புதியவை :

Grab the widget  Tech Dreams

02 நவம்பர் 2009

ஸ்ரீ வைகுண்டம் தாலுக்கா ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர் .அப்போது கணக்கில் வராத ரூ .9100 கைப்பற்றப்பட்டது .

தூத்துகுடி மாவட்டம் ,ஸ்ரீ வைகுண்டம் தாலுக்கா அலுவலகத்தில் மாத இறுதியில் ரேஷன் கடை ஊழியர்கள் கணக்கை காட்டி பணம் செலுத்தி வருகின்றனர் . அவர்களிடம் கமிஷன் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .நேற்று மாலை நடந்த திடீர் சோதனையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ 7600 ,கணினி அறையில் இருந்த ரூ 1500 பறிமுதல் செய்யப்பட்டது .

இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி சங்கரநாராயணன் ,குடிமை பொருள் வழங்கல் தனி ஆய்வாளர் சுல்தான் , மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர் .அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக