புதியவை :

Grab the widget  Tech Dreams

04 நவம்பர் 2009

பிஎஸ்என்எல்-லில் ஊழலா? புகார் பண்ணுங்க !


தஞ்சாவூர், நவ. 3: பிஎஸ்என்எல்-லில் லஞ்சம், ஊழல் இருப்பின், அதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரி ஜான் ஸ்டீபன் தாசிடம் 94431-00612 என்ற செல்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக பிஎஸ்என்எல் தஞ்சாவூர் கோட்டப் பொதுமேலாளர் ஜே.வி. ராஜாரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் பிஎஸ்என்எல்-லில் நவம்பர் 7-ம் தேதி வரை கண்காணிப்பு, விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஊழல் புகார் மட்டுமன்றி, தொலைபேசி தொடர்பான தகவல்களுக்கு மக்கள் தொடர்பு அதிகாரி டி.எஸ். ரவிச்சந்திரனை 94861 03212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், இதுதொடர்பாக தஞ்சாவூர் ராம்நகரிலுள்ள பொதுமேலாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் முறையிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக