புதியவை :

Grab the widget  Tech Dreams

09 நவம்பர் 2009

டாக்டர்களே அன்பளிப்பு வாங்காதீர்கள் !


புதுடில்லி:மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும், விற்கும் நிறுவனங்களிடமிருந்து, டாக்டர்கள் எவ்விதப் பரிசுப் பொருளும், அன்பளிப்பும் பெறக்கூடாது என்ற புதிய நடத்தை விதியை உலக மருத்துவக் கழகம்(டபிள்யூ. எம்..,) அறிவித்துள்ளது.


சமீபத்தில், இந்தியா உட்பட, 100 நாடுகளின் டாக்டர்கள் கலந்து கொண்ட டபிள்யூ.எம்.., மாநாடு, டில்லியில் நடந்தது. இதில், மருத்துவமனை மற்றும் விளம்பரதாரர் இடையிலான உறவு முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.டாக்டர்கள், ஆராய்ச்சிக்காக மருத்துவத் துறையில் இருக்கும் வர்த்தக நிறுவனங்களிடம் பணம் பெறுவது, நெருங்கிய உறவு வைத்துக் கொள்வது, பரிசு பெறுவது போன்றவை குறித்த புதிய நடத்தை விதிமுறைகள், இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. இந்த விதிமுறைகள் கூறுவதாவது: நோயாளிக்கு எது நன்மையோ அதைச் செய்வதுதான் டாக்டரின் கடமை.


உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் தருவதும், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதும் தான் மருத்துவத்துறை வர்த்தக நிறுவனங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.ஒரு டாக்டருக்கும், வர்த்தக நிறுவனங்களுக்குமான-பரிசு கொடுக்கல் வாங்கல் மற்றும் விளம்பரதாரர் உறவு போன்றவை வெளிப்படையாக இருக்க வேண்டும்.அந்தந்த நாட்டு மருத்துவக் கழகங்களின் கொள்கை அல்லது சட்டப்படி பரிசு வாங்குவதை டாக்டர்கள் தவிர்க்க வேண்டும்; எப்போதாவது நிகழும் கலாசார நினைவுப் பரிசுகள் இதற்கு விலக்கு.இவ்வாறு விதிகள் தெளிவாக அறிவுறுத்துகின்றன.

ஸ்டான்போர்டு மருத்துவப் பல்கலை, யேல் மருத்துவப் பள்ளி, பென்சில்வேனியா, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோ, மசாசூசெட்ஸ் பல்கலைகள் வகுத்துள்ள விதிகளைப் பார்க்கும்போது இந்த விதிகள் சற்றுக் கனிவுடன் தான் உள்ளன. ஸ்டான்போர்டு பல்கலையில், டாக்டர்கள் மருந்துகளின் சாம்பிள்கள் கூட பரிசாக வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யேல் மருத்துவப் பள்ளியில், தனிப்பட்ட முறையில் பரிசுகள் வாங்குவது, நிறுவனங்கள் மூலம் சாப்பாடு சப்ளை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து ஆதரவு
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக