புதியவை :

Grab the widget  Tech Dreams

06 நவம்பர் 2009

நீங்கள் மதுரை ஜெயம் ரியல்ஸ் மற்றும் கேம்சில் பணம் கட்டி ஏமாந்தவர்களா ?


ஜெயம் ரியல்ஸ் மற்றும் கேம்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீஸ் துணைக் கமிஷனர் ஜெயஸ்ரீயை (செல்: 98654-71172) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயம் ரியல்ஸ் மற்றும் கேம்ஸ்

மதுரை கீரைத்துறை பகுதியில் "ஜெயம் ரியல்ஸ் மற்றும் கேம்ஸ்' என்ற நிறுவனம் நடத்தி வந்தவர் அசோக்குமார். நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்தார்.

இதை நம்பி ஏராளமானோர் பணத்தை கட்டினர். பணம் செலுத்திய ஒரு மாதத்தில் அசல் தொகை திருப்பித் தரப்பட்டதாகவும், அப்போது வட்டிக்கு உரிய தனியார் வங்கி காசோலை தரப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தவகையில், ரூ. 10 ஆயிரம் செலுத்தியவர்களுக்கு மாதத் தவணையாக ரூ. 50 ஆயிரம் வரை கூடுதல் பணம் கிடைத்ததாகக் கூறப்பட்டதை நம்பி ஏராளமானோர் நிறுவனத்தில் பணத்தைக் கட்டினர்.

தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் வரை பணம் கட்டியதாகக் கூறப்படுகிறது.


ஏராளமானோர் பணம் கட்டிய நிலையில், திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு அசோக்குமார் தலைமறைவாகிவிட்டார்.

இதுவரை கிடைத்த தகவல்படி, நிறுவனம் மூலம் சுமார் ரூ. 25 கோடிக்கும் மேலாக மோசடி நடந்திருக்கலாம் என போலீஸசார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக