
மத்திய அரசு உள்ளது. ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. லஞ்சம் வாங்கி கைதானோர் தொடர்பான வழக்குகள் விரைவில், விரைவு கோர்ட்டுகளுக்கு அனுப்பப்பட உள்ளன. அங்கு அந்த வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, தகுந்த தண்டனை வழங்கப்படும். இரண்டு கோடி மற்றும் அதற்கு மேலான ரூபாய் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தகராறுகள் தொடர்பான வழக்குகளை கையாள, வர்த்தக கோர்ட்டுகளும் அமைக்கப்பட உள்ளன.
இது தொடர்பான மசோதா ஒன்று, பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும். இதன்மூலம், பல வழக்குகளில் ஏராளமான அளவிலான பொதுப்பணம் முடங்கிக் கிடப்பது தவிர்க்கப்படும். விரைவில் அவற்றை வசூலிக்கும் சூழ்நிலை உருவாகும். ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதை கட்டாயமாக்கும் வகையில், புதிய மசோதா ஒன்றும் கொண்டு வரப்பட உள்ளது. இத்தகவலை மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக