புதியவை :

Grab the widget  Tech Dreams

02 நவம்பர் 2009

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பா.ஜ., வை தி.மு.க. எதிர்க்காதது ஏன்? ஜெயலலிதா கேள்வி !


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பா.ஜ.,வை தி.மு.க., எதிர்க்காதது ஏன் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தனது ஆட்சிக்காலத்தில் தவறான அலைவரிசை ஒதுக்கீடு மூலம் இந்த தேசத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் ராசா கூறியிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசிலும் ராசா அமைச்சராக இருந்த தோடு மட்டுமல்லாமல், அந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களிலும் ராசாவுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். அதே சமயத்தில், ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது என்பதும் வழக்கறிஞரான ராசாவுக்கு தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற அற்ப காரணத்தைக் காட்டித்தான் தன்னுடைய ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டுவிட முயற்சிக்கிறார் ராசா. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீதான ராசாவின் புதிய குற்றச்சாட்டு, பல உண்மைகளை, ரகசியங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் நடந்த போது, இதர தி.மு.க. அமைச்சரவை சகாக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களில் யாரும் இந்த ஊழலை ஏன் எதிர்க்கவில்லை? குறைந்த பட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட ஏன் இதை எழுப்பவில்லை? ஏன் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற வில்லை? இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தாவிட்டால், பரவலான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படாவிட்டால், தன்னுடைய அமைச்சரவையில் இதற்கு முன் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை ராசா வெளிப்படுத்தியிருப்பாரா? போன்ற பல கேள்விகளுக்கும் வழி வகுத்து இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் முழுவதும் சட்ட விரோதமான மோசடி.; இந்த தீய நோக்கத்தை உணர்ந்து கொண்டு அவர்களை தூக்கி எறிந்தால் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக