அவினாசி :ஜூலை ௨௨
மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜூனியர் இன்ஜினியர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கையும்களவுமாக சிக்கினார்.
அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் சந்தைகடை தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(23).இவர் அங்கு மூன்று கடைகள் கட்டி உள்ளார். வயரிங் பணி முடித்து, மின் இணைப்புக்காக பெருமாநல்லூர் மின்பகிர்மான அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதுதொடர்பாக இளநிலை பொறியாளர் குஞ்சிதபாதம்(50) என்பவரை அணுகியபோது, அவர் ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார்.
ஈஸ்வரன் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். கூடுதல் எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உன்னிகிருஷ்ணன், கருணாகரன், சுந்தர்ராஜன், ஜெரால்டு அலெக்சாண்டர் ஆகியோர் இன்று மதியம் பெருமாநல்லூர் மின்அலுவலகம் வெளியே நின்று கண்காணித்தனர். இவர்கள் திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்துடன் ஈஸ்வரன் உள்ளே சென்றார். குஞ்சிதபாதம் பணத்தை வாங்கியபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவு மாக பிடித்து கைது செய்தனர்.
அவர் தங்கியிருந்த மின்வாரிய குடியிருப்பிலும் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின், குஞ்சிதபாதத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக