புதியவை :

Grab the widget  Tech Dreams

09 நவம்பர் 2009

நீதிபதி தினகரனுக்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்


கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நில ஆக்கரமிப்பு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அந்த பொறுப்பில் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கோர்ட்டின் மரியாதையும், ஒருமைப்பாடும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வக்கீல்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வழக்கு ஒன்றில் தினகரன் நீதிபதியாக அமர்ந்திருந்த போது கோர்ட்டுக்குள் நுழைந்த வக்கீல்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து தினகரன் வழக்கு விசாரணையில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.

வாக்களித்து ஆதரவு தாருங்கள் , நன்றி,கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக