புதியவை :

Grab the widget  Tech Dreams

15 நவம்பர் 2009

போலி தங்க காசு மோசடி: 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது



திருநெல்வேலி, நவ. 15: தென் மாவட்டங்களில் போலி தங்க காசுகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றியதாக 8 பெண்கள் உள்பட 11 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட போலி தங்க காசுகள், போலி நகைகள், நகை செய்ய பயன்படுத்திய இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தனிப்படை மேற்கொண்ட விசாரணையில், சேலம் அருகே கொண்டலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்க காசு மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.


இக் கும்பலைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் ஊருக்குச் செல்ல பணம் தேவைப்படுவதாக கூறுவர். தங்களிடம் தங்க காசுகள் இருப்பதாகவும், அதற்கு ஈடாக ஏதாவது தரும்படியும் கேட்பார்கள். அவர்களது பேச்சை நம்பும் பெண்களிடம் பணம் வாங்கிக் கொண்டும், வேறு சிலரிடம் பாதிக்குப் பாதி சலுகையில் கம்மல், தோடு, மூக்குத்தி, செயின் போன்ற நகைகளை வாங்கிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.


செம்புக் காசுகள்: சேலம் அருகே முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாது ஆசாரி (55), அவரது மகன் வெங்கடேஷ் (30) ஆகியோர் செம்புத் தகட்டில் இரண்டு கிராம் எடையில் காசுகளைத் தயாரித்துள்ளனர். அக்காசுகளில் தங்க முலாம் பூசி, 22 காரட் என சீல் வைத்து இக்கும்பலுக்கு தலா ரூ.150-க்கு விற்பனைச் செய்துள்ளனர். மாது ஆசாரியும் அவரது மகனும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது வீட்டில் இருந்து ஏராளமான போலி தங்க காசுகளும், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கும்பல் தலைவி துர்கா (50) உள்ளிட்ட 8 பெண்கள், 3 ஆண்கள் செய்யப்பட்டனர். ஆந்திரத்தின் குண்டூர், நெல்லூர், புதுச்சேரியிலும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக