புதியவை :

Grab the widget  Tech Dreams

26 ஆகஸ்ட் 2009

ஈரோடு - மாவட்ட மின்சார ஆய்வாளர் மனோகரன் கைது .


ஈரோடு, ஆக. 26-

ஈரோடு மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் மாவட்ட மின்சார ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் மனோகரன் (வயது48). தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், மின் இணைப்பு தொடரவும் மற்றும் தடையில்லா சான்று வழங்கவும் இவர் லஞ்சம் வாங்குவதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையொட்டி மனோகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது மனோகரன் சத்தியமங்கலம் சென்று இருப்பதாகவும், அங்கு பெறப்பட்ட லஞ்சப்பணத்துடன் அவர் காரில் ஈரோடு வந்து கொண்டு இருப்பதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மனோகரன் வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது ஆய்வாளர் மனோகரனிடம் ரூ.25ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் இக்கரை தத்தப்பள்ளியில் இயங்கி வரும் காகித ஆலைக்கு மின்சாரம் இணைப்பு வழங்குவதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க அவர் ரூ.25ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.
இதையொட்டி மின் வாரிய ஆய்வாளர் மனோகரனை போலீசார் கைது செய்தனர். இவரது வீடு ஈரோடு பெரியார் நகரில் உள்ளது. இந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள மனோகரனின் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதிகாரி மனோகரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சத்திய மங்கலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் சில அதிகாரிகள் வெளியேறிவிட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக