
மதுரை அழகர்கோவிலில் இருக்கும் சிறுதூர் வி.ஏ.ஓ., ராஜா. இவர் கடந்த 2003ம் ஆண்டு மாரியப்பன் என்பவரிடம் இருந்து பட்டா மாற்றம் செய்து தர ரூ.2000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கினார்.
இந்நிலையில் இந்த வழக்கு ஜெ.எம். 1 கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அலமேலு, குற்றவாளி ராஜாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 20,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக