புதியவை :

Grab the widget  Tech Dreams

12 ஆகஸ்ட் 2009

லஞ்ச வழக்கில் இரு நகராட்சி அலுவலர்களுக்கு மூன்றாண்டு: ஐகோர்ட் உறுதி செய்தது

மதுரை: நாகர்கோவிலில் லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி அலுவர்களுக்கு சப்- கோர்ட் வழங்கிய மூன்று ஆண்டு சிறையை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. நாகர்கோவில் நேசமணிநகரை சேர்ந்தவர் ராஜாசிங். இவர் புதியவீடு கட்டினார். இதற்கு நகராட்சி சார்பில், வீட்டு வரி நிர்ணயிக்கப்பட்டது.

வரியை குறைத்து நிர்ணயம் செய்ய வருவாய் அதிகாரி கருணாகரன், பில் கலெக்டர் கோலப்பன் லஞ்சம் கேட்டனர். ராஜாசிங் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பிறகு ராஜா சிங் லஞ்ச பணத்தை அவர்களிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். இவ்வழக்கில், இரண்டு பேருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, சப் -கோர்ட் 2000 செப்.,29ல் தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து, இருவரும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தனர். இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு வக்கீல் சிவ.ஐயப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று, மேல்முறையீடு மனுக்களை நீதிபதி ஏ.செல்வம் தள்ளுபடி செய்தார். ""கீழ்கோர்ட் உத்தரவில் தலையிடும் அளவுக்கு போதிய காரணங்கள் இல்லை. சாட்சியங்கள், சான்றாவணங்கள் குற்றத்தை நிரூப்பிப்பதாக உள்ளன,'' எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக