புதியவை :

Grab the widget  Tech Dreams

03 நவம்பர் 2009

ஊழல் புகாருக்கு உள்ளான மதுகோடா மருத்துவமனையில் அனுமதி


ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வீடு மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய ரெய்டில், சட்ட விரோதமாக ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு மது கோடா ஒத்துழைக்க மறுக்கிறார் என வருமான வரித்துறை இயக்குனர் அஸ்வின் குமார் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சட்டவிரோதமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால் மதுகோடா மற்றும் அவரது நண்பர்களுக்கு டெல்லி, கொல்கத்தா, மும்பை, லக்னோ, நாசிக், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் சொந்தமாக உள்ள 70 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர். இதில், மூட்டை, மூட்டையாக ஆவணங்களை கைப்பற்றினர். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் அளவுக்கு மதுகோடா முதலீடு செய்து இருப்பதும் தெரிந்தது. ஹவாலா பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளுக்கு ரூ.560 கோடி அனுப்பியுள்ளனர். இதையடுத்து மதுகோடா மற்றும் அவரது பினாமிகளான சஞ்சய் சவுத்ரி, பினோத் சின்கா ஆகியோருக்கு சொந்தமான இடங்களுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். மது கோடாவுக்கு சொந்தமாக மும்பையில் ஓட்டல்களும் மூன்று கம்பெனிகளும் உள்ளது. தாய்லாந்திலும் ஒரு ஓட்டல் உள்ளது. லைபீரியாவில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. மது கோடா மற்றும் அவரது பினாமிகளின் சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வருமானவரித்துறை இயக்குநர் அஸ்வின் குமார் கூறுகையில், விசாரணைக்கு மதுகோடா ஒத்துழைக்கவில்லை. அவரது நண்பர்கள் 6 பேர், 6ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் மதுகோடா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக