புதியவை :

Grab the widget  Tech Dreams

06 ஆகஸ்ட் 2009

"சபாஷ்' விஜிலென்ஸ்

சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள டி.எஸ்.பி.,கள் நடராஜன் - திருநாவுக்கரசு கூட்டணி, சவாலான வழக்குகளைக் கையாண்டு வருகிறது. புழல் சிறையில் லஞ்சம் வாங்கிய காவலர் சாலமனை இந்தக் கூட்டணி தான் கைது செய்தது. அரசு அதிகாரி மீது லஞ்சப் புகார் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலையடுத்து, லஞ்சப் பணம் கை மாறும் இடத்தில் மறைந்திருந்து, லஞ்சம் வாங்குபவரையும், கொடுப்பவரையும் கைது செய்து வருகின்றனர். அதே பாணியில் தான் டாக்டர் எழிலரசியையும் "பொறி' வைத்து பிடித்தனர். வீட்டிற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரை, ஆங்கிலத்தில் எழிலரசி இஷ்டத்திற்கு திட்டியுள்ளார். ஆத்திரப்படாமல் பொறுமையாக இருந்து, விஜிலென்ஸ் போலீசார் காரியத்தை முடித்தனர். அரசு அதிகாரி மீது லஞ்சப் புகார் வராவிட்டாலும், தைரியமாக களத்தில் இறங்கி, தமிழக அளவில் மிகப் பெரிய பொறுப்பில் உள்ள எழிலரசியை கைது செய்துள்ளனர். இது போன்ற விஜிலென்ஸ் அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் கடமை பொதுமக்களுக்கும் உண்டு. லஞ்ச அதிகாரிகளைப் பற்றிய தகவல்கள் இருந்தால், விஜிலென்ஸ் அதிகாரிகளை 94450 48862, 94440 77666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர், முகவரிகள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக