜெண்டுகள் செயல் படுகின்றார்கள். இவர்களின் வேலை வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களில் ரகசிய எண்ணை குறித்து விடுவார்கள். அது இருக்கும் சரக்கு பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யாமல் அனுப்பி விடுவர்.
அவர்களுக்குரிய லஞ்ச பணத்தை வீடு களுக்கு சென்றோ, அல்லது அவர் களது ரகசிய வங்கி கணக்கிலோ ஏஜெண்டுகள் கட்டி விடுகின்றார்கள். அந்த பதவிகளுக்கு தகுந்தாற்போல் தினந்தோறும் லஞ்ச பணம் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் தினந்தோறும் ரூ.10 லட்சம் வரை கைமாறியுள்ளது.
பெண் அதிகாரிகளை கவருவதற்கு நவீன மாடல்களில் வடிவமைக்கப்பட்ட தங்க நகைகளை ஏஜெண்டுகள் கொடுத்துள்ளனர். அதிகாரிகளின் செல்போன் சிம்கார்டை ஆய்வு செய்ததில் ஏராளமான ஏஜெண்டுகளின் செல்போன் நம்பர்களும், பெயர்களும் கிடைத்துள்ளது. அவர்களை கண்காணித்து வருகிறோம்.
ஏஜெண்டுகள் பெரும்பாலும் விமான நிலையத்திற்கு வராமலேயே அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஆனால் குமார் மட்டும் கொஞ்சம் அதிகமாக நேரடியாக வந்து விமான நிலையத்திலேயே கந்து வட்டிகாரர் போல வசூலில் ஈடுபட்டதால் எளிதில் சிக்கி விட்டார். தப்பி ஓடிய ராஜ்குமார் என்வரை தேடி வருகிறோம். அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.6 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து சுங்க இலாகாவில் பணிபுரியும் வேறு சில அதிகாரிகளையும் கண்காணித்து வருகிறோம். ஏஜெண்டுகளிடம் பேசுகிறார்களா? என்பதையும், ஆய்வு செய்து வருகிறோம். வருங்காலங்களில் விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுக்கு உதவும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
சுங்க இலாகா கமிஷனர் பெரியசாமி கூறியதாவது:-
ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சுங்க இலாகாவிலேயே தனி அமைப்பு உள்ளது. அதன் மூலம் அவ்வப் போது லஞ்ச புகாருக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீதுசஸ்பெண்ட், துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்சம் பெறும் முறைகேடான அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் கேட்கும் சுங்க இலாகா அதிகாரிகள் பற்றி புகார் செய்ய விரும்புவோர் போலீஸ் சூப்பிரண்டு, சி.பி.ஐ., ஏ.சி.பி., மூன்றாவது தளம், சாஸ்திரி பவன், ஹாட்டவ்ஸ் சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கும், splacchne.cbi.gov.in என்ற இணைய தள முகவரிக்கும், 044-28255899 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 044-28213828 என்ற பேக்ஸ் எண்ணிலும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கைதான சுங்க இலாகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 அதிகாரிகளும் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.


24 நவம்பர் 2009

ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் 10 அதிகாரிகள் முறைகேடு கண்டுபிடிப்பு

சென்னை விமான நிலைய சுங்கத்துரை அலுவலகத்தில் நேற்று இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.9 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது. 10 அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து இந்த சோதனை நடப்பதால, விமான நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது.


சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் திடீரென வந்தனர். கார்க்கோ பகுதிக்கு வந்த அவர்கள், வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் பிரிவு, வெளிநாடுகளில் இருந்து பார்சல் வரும் பகுதி மற்றும் கார்கோவில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

முதலில், இப்பகுதியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், கடைநிலை சிப்பந்திகள் உட்பட யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களது செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்Õ செய்யும்படி கூறினர். லேன்ட் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. பின்னர், கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து என்னென்ன பார்சல்கள் வந்துள்ளன, அதற்கு போடப்பட்ட வரி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கார்கோ பகுதியில், மிக முக்கியமான 12 நிறுவனங்கள், பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் ஏதாவது வழங்கப்பட்டதா, அன்பளிப்பு மற்றும் லஞ்சம் பெறப்பட்டுள்ளதா என்பது பற்றியும் தீவிரமாக ஆய்வு நடத்தினர். வழக்கமாக இதுபோன்ற சிபிஐ சோதனை இங்கு நடப்பது வழக்கம். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சோதனை நடத்தி விட்டு சென்று விடுவார்கள். ஆனால் இந்த முறை, நேற்று இரவு தொடங்கிய இன்றும் தொடர்ந்து நடக்கிறது.


12 மணி நேரத்துக்கும் மேல் நீடிப்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இன்று காலை வரை ரொக்கப்பணம் ரூ.9 லட்சம் சிக்கியுள்ளது. 10 சுங்கத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ‘வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை வரி விதிப்பது வழக்கம்.

ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் குறைத்து வரி போட்டு விட்டு ஒரு கணிசமான தொகையை அன்பளிப்பாக பெற்றுக்கொண்ட பணம்தான் ரூ.9 லட்சம் என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணையும், சோதனையும் நடந்து வருகிறது. ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

23 நவம்பர் 2009

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்


குளச்சல்: லஞ்சம் வாங்கும் குமரி மாவட்ட அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்திடவும், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களின் சொத்து கணக்குகளை வெளியிடவும், கணக்கில் வராத சொத்துக்களை பறிமுதல் செய்திட கேட்பது, வெளிநாட்டு கப்பல்கள் தங்குதடையின்றி மீன்பிடிக்கலாம் என்ற சட்டத்தை அமல்படுத்த கூடாது என மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.

21 நவம்பர் 2009

கிருஷ்ணகிரி மாமூல் போலீசார் !உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படையினரும், மாமூல் வசூலுக்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு, அமோகமாக அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனால், கடத்தல்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி, அங்குள்ள நவீன அரிசி ஆலைகளில், பாலிஷ் செய்யப்பட்டு, மீண்டும் அதிக விலைக்கு தமிழகத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இதனால், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், அதிகளவில் லாபம் ஈட்டி வந்தனர். பெரும்பாலான அரிசி கடத்தல் காரர்கள், முக்கிய அரசியல் புள்ளிகளின் தயவோடு செயல்பட்டு வந்தனர்.அரிசி கடத்தல் அதிகரித்து வந்த வேளையில், உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து செயலாற்ற, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு சுற்றுக்காவல் படை அமைக்கப்பட்டது.இதில், ஒரு எஸ்.ஐ., மற்றும் நான்கு ஏட்டுகள் பணி அமர்த்தப்பட்டனர்.

சிறப்பு சுற்றுக்காவல் படையினர், மாநில எல்லை பகுதி, செக் -போஸ்ட்கள் மட்டுமன்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சுற்றி வந்து, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.ஓராண்டுக்கும் மேலாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கர்நாடக மாநிலத்துக்கு செல்லும், ஒரு கடத்தல் லாரியை கூட, உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படை போலீசாரும் பிடிக்கவில்லை.இதற்காக, அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவனித்து விடுகின்றனர். தங்களை ஒரு செக் - போஸ்ட்டில் அமரவைத்து விட்டு, மற்ற செக் - போஸ்ட் வழியாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அரிசி கடத்தல் லாரிகளை கர்நாடகாவுக்கு அனுப்பி விடுவதாக, சிறப்பு சுற்றுக்காவல் படையினர் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர்.

சிறப்பு சுற்றுக்காவல் படை போலீசார் அரிசி கடத்தலை தடுக்காமல், அந்தந்த பகுதியில் மணல் மற்றும் கற்களை ஏற்றி வரும் டிராக்டர்களை நிறுத்தி பணம் வசூல் செய்வதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளிடம் குற்றம் சாட்டியுள்ளனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படையினரும், தற்போது, மாமூல் வசூலுக்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகாவுக்கு, அமோகமாக அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனால், கடத்தல்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சைப்ரஸ், பிஜூ தீவுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி: ஒருவர் கைது


சைப்ரஸ், பிஜூ தீவுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் மணி கண்டன். இவருக்கு சைப்ரஸ் அல்லது பிஜூ தீவில் வேலை வாங்கித்தருவதாக, கரூர், ஈசா நத்தம் பகுதியைச் சேர்ந்த மருதப்ப கவுண்டர் மகன் சரவணவேலு கூறியுள்ளார். இதற்காக, 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை சரவணவேலுவிடம் மணிகண்டன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சரவணவேலு, வேலை வாங்கித் தராததோடு பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை. மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரூரை சேர்ந்த சரவண வேலுவை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டது


சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 54 நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


நீதிபதி எலிப் தர்மாராவ்: மனைவி பத்மா புஷ்பாஞ்சலிக்கு திருமணத்தின் போது, ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டம், அனந்தவரம் கிராமத்தில் சீதனமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம். மனைவி பெயரில் 10 சவரன் நகை. கார் லோன் பாக்கி மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 331 ரூபாய். மாதம் 8,850 ரூபாய் வீதம் செலுத்தப்படுகிறது.

நீதிபதி டி.முருகேசன்: இரண்டரை சவரன் நகை, மனைவி பெயரில் 65 சவரன் நகை. மனைவி பெயரில் ஒன்பது லட்சத்து 95 ஆயிரத்து 82 ரூபாய் மதிப்பிலான லான்சர் டொயட்டா இன்னோவா கார் (பழைய வாகனத்தை விற்று, நான்கு லட்சம் ரூபாய் கடன் மூலம் வாங்கப்பட்டது) மனைவி பெயரில் விவசாயக் கடன் பாக்கி 2.68 லட்சம் ரூபாய். கார் லோன் பாக்கி 2.54 லட்சம் ரூபாய்.


நீதிபதி ரவிராஜ பாண்டியன்: கும்பகோணம் அருகே இரு கிராமங்களில் உள்ள நிலங்களை விற்பனை செய்தது உட்பட 77 லட்சத்து 16 ஆயிரத்து 840 ரூபாய் இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு. மோதிரம், சங்கிலி மற்றும் ருத்திராட்ச மாலை சேர்த்து 80 கிராம் நகை. மனைவி பெயரில் 300 கிராம் நகை. மகள் பெயரில் 300 கிராம் நகை. கனரா வங்கியில் ஒன்பது லட்சத்து 51 ஆயிரத்து 66 ரூபாய் சேமிப்பு.

நீதிபதி சொக்கலிங்கம்: சிவகங்கை மாவட்டத்தில் 12.4 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு. இந்தியன் வங்கி ஐகோர்ட் கிளையில் 25 ஆயிரம் ரூபாய் சேமிப்பு. 100 சவரன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி. மனைவி பெயரில் 175 சவரன் தங்க நகை, 20 கிலோ வெள்ளி. அரசிடம் இருந்து வீட்டுவசதிக் கடன் 7.5 லட்சம் ரூபாய். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

நீதிபதி நாகப்பன்: மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 754 ரூபாய் சேமிப்பு. வைப்பீடு ஒரு கோடியே 17 லட்சத்து 14 ஆயிரத்து 763 ரூபாய். 10 சவரன் நகை. மனைவி நடத்தி வரும் வர்த்தகத்தில் முதலீடு, டிபாசிட் சேர்த்து இரண்டு கோடியே 88 லட்சத்து 84 ஆயிரத்து 16 ரூபாய். 100 சவரன் நகை; ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் வைரம்.


நீதிபதி பானுமதி: கணவர் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலம் (மூதாதையர் சொத்து). 30 சவரன் நகை. கணவர் பெயரில் இரு சக்கர வாகனம். கடன் 2.5 லட்சம் ரூபாய்.நீதிபதி மோகன்ராம்: தாய்க்கு சொந்தமான நகை 400 கிராம், திருமணத்தின் போது மனைவிக்கு 1,000 கிராம் தங்க, வைர நகைகள். 10 கிலோ வெள்ளி. 7.54 லட்சம் மதிப்பில் ஹோண்டா சிட்டி கார். மகள் பெயரில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஹோண்டா மோட்டார் சைக்கிள்.

நீதிபதி ஜோதிமணி: சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வீடு, விவசாய நிலங்கள். திருமணத்தின் போது, மனைவிக்கு சீதனமாக 100 சவரன் நகை. ரூ.5.92 லட்சம் மதிப்பில் மாருதி கார்.


நீதிபதி ரகுபதி: தேனி மாவட்டத்தில் 51.76 ஏக்கர் விவசாய நிலம். திண்டுக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முறையே 18 சென்ட், 19.3 சென்ட் பரப்பளவில் பண்ணை நிலங்கள். இந்தியன் வங்கியில் 8.62 லட்சம் ரூபாய் சேமிப்பு. மனைவி, மகள் பெயரில் 195 சவரன் தங்க நகைகள்; 10 கிலோ வெள்ளி. மகள் பெயரில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். ஹோண்டா சிட்டி கார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சகோதரர்களிடம் 28.5 லட்சம் ரூபாய் கடன்.


நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்: திருமணத்தின் போது பெறப்பட்ட, பின் வாங்கிய நகைகள் 200 சவரன்; 15 காரட் வைரம்; ஏழு கிலோ வெள்ளி. சிட்டி யூனியன் வங்கியில் 11.38 லட்சம் ரூபாய் கடன்.


நீதிபதி பாட்ஷா: இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கூட்டுறவு வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 2.98 லட்சம் ரூபாய் சேமிப்பு. 81.5 சவரன் தங்க நகை. ஒரு கிலோ வெள்ளி. 7.17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹுண் டாய் அக்ஸன்ட் கார் (மாதத் தவணையில் வாங்கியது).

நீதிபதி ஜனார்த்தன ராஜா: ராஜபாளையத்தில் குடும்பச் சொத்து, விவசாய நிலம் 10 ஏக்கர். கடன் பாக்கி 8.9 லட்சம் ரூபாய். மந்தைவெளி கனரா வங்கி, ஐகோர்ட் இந்தியன் வங்கி கிளையில் 41.75 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு. திருமணத்தின் போது சீதனமாக 75 சவரன் தங்க நகைகள்.


நீதிபதி பால்வசந்தகுமார்: கன்னியாகுமரி, சென்னையில் குடியிருப்பு வீடுகள். கன்னியாகுமரி மாவட்டம் வியனூர் கிராமத்தில் மனைவி பெயரில் விவசாய நிலங்கள். மனைவி, மகளுடன் சேர்த்து மொத்த வங்கி சேமிப்பு மற்றும் கையிருப்பு பணம் 7.45 லட்சம் ரூபாய். 80 சவரன் தங்க நகைகள். 4.96 லட்சம் ரூபாய் மதிப்பில் மாருதி ஸ்விப்ட் கார். 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் (மாதத் தவணை ரூ.11,600)


நீதிபதி சுகுணா: வங்கிகளில் சேமிப்பு 24.47 லட்சம் ரூபாய். 40 சவரன் தங்க நகை; 900 கிராம் வெள்ளி. 4.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹுண்டாய் கார்.


நீதிபதி ஜெய்சந்திரன்: சென்னை பெசன்ட் நகர், மடிப்பாக்கத்தில் வீடுகள், கரூர் மாவட்டத்தில் 55.27 ஏக்கர் விவசாய நிலம். ஐகோர்ட் இந்தியன் வங்கிக் கிளையில், 18 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு. வைர மோதிரம். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் 1.25 லட்சம் ரூபாய் கடன், 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். 7.5 லட்சம் ரூபாய் அரசுக் கடன். மகன் விஷால் அபிந்த் கல்விக் கடன் 11.21 லட்சம் ரூபாய். கொடைக்கானலில் மனைவி பெயரில் 31.5 ஏக்கர் நிலம். 600 கிராம் தங்க நகைகள், நான்கு கிலோ வெள்ளி. ஆறு காரட் வைர நகைகள். இண்டிகா கார்.நீதிபதி ராஜேஸ்வரன்: காஞ்சிபுரத்தில் வீடு. 15 சவரன் நகை, மனைவி பெயரில் 60 சவரன் நகை. இந்தியன் வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் (ரூ.2.87 லட்சம் செலுத்தப்பட்டது). மனைவி பெயரில் ஒரு லட்சம் ரூபாய் கடன்.

நீதிபதி தனபாலன்: வீடு, இரண்டு ஏக்கர் விவசாய நிலம். மனைவி, குழந்தைகள் பெயரில் 11.75 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 21 சவரன் நகை, மனைவி, மகன் பெயரில் 56 சவரன் நகை. மகனுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வீட்டுக் கடன் பாக்கி 13.77 லட்சம் ரூபாய்.


நீதிபதி சுதாகர்: வேலூர் மாவட்டத்தில் வீடுகள், 2.87 எக்டேர் விவசாய நிலம்.


நீதிபதி தமிழ்வாணன்: வீடு, விவசாய நிலங்கள். 15 சவரன் தங்க நகைகள், மனைவி பெயரில் 57 சவரன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளி. மனைவி பெயரில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் போர்டு கார். 15.44 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன்.

நீதிபதி ஜெயபால்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு, மனைவி பெயரில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாய நிலங்கள், மூன்று சவரன் நகை, அம்பாசிடர் டீசல் கார். மனைவி பெயரில் ஐந்து சவரன் நகை. 20 லட்சம் ரூபாய் வங்கிக் கடன்.

நீதிபதி வெங்கட்ராமன்: சென்னை, செங்கல்பட்டில் வீடு, மனைவி பெயரில் தஞ்சாவூரில் 3.5 ஏக்கர் விவசாய நிலம். 10 சவரன் நகை, மனைவி பெயரில் 90 சவரன் நகை, ஐந்து கிலோ வெள்ளி. வீட்டுக்கடன் உண்டு.


நீதிபதி சந்துரு: சென்னை மயிலாப்பூரில்12.5 லட்சம் மதிப்பில் இரண்டு படுக்கையறை வீடு, மனைவி பெயரில் அபிராமபுரத்தில் 33 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று படுக்கையறை வீடு. விவசாய நிலங்கள் இல்லை. கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கிகளில் 38.38 லட்சம் ரூபாய் சேமிப்பு. சகோதரர் மற்றும் மைத்துனரிடம் வாங்கிய கடன் ரூ.31.20 லட்சம். மனைவிக்கு ஆயிரம் கிராம் தங்கநகைகள், 12 கிலோ வெள்ளி.

நீதிபதி ராமசுப்ரமணியன்: சேமிப்பு, இன்சூரன்ஸ், மனைவி பெயரில் மாருதி கார் மற்றும் 40 சவரன் நகை, வைரக் கம்மல், வைர மூக்குத்தி, மகளுக்கு 30 சவரன் நகை.நீதிபதி மணிக்குமார்: மனைவிக்கு 115 சவரன் நகை, 4.15 கிலோ வெள்ளி. ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள பழைய மோட்டார் சைக்கிள்.

நீதிபதி ஏ.செல்வம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு வீடுகள், 2.36 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு, மனைவி பெயரில் ஐந்து சவரன் நகை. 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன்.


நீதிபதி சிவகுமார்: சிவகங்கை மாவட்டத்தில் வீடு, 11 ஏக்கர் விவசாய நிலம், 19 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 30 சவரன் நகை, மனைவி பெயரில் 50 சவரன் நகை. டொயோட்டா குவாலிஸ் கார்.


நீதிபதி ராஜசூர்யா: மனைவி பெயரில் புதுச்சேரியில் இருவீடுகள்; ஏழு லட்சம் வங்கி சேமிப்பு. மனைவிக்கு 50 சவரன் நகை. சான்ட்ரோ கார், பஜாஜ் மோட்டார் சைக்கிள்.


நீதிபதி சுதந்திரம்: சென்னையில் இரு வீடுகள். ரூ.2.32 லட்சம் வங்கி சேமிப்பு. மனைவிக்கு 300 சவரன் நகைகள், 12 கிலோ வெள்ளி, டாடா இண்டிகா கார்.


நீதிபதி நாகமுத்து: தஞ்சாவூரில் வீடு, குடும்ப விவசாய நிலம் 1.98 எக்டேர். 4.61 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 25 சவரன் நகைகள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 175 சவரன் நகைகள்; ஐந்து கிலோ வெள்ளி. மாருதி கார், ஹுண்டாய் கார், மனைவிக்கு ஹுண்டாய் கார்.நீதிபதி சசிதரன்: வங்கி சேமிப்பு 1.57 லட்சம் ரூபாய். 32 கிராம் நகைகள், மனைவிக்கு 1,200 கிராம் நகைகள், 40 காரட் வைரம். டாடா இண்டிகா கார், பஜாஜ் ஸ்கூட்டர்.

நீதிபதி பெரியகருப்பையா:
சென்னை, மதுரையில் வீடுகள்; தேனி மாவட்டத்தில் விவசாய நிலம் (குடும்பச் சொத்து). 6.80 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 20 சவரன் நகைகள், மனைவிக்கு 100 சவரன், மாருதி ஆம்னி வேன், பஜாஜ் ஸ்கூட்டர். மகனுக்கு 15 லட்சம் ரூபாய் கல்விக் கடன்.


நீதிபதி ராமநாதன்: 10 சவரன் நகை, மனைவி பெயரில் 100 சவரன் நகை, 30 காரட் வைரம், 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில் டாடா இண்டிகா கார். கொடைக்கானலில் வீடு கட்ட 12 லட்சம் ரூபாய் வங்கிக் கடன்.


நீதிபதி ராஜஇளங்கோ: வங்கி சேமிப்பு 8.4 லட்சம் ரூபாய். வீடு, விவசாய நிலங்கள் உள்ளன. மனைவிக்கு 1,200 கிராம் தங்க நகைகள், 10.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா கார். ரூ.2.5 லட்சம் வங்கிக் கடன், ரூ.35 லட்சம் வீட்டுக் கடன்.


நீதிபதி மாலா: மதுரையில் காலி மனைகள். விவசாய நிலங்கள் இல்லை. 75 சவரன் நகைகள், ஏழு கிலோ வெள்ளி. கடன் பாக்கி 11 ஆயிரத்து 700 ரூபாய்.

நீதிபதி அருணா ஜெகதீசன்: சென்னையில் இரு வீடுகள், விவசாய நிலங்கள் இல்லை. 2.84 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 75 சவரன் நகைகள், ஐந்து கிலோ வெள்ளி. கணவருடன் சேர்ந்து வீட்டு மனைக் கடன் 25 லட்சம் ரூபாய். இவ்வாறு இணையதளத்தில் விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

வீடு, வாகனம் வாங்கிய கடனும் உண்டு: தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள நிலம் மற்றும் இடங்களை, நீதிபதிகள் பட்டியலிட்டுள்ளனர். அதற்கான இன்றைய சந்தை மதிப்பு தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் கேரளாவுக்கு அடுத்ததாக தமிழக நீதிபதிகள் சொத்து விவரப்பட்டியல் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.பல நீதிபதிகள் சொத்து வாங்குவதற்கு, ஆறாவது சம்பளக் கமிஷன் உயர்வும், அதன் நிலுவைத் தொகையும் உதவியாக இருந்துள்ளது.நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, அக்பர் அலி, சித்ரா வெங்கட்ராமன், சொக்கலிங்கம், சிரில் தாமரைச் செல்வம், தனபாலன், தர்மாராவ் ஆகியோருக்கு வீடு, வாகனம் வாங்கிய வகையில் கடன் இருக்கிறது.தலைமை நீதிபதி ஹேமந்த் லக்ஷ்மண் கோகலே பெயரில் வீடு, விளைநிலம், வைப்பு நிதி, இன்சூரன்ஸ், நகை, வாகனம் எதுவுமே இல்லை. கடனும் இல்லை. பரம்பரையாக வந்த நிறுவனப் பங்குகளும், 38 லட்சம் ரூபாய் வங்கியிருப்பும் உள்ளது.நீதிபதி தர்மாராவ், பெரும்பாலான சொத்துக்களை ஆந்திராவில் தான் வைத்துள்ளார்.


நீதிபதிகள் அக்பர் அலி சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் வீடுகள் வைத்துள்ளார்.தலைமை நீதிபதி கோகலே, தன் மனைவி பெயரிலான சொத்துக்களையும், நீதிபதி அருணா ஜெகதீசன், தன் கணவர் பெயரில் உள்ள சொத்துக்களையும் தனியாக பட்டியலிட்டுக் கொடுத்துள்ளனர்.நீதிபதி பானுமதி, கைக்கடனாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்

இந்த சொத்து விவரங்களை,www.hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

உத்தமபாளையம் கருவூலத்தில் ரெய்டு


உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஊழியர்கள், லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.நேற்று மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் கலசலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் சோதனை நடத்தினர்.

தினகர்சாமி டி.எஸ்.பி., கூறுகையில், "பணியாளர்கள் முறைகேடு செய்துள்ளனரா, வழங்கப்பட வேண்டிய சம்பள பில்கள் லஞ்சத்தை எதிர்பார்த்து நிலுவையில் வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு நடந்தது. பென்ஷன்தாரருக்கு வழங்க வேண்டிய பில் நிலுவையில் இருந்தது. கணக்கிற்கு மேல் 450 ரூபாய் கூடுதலாக இருந்தது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

திருச்சி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு


திருச்சி, பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி , சார் பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், திருச்சியில் மூவரைப் பிடித்து போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.திருச்சி கோட்டை பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீஸ் குழுவினர் அதிரடியாக நேற்று மாலை அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. போலீசாரைக் கண்டதும் பணத்தை ஜன்னல் வழியே தூக்கி எறிந்துள்ளனர்.இதில், பத்திர எழுத்தர் தினகரன், அலுவலக உதவியாளர் குருமூர்த்தி, துப்புரவு பணியாளர் சண்முகநாதன் ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்தனர். சரியான தகவல் கூறாததால், அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


இதே போல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சார் பதிவாளர் அலுவலகம் எண் இரண்டில், நேற்று மாலை 4.25 மணிக்கு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ரெங்கராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தனி தாசில்தார் மோகன், உதவியாளர் ஞானசூரியன், ஏட்டுகள் கந்தப்பன், செல்வராஜ், செல்வம், ராஜமாணிக்கம், ராமச்சந்திரன் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இரவு 7 மணிக்கு மேலும் தொடர்ந்து சோதனையில் பதிவுறு எழுத்தர் குலோத்துங்கனிடம் 2,000 ரூபாய், அலுவலக உதவியாளர் உலகநாதனிடம் 560 ரூபாய், எழுத்தர் நாடிமுத்துவிடம் 800 ரூபாய், ஓய்வு பெற்ற எழுத்தர் சவுந்தரபாண்டியனிடம் 2, 400 ரூபாய், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்ரஹீமிடம் பத்தாயிரத்து 430 என 16 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இந்த தொகைகளுக்கு அவர்கள் உரிய விபரம் கூறினால் பிரச்னைகளில் இருந்து தப்பலாம். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், பல பதிவு ஆவணங்களை எடுத்து விசாரித்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வரை அஞ்சனகுமார் என்பவர் சார் பதிவாளராக பணி செய்தார். இவர் மாற்றம் செய்யப்பட்டார். நேற்று கந்தசாமி என்பவர் புதிய சார் பதிவாளராக பொறுப்பேற்றார்.இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., மாணிக்கவாசகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரைவேல் மற்றும் குழுவினர் இந்த அலுவலகத்துக்குள் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக கதவுகளை மூடிவிட்டு ஒவ்வொரு அலுவலர்களிடமும் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் கிடைத்த பணம் குறித்த விவரம் தெரியவில்லை.19 நவம்பர் 2009

மது கோடாவின் சொத்து ஒரு கோடி ரூபாய் தானாம் !
பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மதுகோடா, தனது தேர்தல் மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளபடி அவரது சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று இப்போது தெரியவந்துள்ளது.இரும்புச் சுரங்கத்தில் தினக்கூலியாக வாழ்வை ஆரம்பித்த மதுகோடா, படிப்படியாக வளர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரானார்.2005
ல் ஜகன்னாத்பூர் தொகுதியிலும், 2009ல் சிங்பும் தொகுதியிலும் போட்டியிட்டவர். இப்போது அவர் சிங்பும் தொகுதியின் எம்.பி.,இரு தேர்தல்களிலும் மதுகோடா மனு தாக்கல் செய்துள்ளார். அவற்றில் தனது சொத்து மதிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை பற்றிய தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன.வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும் கையிருப்பு என்று 2005ல் குறிப்பிட்டுள்ளார்.2009
ல் அவரது கையிருப்பு 13.6 லட்ச ரூபாய். 2005ல் அலகாபாத் வங்கியில் மட்டும் பங்கு வைத்திருந்தார். 2009ல் டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பாரத ஸ்டேட் வங்கியில் பங்கு வைத்துள்ளார்.ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் மதிப்புடைய நகைகள் 2005ல்; 2009ல் அவற்றின் மதிப்பு 37 லட்ச ரூபாய். ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய விவசாய நிலம் 2005ல்; நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் இப்போதுஇன்றைய நிலையில் அவரது அசையாச் சொத்துக்களின் மதிப்பு நான்கு லட்ச ரூபாய். அசையும் சொத்துக்களின் மதிப்பு 94 லட்ச ரூபாய்.சொத்துக்களில் பெரும்பாலானவை அவர் பெயரில் தான் இருக்கின்றன. நகைகள், நிலம் போன்றவை அவர் மனைவி கீதா பெயரில் உள்ளன.இப்போது, 4,000 கோடி ரூபாய் ஊழல் விஷயமாக மதுகோடாவிடம் அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்றுமதி ஊக்கத் தொகை திட்டத்தில் 3.6 கோடி ரூபாய் மோசடி திருப்பூர் தொழிலதிபர்கள் உட்பட நால்வர் கைது .


திருப்பூர் : போலி ஆவணம் தாக்கல் செய்து, ஏற்றுமதி ஊக்கத் தொகை (டிராபேக்) திட்டத்தில் 3.6 கோடி ரூபாய் மோசடி செய்த, திருப்பூர் தொழிலதிபர்கள் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ.,கைது செய்தது. திருப்பூர் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் ராம்சேனாதிபதி(35). கோவைப்புதூரைச் சேர்ந்த நண்பர் குருபகதூர்(39) என்பவருடன் சேர்ந்து திருப்பூரில் வெல்நோன் எக்ஸ்போர்ட் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை 1991 முதல் நடத்துகிறார்.

கடந்த 2002 - 2003ம் ஆண்டில் இந்நிறுவனம் தயாரித்த ஆடைகள் அதிகளவில் ரஷ்யா, பனாமா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், இந்நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் ஊக்கத்தொகை பெற்றது. இதில், சந்தேகம் ஏற்பட்டதால் மத்திய சுங்கத்துறை சார்பில், சி.பி.ஐ.,ல் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை சி.பி.ஐ.,சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டதில், போலி ஆவணம் தயாரித்து, 3.6 கோடி ரூபாய் டிராபேக் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இம்மோசடி தொடர்பாக, எக்ஸ்போர்ட் கம்பெனி நிர்வாகிகள் ராம்சேனாதிபதி, குருபகதூர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த திருப்பூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி(32), சென்னை,கொளத்தூரைச் சேர்ந்த குருநாதன்(50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று, கோவை சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரையும் வரும் டிச.,2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

18 நவம்பர் 2009

ரூ 500 லஞ்சம் : செக்கானூரணி சார்பதிவாளர் எழுத்தர் கிரிதரன் கைது


பத்திர நகல் வழங்க, லஞ்சம் வாங்கிய மதுரை மாவட்டம் செக்கானூரணி சார்பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் கிரிதரன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே, நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களது பெயரில், மூன்று இடங்களில் நிலங்கள் உள்ளன.

இவர்களது மகன்கள் பாண்டி(35), மகேஷ் பாண்டி. இருவரும் பெற்றோர் பெயரில் உள்ள நிலங்களை, பாகப்பிரிவினை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலங்களுக்கான ஒரிஜினல் பத்திரங்கள், பாண்டியம்மாளிடம் உள்ளது. நிலங்களின் விவரம் தெரிந்து கொள்ள விரும்பிய பாண்டி, நகல் பத்திரங்கள் வழங்குமாறு, நவ.11ல் செக்கானூரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் கேட்டார்.

தலைமை எழுத்தர் கிரிதரன், மூன்று நிலங்களின் பத்திர நகல்களுக்கு கட்டணம் 200 ரூபாய்; லஞ்சமாக 700 ரூபாய் சேர்த்து, 900 ரூபாய் கொடுத்தால் தான், நகல்களை தரமுடியும் என்றார். அலுவலகத்திற்கு, 16ம் தேதி சென்ற பாண்டி, நகல் கட்டணம் 200 ரூபாயும், லஞ்சம் 200 ரூபாயும் தருவதாக கூறினார். அதற்கு கிரிதரன் மறுத்து விட்டார்.

பாண்டி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய 700 ரூபாயும், பவுடர் தடவாத 200 ரூபாயும் பாண்டியிடம் கொடுத்தனுப்பினர். பணத்தை பெற்றுக்கொண்ட கிரிதரன், லஞ்சமாக 500 ரூபாய் போதும் என்று கூறி, 200 ரூபாயை திருப்பி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிரிதரனை கைது செய்தனர்.

சுனா‌மி ‌நி‌தி‌யி‌ல் மோசடி: தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை ‌மீது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு


சுனா‌மி ‌நி‌தி‌யி‌ல் தெ‌ன்ன‌ி‌ந்‌திய ‌‌திரு‌ச்சபை மோசடி செ‌ய்து‌ள்ளதா‌ல் தா‌ங்க‌ள் அ‌ளி‌த்த சுனா‌மி ‌நி‌தியை வ‌ட்டி‌யுட‌ன் ‌திரு‌ப்‌பி‌த் தர உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி ‌நியூயா‌ர்‌க்கை சே‌ர்‌ந்த தொ‌ண்டு ‌நிறுவன‌ம் ஒ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

நியூயா‌ர்‌க்கை சே‌ர்‌ந்த தொ‌ண்டு ‌‌நிறுவன‌ம் ஒ‌ன்‌றி‌ன் அ‌திகா‌ரி ராப‌ர்‌ட் ராடெ‌க்‌ஸ் எ‌ன்பவ‌ர் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், இ‌ந்‌தியா‌வி‌ல் சுனா‌மி பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டபோது சுனா‌மியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌ம‌க்களு‌க்கு உதவுவத‌ற்காக எ‌ங்களுடைய அமை‌ப்பு ‌நி‌தி ‌‌திர‌ட்டியது.

18 கோடியே 27 ல‌ட்ச ரூபா‌ய் ‌நி‌தியை சுனா‌மியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கு உதவுவத‌ற்காக செ‌ன்னை ராய‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை‌க்கு 2005ஆ‌ம் ஆ‌ண்டு வழ‌ங்‌கினோ‌ம். ஆனா‌ல் ‌சி.எ‌ஸ்.ஐ. அமை‌ப்பு இதனை முறையாக பய‌ன்படு‌த்த‌வி‌ல்லை.

இ‌தி‌ல் முறைகேடு நட‌ந்து‌ள்ளதாக எ‌ங்களு‌க்கு தகவ‌ல் வ‌ந்து‌ள்ளது. மேலு‌ம் ‌நி‌தி செல‌வி‌ட்டத‌‌ற்கு கண‌க்கு கே‌ட்டபோது அவ‌ர்க‌ள் கண‌க்கு கொடு‌க்க‌வி‌ல்லை. இது கு‌றி‌த்து செ‌ன்னை ‌சி.‌பி.‌சி.ஐ.டி. காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌த்தோ‌ம்.

சி.‌பி.‌சி.ஐ.டி. காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டன‌ர். இது தொ‌ட‌ர்பாக ராப‌ர்‌ட் சு‌னி‌ல், பெ‌னிடிகா ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி ஆ‌கிய இர‌ண்டு பே‌ர் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.

சுனா‌மி ‌நி‌தி‌‌யி‌ல் மோசடி செ‌ய்து‌ள்ளதா‌ல் நா‌ங்க‌ள் அ‌ளி‌த்த ‌நி‌தியை 24 சத‌வீத வ‌ட்டியுட‌ன் சே‌ர்‌‌த்து ‌திரு‌ப்‌பி அ‌ளி‌க்க தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை‌க்கு உ‌த்தர‌வி‌ட வே‌‌ண்டு‌ம்'' எ‌ன்று மனு‌வி‌‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனுவை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ராஜசூ‌ர்யா, இது கு‌றி‌த்து ப‌தி‌ல் அ‌ளி‌க்கு‌ம்படி தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை‌க்கு தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

ரூ.2000 லஞ்சம் வாங்கிய வழக்கு : வி.ஏ.ஓ., ராஜாவுக்கு 2 ஆண்டு சிறை


மதுரை அழகர்கோவிலில் இருக்கும் சிறுதூர் வி..., ராஜா. இவர் கடந்த 2003ம் ஆண்டு மாரியப்பன் என்பவரிடம் இருந்து பட்டா மாற்றம் செய்து தர ரூ.2000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கினார்.

இந்நிலையில் இந்த வழக்கு ஜெ.எம். 1 கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அலமேலு, குற்றவாளி ராஜாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 20,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

17 நவம்பர் 2009

ரூ.200 லஞ்சம் அருப்புக் கோட்டை நகராட்சியில் சத்துணவு மேற்பார்வையாளராக இருந்த சரஸ்வதிக்கு 3 ஆண்டு சிறை


அருப்புக்கோட்டை புளியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 200 ரூபாய் பெறுவதற்காக, கடந்த 2003 செப்.15ம் தேதி நகராட்சியில் விண்ணப்பித்தார்.

அப்போது அருப்புக் கோட்டை நகராட்சியில் சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர் சரஸ்வதி. இவர் ஆறுமுகத்தின் விண்ணப்பத்தை, கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்க 200 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆறுமுகம் இது தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். 2003 செப்.23 ல் மாலை 5மணிக்கு ஆறுமுகம் சரஸ்வதியிடம் 200 ரூபாயை கொடுத்தபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி முருகாம்பாள் லஞ்சம் வாங்கிய சரஸ்வதிக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஊழல் பட்டியல் : 84வது இடத்தில் இந்தியாஊழல் பெருகியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 84வது இடம் கிடைத்துள்ளது. 180 நாடுகளுக்கு எடுக்கப்பட்ட கணக்கில் ஒவ்வொரு நாட்டின் நேர்மை தன்மை ஆராயப்பட்டது.

இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டும் இந்தியா இந்த பட்டியலில் இதே இடத்தில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ல்வேறு துறைகளில் முன்னேறி வரும் இந்தியா தற்போது லஞ்சம் பெறும் பட்டியலில் சற்று பின்னோக்கி நகர்ந்து நல்ல பெயரை தட்டிஇருக்கிறது. லஞ்சம் பெறுவதில் உலக அளவில் இந்தியா 84 வது இடத்திலும், ஆசிய அளவில் மிகச்சிறிய அளவில் லஞ்சம் பெறுவதாகவும் டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.உலக அளவில் லஞ்சம் பெறுவதில் யார் முன்னிலை ? யார் பின்னிலை ? லஞ்சமே இல்லாத நாடுகள் எது என ஆய்வு செய்யப்பட்டடது. பெர்லினில் இயங்கும் டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் , ஆப்ரிக்கன் வளர்ச்சி வங்கி, ஆசியன் வளர்ச்சி வங்கி, எக்னாமிக் இன்டலிஜென்ஸ் யூனிட் , பெர்டல்ஸ்மான் பவுன்டேஷன், பிரீடம் ஹவுஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த லஞ்சப்பட்டியலை தயாரித்துள்ளது. இதன்படி வெளியிடப்பட்டுள்ள விவரம் வருமாறு


இந்த பட்டியலை பொறுத்த மட்டில் உலக அளவில் 180 நாடுகளை மையமாக வைத்து இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் 10 புள்ளிகள் குறிப்பிட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் படி 10 புள்ளிகளுக்கு எவ்வளவு புள்ளிகள் குறையுகிறதோ அந்த அளவிற்கு லஞ்சத்தில் மோச நிலையை உணர்த்துவதாக கணக்கிடப்பட்டது. அதாவது ஒரு புள்ளி இருக்கும் நாட்டில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பது கணக்கு. இதன் படி இந்தியா உலக அளவில் 3. 4 மார்க் புள்ளிகள் பெற்றுள்ளது.இதன் மூலம் இந்தியா 84 வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2001 ல் 2.1 புள்ளிகள் பெற்றிருந்தது , தற்போது பரவாயில்லை. இந்த கணக்கீட்டின்படி இந்தியா லஞ்சம் குறைந்துள்ளது. ஆசிய அளவில் ( ஆப்கன், பாகிஸ்தான், பங்களாதேஷ் , மியான்மர் ) நாடுகளை விட லஞ்சம் குறைவாக பெறும் நாடு என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
உலக அளவில் லஞ்சம் தலைவிரித்து தலையை சுற்றும் அளவிற்கு லஞ்சத்தில் சோமாலியா ( 1. 1 புள்ளிகள் ) கொளுத்து திளைக்கிறது. இது போல் ஆப்கானிஸ்தான் ( 1. 3 புள்ளிகள்) , பர்மா (1.4 புள்ளிகள்), சூடானும், ஈராக்கும் (1.5 புள்ளிகள் ) பெற்று இரண்டும் ஒரே தரம் 4 ம் இடத்தை பிடித்துள்ளது. பிரிட்டனும் ஜப்பானும் ( 7. 7 புள்ளிகள் பெற்று ) 17 வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா ( 7. 5 புள்ளிகள் ) பெற்று 18 வது இடத்தில் இருக்கிறது.

லஞ்சம் இல்லாத நாடுகளாக பட்டியலில் முதல் இடத்தை நியூஸிலாந்து ( 9. 4 புள்ளிகள்) , டென்மார்க் ( 9. 3புள்ளிகள்) , சுவீடன் ( 9.2 புள்ளிகள்) , சிங்கப்பூர் ( 9.2 புள்ளிகள்) , சுவிட்சர்லாந்து ( 9.0 புள்ளிகள்) ,ஆகிய நாடுகள் சபாஷை தட்டி பெற்றுள்ளது. இது போன்று இந்தியா லஞ்சம் இல்லாத நாடாக வரவேண்டும் . இந்தியா உலக அளவில் ( 3. 4 புள்ளிகள் ) பெற்று 84 வது இடத்தில் இருந்து விலகி
லஞ்சம் இல்லாத நாடாக மாறும் நாள் எந்நாளோ ?பதிவு பிடித்திருந்தால் வாக்கு அளியுங்கள் , நன்றி .உலக அளவில் ஊழலை எதிர்க்க புதிய வழிமுறைகள்: ஐநா சபை


ஐ.நா.சபை, நவ.17: உலக அளவில் ஊழலை எதிர்த்துப் போராட புதிய வழிமுறைகளைக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.ஊழலுக்கு எதிரான ஐநா கூட்டத்தின் தீர்மானத்தை ஆய்வுசெய்வதற்காக கத்தாரில் நடைபெற்ற ஒருவார ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


புதிய முறையின்படி, அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களின் வாக்குறுதிகளை எவ்விதம் நிறைவேற்றியுள்ளன என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காணிக்கப்படும். இதிலிருந்து அனைத்து உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகளும் அவை ஊழலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மூலம் தீர்மானிக்கப்படும் என ஐநா சபையின் போதை மருந்து மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கான தலைவர் மரியா கோஸ்டா தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கை ஊழலை முடிவுக்குக் கொண்டுவராது. ஆனால் ஊழலைக் கண்காணிக்கவும், அதை எதிர்க்கவும் உதவும் என்றார் அவர்.ஊழலை எதிர்த்து தனியார் துறையினரும் போராட முன்வரவேண்டும் என கோஸ்டா அழைப்பு விடுத்தார்.ஐநா சபையின் குற்ற நடவடிக்கைகள் துறையால் வடிவமைக்கப்பட்ட புதிய சாப்ட்வேர் மூலம் உறுப்பு நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் மதிப்பிடப்பட்டு அவற்றின் பலம் மற்றும் பலவீனம் வெளிப்படுத்தப்படும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.


நீதிபதி தினகரனை தவிர மற்ற நான்கு பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான இன்று பதவியேற்பு


நீதிபதி தினகரனை தவிர மற்ற நான்கு பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான இன்று பதவியேற்கின்றனர்.

மத்திய பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி பட்நாயக், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி திராத்சிங் தாக்கூர், குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன், கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி சுரேந்தர் சிங், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் ஆகியோரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் குழு முடிவு செய்தது.

ஆனால், இந்த ஐந்து பேரில், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் மீது ஊழல் புகார்கள் கூறப் பட்டதால், அவரின் பெயர் மட்டும் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இதையடுத்து, அந்த நான்கு பேரையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க அரசு ஒப்புதல் கொடுத்தது. அவர்கள் நான்கு பேரும் இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்கின்றனர். இதன்மூலம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31 என்பது குறிப்பிடத்தக்கது.16 நவம்பர் 2009

ஊசி போட பணம் வசூல் : திண்டுக்கல் தலைமை ஆஸ்பத்திரி ஊழியர்கள் 21 பேர் மீது நடவடிக்கை


திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள், அடிப்படை பணியாளர்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள், அடிப்படை பணியாளர்கள் 21 பேர் மீது வார்டுகளில் தங்கியிருக்கும் நோயாளிகளிடம், ஆபரேஷன், பிரசவ வார்டுகளுக்கு வருபவர்களிடமும், ஊசி போடவும், மருந்து வாங்கவும் பணம் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 2004ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கினை பதிவு செய்தனர்.


இது தொடர்பாக நடந்த விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. புகாருக்கு உள்ளான 21 பேரும் தவறு செய்துள்ளதாகவும், இவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதன்படி மூன்று பேர் சஸ்பெண்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாகவும், மற்றவர்களுக்கு பதவி உயர்வு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

அவதூறு வழக்கு போடுவேன் : மதுகோடா கோபம்சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருந்து முதல்வரானதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா. இவர், முதல்வராக இருந்த காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் இவரது வீட்டில் அதிரடி சோதனையிட்ட பின் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 25ம் தேதி துவங்குகிறது.தற்போது, லோக்சபா எம்.பி.,யாக உள்ள மதுகோடா, நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தனது மனைவி கீதாவை, சிங்பும் மாவட்டம் ஜகன்னாத்பூர் தொகுதியில் நிற்க வைத்துள்ளார். இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மது கோடா குறிப்பிடுகையில், "பல ஆயிரம் கோடி ஹவாலா பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் அடிப்படையில்லாதவை. என் மீது கூறப்பட்ட இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். நடைபெற உள்ள தேர்தலில் என் நற்பெயரை குலைப்பதற்கான முயற்சியில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அவதூறு வழக்குகளை தொடருவேன்' என்றார்.

பதிவு பிடித்திருந்தால் வாக்கு அளியுங்கள் , நன்றி .
15 நவம்பர் 2009

போலி தங்க காசு மோசடி: 8 பெண்கள் உள்பட 11 பேர் கைதுதிருநெல்வேலி, நவ. 15: தென் மாவட்டங்களில் போலி தங்க காசுகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றியதாக 8 பெண்கள் உள்பட 11 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட போலி தங்க காசுகள், போலி நகைகள், நகை செய்ய பயன்படுத்திய இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தனிப்படை மேற்கொண்ட விசாரணையில், சேலம் அருகே கொண்டலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்க காசு மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.


இக் கும்பலைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் ஊருக்குச் செல்ல பணம் தேவைப்படுவதாக கூறுவர். தங்களிடம் தங்க காசுகள் இருப்பதாகவும், அதற்கு ஈடாக ஏதாவது தரும்படியும் கேட்பார்கள். அவர்களது பேச்சை நம்பும் பெண்களிடம் பணம் வாங்கிக் கொண்டும், வேறு சிலரிடம் பாதிக்குப் பாதி சலுகையில் கம்மல், தோடு, மூக்குத்தி, செயின் போன்ற நகைகளை வாங்கிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.


செம்புக் காசுகள்: சேலம் அருகே முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாது ஆசாரி (55), அவரது மகன் வெங்கடேஷ் (30) ஆகியோர் செம்புத் தகட்டில் இரண்டு கிராம் எடையில் காசுகளைத் தயாரித்துள்ளனர். அக்காசுகளில் தங்க முலாம் பூசி, 22 காரட் என சீல் வைத்து இக்கும்பலுக்கு தலா ரூ.150-க்கு விற்பனைச் செய்துள்ளனர். மாது ஆசாரியும் அவரது மகனும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது வீட்டில் இருந்து ஏராளமான போலி தங்க காசுகளும், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கும்பல் தலைவி துர்கா (50) உள்ளிட்ட 8 பெண்கள், 3 ஆண்கள் செய்யப்பட்டனர். ஆந்திரத்தின் குண்டூர், நெல்லூர், புதுச்சேரியிலும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என்றார்.


13 நவம்பர் 2009

ரூ 3000 லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர் துரைராஜ் கைது
திருமங்கலம்:மதுரை அருகே முகவரி மாற்ற ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் (27). மின்சாதன பொருட்கள் ஏஜன்சி நடத்தி வருகிறார். அதே தெருவில் வேறொரு இடத்திற்கு ஏஜன்சியை மாற்றவும், டி.கல்லுப்பட்டி மெயின் ரோடு மற்றும் மம்சாபுரத்தில் கிளைகளை திறக்க முடிவு செய்தார். இதற்காக அனுமதி எண் (டின் எண்) பயன்படுத்த அனுமதி கேட்டு வணிகவரித்துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.


இதற்காக வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ், 5000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்பணமாக 1000 ரூபாயை வாங்கிக் கொண்டார்.நேற்று காலை வணிகவரித்துறை அலுவலகத்திற்கு வந்த அரவிந்தன் சான்றிதழ்களை கேட்டார். அதற்கு துரைராஜ் மீதிப்பணம் ரூ. 4 ஆயிரத்தை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பேன் என கூறியுள்ளார். பின்னர் 3 ஆயிரம் ரூபாய்க்கு துரைராஜ் சம்மதித்துள்ளார்.
இது குறித்து அரவிந்தன் மதுரை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., குலோத்துங்கனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரமேஷ் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய 3000 ரூபாயை அரவிந்தனிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் வைத்து துரைராஜிடம கொடுத்தார். அதை வாங்கிய துரைராஜை போலீசார் கைது செய்தனர்.

லஞ்சவழக்கில் தன்டனை பெற்று தலைமறைவான வி.ஏ.ஒ., சரண்


ராமநாதபுரம்:லஞ்ச வழக்கில் தலைமறைவான முன்னாள் வி.ஏ.ஒ., ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் குருப் வி.ஏ.ஒ.,வாக பணிபுரிந்தவர் நாகலிங்கம்(50) இவர் 1998ல் மேல வலசையை சேர்ந்த சரவணன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். சரவணன் புகாரின் படி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் 5.8.1998ல் கைது செய்யப்பட்டார். இதன் வழக்கு ராமநாதபுரம் சி.ஜே. எம். கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரணை செய்த நீதிபதி, லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ.,க்கு ஒராண்டு சிறை தண்டனை, 4000 ரூபாய் அபராதம் விதித்து 27.8.2003ல் தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து வி.ஏ.ஒ., பணிநீக்கம் செய்யப் பட் டார்.கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.இதன் மனு 30.6.2009ல் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டு, கீழ் கோர்ட்டில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதன்பின் நாகலிங்கம் தலைமறைவானார். இவர் மீது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் தலைமறைவான நாகலிங்கம் ராமநாதபுரம் சி.ஜே.எம். கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். கோர்ட் உத்தரவுப் படி போலீசார் அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு : ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிக்கியது.


கோவை வடக்கு ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் 5 புரோக்கர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கோவை துடியலூர் வெள்ளக்கிணர் ரோட்டில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்கப்பட்டது. கோவை வடக்கு பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட சிறு நகரங்களை உள்ளடக்கிய இந்த அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு புதிய வாகனங்களை பதிவு செய்தல், பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிமம் பெறுதல், பழகுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து அலுவலக தொடர்பான பணிகளை மேற்கொள்ள புரோக்கர்களின் உதவியோடு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. (பொறுப்பு) பெரோஸ்கான் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், சுந்தரராஜன், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை போக்குவரத்து அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதற்காக பெறப்பட்ட தொகைகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டது. இதில், அலுவலகத்தின் கணக்கிற்கு வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் புரோக்கர்களிடம் இருப்பது கண்டுபிடிக்கபட்டு, கைப்பற்றப்பட்டது. மேலும், விசாரணையில், உரிமம் உள்ளிட்ட ஆர்.டி.ஒ., ஆபீசின் பல்வேறு பணிகளுக்காக புரோக்கர்களாக செயல்பட்ட திருமூர்த்தி, பாபு, சுரேஷ்குமார், ஜெயக்குமார், சண்முகசுந்தரம் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆர்.டி.ஒ., ஆபீசுக்கு எதிரே உள்ள கவுதம் மற்றும் செல்வநாயகி ஜெராக்ஸ் கடைகள் புரோக்கர்களின் தகவல் தொடர்பு மையமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்தனர். ""கணக்கில் காட்டப்படாமல் புரோக்கர்கள் வைத்திருந்த தொகை தொடர்பாக அலுவலக அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர்'' என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை 4.40 மணிக்கு ஆர்.டி.ஒ., அலுவலகத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு 11 மணிவரை சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி சேதத்துக்கு லஞ்ச, ஊழலே காரணம் : விஜயகாந்த்


நீலகிரியில் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு லஞ்ச, ஊழலே காரணம் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. சுமார் 1,400 ஏக்கர் விளைபயிர் சேதமடைந்துள்ளது. காடுகளை அழித்தும், மரங்களை வெட்டியும் கற்பாறைகளை உடைத்தும் கண்ட இடங்களில் எல்லாம் சட்டத்துக்குப் புறம்பாக குடியிருப்புக்கள் அமையக் காரணம் அரசியல்வாதிகளிடமும் , அரசாங்க அதிகாரிகளிடமும் தாண்டவமாடும் லஞ்ச, ஊழல் தான் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை,நான் அப்பாவி : மதுகோடா
ராஞ்சி : ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து மதுகோடாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க பிரிவினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்நிலையில் மதுகோடா தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், தான் அப்பாவி எனவும், தனக்கும் இந்த முறைகேடிற்கும் எந்த தொடர்பும் இல்லை

இந்த விவகாரத்தில் மீடியாக்கள் தன்னையை முன்னிலைப்படுத்துவதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தனது குடும்பத்தாருடன் இருந்த தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பொதுமக்களிடம் ரூ25ஆயிரம் லஞ்சம் :கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அன்பரசன் கைதுகள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பயன்படுத்தவதற்கான பொது பாதை அமைக்க பொதுமக்களிடம் ரூ25ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் அன்பரசன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பொது பாதையை அமைக்க வட்டாட்சியர் அன்பரசனிடம் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சிவபாலன் எனபவர் கோரிக்கைவைத்தார்.

அதோடு பொதுப்பாதை அமைக்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் காட்டினார். ஆனால் வட்டாட்சியர் அன்பரசன் பொதுப்பாதை அமைக்க வேண்டுமானால் ரூ25ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்ற வலியுறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவபாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்ற போலீசார் அன்பரசனின் வீட்டை கண்காணித்துவந்தனர். இந்நிலையில் அன்பரசன் தன் வீட்டில் வைத்து சிவபாலனிடம் ரூ25 அயிரத்தை லஞ்சமாக பெற்றதை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாட்சியர் அன்பரசனை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. துறைவாரியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


12 நவம்பர் 2009

லஞ்ச நடவடிக்கைகள் புற்றுநோயைப் போன்றவை. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்


டில்லியில் யு.பி.எஸ்.சி., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஜனாதிபதி பிரதிபா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன. லஞ்சம் என்பது புற்றுநோயைப் போன்றது. நாட்டின் வளர்ச்சிக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் கட்டமைப்பு வசதிகளையே சீர்குலைத்து விடும். லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்.பொது வினியோக திட்டம் போன்றவற்றில் லஞ்சமும், ஊழலும் அதிகரித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். இத்திட்டம், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. வறுமையையும், பசியையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், ஊழல் நடந்தால், ஏழை மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாவர். இதுபோன்ற செயல்களால், நாட்டின் வளங்கள் குறையும். மற்ற நாடுகளை விட, வளர்ச்சியில் நாம் பின் தங்கி விடுவோம். இவ்வாறு பிரதிபா பேசினார்.

ஊனமுற்றவரிடம் லஞ்சம்; செங்கம் ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை கைது


இதயம் இல்லாத மனிதன். ஊனமுற்றவர்களிடம் லஞ்சமா! கேட்கவே வெட்கமாக உள்ளது


செங்கம் தாலுக்கா ரோடு கரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (29). விபத்தில் சிக்கி கை ஊனமாகி எந்த வேலையும் செய்யாமல் பெற்றோர் பராமரிப்பில் இருந்தார். சவுண்ட்சர்வீஸ் வைப்பதற்காக தாட்கோ மூலம் ரூ.50 ஆயிரம் கடன்கேட்டு அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதந்துள்ளார்.


மனு சரியாக இருப்பதாகவும் உடன் கையெழுத்து இட்டு அனுப்புமாறு செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிதிராவிடர் நலம்) அண்ணாமலை என்பவர் மணிவேல்யிடம் ரூ.400 லஞ்சம் கேட்டு ஒருமாதமாக அலைகழித்துள்ளார்.

என்னிடம் பணமில்லை நான் ஊனமானவன். பெற்றோர் பராமரிப்பில் உள்ளேன் என மணிவேல் கூறியும் கையெழுத்து போட அண்ணாமலை மறுத்து விட்டாராம்.


இது குறித்து மணிவேல் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. ராமேஸ்வரி இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், வேலு மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாயை மணிவேலிடம் தந்தனர். அந்த பணத்தை லஞ்சமாக அண்ணாமலை வாங்கிக்கொண்டு கையெழுத்து போடும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலையை கைது செய்தனர்.


பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து ஆதரவு
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

11 நவம்பர் 2009

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக 10 லட்சம் ரூபாய் மோசடிசென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்றைய பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட 21 இளைஞர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ராஜகீழ்ப்பாக்கம் ராகவா கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத்(35); விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது தங்கை ஆஸ்திரேலியாவில் இந்தியன் ரெஸ்டாரன்ட்டை நடத்தி வருவதாகவும், அங்கு வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்வதாகவும் கூறினார்.

தேர்வானவர்கள் மூன்று மாதத்தில் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறினார். இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.இதை நம்பி எங்கள் பகுதியை சேர்ந்த 21 பேர், 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். மூன்று மாதம் கழித்து கேட்டதற்கு உங்களுடைய பெயர் லிஸ்ட்டில் வரும் வரை காத்திருங்கள் என கூறினார்.
ஆறு மாதங்கள் கழித்து கேட்டதற்கு,"எனக்கு போன் செய்தால் போதும்' என, கூறினார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாங்கள், பணத்தை திரும்ப தரும்படி கேட்டோம். கடந்த 3ம் தேதி பணத்தை திரும்பத் தருவதாகக் கூறினார். பின்னர் அவர் கொடுத்த மொபைல் போனை தொடர்பு கொண்டால் "ஸ்விட்ச் ஆப்' என, வருகிறது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. புகாரை பெற்ற புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விட்டார்.


மறக்காமல் வாக்களித்து ஆதரவு<br />தருமாறு கேட்டுக் கொள்கிறேன்