புதியவை :

Grab the widget  Tech Dreams

09 நவம்பர் 2009

வடகவுஞ்சி கூட்டுறவு சங்கத்தில் நிதிமுறைகேடு சங்க செயலாளர் ராஜா கைது .


திண்டுக்கல் மாவட்டம், வடகவுஞ்சி தொடக்க விவசாய கூட்டுறவு சங்க செயலாளராக இருப்பவர் ராஜா (38). இவர் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கியது, அட்வான்ஸ் வழங்கியது போன்ற பல கணக்குகளில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி முறைகேடு செய்தார். ஆண்டுத்தணிக்கையில் இந்த முறைகேட்டை கண்டறிந்த பழநி கூட்டுறவு துணைப்பதிவாளர் ஹேமா சலோமி திண்டுக்கல் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிமன்னன், எஸ்.ஐ., ஜெயராணி ஆகியோர், கூட்டுறவு சங்க செயலாளர் ராஜாவை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக