புதியவை :

Grab the widget  Tech Dreams

20 ஆகஸ்ட் 2009

ரூ. 300 லஞ்சம் வாங்கிய கபிஸ்தலம் ஏட்டு மதியழகன் கைது

தஞ்சை, ஆக. 20-
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் பாஸ்போர்ட் விண்ணப்ப விசாரணைக்காக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு மதியழகன் (வயது 40) பாஸ்போர்ட் விசாரணைக்காக தனக்கு ரூ. 300 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று இளவரசனிடம் கூறினார். இதை கேட்டு இளவரசன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் இளவரசன் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. ரெங்கராஜன், இன்ஸ்பெக்டர் மனோகர் ஆகியோர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று இரவு கபிஸ்தலம் போலீஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது திட்டமிட்டபடி இளவரசன், ரூ. 300 லஞ்ச பணத்தை ஏட்டு மதியழகனிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய ஏட்டு மதியழகனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சூழ்ந்து கொண்டு கையும் களவுமாக பிடித்தனர்.
லஞ்ச வழக்கில் பிடிபட்ட ஏட்டு மதியழகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து ஏட்டு மதியழகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக