புதியவை :

Grab the widget  Tech Dreams

10 நவம்பர் 2009

ரூ.4 லட்சம் வாங்கிய ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் என்ஜீனியர்கள் சிவசங்கரன்,தயாரதன் கைது


சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.1 1/2 கோடி செலவில் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை மறைமலை நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் எடுத்து இருந்தார்.
ரோடு போடும் பணி முடிவடைந்தது. இதற்கான “செக்” பாஸ் செய்வதற்கு ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் சிவசங்கரன் (42), உதவி பொறியாளர் தயாரதன் (40) ஆகியோர் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ரூ.4 லட்சம் தருவதாக பாலசுப்பிரமணியம் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் காண்டிராக்டர் பாலசுப்பிரமணியம் புகார் செய்தார். இதை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தம், இன்ஸ்பெக்டர் விஜயானந்த் ஆகியோர் அறிவுரையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய 4 லட்சம் ரூபாயை பாலசுப்பிரமணியம் எடுத்து சென்றார்.
சிப்காட் அலுவலகத்தில் வைத்து இளநிலை பொறியாளர் சிவசங்கரனிடம் ரூ.3 லட்சத்தையும், தாம்பரம் ரெயில் நிலையத்தில் வைத்து உதவி பொறியாளர் தயாரதனிடம் ரூ.1 லட்சத்தையும் நேற்று அவர் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ரவீந்திரகோஷ் உத்தரவிட்டார். இவர்கள் 2 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக