புதியவை :

Grab the widget  Tech Dreams

03 நவம்பர் 2009

பொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் !


லஞ்சம், வன்முறை மற்றும் சாதி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக இயக்கத்தினர் தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.
அந்த இயக்கத்தின் சார்பில் இன்று புதுவை புதிய பஸ் நிலையம் அருகே இயக்க தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி மற்றும் இயக்க நிர்வாகிகள் அனில்சந்திரசேகரன், பிரபு, சுபாஷ், சண்முகம், குமரன் ஆகியோர் தங்களுடைய இயக்க கோரிக்கைகயை வலியுறுத்தி பொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அனுமதி பெற்று இந்த பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்று அவர்களிடம் கூறினர். இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தை தொடர்ந்து சத்தியாகிரக பிரச்சார இயக்கத்தினரை ஜீப்பில் ஏற்றி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
தங்களுடைய பிரச்சாரம் குறித்து ராமகிருஷ்ண சாஸ்திரி போலீஸ் சூப்பிரண்டிடம் விளக்க மளித்தார். அதையடுத்து பிரச்சாரத்துக்கு அனுமதி கிடைத்தது. அதன் பிறகு புதுவை கடற்கரை சாலையில் பொதுமக்கள் காலில் விழுந்து சத்தியாகிரக இயக்கத்தினர் பிரச்சாரம் செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக