புதியவை :

Grab the widget  Tech Dreams

07 நவம்பர் 2009

மும்பை வங்கியில் ஒரே மாதத்தில் மதுகோடா ரூ.61 கோடி டெபாசிட் ?


மும்பை வங்கியில் மதுகோடா கூட்டாளிகள் ஒரே மாதத்தில் ரூ.61 கோடி டெபாசிட் செய்திருப்பது, வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மதுகோடா ரூ.4 ஆயிரம் கோடிக்குமேல் சட்டவிரோதமாக சொத்து சேர்ந்துள்ளது தெரியவந்தது.


தாய்லாந்து, லைபீரியா போன்ற நாடுகளுக்கு ஹவாலா முறையில் பணம் அனுப்பி நிலக்கரி சுரங்கங்களை வாங்கியுள்ளனர். அப்பாவி பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என கூறும் மதுகோடா மற்றும் அவரது கூட்டாளிகள், சட்ட விரோதமாக கொள்ளையடித்த பணத்தை புத்திசாலித்தனமாக பல இடங்களில் பதுக்கியது விசாரணை அதிகாரிகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.


மதுகோடாவின் பினாமி பினோத் சின்காவின் சகோதரர் விகாஸ் சின்கா நேற்று கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. மதுகோடா மற்றும் பினோத் சின்காவின் சார்ட்டட் அக்கவுண்டன்டாக இருந்த நரேடி என்பவரிடம் ரூ.40 கோடி கொடுத்ததாக விகாஸ் கூறியுள்ளார். ஜார்கண்டில் இரும்பு ஆலைகள் வாங்க மதுகோடாவுக்கு நரேடி உதவியுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.


சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்க மதுகோடாவுக்கு உதவிய மும்பை தங்க வியாபாரியையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மும்பை ஜவேரி பஜார் கிளை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் மதுகோடா கூட்டாளிகள், 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.61 கோடி டெபாசிட் செய்துள்ளனர். மதுகோடா மற்றும் அவரின் பினாமிகள் பினோத் மற்றும் சஞ்சய் சவுத்திரி ஆகியோரை வருமானவரி மற்றும் அமலாக்கபிரிவு அதிகாரிகள் விரைவில் கைது செய்வர் என தெரிகிறது.








1 கருத்து:

  1. VERY GOOD BLOG TO OUR NATION SINCE THE CORRUPTION IS THE CANCER KILLS THE GROWTH OF THE GREAT NATION. CORRUPTION BY THE TOP GUYS TO BE EXPOSED AND PUNISHED. WHEN THE TOP IS GOOD THE WHOLE SYSTEM WILL BE VERY CLEAN AND TRANSPERANT.
    PAEIGAL ARASANDAL PINAM THINMUM SATHIRANGAL.
    M.S.Vasan

    பதிலளிநீக்கு