புதியவை :

Grab the widget  Tech Dreams

09 நவம்பர் 2009

போலீஸ நிலையத்திலேயே திருட்டா ? பெருந்துறையில் போலீஸ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு


பெருந்துறை: பெருந்துறை போலீஸ் நிலையத்தில் வழக்குகள் சம்பந்தமான 67 பைல்கள் காணவில்லை. இது தொடர்பாக மூன்று இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்.ஐ.,க்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையம் பரபரப்புக்கு பஞ்சமில்லாதது. கடைசியாக பெருந்துறை ஆள்கடத்தல் வழக்கில் ஐகோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளானது. இப்போது இந்த போலீஸ் நிலையத்தில் புதிய பிரச்னை முளைத்துள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் பதிவான 67 வழக்குகளின் பைல்கள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது இது தொடர்பாக, அந்தந்த காலங்களில் பணிபுரிந்த மூன்று இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 எஸ்.ஐ.,க்கள் மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேந்தன், செல்லமுத்து, சேகர், எஸ்.ஐ.,க்கள் சுந்தரராஜன், ஆறுமுகம், முருகேசன், பன்னீர்செல்வம், தங்கராஜ், பெரியசாமி, ஆனந்தகுமார், சிவகுமார், ஸ்ரீதரன், விஜயா, நாகமணி, நடராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு பிடித்திருந்தால் வாக்கு அளியுங்கள் , நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக